Monday, July 18, 2011

"தம்பி, நான் போலீசு "

நான் அன்று சிக்னலில் பைக்கில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் இன்னொரு பைக்கின் பில்லியனிலிருந்து முணுமுணுத்தவாரே இறங்கி என்னிடம் வந்தார் .

"தம்பி, நான் போலீசு "

"என்னை அங்கன இறக்கிவிட்டுருங்க" என்றவரே பில்லியனில் உட்கார்ந்தார்.

அதற்கு நான் "சார், நீங்க போலீசா இல்லனாலும் lift கொடுப்பேன்" .

அதற்கு அவர் "இல்ல தம்பி போலீசுனு சொல்லிக்கிடனும்ல " .

சிறிது நேரம் சும்மா இருந்தவர் "தம்பி, இப்படி கூடி போயி சிக்னல cross பண்ணி போங்க" என்றார்.

அதற்கு நான் , தம்பி டீ இன்னும் வரல என்னும் டோனில் "சார், சிக்னல் இன்னும் போடல" என்றேன்.

சற்று கடுப்பான அவர் வண்டியிலிருந்து இறங்கிச் சென்றார்.

கொஞ்ச தூரத்துல ஒரு பைக்காரன் அருகில் ஒரு குரல் "தம்பி, நான் போலீசு ..." :)

Friday, July 1, 2011

இந்தியாவும் சீனாவும் பிரம்மபுத்ரா நதியும்


சீனா பிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டுவது சில வருடங்களுக்கு முன் தொடங்கிய போதே இந்தியாவில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது மத்திய அரசு இந்த அணை திபெத் மின் தேவைக்காகவே கட்டப்பட்டு வருகிறது, பாசனத்திற்காக அல்ல. அதனால் இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவில் மாற்றம் இருக்காது என்று மழுப்பியது. இப்பொழுது சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை தன்னுடைய வறண்ட வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விட ஆயத்தமாகிறது. அப்படி செய்தால் சத்தியமாக இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவு நிச்சயம் குறையும். இது இந்தியாவிற்கு ஆபத்தானது .

இன்று உலகில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் தட்டுப்பாடு. பல தகவல்கள் இனிமேல் உலகில் மூன்றாவது உலகப் போர் வந்தால் அது நீருக்காகத்தான் வரும் என்கிறது. அவ்வளவு முக்கியமானது நீர் இன்று இந்த உலகில் .


கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா மூன்று நதிகளும் இணைந்து வங்கக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரானது உலகில் அமேசான் ஆறு கடலில் கொண்டு சேர்க்கும் நீருக்கு அடுத்து அதிகம் . உலகில் எந்த நதிகளும் அமேசானுக்கு அடுத்து இவ்வளவு நீரை கடலில் கொண்டு சேர்பதில்லை . சொல்லப் போனால் அமேசான் ஆற்றில் இருக்கும் நீரானது நேரடியாக மனித குலத்தால் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை . அது பெரும்பாலும் அடர்ந்த அமேசான் காடுகளுக்கிடையேயே ஓடுகிறது . ஆனால் கங்கை - பிரம்மபுத்ரா - மேக்னா ஆறுகள் இணைந்து உருவாக்கும் டெல்டாவானது உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவாகும் . மேலும் உலகிலேயே Arable land எனப்படும் விவசாயத்திற்கு பயன்படும் தரிசு இல்லாத நிலம் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிகம் . மொத்த விவசாய நிலம் அமெரிக்காவில் 16,69,302 சகிமீ இந்தியாவில் 15,35,060 சகிமீ (அதிலும் அமெரிக்கா இந்தியாவைப் போல மூன்று மடங்கு பெரியது . சொல்லப்போனால் உலகிலேயே 7 வது மிகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பரப்பானது இதற்கு முன் 6 ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட கிட்டத்தட்ட இரண்டரையில் ஒரு பங்குதான் :( ). இப்படி ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களும் இந்தியாவை ஆண்ட அரசர்களும் பல ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் வெட்டி இந்த புண்ணிய பூமியை வளமிக்கதாக மாறினார்கள் . ஆனால் அதற்கு பின் வந்த மத்திய மாநில அரசுகளோ இந்த ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் பராமரிக்காமல் விட்டு இந்த நிலங்களை பாழ்படுத்தியதோடல்லாமல் இப்பொழுது இயல்பாக ஓடும் நதிகளின் நீரையும் பாதுகாக்காமல் உள்ளது வேதனை .


உலகில் மிக அதிக விவசாயிகளை கொண்ட நாடாகவும் அதிலும் நாட்டு மக்களில் 60% மேல் விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டில் நீரானது எவ்வளவு முக்கியம் . அந்த வாழ்வாதார நீரில் கூட இந்திய அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுவது மிகப் பெரிய கொடுமை .

சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விடுவதை பற்றி கேட்டபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருவாளர் S.M. கிருஷ்ணா அப்படி இல்லவே இல்லை என்றார் . பின் சீனாவின் அணையால் இந்தியாவிற்கு "உடனடியாக" பாதிப்பில்லை என்றார். ஆனால் இந்திய உளவுத்துறையான ரா (RA&W) தயாரித்த அறிக்கை சீனாவின் அணை இந்தியாவை நிச்சயம் பாதிக்கும் என்கிறது. இந்த விவகாரம் வெடித்த அடுத்த வாரத்தில் அவர் ஷாங்காய் சென்றார் . சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி அங்கு விவாதிகப்படுமா என்று கேட்டதற்கு அப்படி இல்லை என்றார் . இதை விட வேறு முக்கியமாக எதை பற்றி அவர் விவாதிக்க சென்றார் என்று தெரியவில்லை . இந்த விவகாரத்தை பற்றி இந்திய அரசு வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை at least ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை . எப்பொழுதும் போல் நம் பாரதப் பிரதமர் மௌன விரதம் கடைபிடிக்கிறார். சீனாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை


உண்மையில் இந்திய அரசு (மக்கள் அல்ல) கங்கை , பிரம்மபுத்ரா நதிகளை கொஞ்சம் கூட பயன்படுதிக்கொள்ளவில்லை . கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகள் மூலமாக 2,00,000 - 2,50,000 MW மின்சாரம் தயாரிக்க முடியும். குறைந்தபட்சம் அதில் பாதியாவது எளிதாக தயாரிக்க முடியும். ஆனால் 1999 கணக்கின்படி கங்கை நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் 12% தான் இந்தியா கங்கை நதி மூலம் தயாரிக்கிறது . இது பிரம்மபுத்ரா நதியின் விசயத்தில் இன்னும் மோசம் . ஏனென்றால் பிரமபுத்ரா நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் வெறும் 1% தான் இந்தியா அந்த நதி மூலம் தயாரிக்கிறது . 2010 December கணக்கின்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமே 1,65,000 MW தான் என்றால் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகளின் ஆற்றல் உங்களுக்குப் புரியும் . பிரம்மபுத்ரா நதியின் ஆற்றலை சீனா உணர்ந்ததாலேயே அது அதன் மீது அணை கட்டுகிறது . அதன் மூலம் அது மொத்த திபெத்திற்கும் மின்சாரம் வழங்க எண்ணியுள்ளது . இதே விஷயத்தை இந்தியா செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

ஆனால் இதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதாவது செய்தால் உடனே மிகப் பெரிய கண்டனம் மிகப் பெரிய கத்தல். ஏனென்றால் at least பாகிஸ்தானிடம் மட்டும்தான் நாம் கத்தனாவது முடியும். ஆனால் சீனா சத்தம் இல்லாமல் செய்யும் எந்த விசயத்தையும் இவர்களால் கண்டிக்க கூட முடியவில்லை . ஏனென்றால் உண்மையில் இவர்களுக்கு சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் கண்டனம் தெரிவிக்க கூட தைரியம் இல்லை .

Photo Courtesies :

1.http://static.indianexpress.com/m-images/Thu%20Oct%2015%202009,%2014:56%20hrs/M_Id_114567_china.jpg
2.http://www.indianexpress.com/news/china-begins-building-dam-on-its-side-of-the/529244/
3.http://www.treehugger.com/brahmaputra-river-tibet.jpg
4.http://www.travelingbeats.com/images/brahmaputra1.jpg
5.http://www.pilgrimageindia.net/holy_rivers/images/brahmaputra.jpg