குறும் படங்கள் பல பேரோட திறமைக்கும், ஆசைக்கும் தீனி போடுது. ஒரு கலைஞரா தன்னுடைய திறமைய காட்டுறதுக்கும், தனக்கான ஒரு identity card காகவும் பல பேரு குறும்படங்களில் ஈடுபடுறாங்க. இன்னும் சொல்லப் போனா ரொம்ப பெரிய அளவுல திரைத்துறைல ஈடுபடுறத்துக்கு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாதவங்க தங்களுடைய கலை ஆசைய நிறைவேத்துறதுக்கு குறும்படம் மிகச் சிறந்த களம்.
சில குறும்படங்கள பாக்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு. ஏன் இவ்ளோ அழகா பெரிய திரைல படம் எடுக்க மாட்றாங்கனு தோணுது. அவ்ளோ அருமையா இருக்கு. ரசிகர்களோட ஆர்வம் இல்ல கவனத்த சில நிமிடத் துளிகளே தக்கவைக்க வேண்டிய தேவைதான் குறும்படங்களுக்கு , ஆனா அதே ஆர்வத்த ரெண்டர மணி நேரம் தக்க வைக்குறதுங்குறது கொஞ்சம் கஷ்டம்தான். குறும் படங்குறது பாயாசம் மாதிரி , கொஞ்சமா சாப்பிடலாம் . ஆனா அதையே சாப்பாடா சாப்பிட முடியாது. அது தான் சினிமா.
சில நிமிசங்கள்ள முடிஞ்சுரதுதான் குறும்படங்களோட பலமும் பலவீனமும். பலம் , அந்த சில நிமிசங்கள் மட்டும் ரசிகர்களின் கவனத்த தக்க வச்சா போதும் . பலவீனம் அதே சில நிமிசங்களுக்குள்ள ரசிகர்களோட கவனத்த கவர்ந்திடணும். இங்க test match மாதிரி batsman field ல இறங்கி நாலஞ்சு ஓவரு மொக்க போட்டு form க்கு வர்றதுக்குலாம் time இல்ல , Twenty-20 மாதிரி சில பால்லயே form உக்கு வந்து six அடிக்கணும்.
குறைந்த விலையில் கிடைக்கும் தொழில்நுட்பங்களும் , Youtube மற்றும் Facebook போன்ற தளங்களும் இவர்கள் ரசிகர்களை அடைய ரொம்பவே உதவுது.
பல குறும்படங்கள பாக்கும்போது அது வெறுமனே சும்மா பொழுத கழிக்க ஏனோ தானோன்னு எடுத்தது மாதிரி தெரியல. அதுல அவ்ளோ மெனக்கெடல் இருக்கு. Music, Editing,Cinematography னு பல தளங்கள் கன்னா பின்னான்னு அட்டகாசமா இருக்கு. பெரும்பாலும் இந்த குறும்படங்கள் கதைக்குனு பெரிசா மெனக்கெடுறது இல்ல .பெரும்பாலும் அன்றாட நிகழ்ச்சிகள் தான் அவற்றின் கரு. ரசிகர்களை கவரனும், சிரிக்க வைக்கணும்,சந்தோசப்பட வைக்கணும் . அவ்ளோதான் goal.
இந்த குறும்படங்களின் ஆகப் பெரிய கரு காதல், காமெடி. Youtube ல search பண்ணா , காதல் குறும்படங்கள கொட்டுது. அதுல பெரும்பாலும் பொண்ண கரெக்ட் பண்ணுறது, அதுல சொதப்புறது. அதுல வர்ற பிரச்சினைகள சுவாரசியமா சொல்லுறதுன்னு அழகா இருக்கு. இந்த காதல் குரும்படங்கல்லாம் லட்சம் hit லாம் அடிக்குது. குறும்புக் குறும்படங்களுக்கும் குறைவில்லை. அவங்களுக்கு நல்லா தெரியுது, தங்களுடைய audience , நெட்டு பக்கம் வர்ற யூத்துதானு. சலிக்காம ரசிகர்களின் விருப்பத்த நிறைவேத்துறாங்க. இதத் தவிர Horror, Humanity முயற்சிகளும் இருக்கு.
வெறுமனே காமெடி மட்டும் இல்ல. சில படங்கள் ரொம்ப அழுத்தமா இருக்கு. police encounter பத்தி எடுத்த 'தோட்டா விலை என்ன ' ங்குற படம் ரொம்ப அழுத்தமா இருக்கும். அதே மாதிரி 'புதியவன்' படமும் அழகா இருக்கும்.
இந்த குறும்படங்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்தது கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி. Great.
இந்த குரும்படங்கள்ள நடிகர்கள் தேர்வும் அருமையா இருக்கு. எனக்கு, காதலில் சொதப்புவது எப்படி?, கானல் நீர் போன்ற குறும்படங்களின் நாயகன் ஆதித்தும், நடந்தது என்னனா மற்றும் ஜீரோ கிலோமீட்டர் ஹீரோ கருணாவும்(கலகலப்பு படத்துல செல்போன தொலைக்குற அந்த மச்சான் கேரக்ட்டர்ல நடிச்சுருப்பார்ல அவர்தான்) ரொம்ப பிடிக்கும். செமையா நடிக்குறாங்க. சான்சே இல்ல . அதே மாதிரி பிடிச்ச இயக்குனர் நளன். மேற்சொன்ன கடைசி ரெண்டு படங்களோட இயக்குனர். இவரோட படங்கள nalanish னு Youtube ல search பண்ணி நீங்க பாக்கலாம். எல்லாமே செம காமெடி மூவீஸ்.
ஹீரோயின் செலேக்சனும் அருமை. ரெஜினா கசண்ட்ரா, நிகழ்காலம் , திமிருக்கு மறுபெயர் நீதானே ?ஹீரோயின் பவித்ரா நாயர் அழகு. ரெஜினா அழகா நடிக்குறாங்க. பவித்ராக்கு நல்ல expressive கண்கள். துருதுருனு இருக்கு :)
இந்த குறும்படங்களை பாக்கும் போது ஒரு கேள்வி எழத்தான் செய்யுது. இந்த குறும்படங்கள எடுக்குறதால அவங்க அடையுற லாபம் என்ன? . இதலாம் எடுக்குறதுக்கு செலவுக்கு என்ன பண்றாங்க? . ஏன்னா இதனுடைய audience யாரும் இந்த குரும்படங்கள பாக்குறதுக்கு செலவு எதுவும் பண்றதில்ல. பின்ன எப்படித்தான் அவங்களுக்கு வருமானம் வருது?. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
நான் ரசித்த சில குறும்படங்கள்
நிகழ்காலம்
பொண்ணோட expression சூப்பரா இருக்கும் . கடைசில அந்த பய்யன் சொல்ற 'அடி ஆத்தி ஒரு பொண்ணு பின்னாடி எத்தன பேரு' செம :)
ஜீரோ கிலோமீட்டர்
நம்ம ஆளு கருணா நடிச்சது . வித்தியாசமான concept.
நடந்தது என்னனா?
இது கருணா & நளனோட peak :)
காதலில் சொதப்புவது எப்படி?
துரு
செம சூப்பர் :) எதிர்பார்க்காதது
மாலை நேரம்
எனக்கு அந்த பையனோட வசனம்லா ரொம்ப பிடிக்கும் . வயசுக்கு வந்துட்டியா, போடி வாத்து, ஒரு ஈ காக்கா கூட இல்ல, நீ குட்டியா இருக்க இல்ல நான் குள்ளமா இருக்கேன். இப்படி பல
DSP
Engineering படிச்ச பசங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச subject. இந்த படத்துல அதுக்கு அழகான twist வேற. என் personal life லயே இந்த DSP ய வச்சு ஒரு செம காமெடி நடந்துருக்கு. நான் காலேஜ் படிச்சப்ப என் friend கூட எங்க வீட்டு வாசல் முன்னாடி நின்னு பேசிகிட்டு இருந்தேன். அப்ப அவன்ட்ட மச்சி , இந்த DSP ரொம்ப கஷ்டமா இருக்குடா. என்ன பண்றதுனே தெரியல அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தேன் . அப்ப எங்க வீட்டு வாசல்ல எங்க அம்மாச்சி உட்கார்ந்துருந்தாங்க. என் friend ட்டுட்ட பேசிட்டு வீட்டுக்குள்ள போனேன். அப்ப எங்க அம்மாச்சி என்னடா எதுவும் பிரச்சினையா, DSP அது இது பேசிக்குறீங்கனு கேட்டாங்க. நான் சிரிச்சுகிட்டே அம்மாச்சி DSP னா இந்த semester ல எங்களுக்கு இருக்க Digital Signal Processing ங்குற ஒரு subject னு சொல்லி சிரிச்சேன். அந்த DSP paper க்கு இன்னொரு பேரும் இருக்கு . அதுதான் இந்த படத்தோட title. Degree Stopping Paper :).
நண்பா
நல்ல கான்செப்ட்
புதியவன்
நல்ல +ve story
திமிருக்கு மறுபெயர் நீதானே !
குவியம்