Wednesday, August 18, 2010

உன்னால் முடியும் தம்பி - ஓர் அலசல்


எனக்கு கமல் படங்கள் பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு வரும், அது கமல் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக கூட இருக்கலாம். எனக்கு கமல் மேல் வந்த மதிப்பிக்கு காரணம் கமலின் நடிப்பு, பேச்சு இப்படி பல சொல்லலாம். இவற்றில் முக்கியமானது சமுதாயத்தின் மீது கமலின் பார்வை. எனக்குத் தெரிந்து கமல் அளவிற்கு சமுதாயத்தின் மீது அழுத்தமான பார்வை கொண்டவர்கள் சிலரே. அர்ஜுன், விஜயகாந்த் போன்றவர்கள் தேச பக்தி படங்களில் நடித்திருந்தாலும் கமல் அளவிற்கு படத்தின் மூலம் சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்ப்படுதியவர்கள் இல்லை என்று சொல்லலாம். சமுதாயத்தின் மீது அவருடைய பார்வை தீவிரத்தன்மை கொண்டது. ஏதாவது ஒரு extreme ல தான் அது இருக்கும். எடுத்துக்காட்டாக திருமணம் பற்றிய அவர் பார்வை. திருமணம் பற்றிய அவருடைய பார்வையில் பல பேருக்கு மிகத் தீவிர மாற்றுக் கருத்து உண்டு. இருந்த போதிலும் அவர் தன்னுடைய நிலைபாட்டைச் சொல்லத் தயங்கியதில்லை. கமல் நடித்து வெளிவந்த சமுதாயப் படங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன், உன்னால் முடியும் தம்பி . இந்த மூன்று படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் என்னை அதிகமாக பாதித்த திரைப்படம் உன்னால் முடியும் தம்பி . இது தெலுகு படமான ருத்ர வீணாவின் மறு உருவாக்கம் என்றபோதிலும் , இந்த படத்தை எடுக்க காரணமாக இருந்தது பாலசந்தரோ இல்லை கமலாகவோ இருந்தாலும் எனக்கு இப்படம் சமுதாயத்தின் மீது கமலுக்கு உள்ள கோபமாகவே தோன்றுகிறது.

இப்படத்தின் அடிநாதம் சங்கீதத்தை விட ஏன் கடவுளை விட மனிதாபிமானமே பெரியது என்பதாகும். இந்த கருத்தில் கமலுக்கு இரண்டாம் கருத்தே இல்லை என்பதால் இந்த படத்தில் நடிப்பது கமலின் dream project ஆக கூட இருந்திருக்கலாம். இந்த படத்தை அலசும் போது இப்படத்தின் முழுக் கதையையே சொன்னாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் வந்த இப்படம் திரும்ப திரும்ப பலராலும் பார்க்கப்பட்டு தெளிந்த ஒன்றாகும்.

சங்கீத குடும்பத்தில் பிறந்த, சங்கீதமே தன்னுடைய மூச்சு அதைத் தவிர வேறொன்றும் இல்லை என்னும் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் ஜெமினி கணேசனின் மகனாக உதய மூர்த்தி என்ற பாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். சங்கீதத்தை விட சமுதாய சீக்குகளை களைவதே முக்கியம் என்பது உதய மூர்த்தியின் பார்வையாக இருக்கும். ஒரு ராப்பிச்சைக்காரியின் பசி அலறலை விட தனக்கு சங்கீதம் முக்கியமில்லை என்பார் உதயமூர்த்தி.


இப்படத்தில் கமலின் பாத்திரம் நான்கு நிலைகளில் இருக்கும். முதலில் எதைப்பற்றியும் கவலைப் படாத மேட்டுக்குடி இளைஞனாகவும், பின்னர் சமையல்கார கிழவரால் பாதிக்கப்பட்டு சமுதாய சீர்கேடுகள் மீது கோபம் கொண்ட இளைஞனாகவும் , அடுத்து ஒரு சமுதாய நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும் இளைஞனாகவும், அடுத்து சமுதாயத்தை சீர்திருத்த முடியாத, அப்பாவின் மீது கோபம் கொண்ட கையாலாகாத இளைஞனிலிரிந்து வீட்டை விட்டு வெளியேறி சமுதாயத்தை திருத்தும் இளைஞன். இப்படி நாலு நிலைகளில் அவருடைய பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்.

மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்ட அந்த லைன் மேனை காப்பாற்றமுடியாமல் கையாலாகாத்தனமான தன் நிலையை எண்ணி வருந்தும் போதும், தான் அந்த லைன் மேனை காப்பாற்ற முடியாததற்காக தன் தந்தையுடன் சண்டை போடும் போதும், அப்படி சண்டை போட்டது சரிதான் என்று வாதிடும் போதும், தனக்குப் போட்டியாக வந்த விட்ட சாருகேசி என்னும் ரமேஷ் அரவிந்தை எண்ணி தன் தந்தையிடம் சண்டையிடும்போதும், குடிகாரர்கள் திருந்துவதற்க்காக தன் கல்யாணத்தையே நிறுத்துவதற்காக லலிதா கமலா என்னும் சீதாவிடம் பேசும் போதும் கமலின் நடிப்பு பிரம்மிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சீதா மற்றும் கமலுக்கிடையே ஆன காதல் காட்ச்சிகளும் இயல்பாக இருக்கும். இப்படத்தில் சீதாவிற்கு கமலுக்கு துணையான நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். பொதுவாக கதாலை மையைப் படுத்தாத படங்களில் கதாநாயகிக்கு பெரும்பாலும் நல்ல கதாப்பாத்திரங்கள் அமைவதில்லை. மேலும் அப்படங்களில் காதலும் இரண்டு மூன்று காட்சிகளுடன் முடிந்து போயிருக்கும். அப்படி இல்லாமல் இப்படத்தில் கதாநாயகிக்கும் ஒரு நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும் . காதலும் படத்தின் ஊடே இழையோடிருக்கும்.

படத்தில் ஜெமினி கணேசனுக்கும் அருமையான பாத்திரம் அமைந்திருக்கும். சங்கீதத்தை தவிர வேறு ஒன்றைப் பற்றியும் அக்கரைப் படைத்தவராக மிக அருமையாக நடித்திருப்பார் . ஜெமினி கணேஷன் நடிப்பில் எனக்கு மிக பிடித்த பாத்திரம் இது.

படத்தில் சின்ன சின்ன இடங்களும் அருமையாக இருக்கும் . சீதா டாலரை சுண்டி போட்டு ஒருத்தனை கன்னத்தில் அடிப்பார், அடித்தவுடன் அந்த வரிசையே நகர்ந்து நிற்கும். அதேபோல் கமல், சீதாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சீதா திரும்பவும் டாலரை சுண்டுவார் அப்பொழுது கமல் சற்று நகர்ந்து நிற்பது சிரிப்பாக இருக்கும். அதே போல் மீசை முருகேசனும், கமலும் முதல் முதல் சந்திக்கும் இடமும் நன்றாக இருக்கும்.


படத்தின் திரைக்கதையும் மிக இயல்பாக அமைந்திருக்கும். எந்த ஒரு இடத்திலும் ஒரு இடரோ சிணுங்கலோ இல்லாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து மிகச் சரியாக தன்னுடைய பாதையில் சென்றிருக்கும். நான் முன்பே சொன்ன மாதிரி காதலையும், சமுதாயத்தை திருத்தும் இளைஞன் கதையையும் மிக இயல்பாக கோர்த்திருப்பார் கே.பாலச்சந்தர்.

படமே ஒரு சங்கீதப் பரம்பரைப் பற்றியது என்பதால் இதில் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். இளையராஜா இதில் புகுந்து விளையாடியிருப்பார். கர்நாடக சங்கீத கீர்த்தனைகளும், அதையே மாற்றி அமைத்த ஜனரஞ்சக பாடல்களும் அருமையாக இருக்கும். S.P.B யும், யேசுதாசும் மிக அருமையாக பாடியிருப்பார்கள்.

படத்தின் பாடல் வரிகளும் இப்படத்தின் அடிநாதத்திற்க்கு மிக இயல்பாக பொருந்தி போயிருக்கும். இப்படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்பதால் எதை எழுதாமல் விடுவது என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் வரிசைப்படுத்திக் கூறலாம்.

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்ற பாடலின் இசையும் பாடல் வரிகளும் மிக அருமையாக இருக்கும். இப்பாடலை எழுதியவர் புலமைபித்தன். இப்பாடலின் அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும் . அப்பாடலின் முழுவதையும் இங்கே கூற முடியாது . வேண்டுமென்றால் சில வரிகள்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெரும் காடா
இத கேட்க யாரும் இல்ல தோழா

அதே போன்று எனக்கு பிடித்த மற்றொரு பாடல் "உன்னால் முடியும் தம்பி தம்பி" . மிக அருமையான தத்துவப் பாடல் . இதைக்கேட்டால் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

அடுத்த பாடல் "அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா" . சமுதாயத்தின் பாராமுகங்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கும்.

படத்தின் கிளைமாக்சில் அந்த சண்டை காட்ச்சியை தவிர்த்திருக்கலாம். அது ஒன்றுதான் படத்தில் தேவை இல்லாத ஒன்றாக இருக்கும். படத்தின் ஒரே கமெர்சியல் அயிட்டமும் அதுதான். கிளைமாக்சிர்க்கு ஏதாவது ஒரு காரணி தேவை என்று எண்ணி இருக்கலாம்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம்.

பின் குறிப்பு: நேற்று மறுபடியும் இப்படத்தை ராஜ் டிஜிடல் பிளஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

photo courtesies :
http://img230.imageshack.us/i/vlcsnap2009100809h55m26.png/
http://i.ytimg.com/vi/n7p1Gl6JNJI/0.jpg
http://tamilmovies.orutube.com/wp-content/uploads/2010/06/dxlo4x.png

9 comments:

JDK said...

எனக்கு பிடித்த காட்சி கமல் தனது தந்தையிடம் விவாதிக்கும் போது அவர் "உதய மூர்த்தி பிள்ளை" என்று கூறுவார் அதற்க்கு கமல் "உதய மூர்த்தி" போதும் "பிள்ளை" உங்களோடே இருக்கட்டும் என்று சொல்வார்.

அதே போல் "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ...." குறளை கமல் சொல்லி முடிப்பதும் மிக அருமையாக இருக்கும் !!

பல காட்சிகளில் கமலுக்கு வசனம் இல்லாமல் வெறும் கண் மற்றும் முக ஜாடையை வைத்து முடித்திருப்பார்கள்...!! Short and Sharp!! Only Kamal has that kind of Talking eyes.

பத்மநாபன் said...

இந்த படம் எப்பொழுது பார்த்தாலும் சலிக்காது. அருமையா எழுதி இருக்கிங்க. கமல் கூட இருப்பதாலோ என்னவோ எல்லோரும் மிக சிறப்பாக நடித்து இருப்பார்கள்.நகைச்சுவையும் களை கட்டும்..``பின்னாடி பார்க்கலாம் பின்..னாடி பின்னா..டி மனோரமா அமர்க்களம்..சமுக அக்கறை அசத்தல்.விட்டா நானும் ஒருபதிவு போட்டுருவேன். இனி அப்படி ஒரு குடும்ப- சமுக படத்தை பார்ப்போமா.கமல் மனசு வைக்கனும்.

மதுரை சரவணன் said...

விமர்சனம் அருமை. எனக்கு பிடித்தப்படம். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீ.

Shankar said...

Gud review da.. being a kamal fan myself, could feel wat all you told in the initial two paragraphs...

with reviews like this, i am expecting more of this kind from you.

Haripandi Rengasamy said...

@jdk,

நீ சொன்ன அந்த காட்சிகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நண்பா ...

@ பத்மநாபன்,

எனக்கும் இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

@ மதுரை சரவணன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

@ ஷங்கர் ji

Thanks for your comments. yes I am also a kamal fan . I will write more reviews in future ji.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமையான விமர்சனம் . இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய திரைப்படம்.

VaithiNatrajan said...

அருமையான படம். நல்ல விமர்சனம். இந்த படத்தின் கதை டாக்டர் MS.உதயமூர்த்தி அவர்களின் கதை அவரை பற்றி ஒன்றுமே சொல்ல படவில்லை.

VaithiNatrajan said...

அருமையான படம். நல்ல விமர்சனம். இந்த படத்தின் கதை டாக்டர் MS.உதயமூர்த்தி அவர்களின் கதை அவரை பற்றி ஒன்றுமே சொல்ல படவில்லை.