நாங்க முத முதலா எப்ப காசு குடுத்து குடிக்க தண்ணி வாங்குநோம்னு எனக்கு இப்பயும் நல்லா ஞாபகம் இருக்கு. அதுவும் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான். அப்ப நாங்க இருந்த புதுக்கோட்டை மாவட்டத்துல இருந்து , ராமநாதபுரம் மாவட்டுதுல இருக்குற முதுகுளத்தூருக்கு வந்தோம். அப்ப நாங்க முதுகுளத்தூருக்கு கிளம்புனப்ப எங்க பக்கத்து வீட்டுக்காரங்கலாம் கேட்டாங்க , ஏங்க புது ஊர்லலாம் குடிக்க தண்ணி எப்படிங்கனு? . அப்ப எங்க அம்மா , குடிக்க ஒரு குடம் 50 காசுனு வாங்கனும்மாம்னு சொன்னாங்க. அங்க இருக்குறவங்கலாம் , அடி ஆத்தீ, என்னது குடிக்கிற தண்ணிய காசு குடுத்து வாங்கனுமாம்லன்னு! அவ்ளோ ஆச்சரியப்பட்டாங்க. பாத்துக்குங்க அப்பா நாங்க வாங்குனது ஒரு குடம் 50 பைசா, இப்ப நாங்க குடிக்கிற தண்ணி 20 ltr 80 ரூபா !. நிச்சயமா சொல்றேன், குடி தண்ணிக்கு காசானு கேட்ட அதே ஊர் இன்னைக்கு காசு கொடுத்து கேன் தண்ணி வாங்கித்தான் குடிப்பாங்க.
இப்ப நாம குடிச்சிட்டு போடுற 1 ltr தண்ணி பாட்டிலலாம், அப்ப பழைய பேப்பர் வண்டிக்காரங்கலாம் கொண்டு வருவாங்க . அந்த ஒரு காலி பாட்டில் 2 ரூபா. அப்ப உங்களுக்கு எப்படிங்க இந்த பாட்டிலலாம் கிடைக்குதுன்னு கேட்டா அவங்க , இதலாம் பணக்காரங்க 15 ரூபா , 20 ரூபான்னு வாங்கி குடிக்கிறது . அவங்கட்ட இருந்து இதை நாங்க வாங்கிட்டு வரும்வோம்னு சொல்லும்போது என்னது ஒரு லிட்டர் தண்ணி இருபது ரூபையானு ஆச்சரியமா இருக்கும் .
ஒரு காலத்துல இந்த பாட்டில் தண்ணி , கேன் தண்ணிலாம் Status symbols. ஆனா இப்ப அது அத்தியாவசியமா(க்கப்பட்டு)கிவி
இந்த தண்ணி business ஒரு பணம் காச்சி மரம். கோடிக்கணக்கா பணம் கொழிக்குது. அதனாலதான் உள்ளூர் குடிசைத் தொழிலுல இருந்து உலகில இருக்குற பெரிய MNC வரைக்கும் இதுல ஈடுபடுறாங்க. இதுல பெரிய தொழில் சூச்சுமமே இருக்கு. எப்பயுமே வருசத்துக்கு ஒரு தடவ விக்கிற ஒரு பொருளுல இருந்து கிடைக்கிற பெரிய லாபத்தவிட , தினமும் யூஸ் பண்ற ஒரு பொருள விக்கிறதுல கிடைக்குற சின்ன லாபம் பெரிசு. ஏன்னா இந்த சின்ன லாபம் நிலையானது, அதோட volume உம் பெரிசு. அதுல செம லாபம் கிடைக்கும். அதுதான் இந்த குடிக்கிற தண்ணி விசயத்துலயும் நடக்குது.
இப்ப இருக்குற business tactics லாம் ரொம்ப தெளிவானது. இப்பலாம் business ல Status ங்குறத விட அதிகமா முன் வைக்கப்படுவதுனா அது மூனு விஷயம்தான்.
- Safety
- Security
- Health Conscious .
ஆனா இப்படி தயாரிக்குற தண்ணியும் ஆரோக்கியமானதாங்குறதும் விவாததிற்குரியது .
சின்ன வயசுல்லாம் நினைச்சுக்குவேன், நாமும் பெரிய பணக்காரனா ஆகி இப்படி தண்ணி பாட்டில்ல தண்ணி வாங்கி குடிக்கனும்னு. ஆனா இப்படி நாம தினமும் குடிக்கிற அந்த தண்ணியையே காசு குடுத்து வாங்குற இந்த நிலைமை உருவாக்கப்பட்டத நினச்சு வெக்கப்படுறேன்.
லட்சக்கணக்கான வருடங்களா இந்த பூமியில் ஜீவராசிகள் குடிச்சுகிட்டு இருந்த தண்ணிய நம்மால குடிக்க முடியாம செஞ்ச, அந்த குடி தண்ணியையே காசு குடுத்து வாங்குற மாதிரி செஞ்ச இந்த அதி பயங்கர மாற்றத்த நான் வெறுக்குறேன். இப்படி லட்சக்கணக்கான வருடமா நல்லா இருந்த தண்ணி கேட்டுப் போனது வெறும் 15 , 20 வருசத்துலதான். என்ன கொடும இது .
என்னடா இவன் அந்த காலத்துல (அந்த காலம்னா ரொம்ப காலம் இல்லங்க வெறும் 15,20 வருசம்தான்!), ஆத்துல தண்ணி மொண்டு குடிச்சேன் இப்ப வேறு வழி இல்லாம பாட்டில் தண்ணி குடிக்கிறேன்னு புலம்புறான் . சுத்தமான பாட்டில் தண்ணிய வளர்ச்சியோட அடையாளமா ஏத்துக்காத பழம் பிற்போக்குவாதியா இருக்குனான்னு நினைக்காதீங்க. நான் எந்த கவலையும் இல்லாம குடிச்ச அந்த சுத்தமான ஆத்துத் தண்ணிய அசுத்தமாக்குனது, அந்த அசுத்தத சரி பண்ணாம அந்த அசுத்தத்த மூலதனமா வச்சு பணம் பண்ணுறத எதோட அடையாளம்னு முதலில் புரிஞ்சுக்கோங்க .
இப்படி ஒரு மனுஷனுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்னான தண்ணியையே காசு கொடுத்து வாங்க வச்சதுக்கு நம்ம அரசாங்கம்தான் வெக்கப்படனும். இன்னும் கொஞ்ச நாள் ஆனா உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனையே காசு கொடுத்து வாங்க வச்சாலும் நாமும் அதையும் எதிர்க்காமல், இதலாம் வளர்ச்சியின் கூறுகள்னு சொல்லி ஏத்துகத்தான் போறோம். அந்த காலம் ரொம்ப தூரம் இல்ல.
































