Sunday, January 27, 2013

விஸ்வரூபம்


 

விஸ்வரூபம் - படத்தில் கமலின் மனைவி பூஜா கமலை வெறுத்து ஒரு counselor உடன் பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது . ஏன் நீ அவர வெறுக்கிற என்று அந்த counselor கேட்கும்போது 'He is not a normal man' என்று கூறும்போது நம்ம ஆளு பரதநாட்டியம் சொல்லி கொடுத்துகிட்டே அறிமுகம் ஆகுறாரு.

சும்மா சொல்லக்கூடாது, கமல் பரதநாட்டியத்தில காட்டும் அந்த நளினம் . Wow great . ஹே பொம்மனாட்டிகளா சும்மா இருங்கன்னு சொல்ற அந்த தொனி ஆகட்டும், phone எடுக்க ஓடும்போது ஒரு பொண்ணு மாதிரி மணிக்கட்ட மடக்கிகிட்டு ஓடும் அந்த நளினம் ஆகட்டும், Superb. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை , ஏன் ஆண் பரத நாட்டிய கலைஞர்களை எல்லாம் பெண் நளினத்துடனே காட்டுகிறார்கள் .

விஸ்வரூபம்ங்குற இந்த title கமலோட மனைவியா இருக்க பூஜா பார்வையில இருந்து கமல பாக்கும்போது வந்ததா தோணுது. பெண் நளினத்துடன் இருந்த, தனக்குத் தெரிந்த  தன்னுடைய கணவன் தீவிரவாதிகள வேட்டையாடுற, பாரதப் பிரதமரே நேரடியா கூப்பிட்டு பேசுற அளவுக்கு மிகப் பெரிய ரா அதிகாரின்னு தெரியும்போது மலைச்சுப் பாக்குறதுல இருந்து இந்த 'விஸ்வரூபம்' title வந்துருக்கணும். இல்லனா கமல் ஏன் பூஜாவ தீவிரவாதிகள வேட்டையாடுற இடத்துக்கலாம் கூட்டிட்டுப் போறாரு. ஆனா அப்படி கூட்டிட்டு போறதுக்கும் கடைசியா ஒரு காரணம் வச்சுருக்காங்க. இருந்தாலும் இந்த சமயத்துல, அர்னால்டோட 'TrueLies'  படத்துல அவருடைய மனைவி தன்னோட கணவன் சாதாரண வேலை பாக்குற மனுஷன்னு  நினச்சு அவர பிடிக்காம இன்ன ஒருத்தனோட பழகும் போது தன்னோட கணவன் உண்மையிலேயே அமெரிக்க ராணுவத்துல இருக்க மிகப்  பெரிய சாகச வீரன்னு தெரியும்போது அந்த பெரிமித உணர்வுள கண்ண அகல விரிச்சு பாக்கும்போது ஒரு அழுகாச்சி வரும்ல, அதுதான் தோணுது :). சரி கமலோட வார்த்தைல சொல்றதுனா அது ஒரு inspiration ஆ இருந்துருக்கலாம் ;) . அப்புறம் என்ன, படத்தோட கடைசில தீவிரவாதிகள்ட்ட நடுவுல இருக்கும்போது அது வர வெறுத்த கணவன்ட்ட , நீயும் என்னோட வர்றதா இருந்தாதான் நான் அந்த இடத்த விட்டு போவேன்னு அடம்பிடிக்கிறத என்னனு சொல்றது :). Typical indian sentiment twist :)

கமல் படத்தின் எல்லா அம்சங்களும் இதிலும் இருக்கு. கிண்டல் , குத்தல் , நக்கல் உட்பட. பிராமண பாசை பேசும் தன் மனைவிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்னு சொல்றதாகட்டும், இல்ல ஆண்ட்ரியாட்ட , ' ஹே பாப்பாத்தி நீ முதல டேஸ்ட் பாத்து சொல்லுனு' சிக்கன கொடுக்குறதாகட்டும், தான் செய்த சில காரியங்களால் தவறு செய்யாத சிலர்  சாகும்போது துன்பப்படும் அந்த மனிதாபிமானமாகட்டும் இப்படி கமலின்  சில typical சமாச்சாரங்கள்.

படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் location & cinematography. இந்த மாதிரி ஆப்கானிய location இந்தியாவில் எந்த படத்திலும் இதுவரை வந்த மாதிரி எனக்குத் தோணல. இந்த படத்த எங்க எடுத்துருப்பாங்க? . No Idea . அப்படியே பாகிஸ்தானின் NWFP(Northwest Frontier Province) ஐயும் ஆப்கானிஸ்தானையும் கண் முன்னாடி  கொண்டு வந்து நிறுத்துது. superb . அதே போல  அந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள். படம் பார்த்து முடிச்சதும்தான் , நாம பாத்தது ஒரு தமிழ்ப் படம்ல, அதிலயா இந்த அளவுக்கு தத்ரூபமான அமெரிக்க  ராணுவ ஹெலிகாப்டர்களையும் , ஆப்கன் எல்லைப்புறப் பகுதிகளையும்ல நாம பாத்தோம்னு தோணுது . அந்த காட்சிளலாம் அது ஒரு தமிழ்ப் படம்னே தோணல. That is kamal :).

நாமளும் எத்தனையோ தமிழ், இந்தி சினிமால தீவிரவாதிகள ஒழிச்சு கட்டுறத பாத்துருப்போம் , ஆனா இந்த மாதிரி ஆப்கன் தீவிரவாதத்த மிக அருகில இருந்து தத்ரூபமா நான் வேற எந்த இந்திய படத்துலையும் பாக்கள . அந்த வகைல இது மிகப் பெரிய leap.

படத்துல டூயட் காட்சிகளோ பாடல்களோ இல்லை. ஏன் அந்த நடனமாட்டியக் கமல் ஆடும் அந்தப் பாட்டைத் தவிர வேற பாட்டு எதுவும் இருக்கிற மாதிரியே தெரியல. ஏன்னா மத்த பாட்டு எல்லாம் background லயே வருது. கமல் பட touch க்காக கடைசியா  பூஜாவுடன் bed ல கட்டி பிடிச்சு படுத்துருப்பாறு ;) .

நான் முன்ன சொன்ன மாதிரி கமல் காதல், டூயட் எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி அதிக கதையம்சம் உள்ள படங்களா செய்ய ஆரம்பிச்சுட்டாரு (எ .கா : அன்பே சிவம் , UPO). அதற்கு இந்தப் படம் அழுத்தமான ஒரு எடுத்துக்காட்டு . ஆனா அந்த மனுஷனுக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்தா , அவருக்கு அத தொடரணும்குற எண்ணம் இருக்குமான்னு தெரியல :(.

பின்குறிப்பு :

1) இந்த படத்தோட கதையையும் முக்கியமான மத்த அம்சங்களையும் எல்லாரும் போதுமான அளவுக்கு அலசிட்டதால நான் அதுல ரொம்ப உள்ள போகல. சும்மா எனக்குப் பிடிச்ச சின்ன சின்ன விசயங்களா பத்தி மட்டும்தான் சொல்லி இருக்கேன். சரி கதைய பத்தி தெரிஞ்சுக்கணும்கிறவங்களுக்கு வேண்ணா சொல்றேன் ' படத்துல பரதநாட்டியக் கலைஞரா அறிமுகமாகுற கமலுக்கு , ரா அதிகாரியா ஆப்கானிஸ்தானுக்குப் போய் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் பழகி அவர்களுக்குத் தெரியாமலே அவர்களை வேட்டையாடுற  பின்னணி இருக்கு. அடுத்து படத்தோட கடைசில ஆப்கானிஸ்தான்ல விட்ட மிச்சத்த அமெரிக்காவுல வந்து முடிக்கிறாரு. Thats all :) .

2) சீக்கிரமா 'Movie Pass' வாங்கணும் , ஒவ்வொரு படத்துக்கும் 10 பவுண்ட் கொடுத்து மாளல :)

Photo Courtesy : Cinepicks.com

Wednesday, January 9, 2013

Mind the gap


அன்னைக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவ்ளோ ஆயிரம் பேர் தேம்ஸ் நதிக்கரைல London Eye ல கூடி இருக்காங்க. எங்க பாத்தாலும் கூட்டம் கும்மாளம் . பெரிய பெரிய loud speaker ல english, hindi பாட்டா மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லா பாட்டுக்கும் கூட்டம் முழுசும் ஆடுது. Gangnam Style பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு குரல்  'Mind the Gap '. ஒரு நொடி அமைதியான கூட்டம் முன்னைக்காட்டிலும் அதிகமா ஹோன்னு ஒரே உற்சாகச் கூச்சல் போட்டுச்சு. அந்த கூச்சலே அந்த வாக்கியம் அங்கு கூடி இருந்த ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள்,ஆப்பிரிக்கர்கள்,ஆசியர்கள் இப்படி அனைத்து கண்டத்தை சேர்ந்த அந்த மக்களிடையே எவ்வளவு பழக்கப்பட்டது, அன்னியோனியமானது என்பதைக் காட்டியது. அது tube train ஒவ்வொரு station ல நிக்கும்போது சொல்ற  'Mind the gap, between train and the platform' வாக்கியம். அந்த அளவிற்கு அந்த tube train லண்டன்வாசிகளின் வாழ்க்கையில் ஊடுருவியது.  

ஒரு லண்டன்வாசி தன் வாழ்நாள் முழுவதும் tube train ல மட்டுமே பயணப்பட்டு லண்டனில் வாழ்ந்துவிட முடியும். அப்படி Tube Train லண்டன் வாழ்க்கையில் இன்றியமையாதது. உள்கூட்டில் அதிகபட்சம் 61/2 அடி உயரமேஇருக்கும் அந்த சின்ன trainல பயணப்படாத லண்டன்வாசிகளே இருக்க முடியாது. ஏன் லண்டனில் காலடி வைத்த எவருமே அந்த டிரைன்ல ஏறாம இருக்க முடியாது. அத சின்ன டிரைனுனு சொல்ல முடியாது. சரியான அளவுல ரொம்ப comfortable ஆ இருக்கும். லண்டனில் குறுக்கும் நெடுக்குமா மேலும் கீழுமா  ஒரு சின்ன tube ல ஒரு பொம்மை train போற மாதிரி எல்லாப் பக்கமும் போயிட்டு வந்துகிட்டு இருக்கும். 150 வருசத்துக்கு முன்னாடி இதே நாள்ல ஆரம்பிச்ச train இப்போ லண்டனின் உயிர்நாடி. Tube train இல்லனா லண்டனின் ஓட்டமே நின்னுடும். இந்த உலகில் public transport மிகச் சிறப்பாக இருக்கும் நகரங்களில் லண்டன் முக்கியமானது. அதுக்கு முக்கிய காரணங்களில் tube train உம் ஒன்று. 

150 வருடங்களுக்கு முன்னாடி வெறும் 4 மைல் தூரத்தை கடந்த tube train இன்று 250 மைல் நீளத்திற்கு வளர்ந்திருக்கிறது. ஒரு வருடத்தில் tube train இல் பயணம் செய்வோர் எண்ணிக்கை 100 கோடி. இன்று 270 ரயில் நிலையங்களுக்கிடையே 11 வழிப்பாதைகளில் tube train லண்டனை இணைக்கிறது. 


Tube train ரொம்ப fastஆ இருக்கு, லண்டனின் எல்லா இடத்தையும் இணைக்குதுங்குறதவிட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அதை பயன்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட எளிமையான அமைப்பு. போக்குவரத்திற்கு லண்டன ஒன்பது zone களா பிரிச்சுருப்பாங்க. நகரின் மையம் zone 1. அதைச் சுற்றி zone 2, அப்புறம் zone 3, இப்படி ஒன்பது சுற்றுக்கள். Tube train னின் 11 தடங்கள் இந்த ஒன்பது சுற்றுக்களில் ஏதேனும் ஒன்றில் தொடங்கி மற்றொன்றில் முடியும். பெரும்பாலும் zone 1 வழியாகச் சென்று அடுத்த முனையை அடையும். ஒரு தடத்திலிருந்து இன்னொரு தடத்தை பயணிகள் அடைவதற்கு  அனைத்து தடங்களும் ஏதேனும் ஒரு station னிலாவது வேறு ஏதேனும் தடத்துடன் தொட்டுச் செல்லும். அந்த குறிப்பிட்ட station களில் பயணிகள் இறங்கி மற்றொரு தடத்தில் செல்லும் tube train ல ஏறிக்கலாம்.   அப்படி ஒன்ன தொட்டு இன்னோன்ன தொட்டு லண்டன்ல எந்த மூலைக்கும் போயிறலாம். லண்டல எந்த முனைல இருந்தும் இன்னொரு முனைக்கு போக அதிகபட்சமா மூணு தடம் மாற வேண்டி இருக்கும். 


அதோட அந்த train அ பயன்படுத்த அவங்க கொடுத்துருக்க map சான்சே இல்ல. லண்டன் வந்த புதுசுல அன்னைக்கு திடீர்னு என் friends என்ன விட்டுட்டு தனியா வீட்டுக்கு போக வேண்டியதாச்சு . So நான் வீட்டுக்கு தனியாத்தான் போகணும். அந்த நாள் வரைக்கும் என் லண்டன் நண்பர்கள் கூட வந்ததால வீட்டுக்கு வழி கண்டுபிடிச்சு போறது பெரிய விஷயம் இல்ல. ஆனா திடீர்னு அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தபோது கூட என் கைல tube train map இருக்கு எங்க இருந்தாலும் அந்த map ல சிவப்பு கலர் கோடா இருக்க அந்த central rail ல பிடிச்சா போதும் வீட்டுக்குப் போயிரலாம்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. நிச்சயம் அந்த நம்பிக்கை வேற எந்த இடத்துலயும் ஏன் இந்தியால கூட அந்த மாதிரி சந்தர்ப்பத்துல வந்துருக்கும்னு தோணல. அதுக்கு முக்கிய காரணம் அந்த tube train service ஓட எளிமையான அமைப்பும் அந்த map உம்தான். அந்த map ல அந்த பதினோரு லைனும் ஒவ்வொரு கலர்ல இருக்கும் . எல்லா railway station லையும் கண்ணுக்குத் தெரியுற எல்லா இடத்துலையும் station வோட பேர் இருக்கும். ரெண்டு மூணு தடங்கள் போற எல்லா station லையும் எந்த வழில எந்த தடத்துக்கு எப்படி போலாம்னு வழிகாட்டி ரொம்பத் தெளிவா இருக்கும். எந்த stationல எந்த தடத்துக்கு மாறலாம், எந்த station ல ferry service க்கு மாறலாம்னு எல்லாம் ரொம்ப அழகா படமா எல்லா இடத்துலையும் போட்டுருப்பாங்க. எவ்வளவு தூரத்துல இருந்து பாத்தாலும் தெரியுற அந்த 'Underground' Railway station symbol னு பல விதத்துல ரொம்ப easy ஆ இருக்கும்.  நம்ம ஊர்ல மொழி தெரிஞ்ச சென்னைலயே நாம ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போக நாம நாலு பேர்ட வழி கேட்க வேண்டி இருக்கும். ஆனா இங்க எல்லாத்துக்கும் கலரும், படங்களும் (symbol) use பண்ணி இருக்கதால english தெரியாம லண்டனுக்கு புதுசா வர்றவங்க கூட வெறும் mapஅ வச்சுக்கிட்டு யாருட்டயும் வழி கேட்காம லண்டன சுத்திட்டு வந்துரலாம். Tube train னுக்கு அறிமுகப்படுத்துன இந்த map தான் இப்ப உலகத்துல பெரும்பாலான நாட்டுல பயன்படுத்துறாங்க.


இன்னொரு முக்கியமான விஷயம் safety. ஏற்கனவே சொன்ன ஒவ்வொரு station ல train நிக்கும்போது சொல்ற  'Mind the gap' னு சொல்றதாகட்டும் ஒவ்வொரு தடவையும் கதவு சாத்தும்போது 'Mind the doors' னு சொல்றதாகட்டும் இப்படி சின்ன சின்ன விஷயத்துலயும் பாதுகாப்பு இருக்கு. அதனாலதான் tube trainல 30 கோடில ஒரு முறைக்குத்தான் fatal accident க்கு வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க. 

Tube train service லையும் குறைகள் இல்லாம இல்ல. Weekend லாம் service க்குனு சொல்லி நிறைய train service அ குறைச்சுறாங்க. வருசா வருஷம் train ticket கூடிகிட்டே போகுது. லண்டன்வாசிகள் தங்களோட வருமானத்துல 8% போக்குவரத்துக்கே செலவு பண்றாங்க. இப்படி சில குறைகள் இருந்தாலும் Tube train service ரொம்ப முக்கியமானது.

150 வருசத்துக்கு முன்னாடி இந்த train service ல வருசத்துக்கு 120 கோடி பேர் பயணம் பண்ணப் போறாங்கங்கனு எண்ணிக் கூட பாக்க முடியாத காலத்துல உருவான இந்த train service ல இப்ப 37.5b GBP அளவுக்கு மிக பெரிய அளவுல விரிவாக்கம் நடந்துகிட்டு இருக்கு. இந்த train service இன்னும் பல நூறு வருசத்துக்கு மக்களுக்கு பயன்படட்டும் . இதலாம் பாக்கும்போது நம்ம ஊர்ல எப்ப இப்படிலாம் வரப்போதுன்னு ஏங்குறத தவிர்க்க முடியல :( . 

P.S: Today 150th anniversary of London Tube Train. 

Image Courtesy:

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Cmglee_Bank_Underground_platform.jpg/220px-Cmglee_Bank_Underground_platform.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/Why_London_Underground_is_nicknamed_The_Tube.jpg/220px-Why_London_Underground_is_nicknamed_The_Tube.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Big_Ben_vs_Westminster_London_Underground_Station.jpg/170px-Big_Ben_vs_Westminster_London_Underground_Station.jpg