Thursday, August 12, 2010

டாக்டர் சீட் வாங்கலியோ டாக்டர் சீட்காட்சி 1:

அப்பொழுது நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம். என்னுடன் மகேஷும் படித்து கொண்டிருந்தான். பையன் ஒன்னும் படிக்கமாட்டான். அவங்க அப்பா அந்த ஊருல தமிழ்நாட்டின் ஒரு முக்கிய கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்தார். அடிதடிக்கு ஒன்றும் பயப்படுற ஆள் கிடையாது. அதனால் பையனும் அப்படியே இருந்தான். நாங்க ரெண்டு பெரும் ஒரே வகுப்பில்தான் படித்து கொண்டிருந்தோம். அவனுக்கு வகுப்பில் பார்த்து எழுதி பாஸ் பண்ண ஆள் தேவைப்பட்டது. அதற்க்கு கிடைத்த ஆள் நான்தான் . அதற்க்கு பிரதி உபகாரமாக அவன் சில செயல்கள் செய்து தருவதாய் வாக்கு அளித்திருந்தான். ஒன்று, நாங்கள் எங்கள் வீட்டில் கிளி வளர்த்து கொண்டிருந்தோம். அதற்க்கு ஒரு மரக்கூண்டு செய்ய வேண்டும் என்பது வெகு நாளைய ஆசை. அதற்க்கு ஒரு கிளிக்கூண்டு செய்து தருவதாய் வாக்கு அளித்திருந்தான். ஒரு நாள் பேசி வைத்து அவன் எங்கள் வீட்டுக்கு மரத்துடன் வருவதாக ஏற்ப்பாடு. கடைசி வரை அவன் வராமல் ஏமாற்றியதுதான் மிச்சம். அப்போழுதுனாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். நமக்கு எங்க அறிவு இருந்துச்சு.

அப்போழுதுலாம் பொன்வண்டு என்று ஒரு வண்டு இருக்கும். அதை பிடித்து வீட்டில் வளர்ப்பது என்பது ஒரு பொழுபோக்கு. இன்னொருநாள் என்னிடம் பார்த்து காப்பி அடிப்பத்தற்க்கு பிரதி உபகாரமாக பொன் வண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்தான். அதை நம்பி நானும் அவனுடன் அவங்க காட்டுக்குச் சென்றேன். அங்கு பார்த்தால் ஒரே காட்டுச் செடியாகவும் ஒரே பூச்சிக்களுமாகவும் இருந்தது. அவற்றில் ஏதோ ஒரு பூச்சியைப் பிடித்து அதுதான் பொன்வண்டு என்று கொடுத்தான்.பின்புதான் அது வேற எதோ பூச்சி என்று தெரிந்தது . அதற்க்கு வீட்டில் திட்டு வாங்கியதுதான் மிச்சம். இப்படி ஏமாந்த தருணங்கள் பல பல. பிறகு அந்த ஊரை விட்டு விட்டு வந்துவிட்டோம் . பிறகு ஒரு நாள் டிவியில் மகேஷின் அப்பா அந்த ஊர் M.L.A ஆகிவிட்டதாக தெரிந்தது. மகேஷும் எதோ படித்து பத்தாவதில் 230 மதிப்பெண் பெற்று ஏதோ தேறியதாக கேள்விப்பட்டேன்.

over to 2010

அன்று நான் படித்த பள்ளிகூட நண்பன் போன் பண்ணியிருந்தான்.அவன் "உனக்கு விஷயம் தெரியுமா மகேஷ் டாக்டர் ஆகிட்டாண்டா" என்றான் . நான் : "என்னது டாக்டரா!!!" . ஆமாம் டா , அவங்க அப்பா 25 லட்சம் கொடுத்து டாக்டர் சீட் வாங்கிட்டாருடா என்றான் . எனக்கோ பொறி பறந்தது. என்னடா நம்மள பாத்து காப்பி அடிச்சவன் டாக்டரா அதுவும் பத்தாவதுல வெறும் 230 வாங்கியவன் டாக்டரா என்று தோன்றியது. நாம இன்னும் சாதாரண மென்பொருள் பொறியாளராக இருக்கிறோமே என்றும் தோன்றியது . அதுக்கும் மேல என் நண்பன் "டாய் , மகேஷோட மனைவியும் டாக்டர்டா" என்றான். எனக்கு தலை சுற்றியது. காதுக்குள் "டாக்டர் சீட் வாங்கலியோ டாக்டர் சீட் " என்று யாரோ கூவுவது கேட்டுக் கொண்டிருந்தது.

காட்சி 2:

அதே பள்ளிக் கூட நாட்கள் . அப்பொழுது எங்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் விக்னேஷ் குடி இருந்தான் .விக்னேஷிற்கு என்னை விட மூன்று நான்கு வயது கூட இருக்கும். இருந்தாலும் பள்ளி நாட்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடுவோம். அப்பொழுது நாங்கள் கிரிக்கெட்டிற்கு அடுத்து அதிகம் விளையாடுவது ஒத்தையா ரெட்டையா. அதாவது கையில் நிறைய புளியங் கொட்டைகள் இருக்கும். கையில் இருப்பது ஒத்தப் படை முத்துக்களா அல்லது ரெட்டைப் படை முத்துக்களா என்று கூறவேண்டும் . சரியாக கூறி விட்டால் கூறியவருக்கு கையில் இருக்கும் அத்தனை முத்துக்களையும் கொடுத்து விட வேண்டும் . தவறாக கூறினால் அதே அளவு எண்ணிக்கை முத்துக்களை நாம் கொடுக்கவேண்டும் . இந்த விளையாட்டில் விக்னேஷ் கை தேர்ந்தவன். செம கள்ளாட்டம் விளையாடுவான். அவனை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். அவனை ஏமாத்துறதும் கஷ்டம் . அவ்ளோ அருமையாக கள்ளாட்டம் விளையாடுவான்.

over to 2010

மகேஷ பத்தி சொன்ன அதே நண்பன் , "டாய் உனக்கு விஷயம் தெரியுமா . உங்க வீட்டிற்கு பக்கத்து வீட்டு விக்னேஷ் இப்ப IAS" . எனக்கு இன்னும் கொஞ்சம் தலை சுற்றியது . அவ்ளோ கள்ளாட்டம் விளையாண்டவன் இப்ப நேர்மை தவறாத கடமை இருக்க வேண்டிய IAS அதிகாரியா ஆ என்று தோன்றியது .

வாழ்க பாரதம்.

photo courtesy :http://info.ncnelink.com/Portals/55055/images//stethoscope%20dollar%20sign%20iStock_000009672949Large-resized-600.jpg

5 comments:

JDK said...

You have only heard of buying a Doctor seat for 25 lakhs..I know one person who has got a "Free seat" just because he/she was the son/daughter of a Politician of a prime party of TN. The only thing is that they don't have a conscience about their action.Frustrating :(

Anonymous said...

கவலை படவேண்டாம் நண்பரே,
நீங்களும், கனினித்துறையில் M.S(அ)M.B.A ஏதாவது செய்யவும்.

~வாழ்த்துகள்.
நண்பன்.

Haripandi Rengasamy said...

@JDK,

என்னோட ஆதங்கம் எல்லாம் காசு கொடுத்தோ அல்லது காசு கொடுக்காம வாங்கறது இருக்கட்டும், ஆனா doctor சீட்டுக்குனு ஒரு குறைந்த பட்ச மார்க் வேணாமா ... வெறுமனே 230th மார்க்குதான் 10th la ... அதான் என்னால தாங்க முடியல ...

@anony

நானும் எப்படியோ 'படிச்சு' கணினி துறையில M.S வாங்கிட்டேன் ... இருந்தாலும் ஒரு உயிரை காக்குற மருத்துவ துறை போலாகுமா ...

அமைதி அப்பா said...

இது என்ன பெரிய விஷயம். +2-ல் தேர்ச்சியடையாமல், மீண்டும் தேர்வெழுதி வெற்றியடைந்த மாணவன், இப்பொழுது டாக்டருக்குப் படிக்கிறான். என்னத்த சொல்வது!

Haripandi Rengasamy said...

@ அமைதி அப்பா ,

இதுதான் நம்ம இந்தியா . யாராலையும் காப்பாத்த முடியாத இந்தியா ..