Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Monday, January 7, 2019

என் திரையுலக தேவதைகள்



கால வரிசைப்படி  பாத்தா எனக்கு பிடிச்ச ஹீரோயின்ல முதல்ல நியாபகம் வர்றது தேவிகா. அவருடைய அந்த அழகிய பெரிய கண்கள்தான் அவருடைய பிளஸ்சே . எனக்கு என்னமோ காதல் பாடல்களைவிட சோகப்பாடல்களில்தான் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தோன்றும். 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பொருள் என்ன சொல்லடி, ராதா' வைவிட 'சொன்னது நீதானாவில்தான்' அவர் மிகவும் அழகாக இருப்பார். பனியில்லாத மார்கழியாம்  வைவிட 'நினைக்கத் தெரிந்த மனமே' வில்தான் அழகு. எனக்கு என்னமோ அவருடைய கண்களில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடுவதாகத் தோன்றும்

எனக்கு பிடித்த இன்னவொருவர்னா அது , ஜமுனா . இவரைப் பிடிக்க, ஒரே ஒரு பாடலைப் பார்த்தால் போதும். 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் இருந்து 'அன்புள்ள மான்விழியே' பார்த்தாலே போதும். நிச்சயம் அவருடைய விழிகள், மான் விழிகள்தான். அந்த அழகிய பெரிய கண்களைக்  கொண்டு அந்த ஒரு பாடலில் அத்தனை காதல் உணர்வுகளை  காட்டி இருப்பார்.  நான் பார்த்த மிகச் சிறந்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த பாடல்  வரிகளும் அவ்வளவு மிகச் சிறப்பாக ஜமுனாக்காகவே எழுதியது போலவே இருக்கும். எனக்குத் தெரிந்து அவர் தமிழில் அதிகப் படங்களில் நடித்திருக்கவில்லை. குழந்தையும் தெய்வமும் படம் பல களங்களில் பயணித்திருக்கும் . அது முழுதாக காதல் படமாகவே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் .  எனக்கு அவருடைய நடிப்பில் ஒரு முழு நீள காதல் படத்தைக் பாக்கணும்னு ரொம்ப ஆசை. 

சில பேர் Short Bust ஆக வந்து மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் . அப்படி ஒருத்தர்தான் நதியா. மற்ற பெரிய நடிகைகளுடன் ஒப்பிடும் போது , அவர் நடித்த திரைப்படங்கள் மிகச் சிலதான். ஆனால் இன்றைய காலகட்டம் வரை நதியா என்றாலேயே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்புதான். நதியாவும்  அமலாவும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டங்களில்தான் அறிமுகம் ஆனார்கள். அமலாவும் சிறந்த அழகிதான். சொல்லப் போனால் நதியாவை விட அழகிதான். ஆனால் நதியாவிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த தெத்துப் பல்லுக்கு ஒரு அழகா கொடுத்ததே நதியாதான் . அதே மாதிரி அவருடைய ட்ரெஸ்ஸிங் சென்சும் ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் கூட உறுத்தாத மாதிரி மாடர்ன் டிரஸ் போடுறதுல நதியாவ அடிச்சிக்க முடியாது. அவர் அளவுக்கு மாடர்ன் ட்ரெஸ்சும், ட்ரடிஷனல் ட்ரெஸ்ஸும் செட் ஆகுறது ரொம்ப குறைச்ச பேருக்குதான். எனக்கு அவருடைய பாடல்களில் மிகப் பிடித்தது , 'கண்ணா, உனைத் தேடுகிறேன் வா' . இந்தப் பாட்டுல , ஒரு சோகம் இழையோடிய காதல் இருக்கும் . அதுவும் அந்த சுடிதாரில் ரொம்ப அழகா இருப்பார் . நதியாவின் மிகச் சிறந்த காதல் பாடல்னா அது, 'சின்னத் தம்பி பெரிய தம்பி'ல வரும் , 'ஒரு காதல் என்பது'. சான்சே இல்ல , செம அழகா இருப்பார். 

அடுத்து ஜெயஸ்ரீ . எங்க அம்மா , திருப்பி திருப்பி கேட்பாங்க , இவள எப்படிடா உனக்கு பிடிச்சதுனு . எதோ பிடிச்சுருச்சுனு சொல்லுவேன். ஜமுனா, தேவிகா அளவுக்கு இல்லனாலும், பிடிக்கும். ஜெயஸ்ரீ கொஞ்சம் துடுக்கா  திமிரா நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஜெயஸ்ரீ நடிச்ச மத்த படங்கள் இருந்தாலும், எனக்கு என்னவோ ரொம்ப நினைவில் இருப்பது 'திருமதி ஒரு வெகுமதி'. அதுல அவருக்கு ரொம்ப பெரிய கேரக்டர் கிடையாது, இருந்தாலும் அந்த திமிரா நடிக்கிறதுனால பிடிச்சுருக்கோ என்னவோ. இதே அளவு பிடிச்ச மத்த நடிகைகள்னா அது காஞ்சனா, வாணிஸ்ரீ, ஜீவிதா. ஜீவிதா, ரொம்ப அழகிலாம் கிடையாது . சொல்லப் போனா ரொம்ப சாதாரணமா இருப்பார் . பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி . ஆனா ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். பொதுவா , பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கப் நடிகைகளோடு எப்பயும் சட்டுனு ஒரு connection உருவாகிடும். பொதுவா பசங்களுக்கு , ரொம்ப அழகா இருக்கப் பொண்ணுங்களாம் ரொம்ப தூரம்தான் . நம்மளுக்குலாம் செட் ஆகாதுனு (கிடைக்காதுனு ;) ) . ஜீவிதா அழகா இருக்கப் பாட்டுல ஒண்ணுன்னா அது , 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' . 

ஜெயப்ரதா  - இவர பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியுமான்னு எனக்குத் தெரியல . அவர் தமிழ்ல நடிச்சதே மொத்தமே ஏழே ஏழு படங்கள்தான் . அதுவும் அவரோட peak time ல வந்தது 4 படம்தான். அந்த நாளுல ரெண்டு டப்பிங் படங்க :( . தமிழ் சினிமாக்கு ஏன் இந்த சோதனை :( . அவரோட ,  நினைத்தாலே இனிக்கும் ,சலங்கை ஒலியலாம் யாரால மறக்க முடியும். ஜெயப்ரதா , ஜெயப்ரதா , ஜோடியா தமிழ்ல நடிச்சது ஒருத்தர் கமல், இன்னொருத்தர் விஜயகாந்த் (படம் - ஏழை ஜாதி) :) .

குஷ்பூவோட ஆரம்ப கால படங்களிலாம் ரொம்ப அழகா இருப்பார் . அதுலயும் , வருஷம் 16 ல, சான்சே இல்ல , செமயா இருப்பார் . அந்த படம் முழுசும் ரொம்ப அழகா இருப்பார். அந்த க்ளைமாக்ஸ மட்டும் பாசில் மாத்தி இருந்தாருன்னா, என்றும் மனச விட்டு நீங்காத படமா இருந்திருக்கும் :( . இளமைத் துள்ளலோட இருக்குறதுனா, குஷ்பூவ வருஷம் 16 ல பாத்தா தெரியும். 

அர்ச்சனா - பாலு மகேந்திரா ஒரு பேட்டில சொல்லி இருப்பார் , என்னுடைய ஹீரோயின்ட்ட மண்ணின் மணம் இருக்கணும் . எங்கயோ இருந்து வெள்ளையா ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து என்னால நடிக்க வைக்க முடியாது. அவர் சொன்ன மாதிரி  அவரோட எல்லா ஹீரோயின்ட்டயும் மண்ணின் மனம் இருக்கும், அர்ச்சனாவும் அதில் ஒருத்தர் . அர்ச்சனாவை எனக்கு எப்ப பிடிச்சதுனு தெரியாது , ஆனா , ரொம்ப லேட்டாதான் பிடிச்சது , அந்த மண்ணின் மணத்திற்காக பிடிச்சது .  வீடு படத்துலலாம் அவ்வளவு இயல்பா இருப்பார். அர்ச்சனாவோட அமைதிதான் அழகு . எனக்கு , இன்னும் இருக்க டவுட் , ரெட்டை வால் குருவில பேசுறதுதான் அவரோட உண்மையான குரலா ? .
  
அர்ச்சனா மாதிரி எனக்கு ரொம்ப லேட்டா பிடிச்ச இன்னொரு ஹீரோயினா அது, கஸ்தூரி. சொல்லப்போனா ரொம்பவே லேட்டாதான். கஸ்தூரி அளவுக்கு களையான முகமும் , வடிவமும் கொண்ட நடிகைகள் குறைச்சுதான் . அவருக்கு  இணையா ,அழகான பல்வரிசை கொண்டவங்கனா அது பானுப்ரியாவும் ,K.R. விஜயாவும் தான் . கஸ்தூரியும் , பக்கத்து வீட்டுப் பொண்ணு அழகுதான் . சிட்டி பக்கத்து வீடு ;) .  கட்டுமரக்காரன்லலாம் ரொம்ப அழகா இருப்பார்.  இன்னும் அவர் நிறைய நடிச்சுருக்க வேண்டியது .  ஆனா நம்ம தமிழ் சினிமாக்குத்தான் தமிழ் பொண்ணுங்களே பிடிக்காதே . அதே மாதிரி ஒருத்தவங்க மேல இருக்க மதிப்பு , அவங்களோட அழகையும் தாண்டி அறிவும் ,தைரியமும்தான் கொடுக்கும். அதுக்கு மிகச் சிறந்த உதாரணம் கஸ்தூரி . எத்தனை ஹீரோயின் , Master Mind India லலாம் கலந்துக்கிட்டு மிளிர்ந்தாங்க?.

இப்படி வெவ்வெறு காலகட்டத்துல இந்த லிஸ்ட்ல இருந்தவங்களோட லிஸ்டு ரொம்ப பெரிசு . 

Saturday, May 4, 2013

எதிர் நீச்சல் - விமர்சனம்

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல படம் அமைந்துள்ளது சந்தோசமா இருக்கு . எனக்கு சிவகார்த்திகேயனையும் அவருடைய காமெடியையும் ரொம்ப பிடிக்கும். சிவகார்த்திகேயனுடைய காமெடி யாரையும் புண்படுத்தாத காமெடியா இருக்கும். எனக்குத் தெரிஞ்சு real time timing நல்லா வர்றது சிவகார்த்திகேயனுக்குதான் . சந்தானத்துக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களில் ஒண்ணா இருக்கிறது அதுதான். நீங்க நல்லா யோசிச்சுப் பார்த்தா தெரியும் விஜய் டிவில சந்தானம் பண்ணிய நிகழ்ச்சிகள்  பெரும்பாலும் pre planned comedy யை base பண்ணி இருக்கும் . ஆனா எனக்குத் தெரிஞ்சு சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பண்ண நிகழ்ச்சி எல்லாம் real time comedy நிகழ்ச்சிகள்தான். இந்த பின்புலம்தான் இருவரின் வெற்றியின் அளவை சினிமாவில் தீர்மானித்தது.  சினிமாவில் எல்லாமே எழுதி வைத்து பேசும் காமெடியா இருக்கிறதால சினிமாவில் சிவகார்த்திகேயனுடைய காமெடி எதுவுமே இதுவரை எடுபடாமலே இருந்தது . ஆனால் அதை இந்தப் படம் உடைத்திருப்பதாகவே தோணுது. சினிமாவில் முதல் முறையா சிவகார்த்திகேயனுடைய காமெடி timing இந்தப் படத்தில்தான் மிகச் சிறப்பா அமைஞ்சுருக்கு.

காமெடி நல்லா இருந்தாலும் இது முழுக்கவே காமெடி மட்டுமே  நிரஞ்ச படம் இல்ல . நல்ல கதை அம்சமும் உள்ள  படம் . இந்த மாதிரி பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்களில் முக்கிய அம்சம் நல்ல கதை அம்சம்தான். அதிலும் இன்னொரு முக்கியம் அம்சம் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் அவர்களின் திறமையை காட்ட முழு வாய்ப்பு கிடைக்கும். இது ரெண்டும் இந்தப் படத்துல அமைஞ்சுருக்கு. படத்துல நடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கதை இருக்கு. சிவகார்த்திகேயனுக்கு குஞ்சு என்கிற குஞ்சிதபாதம் என்கிற பெயரால வர்ற சங்கடங்களும் அதை மறைக்க அவர் படுகிறபாடுகளும் என்று ஒரு பின்புலம் , ப்ரியா ஆனந்துக்கு (கீதா)  தன்னார்வ தொண்டர் , டீச்சர் , LIC agent , student இப்படின்னு ஒரு பின்புலம் , அந்த மாரத்தான் பயிற்றுனரான அந்த வள்ளிக்கு ஒரு பின்புலம் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் . இத்தனை துணைக் கதைகள் இருந்தாலும் அவை அனைத்தும் மிகச் சிறப்பாக பொருந்தி வந்ததுதான் அருமை. சிவகார்த்திகேயன் , சிவகார்த்திகேயனின் வர்ற அந்த நண்பர் , சிவகார்த்திகேயனின் மாரத்தான் பயிற்றுனராக வர்ற அந்த வள்ளி , அவரின் அப்பா , எப்பயும் போல ஜெயக்குமார் இப்படி எல்லாருக்கும் நடிப்பதற்கு மிகச் சிறப்பான வாய்ப்பும் அதை அவர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்தியும் இருப்பதும் நல்லா தெரியுது. கதையும் பெயரை வைத்து பிறர் கேலி செய்வது , சென்னை மாரத்தான் , இந்தியாவில் விளையாட்டுத்துறை படும் பாடு இப்படி நம்மை சுற்றி நடக்கும் விசயங்களைப் பற்றி  இருப்பதால் படத்துடன் நம்மால் நன்கு ஒன்ற முடிகிறது 

ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சிரிச்சு பார்த்த படம்னா அது இந்தப் படம்தான் . இந்தப் படத்துல எல்லாருக்குமே காமெடி நல்லா வந்துருக்கு. சின்னச் சின்ன இடத்துலயும் காமெடி நல்லா வந்துருக்கு. சிவகார்த்திகேயன் , அவரின் நண்பர் , சிறிது நேரமே வரும் மனோபாலா இப்படி பலரின் காமெடியும் நல்லா இருக்கு. அதிலையும் எனக்கு ரொம்ப பிடிச்ச காமெடி , சிவகார்த்திகேயனுடைய நண்பர் சிவகார்த்திகேயனிடம் , ' வள்ளிக்கு , நீ மாரத்தான்ல ஒடுவியானு டவுட்டு , கீதாக்கோ நீ வள்ளியோட ஓடிடுவியோனு டவுட்டு'. சாஞ்சே இல்ல . சூப்பர் timing ஆ இருந்த காமெடி. யாருங்க சிவகார்த்திகேயனோட நண்பரா வர்ற அந்த நபர் . ஏற்கனவே சில படங்களில் பார்த்துக்குறேன் .ரொம்ப நல்லா நடிக்கிறாரு.

படத்துல எனக்கு பிடிக்காத ஒரே அம்சம் . இசை . மொக்க . அதுவும் அந்த பின்னணி இசை . அதுவும் அந்த மாரத்தானின் கடைசி நிமிடங்கள் எவ்வளவு பரபரப்பானவை . இசை , எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்க வேண்டும் . sorry . பாடல்களும் சுமார்தான்.

நிச்சயமா ரொம்ப நல்ல படம் . Feel good movie. நிச்சயம் பாக்கலாம் .

Saturday, March 2, 2013

பார்த்த படங்கள்

ஒரு நாள் OneIndia ல ஒரு படத்தோட விமர்சனம் படிச்சேன் . பொதுவா நான் பாக்காத படங்களோட விமர்சனம் படிக்கமாட்டேன், ஏன் ஒரு படம் பாக்கணும்னு நினச்சுருந்தேனா அந்த படத்தோட trailer கூட பாக்க மாட்டேன். எனக்கு எந்த படமும் புதுசா fresh ஆ பாக்கணும். இருந்தாலும் அன்னைக்கு அந்த படத்தோட விமர்சனம் படிச்சேன் . படிக்கும்போது படத்தோட பேர கவனிக்கல. விமர்சனத்துல தெரியாத்தனமா அந்த படத்த பாத்துட்டேனுங்கிற மாதிரி எழுதி இருந்தான். நம்ம ஊரு பாகவதர்லாம் தோத்தாங்கங்கிற மாதிரி எழுதி இருந்தான் .சரி ஏதோ ஒரு படம்னு நினச்சு விட்டுடேன் .

நிற்க . மேல சொன்ன பத்திக்கான தொடர்ச்சி பதிவின் நடுவில் வரும் . இப்ப கீழே உள்ள பத்தில இருந்து புதுசா படிக்க ஆரம்பிக்கவும் .

நான் லண்டன் வந்ததுல இருந்து அதிகமா பண்ற ஒரு விஷயம் படம் பாக்குறது. டிவிலலாம் படம் பார்த்தா விளம்பர இடைவேளை வந்துச்சுனா சேனல மாத்தி மாத்தி திரும்பியும் அதே சேனலுக்கு வரும்போது பாதி படம் ஓடிரும் . அதனால முழுசா எந்த படத்தையும் உருப்படியா பாத்ததில்லை. திருட்டு VCD யும் பாக்குறதில்ல. அதனால நம்மக்கு படம்னாலையே அது தியேட்டருக்குப் போய்ப் பாக்குறதுதான் .

இங்க வந்ததுல இருந்து படம் பாக்க நிறையா சான்ஸ் இருந்ததால வந்ததுல இருந்து குறைஞ்சது ஒரு பத்துப் படம்னாவது பாத்துருப்பேன். அப்படி பாத்த படம்தான் 'Django Unchained' . அந்தப் படத்துக்குப் போற வரை அந்தப் படம்தான் பாக்கப் போறேன்னு தெரியாது . தியேட்டருக்குப் போயிட்டு மதுவுக்குப் போன் பண்ணிப் பேசும்போது மதுட்ட படத்த சொன்னேன் . அப்ப அவன்தான் , ' டேய் , இந்தப் படம் எப்ப இங்க ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். அது டோரண்டினோ படம் . நல்லா இருக்கும். என்ன அவன் படம் எல்லாம் அதிக violance இருக்கும். அதுல டாக்டரா வர்ற கிறிஸ்டோபர் வால்ட்ஷ் செமையா நடிப்பான்' னு  சொன்னான். இந்த மாதிரி ஒரு முன்னோட்டத்தோடதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன் . படம் ஆரம்பிக்கும்போதே இது அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு சில வருடங்களுக்கு முன் நடக்குற கதைன்னு எழுத்து வரும்போதே நிமிந்து உட்காந்த்துட்டேன் . பின்ன நம்ம area ஆச்சுல :) . முதல் காட்சில இருந்து கடைசியா கிறிஸ்டோபர் வால்ட்ஷ் இறக்குற வர மனுஷன் full screen னும் அந்த ஆள்தான் . சான்சே இல்ல. அந்த முதல் காட்சில அந்த அடிமை வியாபாரிய சுட்டுட்டு , அவனிடமே django வுக்காக பணம் கொடுத்துட்டு அதுக்கு ரசீது கேட்கரதுல இருந்து தன்னோட கடைசி காட்சில டிகாப்ரியோவ சுட்டுட்டு 'Sorry , I could not resist' னு  சொல்லிட்டு சுடப்பட்டு இறக்குற வரை ஒவ்வொரு ஷாட்டுளையும் full score பண்ணுறார் மனுஷன். எனக்கு அந்த, எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த character , நிஜமாவே அவரோட நடிப்பா இல்ல அந்தக் கதாப்பாத்திரத்தின் படைப்பானு தெரியல. DiCaprio, நிச்சயமா டிகாப்ரியோவ நான் இந்த படத்துல எதிர் பார்க்கவே இல்லை. அந்த மாதிரி பாத்திரத்த இவ்ளோ பெரிய ஆளு செய்றதுக்கு நல்ல தைரியம் வேணும். சான்ஸ்சே இல்ல . எனக்கு violance படங்கள் அதிகமா பிடிக்காதுனாலும் இந்தப் படம் ரொம்ப பிடிச்சிருந்தது. படத்துல ரத்தம் அதிகமா இருந்தாலும் அது அவ்ளோ ரியலிஸ்டிக்கா இல்லாதது ஒரு காரணமா இருக்கலாம். இந்த படம் முடிஞ்சு வெளிய வரும்போது எங்க friends 8 பேருல எனக்கும் இன்னொரு பையனுக்கும் மட்டும்தான் பிடிச்சிருந்தது.  அதுக்கு ரெண்டு காரணம் 1. கிறிஸ்டோபர் வால்ட்ஷ் 2. நமக்கு நல்லா தெரிஞ்ச களமான அமெரிக்க உள்நாட்டுப் போருக்கான அடித்தளம் பற்றி இருந்ததனாலும்.

அடுத்து ரொம்ப எதிர்பார்ப்பே இல்லாம போன படம் 'Last Stand' . நம்ம அர்னால்ட் ஸ்வாஸ்நேக்கர் ரொம்ப நாள் கழிச்சு நடிச்ச படம். ரொம்ப சிம்பிள் கதைதான். கொஞ்சம் லாஜிக் மீறல் இருந்தாலும் ரசிச்சு சிரிச்சு பாத்த படம். படம் முடிஞ்சதும் நல்ல மனநிறைவா இருந்துச்சு. அதுலயும் அர்னால்ட் சொல்ற அந்த டயலாக் 'உனக்கு இருக்குற பயத்த நீ வெளில சொல்லிட்ட நான் சொல்லல. அது தான் வித்தியாசம். சொல்லப் போனா உன்ன விட நான் அதிகமா பயப்படுறேன்'னு  சொல்றது நல்லா இருந்துச்சு. சும்மா ஒரு நாலு பேர  வச்சுகிட்டு FBI ஐயாலயே சமாளிக்க முடியாத அந்த பெரிய gang அ  சமாளிக்கிறது நல்லா இருந்தது. police ஆ நடிச்சஅந்த ரெண்டு பொண்ணுங்களும் நல்லாத்தான் இருந்துச்சு ;) .

அடுத்த படம் Flight . அதிகமா பேசிக்கிட்டு கொஞ்சம் bore ஆ இருந்த படம்தான். Moral , ethical, கொஞ்சம் சாகசம் நிரஞ்ச, தண்ணி அடிக்கிறதால ஒருத்தன் இழக்குற விசயங்களைப் பற்றி , அதை உணரும் போது அவனோட மன நிறைவைப் பற்றி பேசுற படம். எனக்கு இந்தப் படத்துல ரொம்ப பிடிச்ச இடம்னா அது 'கடைசியா அந்த ஒரு பொய்ய நான் சொல்லி இருந்தா நான் குற்றவாளி ஆகாமல் தப்பி இருக்கலாம் . ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படி பொய்யோட வாழ்றது' னு டென்செல் வாசிங்டன் சொல்றதும் , அதே மாதிரி தன்னால்  எந்த ஒரு தப்பும் செய்யாத , ஒரு பயணிய காப்பாத்த தன் உயிரையே இழந்த அந்தப் பொண்ணு மேல எந்த களங்கமும் வரக்கூடாதுன்னு ஹீரோ நினைக்குற இடமும் ரொம்ப பிடிச்சிருந்தது. கடைசியா தான் உண்மைய பேசி இருக்கோம்னு நினச்சு ஜெயில்ல அவன் பெறுகிற மன நிம்மதி , good.

Good Day to Die Hard : இந்த படத்த பாத்துட்டு வெளிய வந்த உடனே தோணுனது ரெண்டு விசயம்தான் . 1) காது  வலி - படம் fulla அவ்ளோ சத்தம் 2) தேவை இல்லாத அதிகமான ஆர்ப்பாட்டம். அவ்ளோ செலவு , அவ்ளோ ஆர்ப்பாட்டம் . அத்தன கார அடிச்சு நொறுக்கி இருப்பாங்க . இவ்ளோ செலவழிச்சு எடுத்திருந்தாலும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம சாதாரணமா எடுத்துருந்த Last Stand தான் ஞாபகம் வந்துச்சு .

அடுத்து பாத்த படம் Les Miserables . Box Office ல முன்னாடி இருந்ததால ரொம்ப நாளா பாக்கணும்னு  நினச்ச படம். சரின்னு அன்னைக்கு ஒரு நாள் night அந்த படத்துக்குப் போணோம் . படம் ஆரம்பிச்சதும் நம்ம கிளாடியேட்டர் வந்தார். வாவ் சூப்பர்னு எழுந்து உட்காந்தேன். அடுத்து ஒவ்வொருத்தரா பாட ஆரம்பிச்சாங்க . எங்கயோ நெருட ஆரம்பிச்சது . அடுத்து தொடர்ந்து கால் மணி நேரமா பாடிக்கிட்டேதான் இருந்தாங்க. அய்யயோ அதேதான் . அதே படம்தான் . நான் இந்த பதிவோட ஆரம்பத்துல சொன்ன அதேபடம்தான் இது . படத்துல வசனமே கிடையாது. எல்லாமே பாட்டுதான். படத்துக்கு வந்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தர் மூஞ்சிய பாத்துகிட்டோம். கொஞ்ச நேரத்துல friends  எல்லாரும் தெரியாத்தனமா இந்த படத்துக்கு வந்துட்டோம்னு நொந்துகிட்டு இருக்கும்போது நான் மட்டும் எதுவும் கண்டுக்காத மாதிரி இருந்தேன். அப்புறம், ஏற்கனவே இந்த படத்தோட review  படிச்சிட்டேன்னு சொன்னா அடிதான் விழும் . அடுத்த காமணி நேரத்துல friends  எல்லாரும் கிளம்பிட்டாங்க . நானும் சத்தமே இல்லாம அவங்களோடையே கிளம்பிட்டேன் . என் வாழ்க்கைலையே ஒரு படத்துக்குப் போய் அது முடியுறதுக்கு முன்னாடியே எழுந்து வந்தது அது தான் முதல் தடவை . அப்புறம் மதுட்ட கேட்ட பிறகுதான் தெரிஞ்சது அது Musical படமாம் . தப்பான இடத்துல தப்பான ஆளாப்  போயிட்டோம்னு நினைச்சுக்கிட்டேன் :).

இதுக்கு நடுவுல நான் பாத்த படம் 'விஸ்வரூபம்' . படம் பிடிச்சிருந்தது. But படம் பாத்து முடிச்சப்ப wow, great,superb னு சொல்லத் தோணல. ஆனா இப்ப நினைச்சுப் பாத்தா கமலோட நிறைய படங்கள பாத்த உடனையே wow , great , superbனு நான் நினைச்சதா தெரியல. உன்னைப் போல் ஒருவன்ல கூட முதல்ல மோகன்லாலும், அடுத்து அந்த இன்ஸ்பெக்டரும் மூணாவதாதான் கமல் பிடிச்சிருந்தது, நான் கமலோட ரசிகனா இருந்த போதிலும்.  நாட்கள் ஆக ஆகத்தான் அவரோட படங்கள் அதிகமா பிடிச்சதா தெரியுது. இந்தப் படம் முடிஞ்சதும் எனக்கு பளிச்சுன்னு தோணியது , location, atmosphere. அப்படியே ஆப்கானிஸ்தானை கண்ணு முன்னாடி நிறுத்தியது. அடுத்து படத்தோட பெயர்க்காரணம்.

விஸ்வரூபம் - பெயர்க்காரணம் கூறுக ?

விஸ் என்கிற விஸ்வநாத்தின் உண்மையான ரூபத்தைக் கூறுவதால் இப்படத்திற்கு விஸ்வரூபம் என்று பெயர் வந்தது . அதே நேரத்தில் தன் மனைவியின் முன், கதையின் நாயகன் எடுக்கும் விஸ்வரூபத்தைக் கூறுவதால் இப்படத்திற்கு விஸ்வரூபம் என்று பெயர் வந்தது என்று கூறுவோரும் உண்டு .
(கோனார் தமிழ் உரை ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை ;) ).

அடுத்து பாத்த ரெண்டு மொக்கப் படங்கள் 1) அலெக்ஸ் பாண்டியன் . தமிழ்ல இவ்ளோ மோசமான logic மீறல் உள்ள படத்த நான் பாத்ததில்லை. முதலமைச்சர் பொண்ண கடத்தி வச்சுகிட்டு அதிக பக்க விளைவுள்ள மருந்தை விக்க அனுமதி வாங்கிட்டா வேற ஒன்னுமே பண்ண முடியாதா என்ன. பொண்ணு வீட்டுக்கு வந்த மறுநாளே அதை ரத்து செய்ய முடியாதா என்ன ?. இவ்ளோதான் நம்ம இயக்குனருக்கு தெரிஞ்சிருக்குனு விட்டுப் போகவேண்டியதுதான் . வேற என்ன பண்ண. 2) ஆதிபகவன் . ஒரு தாதாவான திருநங்கையா அழகா ஸ்கோர் பண்ணக்கூடிய பாத்திரம். ஆனா ஜெயம் ரவியோட நடிப்புல கொஞ்சம் கூட நளினமே இல்லை . கொஞ்சமும் வில்லத்தனம் இல்ல. எனக்கு ஏனோ தாதாவான திருநங்கை ஜெயம் ரவிய பார்க்கும்போது , திருநங்கையா இருந்து மதுரை வரை படை எடுத்து வந்து கொள்ளை அடித்துப் போன அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரின் ஞாபகம் ஏனோ வந்தது :( . Two different contrast !.

எனக்கு வேறு மொழிப் படங்கள் அதுவும் தெரியாத மொழிப் படங்கள் பாக்க ரொம்ப பிடிக்கும். அதுவரை தெரியாத , அறியாத ஒரு புதுப் பாதையில் நடப்பதைப் போன்ற ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்படி நான் பாத்ததுதான் ஹிந்தி படங்கள். என்னோட ஹிந்தி பட journey என்னோட flight journey ல இருந்து ஆரம்பிச்சது. லண்டன் வரும்போது Flight ல அப்படி பாத்த ஹிந்தி படம்தான் . Vicky Donor .ரொம்ப simple ஆ அழகா இருந்துச்சு . எப்பயும் போல அந்த படத்துலையும் ஹீரோயின் பிடிச்சுருந்துச்சு, அதோட அந்த ஹீரோவையும் பிடிச்சிருந்ததுதான் ஆச்சரியம் ;) அந்த ஹீரோயின் தன் காதலனான ஹீரோட்ட தான் ஏற்கனவே divorce ஆனவள்னு சொல்லும்போது அந்த ஹீரோ அத சாதாரணமா எடுத்துக்குறது ரொம்ப அழகா இருந்துச்சு. Vicky Donor : விக்கியிங்கிற அந்த ஹீரோ தன் விந்தணுவை விளையாட்டா கொடுத்து பணம் பெறுவான் (ஹே guys , no bad thinking. எல்லாம் நல்ல வழிலதான் சம்பாரிப்பான் ;) ) . அது பின்னாடி அவன் மனைவியான ஹீரோயினுக்கு தெரிஞ்சதும் அவ அவன விட்டு பிரிஞ்சுருவா . அதுக்கப்புறம் அவங்க எப்படி சேருராங்கங்கிறதுதான் கதை . எனக்கு அந்த படத்துல பிடிச்ச ஒரு கேரக்டர் ஹீரோவோட பாட்டி . அந்த வயசுல அவங்க வீட்டிலையே ரொம்ப முற்போக்குவாதினா அது அந்த பாட்டி தான். ஹீரோயின் ஏற்கனவே divorce ஆனவள்னு தெரிஞ்சாலும் தன் பேரன் காதலுக்கு முதல்ல ok சொல்றது அந்த பாட்டிதான்.  நல்ல romantic , sentiment ஆன படம் . அந்த படத்துல ஹீரோ அவள fish னு சொல்றதும் அவ அவன butter chicken னு சொல்றதும் நல்லா இருக்கும் . ஏன்னா பொண்ணு பெங்காலி ,பய்யன் பஞ்சாபி :) .

அடுத்தது Murder 3 . படத்துல மொத்தமே மூணே மூணு பேருதான். romantic ஆ , simple ஆ , நல்ல twist வோட இருந்த படம். படத்துல வந்த ரெண்டு ஹீரோயின்ல அந்த பார்ல வேலை பாத்த பொண்ணு பிடிச்சிருந்தது. அந்த முதல் ஹீரோயினோட அந்த குறும்பு நல்லா இருந்தது. அந்த முதல் காதலி ரூம்ல மாட்டிக்கிட்டு இருக்கும்போது அய்யயோ அந்தப் பொண்ணு செத்துப் போயிருவாளானு தோணும்போது அடுத்தடுத்து நடக்கிற அந்த காமெடி சம்பவங்கள் அவள் இறக்கமாட்டாள்னு மன நிம்மதிய கொடுத்துச்சு ;). ரெண்டு மூணு twist வோட படம் நல்லா இருந்துச்சு . பிடிக்காத ஒரே விஷயம் இந்த மாதிரி ஒரு மொக்கப் பையனுக்கு ரெண்டு ஹீரோயினாங்குறதுதான்.

Kai Po Che. Trailer அ பாக்கும்போதே ஒரு புத்துணர்ச்சியத் தந்த படம். இருந்தாலும் நான் அன்னைக்குப் பாக்கணும்னு நினைச்சுப் போனது Special 26. ஆனா அந்தப் படம் ரொம்ப லேட்டாதான் ஆரம்பிக்கிறதா இருந்ததால இந்தப் படத்துக்குப் போனேன். கிரிக்கெட், கிரிக்கெட்டுன்னு சும்மா ஊர் சுத்துற ரெண்டு friends மற்றும் அவர்களோட பொறுப்புணர்ச்சி மிக்க இன்னொரு friend . இவர்களோட வாழ்க்கையில் நடக்கிற விசயங்களை பற்றி சொல்ற படம். படத்தோட பின்னணில அழகா கோர்வையா குஜராத் பூகம்பம், 2001 இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் சீரியஸ் , குஜராத் தேர்தல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதை அடுத்து நடக்குற குஜராத் கலவரம் அதனால் அந்த நண்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள்னு ரொம்ப கோர்வையான அழகான திரைக்கதை. நட்பு , ஜாலி , சோகம் , செண்டிமெண்ட் , romance , நிறைந்த ஆனால் அதே சமயம் மசாலா இல்லாத நல்ல படம் .


இப்படி பாத்த படங்கள வரிசைப்படுத்தச் சொன்னா கீழ வருகிற தரவரிசை கொடுப்பேன் .

Best :)
  1. Django Unchained
  2. Kai Po Che
  3. Vicky Donor
  4. Murder 3
  5. Last Stand
  6. விஸ்வரூபம் 

Worst :(

 2 . ஆதி பகவன்
 1. அலெக்ஸ் பாண்டியன்

No Comments : A good day to die hard, Les Miserables

Sunday, January 27, 2013

விஸ்வரூபம்


 

விஸ்வரூபம் - படத்தில் கமலின் மனைவி பூஜா கமலை வெறுத்து ஒரு counselor உடன் பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது . ஏன் நீ அவர வெறுக்கிற என்று அந்த counselor கேட்கும்போது 'He is not a normal man' என்று கூறும்போது நம்ம ஆளு பரதநாட்டியம் சொல்லி கொடுத்துகிட்டே அறிமுகம் ஆகுறாரு.

சும்மா சொல்லக்கூடாது, கமல் பரதநாட்டியத்தில காட்டும் அந்த நளினம் . Wow great . ஹே பொம்மனாட்டிகளா சும்மா இருங்கன்னு சொல்ற அந்த தொனி ஆகட்டும், phone எடுக்க ஓடும்போது ஒரு பொண்ணு மாதிரி மணிக்கட்ட மடக்கிகிட்டு ஓடும் அந்த நளினம் ஆகட்டும், Superb. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை , ஏன் ஆண் பரத நாட்டிய கலைஞர்களை எல்லாம் பெண் நளினத்துடனே காட்டுகிறார்கள் .

விஸ்வரூபம்ங்குற இந்த title கமலோட மனைவியா இருக்க பூஜா பார்வையில இருந்து கமல பாக்கும்போது வந்ததா தோணுது. பெண் நளினத்துடன் இருந்த, தனக்குத் தெரிந்த  தன்னுடைய கணவன் தீவிரவாதிகள வேட்டையாடுற, பாரதப் பிரதமரே நேரடியா கூப்பிட்டு பேசுற அளவுக்கு மிகப் பெரிய ரா அதிகாரின்னு தெரியும்போது மலைச்சுப் பாக்குறதுல இருந்து இந்த 'விஸ்வரூபம்' title வந்துருக்கணும். இல்லனா கமல் ஏன் பூஜாவ தீவிரவாதிகள வேட்டையாடுற இடத்துக்கலாம் கூட்டிட்டுப் போறாரு. ஆனா அப்படி கூட்டிட்டு போறதுக்கும் கடைசியா ஒரு காரணம் வச்சுருக்காங்க. இருந்தாலும் இந்த சமயத்துல, அர்னால்டோட 'TrueLies'  படத்துல அவருடைய மனைவி தன்னோட கணவன் சாதாரண வேலை பாக்குற மனுஷன்னு  நினச்சு அவர பிடிக்காம இன்ன ஒருத்தனோட பழகும் போது தன்னோட கணவன் உண்மையிலேயே அமெரிக்க ராணுவத்துல இருக்க மிகப்  பெரிய சாகச வீரன்னு தெரியும்போது அந்த பெரிமித உணர்வுள கண்ண அகல விரிச்சு பாக்கும்போது ஒரு அழுகாச்சி வரும்ல, அதுதான் தோணுது :). சரி கமலோட வார்த்தைல சொல்றதுனா அது ஒரு inspiration ஆ இருந்துருக்கலாம் ;) . அப்புறம் என்ன, படத்தோட கடைசில தீவிரவாதிகள்ட்ட நடுவுல இருக்கும்போது அது வர வெறுத்த கணவன்ட்ட , நீயும் என்னோட வர்றதா இருந்தாதான் நான் அந்த இடத்த விட்டு போவேன்னு அடம்பிடிக்கிறத என்னனு சொல்றது :). Typical indian sentiment twist :)

கமல் படத்தின் எல்லா அம்சங்களும் இதிலும் இருக்கு. கிண்டல் , குத்தல் , நக்கல் உட்பட. பிராமண பாசை பேசும் தன் மனைவிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்னு சொல்றதாகட்டும், இல்ல ஆண்ட்ரியாட்ட , ' ஹே பாப்பாத்தி நீ முதல டேஸ்ட் பாத்து சொல்லுனு' சிக்கன கொடுக்குறதாகட்டும், தான் செய்த சில காரியங்களால் தவறு செய்யாத சிலர்  சாகும்போது துன்பப்படும் அந்த மனிதாபிமானமாகட்டும் இப்படி கமலின்  சில typical சமாச்சாரங்கள்.

படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் location & cinematography. இந்த மாதிரி ஆப்கானிய location இந்தியாவில் எந்த படத்திலும் இதுவரை வந்த மாதிரி எனக்குத் தோணல. இந்த படத்த எங்க எடுத்துருப்பாங்க? . No Idea . அப்படியே பாகிஸ்தானின் NWFP(Northwest Frontier Province) ஐயும் ஆப்கானிஸ்தானையும் கண் முன்னாடி  கொண்டு வந்து நிறுத்துது. superb . அதே போல  அந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள். படம் பார்த்து முடிச்சதும்தான் , நாம பாத்தது ஒரு தமிழ்ப் படம்ல, அதிலயா இந்த அளவுக்கு தத்ரூபமான அமெரிக்க  ராணுவ ஹெலிகாப்டர்களையும் , ஆப்கன் எல்லைப்புறப் பகுதிகளையும்ல நாம பாத்தோம்னு தோணுது . அந்த காட்சிளலாம் அது ஒரு தமிழ்ப் படம்னே தோணல. That is kamal :).

நாமளும் எத்தனையோ தமிழ், இந்தி சினிமால தீவிரவாதிகள ஒழிச்சு கட்டுறத பாத்துருப்போம் , ஆனா இந்த மாதிரி ஆப்கன் தீவிரவாதத்த மிக அருகில இருந்து தத்ரூபமா நான் வேற எந்த இந்திய படத்துலையும் பாக்கள . அந்த வகைல இது மிகப் பெரிய leap.

படத்துல டூயட் காட்சிகளோ பாடல்களோ இல்லை. ஏன் அந்த நடனமாட்டியக் கமல் ஆடும் அந்தப் பாட்டைத் தவிர வேற பாட்டு எதுவும் இருக்கிற மாதிரியே தெரியல. ஏன்னா மத்த பாட்டு எல்லாம் background லயே வருது. கமல் பட touch க்காக கடைசியா  பூஜாவுடன் bed ல கட்டி பிடிச்சு படுத்துருப்பாறு ;) .

நான் முன்ன சொன்ன மாதிரி கமல் காதல், டூயட் எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி அதிக கதையம்சம் உள்ள படங்களா செய்ய ஆரம்பிச்சுட்டாரு (எ .கா : அன்பே சிவம் , UPO). அதற்கு இந்தப் படம் அழுத்தமான ஒரு எடுத்துக்காட்டு . ஆனா அந்த மனுஷனுக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்தா , அவருக்கு அத தொடரணும்குற எண்ணம் இருக்குமான்னு தெரியல :(.

பின்குறிப்பு :

1) இந்த படத்தோட கதையையும் முக்கியமான மத்த அம்சங்களையும் எல்லாரும் போதுமான அளவுக்கு அலசிட்டதால நான் அதுல ரொம்ப உள்ள போகல. சும்மா எனக்குப் பிடிச்ச சின்ன சின்ன விசயங்களா பத்தி மட்டும்தான் சொல்லி இருக்கேன். சரி கதைய பத்தி தெரிஞ்சுக்கணும்கிறவங்களுக்கு வேண்ணா சொல்றேன் ' படத்துல பரதநாட்டியக் கலைஞரா அறிமுகமாகுற கமலுக்கு , ரா அதிகாரியா ஆப்கானிஸ்தானுக்குப் போய் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் பழகி அவர்களுக்குத் தெரியாமலே அவர்களை வேட்டையாடுற  பின்னணி இருக்கு. அடுத்து படத்தோட கடைசில ஆப்கானிஸ்தான்ல விட்ட மிச்சத்த அமெரிக்காவுல வந்து முடிக்கிறாரு. Thats all :) .

2) சீக்கிரமா 'Movie Pass' வாங்கணும் , ஒவ்வொரு படத்துக்கும் 10 பவுண்ட் கொடுத்து மாளல :)

Photo Courtesy : Cinepicks.com

Thursday, July 19, 2012

Start ... Action .. Cut



குறும் படங்கள் பல பேரோட திறமைக்கும், ஆசைக்கும் தீனி போடுது. ஒரு கலைஞரா தன்னுடைய திறமைய காட்டுறதுக்கும், தனக்கான ஒரு identity card காகவும்  பல பேரு குறும்படங்களில் ஈடுபடுறாங்க. இன்னும் சொல்லப் போனா ரொம்ப பெரிய அளவுல திரைத்துறைல  ஈடுபடுறத்துக்கு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாதவங்க  தங்களுடைய கலை ஆசைய நிறைவேத்துறதுக்கு குறும்படம் மிகச் சிறந்த களம்.

சில குறும்படங்கள பாக்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு.  ஏன் இவ்ளோ அழகா  பெரிய திரைல படம் எடுக்க மாட்றாங்கனு தோணுது. அவ்ளோ அருமையா இருக்கு. ரசிகர்களோட ஆர்வம்  இல்ல கவனத்த சில நிமிடத் துளிகளே தக்கவைக்க வேண்டிய தேவைதான்  குறும்படங்களுக்கு , ஆனா அதே ஆர்வத்த ரெண்டர மணி நேரம் தக்க வைக்குறதுங்குறது கொஞ்சம் கஷ்டம்தான். குறும் படங்குறது பாயாசம் மாதிரி , கொஞ்சமா சாப்பிடலாம் . ஆனா அதையே சாப்பாடா சாப்பிட முடியாது. அது தான் சினிமா.

சில நிமிசங்கள்ள முடிஞ்சுரதுதான் குறும்படங்களோட பலமும் பலவீனமும். பலம் , அந்த சில நிமிசங்கள் மட்டும் ரசிகர்களின் கவனத்த தக்க வச்சா போதும் . பலவீனம் அதே சில நிமிசங்களுக்குள்ள ரசிகர்களோட  கவனத்த கவர்ந்திடணும். இங்க test match மாதிரி batsman field ல இறங்கி நாலஞ்சு ஓவரு மொக்க போட்டு form க்கு வர்றதுக்குலாம் time இல்ல , Twenty-20 மாதிரி சில பால்லயே form உக்கு வந்து six அடிக்கணும்.

குறைந்த விலையில் கிடைக்கும் தொழில்நுட்பங்களும் , Youtube மற்றும் Facebook போன்ற தளங்களும் இவர்கள் ரசிகர்களை அடைய ரொம்பவே உதவுது.

பல குறும்படங்கள பாக்கும்போது அது வெறுமனே சும்மா பொழுத கழிக்க ஏனோ தானோன்னு எடுத்தது மாதிரி தெரியல. அதுல அவ்ளோ மெனக்கெடல் இருக்கு. Music, Editing,Cinematography னு பல தளங்கள் கன்னா பின்னான்னு அட்டகாசமா இருக்கு. பெரும்பாலும் இந்த குறும்படங்கள் கதைக்குனு பெரிசா மெனக்கெடுறது இல்ல .பெரும்பாலும் அன்றாட நிகழ்ச்சிகள் தான் அவற்றின் கரு. ரசிகர்களை கவரனும், சிரிக்க வைக்கணும்,சந்தோசப்பட வைக்கணும்  . அவ்ளோதான் goal.

இந்த குறும்படங்களின் ஆகப் பெரிய கரு காதல், காமெடி. Youtube ல search பண்ணா , காதல் குறும்படங்கள கொட்டுது. அதுல பெரும்பாலும் பொண்ண கரெக்ட் பண்ணுறது, அதுல சொதப்புறது. அதுல வர்ற பிரச்சினைகள சுவாரசியமா சொல்லுறதுன்னு அழகா இருக்கு. இந்த காதல் குரும்படங்கல்லாம் லட்சம் hit லாம் அடிக்குது. குறும்புக் குறும்படங்களுக்கும் குறைவில்லை. அவங்களுக்கு நல்லா தெரியுது, தங்களுடைய audience , நெட்டு பக்கம் வர்ற  யூத்துதானு. சலிக்காம ரசிகர்களின் விருப்பத்த நிறைவேத்துறாங்க. இதத் தவிர Horror, Humanity முயற்சிகளும் இருக்கு.


வெறுமனே காமெடி மட்டும் இல்ல. சில படங்கள் ரொம்ப அழுத்தமா இருக்கு. police encounter பத்தி எடுத்த 'தோட்டா விலை என்ன ' ங்குற  படம் ரொம்ப அழுத்தமா இருக்கும். அதே மாதிரி 'புதியவன்' படமும் அழகா இருக்கும்.

இந்த குறும்படங்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்தது கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி. Great.

இந்த குரும்படங்கள்ள நடிகர்கள் தேர்வும் அருமையா இருக்கு. எனக்கு, காதலில் சொதப்புவது எப்படி?, கானல் நீர் போன்ற குறும்படங்களின் நாயகன் ஆதித்தும், நடந்தது என்னனா மற்றும் ஜீரோ கிலோமீட்டர் ஹீரோ கருணாவும்(கலகலப்பு படத்துல செல்போன தொலைக்குற அந்த மச்சான் கேரக்ட்டர்ல நடிச்சுருப்பார்ல அவர்தான்)  ரொம்ப பிடிக்கும். செமையா நடிக்குறாங்க. சான்சே இல்ல . அதே மாதிரி பிடிச்ச இயக்குனர் நளன். மேற்சொன்ன கடைசி ரெண்டு படங்களோட இயக்குனர். இவரோட படங்கள nalanish னு Youtube ல  search பண்ணி  நீங்க பாக்கலாம். எல்லாமே செம காமெடி மூவீஸ்.

ஹீரோயின் செலேக்சனும் அருமை. ரெஜினா கசண்ட்ரா, நிகழ்காலம் , திமிருக்கு மறுபெயர் நீதானே ?ஹீரோயின் பவித்ரா நாயர் அழகு. ரெஜினா அழகா நடிக்குறாங்க. பவித்ராக்கு நல்ல expressive கண்கள். துருதுருனு இருக்கு :)

இந்த குறும்படங்களை பாக்கும் போது ஒரு  கேள்வி  எழத்தான் செய்யுது. இந்த குறும்படங்கள  எடுக்குறதால அவங்க அடையுற லாபம் என்ன? . இதலாம் எடுக்குறதுக்கு  செலவுக்கு என்ன பண்றாங்க? . ஏன்னா இதனுடைய audience யாரும் இந்த குரும்படங்கள பாக்குறதுக்கு செலவு எதுவும் பண்றதில்ல. பின்ன எப்படித்தான் அவங்களுக்கு வருமானம் வருது?. தெரிஞ்சவங்க சொல்லுங்க.

நான் ரசித்த சில குறும்படங்கள்

நிகழ்காலம்
பொண்ணோட expression சூப்பரா இருக்கும் . கடைசில அந்த பய்யன் சொல்ற 'அடி ஆத்தி ஒரு பொண்ணு பின்னாடி எத்தன பேரு' செம :)

ஜீரோ கிலோமீட்டர்
நம்ம ஆளு கருணா நடிச்சது . வித்தியாசமான concept.

நடந்தது என்னனா?
இது கருணா & நளனோட peak :)

காதலில் சொதப்புவது எப்படி?

 துரு
செம சூப்பர் :) எதிர்பார்க்காதது

மாலை நேரம்
எனக்கு அந்த பையனோட வசனம்லா ரொம்ப பிடிக்கும் . வயசுக்கு வந்துட்டியா, போடி வாத்து, ஒரு ஈ காக்கா கூட இல்ல, நீ குட்டியா இருக்க இல்ல நான் குள்ளமா இருக்கேன். இப்படி பல

DSP

Engineering படிச்ச பசங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச subject. இந்த படத்துல அதுக்கு அழகான twist வேற. என் personal life லயே இந்த DSP ய வச்சு ஒரு செம காமெடி நடந்துருக்கு. நான் காலேஜ் படிச்சப்ப என் friend கூட எங்க வீட்டு வாசல் முன்னாடி நின்னு பேசிகிட்டு இருந்தேன். அப்ப அவன்ட்ட மச்சி , இந்த DSP ரொம்ப கஷ்டமா இருக்குடா. என்ன பண்றதுனே தெரியல அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தேன் . அப்ப எங்க வீட்டு வாசல்ல எங்க அம்மாச்சி உட்கார்ந்துருந்தாங்க. என் friend ட்டுட்ட பேசிட்டு வீட்டுக்குள்ள போனேன். அப்ப எங்க அம்மாச்சி என்னடா எதுவும் பிரச்சினையா, DSP அது இது பேசிக்குறீங்கனு கேட்டாங்க. நான் சிரிச்சுகிட்டே அம்மாச்சி DSP னா இந்த semester ல எங்களுக்கு இருக்க Digital Signal Processing ங்குற ஒரு subject னு சொல்லி சிரிச்சேன். அந்த DSP paper க்கு இன்னொரு பேரும் இருக்கு . அதுதான் இந்த படத்தோட title. Degree Stopping Paper :).

நண்பா
நல்ல கான்செப்ட்

புதியவன்
நல்ல +ve story

திமிருக்கு மறுபெயர் நீதானே !

குவியம்

Monday, July 16, 2012

நான் ஈ - விமர்சனம்

இன்னைக்கு படத்துக்கு போறதுன்னு முடிவானதும் , இருந்தது ரெண்டு சாய்ஸ்.1. பில்லா 2 . நான் ஈ. என் மனைவியுடனான சில பல சமாதான உடன்படிக்கைகளை முன்னிட்டு 'நான் ஈ' போவதுன்னு தீர்மானமானது :) .



படம் ஆரம்பிச்சதுல இருந்து விறு விறுன்னு போகுது. எந்த ஒரு இடத்துலயும் துளி bore இல்ல. கதை எல்லா காலத்துலயும் இருக்க கதைதான். வில்லன், ஹீரோயினுக்கு ஆசைப்பட்டு ஹீரோவ கொன்றுறாரு , பின்னர் நம்ம ஹீரோ அடுத்த ஜென்மம் எடுத்து வில்லன பழி வாங்குறாரு. இதுவரைக்கும் வந்த இது மாதிரி படங்கள்ல பெரும்பாலும்  ஹீரோ அடுத்த ஜென்மத்துல பலசாலியா ஜென்மம் எடுப்பாரு. என்ன இங்க நம்ம ஹீரோ 'ஈ' ஆ ஜென்மம் எடுக்குறாரு. எந்த ஒரு பலமும்  இல்லாத 'ஈ' ஆ இருக்குறதால நம்ம ஹீரோ புத்திசாலியா இருக்காரு . அதுதான் இந்த கதையோட பலம்.


ஈயோட கண்கள் பெரிதாக இருந்தாலும் அதன் கண்கள்ல பெரிசா expression கொண்டு வரமுடியாதால , அதோட body language வச்சு அத express பண்ண வச்சது அருமை .
'ஈ' க்கான என்ட்ரி, அதோட ஹீரோயிசம், அதுக்கான மியூசிக் . இப்படி எந்த ஒரு ரீல்ல இருக்க ரியல் ஹீரோக்கும் சலச்சதில்ல இந்த 'நான்  ஈ'
 படத்துக்கு உண்மையான ஹீரோ 'ஈ' யும் அந்த வில்லன்னும்தான்.  படத்தின் ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டும் அதே சுதீப் படத்தின் நடுவில் 'ஈ' இடம் மாட்டி அவஸ்தைப்படும் இடங்கள் அருமை. ஈயோட சாகசங்களும் அதனால் சுதீப் படுற அவஸ்தைகளும் அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைக்குது.

திரைக்கதை, வசனம், இசை, கலை , ஒளிப்பதிவு, டைரக்சன் இப்படி எல்லா ஏரியாக்களும் வெளுத்து வாங்கி இருக்காங்க. படத்தோட மிகப் பெரிய பலம் அனிமேசன். இதுவரை நமக்கு நம்ம நாட்டு அனிமேசன்னா அது நம்ம ராமநாராயண் வகையராவோட அனிமேசன் மட்டும்கிறதால , நமக்கு அனிமேசன் படமுனாலே அது ஹாலிவுட் படம்தான். அப்படிப்பட்ட மனநிலையில் மக்கள் இருக்கும்போது  ஒரு அனிமேசன் கதாப்பாத்திரத்த நம்பி ஒரு படம் எடுக்குறதுனா அதுல எந்த அளவுக்கு அனிமேசன் நல்லா இருக்கணும். நிச்சயமா இந்த படம் ஏமாத்தலா . அனிமேசன் 'ஈ' சூப்பர். 'ஈ' யபத்தி அருவருப்பான எண்ணம் இருக்குற நாட்டுல ஒரு 'ஈ' ய ஹீரோவா வச்சு படம் எடுக்க தைரியம் வேணும். ஆனா அந்த தைரியம், தன்னுடைய ஒவ்வொரு படத்துலயும் ரிஸ்க்  எடுத்து வெரைட்டி காட்டிட்டு வர்ற ராஜ மௌலிக்கு இருக்குறதுல ஆச்சர்யம் இல்லை . படத்தோட title la கதையின் கருன்னு ஒருத்தர் பேரு போடுறாங்க. அவருதான் ரொம்ப காலத்துக்கு முன்னாடி ராஜமௌலிக்கு இந்த மாதிரி ஒரு கான்செப்ட் சொன்னாராம். good.



சமந்தா - அழகு. எல்லா படத்தையும் போல இந்த படத்துலயும் அழகோ அழகு சமந்தா. என்னா expression , என்னா நடிப்பு, என்னா அழகு . காணக் கண் கோடி வேண்டும் :)

காதல், காமெடி, ஆக்சன் , த்ரில்லர், செண்டிமெண்ட் இப்படி அனைத்து ஏரியாக்களும் கொண்டது 'நான் ஈ'
படம் சூப்பர் , என்ன ஒரே ஒரு வருத்தம், அழகு சமந்தாவ 'ஈ' க்கலாம் ஜோடி ஆக்குனத நினைச்சுதான் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ;) .

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி , நான் எங்க பெரியம்மா வீட்டுக்கு வடபழனி போகும்போது அங்க எனக்கு ஒரு 'உதவி இயக்குனர்' அறிமுகம் ஆனாரு. ஒரு நாள் அவர்ட்ட பேசிகிட்டு இருக்கும்போது அவர், சார் , நான் 'Spider Man' கான்செப்ட்ல ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கு சிலந்தி மாதிரி ஏதாவது உயிரினம் இருந்தா சொல்லுங்க சார்னு, சொன்னாரு. நானும் பல ஆராச்சிகல்லாம் பண்ணி , சார் , ஆப்ரிக்காவுல ஒரு வண்டு இருக்கு சார் . அது 'mood' வந்துருச்சுனா  வேகமா தரைல கொட்டும் , அதோட அதிர்வு ரொம்ப தூரத்துல இருக்க  இணைக்கு கூட கேட்கும். அந்த வண்ட வச்சு நீங்க ஒரு படம் எடுங்க சார்னு சொன்னேன். இப்ப அவர் மட்டும் டைரக்டர் ஆகி அந்த படம் எடுத்துருந்தார்னா , ஈயலாம் வச்சு படம் எடுக்குற இந்த காலத்துல அந்த படம் முன்னூறு நாள் ஓடிருக்கும். இந்நேரம் படத்தோட title ல  கதையின் கரு 'ஹரிபாண்டி' னு வந்துருக்கும். தமிழ்கூறும் நல்லுலகம் அந்த பொன்னான வாய்ப்ப இழந்துருச்சு ;).

சரி விமர்சனத்த முடிக்கலாம், ஹாலிவுட்டுக்கு ஒரு spider man னா இந்தியாவுக்கு ஒரு 'நான் ஈ' . அவ்ளோதான்பா :).

Sunday, May 13, 2012

லீலை



நான் ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்ச படம் . சும்மா இல்ல 4 வருசமா பாக்கணும்னு நினச்சது. 2008 ல இருந்து அப்பப்ப படத்தோட stills மட்டும் வரும். ஆனா படம் வந்தது 2012 தான் :(.

 நான் ஒரு படம் பாக்கணும்னு தேர்ந்தெடுத்தா அதுக்கு முக்கிய காரணமாகவும், பல நேரங்கள்ல ஒரே காரணமாகவும் இருப்பது என்னனா , ஹி ஹி ஹி  ஹீரோயின்தாங்க :).  நாலு வருசத்துக்கு முன்னாடியே ஸ்டில்ல பாத்தப்பயே  பச்சக்குன்னு இருந்துச்சு. பேருதான் கொஞ்சம் வாயில நுழைய மாட்டேங்குது , அது என்னங்க , ஆம் மானசி பரேக். பொண்ணு அவ்ளோ கியூட்டா , துறு துறுன்னு அவ்ளோ அருமையா இருக்கு. படத்துல Software Engg ஆம். கேக்க நல்லாத்தான் இருக்கு :) . சும்மா சொல்லக் கூடாதுங்க ஹீரோவும் நல்லாத்தான் இருக்கான். பேரு ஷிவ் பண்டிட். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே North Indian models. இந்த பொண்ணு ஹிந்தி சீரியல்ல கொஞ்சம் நடிச்சுருக்கு. ஷிவ் பண்டிட்ட நான் ஏற்கனவே Airtel விளம்பரத்துல பாத்துருக்கேன்.

2008 ல இந்தப் படம் எடுக்கும்போதுதான் அதே தயாரிப்பாளர் மாஸ்கோவின் காவிரி( அட நம்ம சமந்தாவோட முத படம்ங்க. Gore Gore song அ மறக்க முடியுமா!  ) படத்தையும் எடுத்தாரு. அந்த படம் ஒழுங்க்கா போகலைங்குறதால 2010 லயே முடிஞ்சுட்ட இந்த படம் release ஆக இந்த delay. அதோட படத்துப் பேரு மேல வேற case.

லீலை, பேரு நல்லாத்தான் இருக்கு. லீலைங்குற வார்த்தைக்கு  soft ஆன romantic meaning உம் எடுத்துக்கலாம், கொஞ்சம் hard ஆன sexy meaning உம் எடுத்துக்கலாம். ஆனா இப்பலாம் அந்த வார்த்தைக்கு sexy meaning தான் அதிகமா கொடுக்கப்படுது. நம்ம ஹீரோ கார்த்திக் அந்த மாதிரிலாம் லீலைகள் புரியிறவர் இல்லைங்குறதால , just லீலைங்குற அந்த படத்தலைப்புக்காக இவ்ளோ மெனக்கெட்டுருக்க வேணாம்.
சரி ரொம்ப நேரமா முன்னுரையே  கொடுத்துகிட்டு இருக்கோம் . படத்துக்குள்ள போவோம்.

படத்துல நாலே பேருதான் கார்த்திக்(ஷிவ் பண்டிட்), மலர் (மானசி) அப்புறம் அவங்க friends சந்தானமும், சுஜியும்.

 நம்ம ஹீரோ கார்த்திக் ஒரு காதல் மன்னன். பாக்குற பொண்ணுங்கள்ட்ட எல்லாம் 143 சொல்றவரு. காதல் எல்லாம் ஒரு வாரம்தான். அதுக்கப்புறம் டமால். பெரிய காரணம்லாம் இல்ல. 3 paper ல அரியர் வச்சுட்ட. நீ இவ்ளோ மக்குப் பொண்ணா இருப்பனு நான் நினைக்கல, நாம பிரிஞ்சுரலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கார்த்திக்  காதல டுமீல் பண்ணிருராறு. இந்த காதலிகள் லிஸ்ட்ல நம்ம ஹீரோயின் மலரோட friends உம் இருக்காங்க. அதனால நம்ம மலருக்கு , கார்த்திக்னாலே பிடிக்காது. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காமலேயே phone ல சண்டை போட்டுக்குறாங்க.



அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சு ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமலேயே ரெண்டு பேரும் HCL join பண்ணுறாங்க . ஒரு நாள் நம்ம கார்த்திக் , office la இருந்து தன் friend க்கு phone பண்ணும்போது அது தப்பா மலரோட extn க்கு போறதுல இருந்து ரெண்டாவது innings start ஆகுது. ரெண்டு பேரும் விட்ட இடத்துல இருந்து திரும்பவும் சண்டைய start பண்ணிக்குறாங்க. ஒரு நாள் கார்த்திக்கு மலர் எவ்ளோ அழகுன்னு தெரிய வரும்போதுதான் , தான் பண்ணது (வேற என்ன , அழகான பொண்ணோட போட்ட சண்டைதான் :) ) எவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது. கார்த்திக்குங்குற பேர கேட்டாலே கொல வெறியாகுற மலரோட எப்படி பழகுறதுங்குறத யோசிக்கும்போதுதான், நம்ம ஆளு sundar ங்குற புதுப் பேருல மலர்ட்ட அறிமுகமாகி காதலிக்கிறார்.

கார்த்திக், மலர சந்திக்கிறதுக்கு புதுப் புது  சந்தர்ப்பங்கள ஏற்படுத்துறதும் , சுந்தருங்குற பேருல இருக்குற தன்ன காதலிக்கிறதுக்காக மலர கார்த்திக் போன்ல , 'பசங்கல்லாம் ரொம்ப கெட்டவங்க , சுந்தர நம்பாத, அவன் உன்ன ஏமாத்திருவானு' சொல்றதும் . பின்ன நேர்ல சுந்தரா , போன்ல சொன்னதுக்கு நேர்மாறா ரொம்ப நல்லவனா நடந்து  மலர காதலிக்க வைக்குறதும் செம அருமை.  மலர்ட்ட ரொம்ப நெருக்கமாகி காதலிக்கும் போது , தான் கார்த்திக்தான் தெரிஞ்சா, மலர் தன்ன விட்டு நிரந்தரமா விலகிறுவா, அத தன்னால தாங்க முடியாதுன்னு தானே மலர்ட்ட , நான் உன்கிட்ட இருந்து ஒரு விசயத்த மறச்சுட்டேன் அது தெரிஞ்சா நீ என்ன ஏத்துக்க மாட்ட  அதனால நான் உன்ன விட்டு விலகுறேங்குறதுலையும் நல்லா பண்ணி இருக்காரு. பின்னர் திரும்பவும் போன்ல மலர்ட்ட கார்த்திக்கா , சுந்தரோட நிலைய எடுத்துச் சொல்லி திரும்பவும் சேருறது அருமை .

இந்தப் படத்துல ஒரு logic மீறல்னா , அது மலர் , குரலை வச்சுகூட கார்திக்க அடையாளம் கண்டுபிடிக்க முடியலையாங்குறதுதான். but அதுலாம் படம் பாக்கும்போது பெரிசா தெரியல.



இந்த படம் அவ்ளோ அழகா மனசுல பதியக்காரணம் அந்த சினிமாடோகிராபி. பளிங்கி மாதிரி அவ்ளோ க்ளீனா color full ஆ இருக்கு. என்ன கார்த்திக்கும்,மலரும் HCL ல வேலை பாக்குறாங்கங்குறத்துக்காக ஒரே blue மயமா இருந்துருக்க வேணாம் . டிரெஸ்சிங்க்சும் அவ்ளோ நல்லா இருக்கு. ஒரு சாப்ட்வேர் background அப்படியே சினிமாடோகிராபில கொண்டு வந்துருக்குறது அவ்ளோ அழகு.

ஒரு கிளி , ஒரு கிளி பாட்டும் ஜில்லென்று ஒரு கலவரம் பாட்டும் அருமை.

நிச்சயமா எந்த ஒரு negative பாதிப்பும்( '3' பாத்த கலவரம் இன்னம் அடங்கல :(  )  இல்லாம அழகா நிம்மதியா படம் பாத்துட்டு சந்தோசமா வெளிய வரலாம்.

இந்த படம் பாத்ததுல ஒன்னு தெரிஞ்சது , Girls like cheating but that should be sweet cheating :) .

பி.கு:

தியேட்டர்ல என் பக்கத்துல வந்து உட்காந்தவன் ரெண்டே நிமிசத்துல என்னடா படம்னு எந்துருச்சுப் போய்ட்டான். போயிட்டு அர மணி நேரம் கழிச்சு வந்து உட்காந்தவன்,கொஞ்ச நேரத்துலையே படத்துல இருக்குற ஹீரோ , ஹீரோயின் , Software பொண்ணுங்க, பசங்கன்னு ஒரே கிழியா கிழிச்சான். பாவம் அவனுக்கு என்ன கொடும நடந்துச்சோ :(.

Sunday, April 22, 2012

Ok Ok - Ok


SMS, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜேஷ் படம் என்பதால் நல்ல தைரியத்துடன் சென்ற படம் . படத்தோட review உம் நல்லாதான் இருந்தது . அதனால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சென்றேன். மற்ற இரண்டு படங்களைப் போல் இதுவும் கலகலப்புக்கென்றே அமைந்த படம் .

உதயநிதிக்கு முதல் படம், இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

சரண்யா எப்பயும் போல் முழுதாக score பண்ணுகிறார்.

ஹன்சிகா மோத்வானி - பாப்பா குண்டா இல்ல ரொம்பவே குண்டாவே இருக்கு. பாட்டுலலாம் தத்தக்கா பித்தக்கானு ஓடும்போது நல்லா  தெரியுது, பாப்பா இந்த உடம்ப வச்சுகிட்டு ரொம்பவே கஷ்டப்படுதுன்னு . குஷ்பு மாதிரி இருக்கீங்கன்னு சொல்றது நல்லாத்தான் இருக்கு ஆனா வந்த புதுசுல  குஷ்பு கூட இந்த அளவு குண்டா இல்ல. கொஞ்சம் உடம்ப குறைம்மா.

சந்தானத்த சந்தன பொட்டோட  பார்த்தசாரதியா பாக்குறதுதான் கொஞ்சம்  கஷ்டமா இருக்கு. பாஸ் உங்களுக்கு கீழ இறங்கி பேசுற SMS மாதிரி ரோலுதான் ரொம்ப செட் ஆகுது பாஸ்.

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்ட தவிர வேற எந்த பாட்டும் ஞாபகம் வர அளவுக்கு பெரிசா இல்ல.

மனம் , SMS ஜீவா இந்த படத்துல நடிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்னு நினைக்குறத தவிர்க்க முடியல. இந்த மாதிரி ரோலுக்கு ஜீவா SMS ல ஒரு இலக்கணமே படைச்சுட்டார். படம்  நிச்சயம் பாக்கலாம் , ஆனா SMSஅ மனசுல வச்சுருந்தா கொஞ்சம் ஏமாற்றம்தான்.

Sunday, January 2, 2011

மன்மதன் அம்பு


மது இன்னைக்கு மாயாஜால்ல மன்மதன் அம்புக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஆனா நேத்தே அவன், அவன் நண்பர்களுடன் போய் பார்த்துட்டு வந்துட்டான். அவனோட review படம் பாக்கலாம், கடைசி 20 நிமிஷம் கொஞ்சம் கடி. பொதுவா படத்த பத்திய review ரெண்டு extreme ஆ இருந்தது. சில பேர் படம் ரொம்ப நல்லா இருக்குனாங்க . சில பேர் நல்லாவே இல்லைனாங்க. கமலோட தீவிர விசிறியான நண்பன் jdk வே ஒரு தடவ பாக்கலாம் அதுவும் கமல் fan ஆ இருக்கணும்னு சொன்னது ஆச்சரியமா இருந்தது. சரி எப்படி இருந்தாலும் படத்துக்கு போறதுன்னு முடிவெடுத்தாச்சு. எப்பயும் போல நான் , மது மற்றும் கார்த்திக் போணோம்.

படம் ஆரம்பத்திலேயே கமல் வரல. படம் ஆரம்பத்தின் சில நிமிடங்கள் மாதவன் மற்றும் த்ரிஷாவை சுற்றியே இருந்தது. அதாவது த்ரிஷா ஒரு தமிழ் நடிகையா இருக்காங்க. அவங்களை காதலிக்கிற மாதவனுக்கு அவங்க மேல ரொம்ப சந்தேகம். த்ரிஷா ஒரு holiday trip புக்காக பாரிஸ் போறாங்க. அவங்கள வேவு பாக்க மாதவன் கமலை நியமிக்கிறாரு. கமலுக்கு கான்செர் நோயாளியா இருக்கிற தன் நண்பன் ரமேஷ் அரவிந்த காப்பாற்ற பணம் தேவைப்படுரதால அவர் இந்த வேலைக்கு ஒத்துக்கிறார். வேவின் ஆரம்பத்திலேயே த்ரிஷா மேல எந்த குற்றமும் இல்லைங்கிறது தெரிகிறது. அத கமல் மாதவன் கிட்ட சொன்னதும் மாதவன் கமலை வேவு பாக்க வேண்டாம் என்றும் திரும்பி சென்னை வந்து விடுமாறும் சொல்கிறார். த்ரிஷாவை வேவு பாக்க வேண்டாம் என்று சொல்லி விட்டதால் மாதவன் பேசிய பணத்தை கமலுக்கு கொடுக்க மறுக்கிறார். இதனால் கமலின் நண்பன் ரமேஷ் அரவிந்தின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கமல் மாதவனிடம் த்ரிஷாவை பார்க்க ஒரு ஆள் வருகிறான். அவன் மேல் சந்தேகம் என்று பொய் சொல்லி வேவை தொடர்கிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் கமலின் மனைவி ஒரு விபத்தில் இறப்பதற்கு த்ரிஷா காரணமாக இருந்ததை த்ரிஷா அறிகிறார். இதற்கடுத்து கமல் , த்ரிஷா , மாதவன் மற்றும் த்ரிஷா தோழி சங்கீதா வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.

படம் முழுவதும் வெளிநாட்டில் நடக்கிறது. அதன் பெரும்பகுதி ஒரு உல்லாச கப்பலில் நடக்கிறது. படத்தின் ஒலி live recording கில் பண்ணியது . அது அருமையாகவே வந்திருக்கிறது. கமல், சங்கீதா ,மாதவன் மற்றும் த்ரிஷா அனைவரும் அருமையாகவே தமிழ் பேசுகின்றனர். மிகச் சிறந்த தமிழ் ஆர்வலரான கமல் தன் படங்களிலெல்லாம் மிகச் சிறந்த தமிழை வைப்பதோடு ஏன் ஆங்கிலத்தையும் அதிகம் உபயோகிக்கிறார் என்பது எனக்கு புரியாத விஷயம். வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த படத்தில் நடித்த அனைவரையும் பிடித்திருந்தது. முக்கியமாகா கமல் , த்ரிஷா , மாதவன் மற்றும் சங்கீதா. எனக்கு மாதவன் குடிச்சிட்டு உளறதும், சங்கீதாவோட நடிப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது. கமல் மாதவன் தனக்கு பணம் தர முடியாது என்ற சொல்லியபோது மாதவனின் அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டிருந்தாலோ , அல்லது விஷயத்தை த்ரிஷாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருந்தாலோ பிரச்சினை அப்பொழுதே முடிந்திருக்கும். அதனை தவிர்த்து எனக்கு படம் எந்த தொய்வும், தேக்கமும் இல்லாமல் சென்றதாகவே தோன்றியது.

வசனம் கமல் புண்ணியம் . எப்பொழுதும் போல் வார்த்தை விளையாட்டு . ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் போல் கடியாக இல்லை . சொல்லப் போனால் எனக்கு நிறைய வசனங்கள் பிடித்தே இருந்தன. முக்கியமாக குடித்துவிட்டு மாதவனும், சங்கீதாவும் உளரும் வசனங்கள் ரொம்பவே பிடித்திருந்தன . eg நான் பொன்னதெல்லாம் சொய் (நான் சொன்னதெல்லாம் பொய்). அதேபோல் அந்த மலையாளி தயாரிப்பாளரைப் பற்றி பேசும் போது " நான் பொ
றுத்துக்குவேன் . தமிழ் பொறுக்குமா ? ஆமாம் தமிழ் கொஞ்சம் தெருப் பொறுக்கும் " என்பதும் class. மேலும் சில வசனங்கள் கூர்மையாகவே இருந்தன. வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பு என்பதும் வீரத்தின் உச்சம் அகிம்சை என்பதும் காந்தியின் காதலரான கமலின் உச்சகட்ட வசனங்கள்.
நான் உணர்வுப் பூர்வமாக உணர்ந்தது "வலி குறைஞ்சுருச்சு . ஆனா சோகம் மட்டும் பாம்பு மாதிரி வயித்துக்குள்ள இருக்கு" என்று தன் மனைவி இறந்ததைப் பற்றி கூறுவது. என் அப்பாவின் இறப்பின் வலி இந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்து விட்டது . ஆனால் அந்த சோகம் மட்டும் எனக்குள் பாம்பு மாதிரி வயித்துக்குள் சுருண்டு எப்பொழுதும் இருக்கு என்பதை உணர்த்தியது.

நான் நிச்சயம் படத்தை இன்னொரு தடவை பார்ப்பேன்.

Tuesday, November 9, 2010

மைனா - திரை விமர்சனம்


தீபாவளி அன்னிக்கு நான், மது மற்றும் JDK மூனு பேரும் வ - குவாட்டர் கட்டிங் படத்துக்குப் போனோம். படத்தின் இயக்குனர்கள் ஓரம்போ படத்தின் இயக்குனர்களான புஷ்கர் & காயத்ரி . அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்புடனே போனோம் . அந்த படத்தோட டிரைலர்சும் வித்யாசமா இருந்ததால கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனா அது எல்லாத்தையும் நாறடிக்கிற மாதிரி படம் செம மொக்கை . ஏன்டா போனோம்னு ஆச்சு. அதுக்கு அடுத்த நாள் மைனா படத்துக்கு மது டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஏற்கனவே ஒரு மொக்க படத்துக்கு போனதால இந்த படம் எப்படி இருக்குமோனு ஒரு பயம் இருந்துச்சு. மேலும் படத்த பற்றிய பல பிரபலங்களோட விமர்சனங்கள் படம் ஏதோ பருத்தி வீரன் போல் இருக்குமோனு ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது. எனக்கு கோரமான படங்கள் ஒரு பயத்தை ஏற்ப்படுத்தும் . மேலும் படத்தை பார்த்த கமலஹாசன் , படத்தின் கிளைமாக்ஸ் கோரமா இருக்கிறதே அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறி இருந்ததால் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது என்று கேள்விப்பட்டதால் படத்திற்கு ஒருவித பதட்டத்துடனே போனேன்.


படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி புதுசு என்பதால் அவர்களைப் பற்றி எதிர்பார்ப்பு இல்லை . மேலும் நான் படம் பார்ப்பதற்கு முன் பாடல்களை கேட்கும் பழக்கம் இல்லாதவன் ஆனதால் பாடல்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்படி படத்தை பற்றிய நேர்மறையான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி ஒரு வித எதிர்மறையான எதிர்பார்ப்புடனேயே சென்றேன்.


படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் ஜெயிலில் இருந்து தன் மைனாவை பற்றி பின்னோக்கிப் பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. சின்ன வயதில் மைனாவும்(கதாநாயகி) அவள் அம்மாவும் யாருடைய ஆதரவுமின்றி இருக்கும் போது சுருளியாகிய நம்ம சின்ன வயது கதாநாயகன் அவர்களை கூட்டி வந்து தன்னுடைய ஊரில் இருக்கும் ஒரு பாட்டி வீட்டில் குடி வைக்கிறார். பின்னர் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இப்படியாக சிறு வயதிலிருந்து மைனாவிற்கும் சுருளிக்கும் காதல் ஏற்படுகிறது. இதனை அறியும் மைனாவின் அம்மா அதனை எதிர்க்கிறார் . இதனால் சுருளி மைனாவின் அம்மாவை அடித்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார். சிறையில் மைனாவிற்கு கல்யாண ஏற்பாடு நடப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிக்கிறார். பின் தன் ஊருக்குச் சென்று தன் காதலியைச் சந்திக்கிறார். அதே சமயம் தப்பிய சுருளியைப் பிடிக்க ஜெயில் சூப்பிரென்டும், அவருடன் ஒரு ஏட்டும் வருகின்றனர். மறுநாள் தீபாவளி. ஜெயில் சூப்பிரென்டுக்கு அது தலை தீபாவளி. அந்த தலை தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற கடுப்பு அவருக்கு. இப்படியாக சுருளியின் ஊரை அடையும் சூப்பிரென்டும் ஏட்டும் சுருளியை கைது செய்கின்றனர். சுருளியுடன் மைனாவும் வருகிறார். வரும் வழியில் சூப்பிரண்டு சுருளியை ஆறு மாதம் கஞ்சா கேசில் போடப்போவதாக மிரட்டுகிறார். அதனால் பயந்த சுருளியும் மைனாவும் அவர்களிடமிருந்து தப்பிக்கின்றனர். பின்னர் மீண்டும் சூப்பிரென்டிடம் அகப்படும் அவர்களை ஏட்டு சமாதானப்படுத்தி சுருளி மீது கஞ்சா கேசுலாம் போடமாட்டோம் என்று சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் வழியில் மலைப்பாதையில் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்திலிருந்து சுருளி சூப்பிரென்டையும் , ஏட்டையும் காப்பாற்றுகிறார். அதனால் அவர் மேல் சூப்பிரென்டுக்கும், ஏட்டுக்கும் நல்ல மதிப்பு ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள் ஜெயிலை அடைந்ததும் மறுநாள் சுருளியை கோர்டில் ஆஜர்படுத்திய பிறகு சுருளிக்கும் , மைனாவிற்க்கும் கல்யாணம் செய்விப்பதாக சூப்பிரென்டும், ஏட்டும் கூறுகின்றனர். அதே நேரத்தில் சூப்பிரென்டின் மனைவி தலை தீபாவளிக்கு போக முடியாத கடுப்பில் இருக்கிறார். கதையின் முடிவில் சுருளிக்கும், மைனாவிற்க்கும் கல்யாணம் முடிந்ததா இல்லையா . அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.


படத்தின் முக்கால்வாசி கதை சுருளி, மைனா, சூபிரென்டு மற்றும் ஏட்டு இவர்களை சுற்றியே நடைபெறுகிறது. படத்தின் கதை தீபாவளியை சுற்றியே நடைபெறுகிறது . படம் நடைபெறும்போது அதன் ஓட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. இதற்கடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை ஓரளவு நாம் உணர முடிகிறது. படத்தை நம்மை மறந்து பார்க்க முடிகிறது என்றெல்லாம் நான் கூற மாட்டேன். அதுவே படத்தின் இடையில் ஒரு அயற்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. படத்தின் பலம் அதன் நாயகர்கள் தேர்வு . கதாநாயகனாக நடிக்கும் விதார்த், கதாநாயகி அமலா, சூப்பிரண்டு, மற்றும் ஏட்டாக நடிக்கும் தம்பி ராமையா . அனைவரும் அருமையாக நடிக்கின்றனர். சூபிரென்டு மனைவியாக நடிப்பவர் சில இடங்களே வந்தாலும் அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் காமெடிக்கு தம்பி ராமையா பொறுப்பு. அவருடைய டயலாக் டெலிவரியே மிக அருமையாக இருக்கின்றது. படத்தின் சில காட்சிகள் பருத்தி வீரன் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பருத்தி வீரன் போன்ற படங்களின் முடிவுகளும் பருத்தி வீரன் போன்றே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

படத்தின் மிகப் பெரிய பலம், இசை. அனைத்துப் பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் இமான். நம்பவே முடியவில்லை . கையப் பிடி, மைனா மைனா ஆகிய இரண்டு பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. ஜிங்கு சிக்கா பாடல் தாளம் போட வைக்கிறது. கிச்சு கிச்சு தாம்பூலம் பாடல் வெகு நாளுக்குப் பிறகு வந்த சிறார்களைப் பற்றிய அருமையான பாடல்.

நிச்சயம் படம் பார்கலாம் .

Monday, October 4, 2010

எந்திரன் - திரை விமர்சனம்


இந்த சனிக்கிழமை நான், மது, கார்த்திக் மூணு பேரும் எந்திரன் படம் பாக்க கோயம்பேடு ரோஹிணி தியேட்டர் போயிருந்தோம். நல்ல கூட்டம். கொஞ்ச காலத்துக்கு முன்னாடிலாம் ரஜினி, கமல் படங்களை ரெண்டாவது நாள் மூணாவது நாள் பாக்குரதுலாம் ரொம்ப கஷ்டம். முதல் ஒரு வாரத்துக்கு ரசிகர் மன்ற ஆளுங்களுக்குதான் டிக்கெட் கொடுப்பாங்க. ஆனா இந்த தடவ ரஜினியோட மிகப் பெரிய படம், மிக அதிக எதிர்பார்ப்ப ஏற்படுத்தின படமான எந்திரன் படத்துக்கு முதல் நாள் முதல் ஷோவ்க்கே ரசிகர் மன்றம் அல்லாதவங்களுக்கே டிக்கெட் ஈசியா கிடைச்சது. அதுக்கு முக்கிய காரணம் படம் இந்தியாவிலயே அதிக அளவாக 2000 திற்கும் மேற்ப்பட்ட அளவு பிரிண்ட் போடப்பட்டது முக்கிய காரணம். தமிழ்நாட்டுல மட்டும் 550 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு. சென்னையில மட்டும் 40 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு.

படத்தோட லாபம் பத்தி பேசிகிட்டு இருந்தப்ப ஞாநி சொன்னது ஞாபகம் வந்தது. படத்தோட பட்ஜெட் 150 கோடி ரூபாய். படத்துல லாபம் பாக்கனும்னா படம் 300 கூடி ரூப்பாயனாவது ஈட்டனும். அதுக்கு தமிழ்நாட்டுல 5 கோடி மக்கள் டிக்கெட் விலை 60 ரூபாய் மேனிக்கு பாக்கணும் . அப்படினாதான் 300 கோடி ஈட்ட முடியும். இது எப்படி சாத்தியம்னு நான் நினைச்சேன். அப்பத்தான் மது இன்னொரு கணக்கு சொன்னான். படம் 2000 பிரிண்ட் போட்டுருக்காங்க. ஒரு தியேட்டர்ல 300 சீட் இருக்குனு வச்சுக்குவோம். ஒரு டிக்கெட்டோட விலை சராசரியா 100 ரூபாய் (நாங்க பாத்தப்ப டிக்கெட் விலை 200 ரூபாய். வெளிநாட்டுளலாம் இந்திய ரூபாய் மதிப்பின்படி 3000 ரூப்பாயலாம் வித்துருக்கு). ஒரு நாளைக்கு 4 ஷோ. so 300*4*100*2000 = 24,00,00,000. அதாவது ஒரு நாளைக்கு கலெக்சன் மட்டும் 24 கோடி ரூபாய். இப்படியே ரெண்டு வாரத்துக்கு ஓடும்னு வச்சுக்குவோம். அப்படினா 24 கோடி * 14 = 336 கோடி ரூபாய். ஆக ரெண்டு வார கலேச்சனுலயே 336 கோடி ரூபாய் பாத்துரலாம். படம் 100 நாள் ஒடுச்சுனா மத்த லாபம் தனி . அப்படினா சன் குழுமம் அடையப்போற லாபத்தை பாருங்க.

இப்படி பேசிக்கிட்டு இருந்தப்ப மணி 6.10 ஆச்சு. நல்ல கூட்டம் வேற. ரோஹிணி தியேட்டர் கேட்ட திறந்தாங்க. அப்படி இப்படின்னு செட்டில் ஆகும்போது மணி 6.15 . பாத்தா படத்த உடனே ஆரம்பிச்சுட்டான். ஷோ 6.30 தான் timing. படம் ஆரம்பிச்ச உடனே ரஜினிய காமிச்சுறாங்க. எந்த ஒரு opening song ஒ, இல்ல punch dialog ஒ கிடையாது. இந்த படத்துல்ல ரஜினி வசீகரனு ஒரு விஞ்ஞானியா நடிச்சிருக்காரு அவரோட girl friend ஆ ஐஸ்வர்யா ராய். படத்துல்ல ரோபோவ வச்சு நெறைய கதை இருக்கதாலா படத்துல ரஜினி ரோபோவ தயாரிக்கிரதுல வெற்றி அடையிரதுல இருந்து ஆரம்பம் ஆகிறது. படத்துல ரஜினியோட குருநாதர் ஒருத்தர் இருக்காரு. அவரும் ரோபோ தயாரிக்கிறாரு. ஆனா அதுல அவரால வெற்றி அடைய முடியல. அவர் இந்த ரோபோவ தீவிரவாதிகளுக்காகத் தயாரிக்கிறாரு. அதுல அவரால வெற்றி அடைய முடியலனா தீவிரவாதிகள் அவர கொன்றுவிடுவதா மிரட்டுறாங்க. அதனால அவருக்கு நிர்பந்தம். இதனால அவரு ரஜினிட்ட பேசிப் பார்க்கிறாரு, ரஜினியோட ரோபோவ தன்கிட்ட தந்திரும்படி. ஆனா ரஜினி தான் இந்த ரோபோவ இந்திய ராணுவத்திற்காக தயாரிச்சிருக்கிறதாகவும் அதனால் தர முடியாதுங்கரதாவும் சொல்றார். இந்த நேரத்துல ராணுவ approval லுக்கு அனுப்ப இந்த குருநாதரின் ஒப்புதல் வேணும். ஆனால் அந்த குருநாதர் ரஜினியோட ரோபோவுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளைப் பற்றி ஒன்றும் தெரியாததால அதுக்கு ஒப்புதல் வழங்க முடியாதுன்னு சொல்லிடுறார். பின்னர் ரஜினி தன் ரோபோவுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள பயிற்சி அளிக்கிறார். அந்த உணர்ச்சிகளில் காதலும் ஒன்று. அதனால் என்ன விபரீதம் ஏற்படுகிறதுங்குரதுதான் கதையே.

முதல் பாதி ரொம்ப விறு விறுன்னு செல்லுது. Thanks to Citi robot. சிட்டி ரோபோனால முதல் பாதி விறு விறுனும் , காமெடி ஆகவும் செல்லுது . அது செய்யுற வேலயலாம் பாத்தா நமக்கே இப்படி ஒரு ரோபோட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணுது. ஆனா அந்த வில்லன் குருநாதர், சிட்டி ரோபோட்ட நீ உலகிலேயே மிகச் சிறந்த ரோபோ உன்னைய போய் சமையல் பண்ணவும், துணி துவைக்கவும், சூ போடவும் use பண்றாங்கனு சொல்லும்போதுதான் நமக்கே ஆமாம்ல , எவ்வளவு மிகச் சிறந்த ரோபோ அதைப் போய் இப்படி use பண்ராங்களேனு தோணுது. ஆனா அடிமட்ட ரசிகர்களையும் கவர இதுதான் சிறந்த வழி.

இந்தப் படத்துல ரஜினி தன்னுடைய image யே கலட்டி வச்சுட்டு நடிக்கிறார். எந்த ஒரு opening song உம் கிடையாது, opening fight கிடையாது, பஞ்ச் டயலாக் கிடையாது. எல்லாத்துக்கும் மேல சிட்டி ரோபோ இல்லாதப்ப கலாபவன் மணிகிட்ட இருந்து தப்பிக்க மண்ண கண்ணுல தூவிட்டு ஓடறதுன்னு ரஜினி எந்த ஒரு image பத்தி கவலைப்படாம நடிச்சிருக்கார்.

என்னதான் சிட்டி version 1.0 நல்லா பண்ணி இருந்தாலும் ரசிகர்களை கவர்வது என்னவோ இரண்டாம் பாதி சிட்டி version 2.0 தான். பொதுவா ரஜினி anti hero வா நடிச்ச படங்களெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். எடுத்துக்காட்டு நெற்றிக்கண், சந்திரமுகி, சிவாஜி இப்ப எந்திரன் . ரஜினிக்கு ஹீரோவா நடிக்கிறதா விட வில்லனா நடிக்கிறதுதான் நல்லா இருக்கு. ரஜினி யாராலும் அசைக்க முடியாத ஹீரோ ஆனதுனால தமிழ் சினிமா ஒரு மிகச் சிறந்த வில்லன இழந்துருச்சு. ரஜினி anti hero வா நடிக்கிற இந்த மாதிரி படங்கள்தான் ரஜினியோட நடிப்புத் திறமையை காட்டுது.

என்னதான் இரண்டாம் பாதி சிட்டி நல்லா பண்ணி இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று இழுவையாகவே உள்ளது. முதல் பாதில technology அந்த அளவுக்கு use பண்ணதாகவே தெரியல. அந்த அளவுக்கு நல்லா இருக்கு. ஆனால் இரண்டாம் பாதியில் climax இன் நீளம் அயர்ச்சியையேத் தருகிறது. எப்படா சிட்டி ரோபோட்ட அழிப்பாங்க இல்ல பிடிபாங்கனு தோணுது. அணிமேட்ட்ராநிக்ஸ் technology ய வச்சு இன்னும் என்ன என்னவோ பண்ணி இருக்கலாம் . அத விட்டுட்டு 1000 சிட்டி ரோபோக்கள் வித விதமாச் சேர்ந்து வித வித வடிவங்களை எடுத்து ராணுவத்தை அடிக்கிறது ஒரு மாதிரி bore அடிக்குது. climax பிரமாண்டமா இருந்தாலும் மனதிற்கு அந்த அளவு பிடிக்கல.

படத்திற்கு மெனக்கெட்டிருப்பது நன்றாக தெரிகிறது. படத்தின் ஓட்டத்தை ஒப்பிடும் போது பாடல்கள் படத்திற்கு அயர்ச்சியைத் தருகின்றன. மத்த எல்லா படத்தையும் விட ஐஸ்வர்யா ராய் இந்த படத்துல ரொம்ப அழகா இருக்காங்க. படத்துல ஐஸ்வர்யா ராயனாலதான் கதையே நகர்கிறது. அந்த அளவிற்கு முக்கிய கதாப்பாத்திரம் .

நிச்சயமா படம் பார்க்கலாம்.

Sunday, August 29, 2010

இனிது இனிது


இன்று Express Avenue Mall இல் சத்யமின் புது தியேட்டரான Escape இல் இனிது இனிது படம் பார்த்தேன். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மது வரவில்லை. நான், கார்த்திக் மற்றும் பிரசாத் அண்ணன் போயிருந்தோம். Mall ரொம்ப பெரிதாக இருந்தது. டாய்லெட் யூரினல் எல்லாம் பார்க்க நல்லா இருந்தது ;-). சீட் எல்லாம் நல்ல அகலமாக வசதியாக இருந்தது. Mall இன் basement இல் பார்கிங். இன்னும் mall இன் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. என்ன ஸ்நாக்ஸ் விலையும் பார்க்கிங் கட்டணுமும் ரொம்ப ஜாஸ்தி ஆக இருந்தது. கோக் ஒரு டம்பளர் 80 ரூபா. பாப்கார்ன் 100 ரூபா. பார்கிங் 3 மணிநேரத்துக்கு 40 ரூபா. படத்து டிக்கெட் விலையைவிட ஸ்நாக்ஸ்க்குத்தான் அதிகம் செலவாச்சு.

படம் தெலுகில் சூப்பர் டூப்பர் கிட் ஆன Happy Days இன் மறு உருவாக்கம். கதை கல்லூரி வாழ்க்கையைப் பற்றியது. ஒரு பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டிலிருந்து கடைசி ஆண்டு வரையிலான நிகழ்ச்சிகளைக் கொண்டது.


இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டில் சேரும் ஓர் மாணவனின் பார்வையிலிருந்து இக்கதை சொல்லப்படுகிறது. படத்தில் சீனியர் ஜூனியர் பிரச்சினை, ராகிங், காதல், நட்பு என்று எல்லாம் உண்டு. படத்தில் நாலு பசங்க மூணு பொண்ணுங்க. இவர்களுக்கிடையே நட்பு காதல் எல்லாம் ஏற்ப்படுகிறது. இவர்களின் காதல் ஜெயித்ததா, அவர்களின் கல்லூரி வாழ்க்கை எப்படி முடிந்தது என்பதே கதை .

படத்தில் கல்லூரி லூட்டியையும் காதலையும் ஆதாரமாக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன லூட்டிகள் பார்க்க நன்றாக உள்ளது. அந்தப் பொண்ணு மது பார்க்க நன்றாக இருக்கா. படத்தின் பாடல்கள் இன்னும் கிட் ஆயிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தில் முகம் சுழிக்கக் கூடிய காட்ச்சிகள் எதுவும் இல்லை. மேலும் படம் பார்ப்பவர்களை நாம் இந்த மாதிரி கல்லூரி வாழ்க்கையை இழந்துவிட்டோமே என்று உணர வைப்பதே அதன் வெற்றிதான் .

படத்தில் சித்தார்த்துக்கும், மதுவுக்கும் நட்பிலிருந்து காதல் பூப்பதும், பிறருடன் பேசுவதால் ஏற்ப்படும் பொறாமையும் நன்றாக உள்ளது. படத்தில் விமலாகவும், அப்புவாகவும் நடித்திருப்பவர்களால் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது. படத்தில் அர்ஜூனாக வரும் அந்த சீனியர் மாணவன் நன்றாக உள்ளார். இன்னும் முயன்றால் நல்ல திரைப்படம் பெறலாம்.

மற்றபடி படம் பார்க்கக்கூடிய படம்தான்

Wednesday, August 18, 2010

உன்னால் முடியும் தம்பி - ஓர் அலசல்


எனக்கு கமல் படங்கள் பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு வரும், அது கமல் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக கூட இருக்கலாம். எனக்கு கமல் மேல் வந்த மதிப்பிக்கு காரணம் கமலின் நடிப்பு, பேச்சு இப்படி பல சொல்லலாம். இவற்றில் முக்கியமானது சமுதாயத்தின் மீது கமலின் பார்வை. எனக்குத் தெரிந்து கமல் அளவிற்கு சமுதாயத்தின் மீது அழுத்தமான பார்வை கொண்டவர்கள் சிலரே. அர்ஜுன், விஜயகாந்த் போன்றவர்கள் தேச பக்தி படங்களில் நடித்திருந்தாலும் கமல் அளவிற்கு படத்தின் மூலம் சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்ப்படுதியவர்கள் இல்லை என்று சொல்லலாம். சமுதாயத்தின் மீது அவருடைய பார்வை தீவிரத்தன்மை கொண்டது. ஏதாவது ஒரு extreme ல தான் அது இருக்கும். எடுத்துக்காட்டாக திருமணம் பற்றிய அவர் பார்வை. திருமணம் பற்றிய அவருடைய பார்வையில் பல பேருக்கு மிகத் தீவிர மாற்றுக் கருத்து உண்டு. இருந்த போதிலும் அவர் தன்னுடைய நிலைபாட்டைச் சொல்லத் தயங்கியதில்லை. கமல் நடித்து வெளிவந்த சமுதாயப் படங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன், உன்னால் முடியும் தம்பி . இந்த மூன்று படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் என்னை அதிகமாக பாதித்த திரைப்படம் உன்னால் முடியும் தம்பி . இது தெலுகு படமான ருத்ர வீணாவின் மறு உருவாக்கம் என்றபோதிலும் , இந்த படத்தை எடுக்க காரணமாக இருந்தது பாலசந்தரோ இல்லை கமலாகவோ இருந்தாலும் எனக்கு இப்படம் சமுதாயத்தின் மீது கமலுக்கு உள்ள கோபமாகவே தோன்றுகிறது.

இப்படத்தின் அடிநாதம் சங்கீதத்தை விட ஏன் கடவுளை விட மனிதாபிமானமே பெரியது என்பதாகும். இந்த கருத்தில் கமலுக்கு இரண்டாம் கருத்தே இல்லை என்பதால் இந்த படத்தில் நடிப்பது கமலின் dream project ஆக கூட இருந்திருக்கலாம். இந்த படத்தை அலசும் போது இப்படத்தின் முழுக் கதையையே சொன்னாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் வந்த இப்படம் திரும்ப திரும்ப பலராலும் பார்க்கப்பட்டு தெளிந்த ஒன்றாகும்.

சங்கீத குடும்பத்தில் பிறந்த, சங்கீதமே தன்னுடைய மூச்சு அதைத் தவிர வேறொன்றும் இல்லை என்னும் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் ஜெமினி கணேசனின் மகனாக உதய மூர்த்தி என்ற பாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். சங்கீதத்தை விட சமுதாய சீக்குகளை களைவதே முக்கியம் என்பது உதய மூர்த்தியின் பார்வையாக இருக்கும். ஒரு ராப்பிச்சைக்காரியின் பசி அலறலை விட தனக்கு சங்கீதம் முக்கியமில்லை என்பார் உதயமூர்த்தி.


இப்படத்தில் கமலின் பாத்திரம் நான்கு நிலைகளில் இருக்கும். முதலில் எதைப்பற்றியும் கவலைப் படாத மேட்டுக்குடி இளைஞனாகவும், பின்னர் சமையல்கார கிழவரால் பாதிக்கப்பட்டு சமுதாய சீர்கேடுகள் மீது கோபம் கொண்ட இளைஞனாகவும் , அடுத்து ஒரு சமுதாய நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும் இளைஞனாகவும், அடுத்து சமுதாயத்தை சீர்திருத்த முடியாத, அப்பாவின் மீது கோபம் கொண்ட கையாலாகாத இளைஞனிலிரிந்து வீட்டை விட்டு வெளியேறி சமுதாயத்தை திருத்தும் இளைஞன். இப்படி நாலு நிலைகளில் அவருடைய பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்.

மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்ட அந்த லைன் மேனை காப்பாற்றமுடியாமல் கையாலாகாத்தனமான தன் நிலையை எண்ணி வருந்தும் போதும், தான் அந்த லைன் மேனை காப்பாற்ற முடியாததற்காக தன் தந்தையுடன் சண்டை போடும் போதும், அப்படி சண்டை போட்டது சரிதான் என்று வாதிடும் போதும், தனக்குப் போட்டியாக வந்த விட்ட சாருகேசி என்னும் ரமேஷ் அரவிந்தை எண்ணி தன் தந்தையிடம் சண்டையிடும்போதும், குடிகாரர்கள் திருந்துவதற்க்காக தன் கல்யாணத்தையே நிறுத்துவதற்காக லலிதா கமலா என்னும் சீதாவிடம் பேசும் போதும் கமலின் நடிப்பு பிரம்மிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சீதா மற்றும் கமலுக்கிடையே ஆன காதல் காட்ச்சிகளும் இயல்பாக இருக்கும். இப்படத்தில் சீதாவிற்கு கமலுக்கு துணையான நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். பொதுவாக கதாலை மையைப் படுத்தாத படங்களில் கதாநாயகிக்கு பெரும்பாலும் நல்ல கதாப்பாத்திரங்கள் அமைவதில்லை. மேலும் அப்படங்களில் காதலும் இரண்டு மூன்று காட்சிகளுடன் முடிந்து போயிருக்கும். அப்படி இல்லாமல் இப்படத்தில் கதாநாயகிக்கும் ஒரு நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும் . காதலும் படத்தின் ஊடே இழையோடிருக்கும்.

படத்தில் ஜெமினி கணேசனுக்கும் அருமையான பாத்திரம் அமைந்திருக்கும். சங்கீதத்தை தவிர வேறு ஒன்றைப் பற்றியும் அக்கரைப் படைத்தவராக மிக அருமையாக நடித்திருப்பார் . ஜெமினி கணேஷன் நடிப்பில் எனக்கு மிக பிடித்த பாத்திரம் இது.

படத்தில் சின்ன சின்ன இடங்களும் அருமையாக இருக்கும் . சீதா டாலரை சுண்டி போட்டு ஒருத்தனை கன்னத்தில் அடிப்பார், அடித்தவுடன் அந்த வரிசையே நகர்ந்து நிற்கும். அதேபோல் கமல், சீதாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சீதா திரும்பவும் டாலரை சுண்டுவார் அப்பொழுது கமல் சற்று நகர்ந்து நிற்பது சிரிப்பாக இருக்கும். அதே போல் மீசை முருகேசனும், கமலும் முதல் முதல் சந்திக்கும் இடமும் நன்றாக இருக்கும்.


படத்தின் திரைக்கதையும் மிக இயல்பாக அமைந்திருக்கும். எந்த ஒரு இடத்திலும் ஒரு இடரோ சிணுங்கலோ இல்லாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து மிகச் சரியாக தன்னுடைய பாதையில் சென்றிருக்கும். நான் முன்பே சொன்ன மாதிரி காதலையும், சமுதாயத்தை திருத்தும் இளைஞன் கதையையும் மிக இயல்பாக கோர்த்திருப்பார் கே.பாலச்சந்தர்.

படமே ஒரு சங்கீதப் பரம்பரைப் பற்றியது என்பதால் இதில் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். இளையராஜா இதில் புகுந்து விளையாடியிருப்பார். கர்நாடக சங்கீத கீர்த்தனைகளும், அதையே மாற்றி அமைத்த ஜனரஞ்சக பாடல்களும் அருமையாக இருக்கும். S.P.B யும், யேசுதாசும் மிக அருமையாக பாடியிருப்பார்கள்.

படத்தின் பாடல் வரிகளும் இப்படத்தின் அடிநாதத்திற்க்கு மிக இயல்பாக பொருந்தி போயிருக்கும். இப்படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்பதால் எதை எழுதாமல் விடுவது என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் வரிசைப்படுத்திக் கூறலாம்.

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்ற பாடலின் இசையும் பாடல் வரிகளும் மிக அருமையாக இருக்கும். இப்பாடலை எழுதியவர் புலமைபித்தன். இப்பாடலின் அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும் . அப்பாடலின் முழுவதையும் இங்கே கூற முடியாது . வேண்டுமென்றால் சில வரிகள்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெரும் காடா
இத கேட்க யாரும் இல்ல தோழா

அதே போன்று எனக்கு பிடித்த மற்றொரு பாடல் "உன்னால் முடியும் தம்பி தம்பி" . மிக அருமையான தத்துவப் பாடல் . இதைக்கேட்டால் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

அடுத்த பாடல் "அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா" . சமுதாயத்தின் பாராமுகங்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கும்.

படத்தின் கிளைமாக்சில் அந்த சண்டை காட்ச்சியை தவிர்த்திருக்கலாம். அது ஒன்றுதான் படத்தில் தேவை இல்லாத ஒன்றாக இருக்கும். படத்தின் ஒரே கமெர்சியல் அயிட்டமும் அதுதான். கிளைமாக்சிர்க்கு ஏதாவது ஒரு காரணி தேவை என்று எண்ணி இருக்கலாம்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம்.

பின் குறிப்பு: நேற்று மறுபடியும் இப்படத்தை ராஜ் டிஜிடல் பிளஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

photo courtesies :
http://img230.imageshack.us/i/vlcsnap2009100809h55m26.png/
http://i.ytimg.com/vi/n7p1Gl6JNJI/0.jpg
http://tamilmovies.orutube.com/wp-content/uploads/2010/06/dxlo4x.png

Tuesday, August 17, 2010

களவாணி - விமர்சனம்


விமல், ஓவியா நடிச்ச களவாணி படத்த இந்த சனிக்கிழமைதான் பார்க்க நேரம் கிடைச்சது. நானும் மதுவும் ஒரே நாளுல திரை அரங்கத்துல ரெண்டு படம் பாத்ததில்ல. அது இப்பதான் வாச்சது . இந்த சனிகிழமை 2.30 க்கு மினி உதயம்ல களவாணியும், 7 மணிக்கு INOX ல வம்சமும் பார்த்தோம். சரி களவாணியை மாயாஜால்ல பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் கிடைக்கல. படம் வந்து இவ்வளவு நாள் ஆகியும் டிக்கெட் கிடைக்கலனா படம் எந்த அளவிற்கு நல்ல படம்னு தெரிஞ்சுக்கலாம். கடைசியா நானும் மதுவும் உதயம் போய்தான் படம் பாத்தோம். படம் நல்லவேள சோட போகல. காமெடி, காதல், விருவிருப்புன்னு நல்லா போச்சு.

படத்துல விமல் , அரிக்கி என்கிற அறிவழகனா நடிச்சுருக்கார். ஓவியா , மகேஷ்வரியா நடிச்சிருக்காங்க.படத்துல விமல் , 12 வது கூட பாஸ் பண்ணாம எந்த வேலை வெட்டியும் செய்யாம ஊர் சுத்துற இளைஞரா வர்றார். வீட்டுல இருக்குற பொருள் எல்லாத்தையும் ஒடச்சு அம்மாவ மிரட்டி காசு வாங்கிட்டு ஊர் சுத்துறார் . பாக்குற எல்லா பொண்ணுங்களையும் கட்டிகிறியானு கேட்குறாரு . படத்துல சின்ன சின்ன இடங்களையும் இயக்குனர் பாத்து பாத்து செய்துருக்கார். ஓவியாவ ஏன் நெல்லு திருடுனன்னு மிரட்டிட்டு நண்பன் கிட்ட அந்த பொண்ணு பேனாவ தொலச்சுருச்சுனு சொல்றதும் , சிகரெட் கேட்குறவருக்கு முன்னாடி சிகரெட் இருக்குற பாக்கெட்ட தூக்கி வீசிட்டு அப்புறம் அவர் போன பின்னாடி இவனுக்குலாம் எவன் சிகரெட்டு கொடுப்பான்னு சொல்லிட்டு கீழ போட்ட சிகரெட்ட எடுக்குற இடமும் , இப்படி சின்ன சின்ன இடங்களும் நல்லா இருக்கு. விமல் ஒரு அலட்சியமான இளைஞருக்கு நல்லா பொருந்துராறு. விமலுக்கு செமையா body language வருது. செம அலட்சியமா நடிக்கிறாரு.


கஞ்சா கருப்பு வர்ற இடம்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது. கஞ்சா கருப்ப குடிக்காத
பாலிடாய்ல குடிச்சதா சொல்லி ஆஸ்பத்திரியில சேக்குற இடமும் அதுக்கு கஞ்சா கருப்பு பொண்டாட்டியிட்ட அவ மேல சந்தேகப்பட்டு பாலிடாய்ல குடிச்சதா சொல்லற இடமும் , கரகாட்ட காரிக்கு இரநூறு ரூபா கொடுத்து அத பஞ்சாயத்து என்கிற கஞ்சா கருப்பு கொடுத்ததா சொல்லற இடமும் , கஞ்சா கருப்பு இறந்து போயிட்டதா announce பண்ற இடமும் செம சூப்பெர்ப்.


படத்தின் கிளைமாக்சில் என்ன நடக்கப் போதுன்னு ஒரே பரபரப்பா இருந்தாலும் கடைசி வரை காமெடி இருக்கு . அதுவே இந்த படத்தின் ஒரு பலம்னு சொல்லலாம். இன்னொன்று நடிகர்கள் தேர்வு . படத்தின் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். சரண்யா வரும் இடங்களிலெல்லாம் தன் மகன் ஆவணி வந்தா டாப்பா வந்துருவானு சொல்ற இடமும் , இளவரசு தன் மகனை நம்பாமல் கமெண்ட் அடிக்கும் இடங்களும் நல்லா இருக்கு.

இந்த படத்தில் ஏற்கனே இரண்டு பாடல்கள் ஹிட் ஆகிடுச்சு படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் விமலும் திரைக்கதையும்தான். படத்தின் ஒரு நாயகியைத்தாண்டி எனக்கு படத்தின் கதாநாயகனை பிடித்த படங்கள் மிகச் சிலவே ;-) . அதில் இந்த படமும் ஒன்று.

பெரிய ஹீரோக்களைக் கொண்டு டப்பா கதையையும் , திரைக்கதையையும் நம்பி கோடிகளை கொட்டி எடுத்து ஓடாத டப்பா படங்களுக்கு மத்தியில் இந்த படம் ஒரு சம்மட்டி அடி . நல்ல படங்கள் வந்தால் மக்கள் ஹீரோக்களையும் , ஹீரோய்ன்களையும் பர்றி கவலைப்படாமல் நல்ல படங்களை ஓட வைப்பார்கள் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் இந்த படம்.

இந்த வருஷத்தின் ஹிட் படம் . குடும்பத்துடன் சென்று பார்க்க மிகச் சிறந்த படம் .

Monday, August 16, 2010

வம்சம் - திரை விமர்சனம்


வம்சம், 'பசங்க' புகழ் பாண்டிராஜின் இரண்டாவது படம். படத்தின் கதாநாயகன் நம் முதல்வரின் பேரன் அருள்நிதி. படம் அருள்நிதி அவர்கள் ஊரின் படிக்கும் பிள்ளைகளுக்கு படிக்க நிதி திரட்டி தருவதிலிருந்து ஆரம்பிக்கிறது. படம் இப்படியே பில்ட் அப் கொடுக்குறதுலயே போயிருமோ என்று பயந்தால் நல்ல வேளை இல்லை.

புலிவதனம், சிங்கம்பிடாரி என்னும் இரண்டு ஊர்கள் உள்ளன. சிங்கம்பிடாரியில் தேவர் இனத்தைச் சார்ந்த பதினோரு வம்சங்கள் உள்ளன. அவ்வூரின் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தைச் சார்ந்தவர்களுக்கும் மரியாதை செய்யப்படுகின்றன. ஊர் திருவிழாவின் போது யாரேனும் இறக்க நேரிட்டால் அவருக்கு எந்த மரியாதையும் செய்யாமல் ஊர் கூடாமல் சொந்தகாரங்களாக சேர்ந்து எரித்துவிடுவர். இப்படி மரியாதை இல்லாமல் அடக்கம் செய்வதாலயே அக்காலங்களில் பகை தீர்க்கும் கொலைகள் நடக்கின்றன. இப்படி நடக்கும் கொலைகள் போலீசிற்கு தெரிவிக்கப்படுவதில்லை .

இந்த பதினோரு வம்சங்களில் நம் கதாநாயகனின் வம்சம், எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர். இந்த வம்சத்திற்கு ஒரே வாரிசு நம் கதாநாயகன்தான். இன்னொரு வம்சம், நஞ்சுண்ட மா ஒ சி . இது கதாநாயகனின் எதிரியான சீனி கண்ணுத் தேவருடயது. படத்தில் அருள்நிதி திருவிழாவில் மரியாதையை ஏற்கும் போது சீனி கண்ணுத் தேவர் , அன்பரசனான நம் கதாநாயகனை வஞ்சம் தீர்த்து கொல்ல வேண்டும் என்று கூறுவதிலிருந்து பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.


பிளாஷ் பேக்கின் ஆரம்பத்திலேயே நம் கதாநாயகனின் கையை வெட்ட அவரின் இறந்து போன அப்பாவின் எதிரிகள் வருகிறார்கள். படத்த எடுத்த உடனயே நம்ம முதல்வரின் பேரனின் ஹீரோயிசம் காட்ட சண்டையா என்று நினைக்கையில் , அவர் எதிரிகளுடன் சண்டை போடாமல் தப்பித்து ஓடுவதிலிருந்து படம் நிமிர ஆரம்பிக்கிறது. அப்படி ஓடுபவர் தன்னுடைய மாமாவிடம் ஓடுகிறார். அவர் அந்த ஊரின் பெரிய தலையான சீனி கண்ணு தேவரிடம் கூட்டிச் செல்லுகிறார். சீனி கண்ணுத் தேவரின் உதவியால் நம்முடைய கதாநாயகன் தப்பிக்கிறார். இப்படியாக அன்பரசன் யார் வம்புக்கும் செல்லாமல் நல்லவராக இருக்கிறார்.


இந்த படத்தில் சுனைனாவிற்கு செம ரோல். சுனைனா செம தைரியமான ஆள் . சுனைனாவின் ஆரம்ப காட்சியிலேயே அன்பரசனுடன் சண்டைக்கு செல்கிறார். படத்தில் மாட்டிற்கு அசின்னு பேர் வச்சு அத காதலுக்கு தோது செலுத்துறதும், மரத்து மேல செல்போன கட்டி பேசுறதும் நல்ல காமெடி.சுனைனா, தன்னுடைய அப்பாவைக் கொன்ற சீனி கண்ணுத் தேவர் மேல சாணிய கரைச்சு வீசுரப்பவும், எதிரிகள் சுனைனாவையும், அருள் நிதியையும் சூழும் போது , அருள்நிதி ஓடக் கூப்பிட்டபொழுதும் , மறுத்து இடுப்பிலிருந்து சைக்கிள் செயன எடுத்து சுழற்றும் போதும் செம ஸ்கோர் பண்ணுகிறார். சீனி கண்ணுத் தேவரை அவமானப்படுத்துனதால சுனைனா அவரின் கோபத்திற்கு ஆளாகிறார். அருள்நிதியும் சுனைனாவிற்கு சப்போர்ட்டாக இருப்பதால் அவரும் சீனி கண்ணுத்தேவரின் கோபத்திற்கு ஆளாகிறார்.

அருள்நிதி , தன் அம்மாவின் மூலம் தன்னுடைய அப்பாவைக் கொன்றதும் சீனிகண்ணுத் தேவர் என்று அறிகிறார். இப்படியாக சீனி கண்ணுத்தேவர்க்கும் அருள்நிதிக்கும் பகை வளர்கிறது. கடைசியில் அருள்நிதி , சீனி கண்ணுதேவரை வென்று சுனைனாவை கைபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.

இது பாண்டிராஜின் இரண்டாவது படமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. அருள்நிதி முதல் படத்திலேயே ஸ்கோர் பண்ணுகிறார். படத்தில் எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லை . அதுவே அருள்நிதி மீது மதிப்பைக் கூட்டுகிறது. அருள்நிதி வெகு இயல்பாக நடிக்கிறார். இதேபோன்று தான் முதல்வரின் பேரன் என்ற எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் கதைகளை தேர்ந்தெடுப்பதிலும், நடிப்பிலும் ஹீரோயிசம் காட்டாமல் இருந்தால் ஒரு நல்ல நடிகர் ரெடி. சுனைனாவிற்கு இந்த படத்தில் அருமையான வேடம். சீனி கண்ணுத்தேவர் அவர் சாணிய கரைத்து வீசும்போதும், அருள்நிதி தன்னை கட்டிகாவிட்டால் ,அருள்நிதியை கொன்றுவிடுவதாக மிரட்டும்போதும் செம ஸ்கோர் பண்ணுகிறார் . படத்தில் சண்டைகாட்ச்சிகள் அனைத்தும் இயல்பாக அமைந்துள்ளன. மருதாணிப் பூவே பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

குடும்பத்துடன் சென்று பார்க்க ஒரு நல்ல படம் .

Tuesday, February 2, 2010

தமிழ்ப் படம் - விமர்சனம்

நான், மது மற்றும் கார்த்தி மூன்று பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தமிழ்ப்படம் பார்க்கப் போனோம். அது தமிழ்ப் படம் !.

தமிழ்ப் படம் - பல படங்களை கலாய்ப்பதற்க்கென்றே எடுக்கப்பட்ட படம். படத்தில் ஆரம்பமே கருத்தம்மா படத்தில் பெண் குழந்தைகளை கொல்வதற்காக கள்ளிப் பால் கொடுப்பதுபோல் கதாநாயகனுக்கும் P.R.S கள்ளிப் பால் கொடுக்கும்போதே தெரிந்துவிடும் இது கலாய்ப்பதற்க்கென்றே எடுக்கப்பட்ட படம் என்று. படத்தில் கதை என்பதே கிடையாது. பிறகு எப்படி கதாநாயகனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கதை சொல்லி இருப்பார்கள். எல்லாம் நம்ம சத்யராஜ் படத்துல வர்ற மாதிரி "சார், நீங்க கீழ விழுந்த துப்பட்டாவ எடுத்து மேலே வீசுறீங்க, அது துபாயில போய் விழுகுது. அங்க ஒரு பாட்டு, துப்பட்டா துப்பட்டா" ங்குற ரேஞ்சுல தான் சொல்லி இருப்பாங்க்ய .. நிஜாமாவே படத்துல கதையே கிடையாது. படத்தின் ஒரே குறிக்கோள், இதற்க்கு முன் வந்த பிரபல படங்களைக் கலாய்ப்பதுதான். குறைஞ்சது 20,30 படங்களைக் கலாய்த்திருப்பார்கள். இப்படத்தில் வரும் இரண்டு பாடல்கள் fm சேனல்களில் இடம்பிடித்துவிட்டன. அதில் ஒரு பாட்டான "பச்ச மஞ்ச கறுப்புத் தமிழனும் நான்தான்" என்ற பாடல் கேட்க நன்றாக உள்ளது. இன்னொரு பாடல் இது வரை வந்த தமிழ்ப் படங்களில் அமைந்த புரியாத சொற்களைக் (டாலாக்கு டோல் டப்பிமா, டயலாமோ டயலாமோ) கோர்த்து எழுதியிருக்கிறார்கள்.

முதல் பாதிவரை இந்த கலாய்ப்புகள் ரசிக்கத் தோன்றும் ஆனால் முழுப் படமுமே அப்படி அமையும்போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. படத்தின் இடைவேளையின் போது "இனி சரவெடி" என்று கார்டு போட்ட போது நானும்ஏதோ இனி கதை சீரியஸ் ஆகப் போகப்போதுன்னு நினச்சேன். ஆனா படம் அதுக்கடுத்தும் கலாயப்பதாகவே போனது. கதாநாயகி இருந்தா பெரிசா கலாய்க்க முடியாதுன்னு நினச்சாய்ங்களோ என்னமோ தெரியல, எப்போதும் போல் இப்படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனா மொக்கையா கலாய்ப்பவர்களுக்கும் அந்த கலாய்ப்ப ரசிப்பவர்களுக்கும் இந்த தமிழ்ப் படம் புடிக்கும்.

Tuesday, September 22, 2009

உன்னைப்(நம்மைப்) போல் ஒருவன்

நேற்று நான்,மது மற்றும் கார்த்தி மூன்று பெரும் சேர்ந்து "உன்னைப் போல் ஒருவன் " படம் பார்க்க மாயாஜால் சென்றிருந்தோம். அந்த படத்தை தேர்ந்தெடுத்ததறகு இருவர் தான் காரணம். 1.லாலேட்டன்் , 2. உலக நாயகன். இதற்கு மேல் வேறு காரணம் எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன். சத்யம் போயிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . மாயாஜால், சத்யத்தை விட சற்று சுமாராகத்தான் இருக்கும்(ஃபிகர்களிலும்!).

உலக நாயகன் ஒரு மிகச்சிறந்த தமிழ் ஆர்வலர், ஆனால் அவர் ஏன் title card அனைத்தையும் ஆங்கிலத்தில் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

படம் லாலேட்டன்் தன்னுடைய நினைவுகளை திரும்பிப் பார்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த நொடி முதல், படம் முடியும் வரை, படம் பார்த்த உணர்வே இல்லை. அனைவரும் படத்தின் உடனே பயணிக்கிறோம். அதுவே படத்தின் வெற்றி. கமலஹாசன் நிச்சயமாக வில்லன் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். மேலும் ஹிந்தி "Wednesday" படத்தின் கதையும் முக்கால் வாசி பேருக்கு தெரியும். அதையும் தாண்டி படம் சுவாரசியமாக சென்றதுதான் படத்தின் வெற்றி. என்னைப் பொறுத்தவரை அந்த வெற்றியின் பெரும் பங்கு லாலேட்டன் சாரும்.

இந்த படத்தில் என்னை கவர்ந்தவர்களை வரிசைகிரகமாக சொல்லுவதென்றால்1.லாலேட்டன், 2. ஆரிஃப் ஆக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம் 3.பத்மஸ்ரீ கமலஹாசன்.

லாலேட்டன்் :
இதில் அவர் மலையாலீயாகவே நடிப்பதால், தமிழ் உச்சரிப்பிற்கு அவர் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. நல்லவேளை, இல்லையென்றால் அந்த அழகிய மலையாளத் தமிழை நாம் இழந்திருப்போம். அவருடைய நடிப்பை பற்றி நான் என்ன சொல்லுவது. அவருடைய ஒவ்வொரு செல்லும் நடிக்கிறது. லாலேட்டன், லாலேட்டன் தான். பொறுப்பை முழுவதுமாக தன் தலையில் ஏற்பதிலிருந்து, சரியான வேலையை சரியான நபரிடம் சரியான நேரத்தில் பகிர்ந்து கொடுப்பது வரை, மிகச்சிறப்பு. காவல் உடையில் இருக்கும் அந்த கம்பீரம், மிடுக்கு, ஒவ்வொரு நிமிடமும் பார்த்து கொண்டிருக்கலாம். லாலேட்டா you are great.

ஆரிஃப :
இளம் காவல்துறை அதிகாரி. இவரிடமும் காவல் துறை அதிகாரிக்கான அந்த மிடுக்கை காணலாம். கூடுதலாக charming ஆக இருக்கிறார். அந்த வெடிமருந்து விற்பனையாலனிடம், விஷயத்தை கறப்பதறகாக அடிக்க தயாராவதிலேயே உண்மையையை கக்க வைக்கும் இடம் மிகச் சிறப்பு.

உலகநாயகன்:
உட்கார்ந்த இடத்திலிருந்து அனைவரையும் ஆட்டி வைக்கும் வேலை. கமலுக்கு நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

இந்த படத்தை பற்றிக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு, அதிகமாக ஆங்கிலம் உபயோகப்படுத்தியிருப்பது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளும், வலைத்தளத்தை பார்த்து வெடிகுண்டு தயாரிக்கவும் , Router பற்றிய விசயங்களை தெரிந்திருக்கும் ஒரு மனிதனும், ஆங்கிலத்தில் அதிகமாக உரையாடுவது என்பது இயல்பாக நடக்கும் விஷயம் என்றே நான் எண்ணுகிறேன்.

திரைப்படங்களைப் பற்றிய தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் அதை வாசகர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் .

பொதுவாக இந்த மாதிரி படங்களை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, தேசப்பற்று கொஞ்சம் அதிகமாகவும், நாட்டை திருத்த வேண்டும் என்றும் தோன்றும் . ஆனால் இந்த பட முடிவில் அப்படி எதுவும் தோன்றவில்லை. அதுவே இப்படத்தின் பலமும் மற்றும் பலவீனமும் என்று நான் எண்ணுகிறேன். ்