விஸ்வரூபம் - படத்தில் கமலின் மனைவி பூஜா கமலை வெறுத்து ஒரு counselor உடன் பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது . ஏன் நீ அவர வெறுக்கிற என்று அந்த counselor கேட்கும்போது 'He is not a normal man' என்று கூறும்போது நம்ம ஆளு பரதநாட்டியம் சொல்லி கொடுத்துகிட்டே அறிமுகம் ஆகுறாரு.
சும்மா சொல்லக்கூடாது, கமல் பரதநாட்டியத்தில காட்டும் அந்த நளினம் . Wow great . ஹே பொம்மனாட்டிகளா சும்மா இருங்கன்னு சொல்ற அந்த தொனி ஆகட்டும், phone எடுக்க ஓடும்போது ஒரு பொண்ணு மாதிரி மணிக்கட்ட மடக்கிகிட்டு ஓடும் அந்த நளினம் ஆகட்டும், Superb. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை , ஏன் ஆண் பரத நாட்டிய கலைஞர்களை எல்லாம் பெண் நளினத்துடனே காட்டுகிறார்கள் .
விஸ்வரூபம்ங்குற இந்த title கமலோட மனைவியா இருக்க பூஜா பார்வையில இருந்து கமல பாக்கும்போது வந்ததா தோணுது. பெண் நளினத்துடன் இருந்த, தனக்குத் தெரிந்த தன்னுடைய கணவன் தீவிரவாதிகள வேட்டையாடுற, பாரதப் பிரதமரே நேரடியா கூப்பிட்டு பேசுற அளவுக்கு மிகப் பெரிய ரா அதிகாரின்னு தெரியும்போது மலைச்சுப் பாக்குறதுல இருந்து இந்த 'விஸ்வரூபம்' title வந்துருக்கணும். இல்லனா கமல் ஏன் பூஜாவ தீவிரவாதிகள வேட்டையாடுற இடத்துக்கலாம் கூட்டிட்டுப் போறாரு. ஆனா அப்படி கூட்டிட்டு போறதுக்கும் கடைசியா ஒரு காரணம் வச்சுருக்காங்க. இருந்தாலும் இந்த சமயத்துல, அர்னால்டோட 'TrueLies' படத்துல அவருடைய மனைவி தன்னோட கணவன் சாதாரண வேலை பாக்குற மனுஷன்னு நினச்சு அவர பிடிக்காம இன்ன ஒருத்தனோட பழகும் போது தன்னோட கணவன் உண்மையிலேயே அமெரிக்க ராணுவத்துல இருக்க மிகப் பெரிய சாகச வீரன்னு தெரியும்போது அந்த பெரிமித உணர்வுள கண்ண அகல விரிச்சு பாக்கும்போது ஒரு அழுகாச்சி வரும்ல, அதுதான் தோணுது :). சரி கமலோட வார்த்தைல சொல்றதுனா அது ஒரு inspiration ஆ இருந்துருக்கலாம் ;) . அப்புறம் என்ன, படத்தோட கடைசில தீவிரவாதிகள்ட்ட நடுவுல இருக்கும்போது அது வர வெறுத்த கணவன்ட்ட , நீயும் என்னோட வர்றதா இருந்தாதான் நான் அந்த இடத்த விட்டு போவேன்னு அடம்பிடிக்கிறத என்னனு சொல்றது :). Typical indian sentiment twist :)
கமல் படத்தின் எல்லா அம்சங்களும் இதிலும் இருக்கு. கிண்டல் , குத்தல் , நக்கல் உட்பட. பிராமண பாசை பேசும் தன் மனைவிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்னு சொல்றதாகட்டும், இல்ல ஆண்ட்ரியாட்ட , ' ஹே பாப்பாத்தி நீ முதல டேஸ்ட் பாத்து சொல்லுனு' சிக்கன கொடுக்குறதாகட்டும், தான் செய்த சில காரியங்களால் தவறு செய்யாத சிலர் சாகும்போது துன்பப்படும் அந்த மனிதாபிமானமாகட்டும் இப்படி கமலின் சில typical சமாச்சாரங்கள்.
படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் location & cinematography. இந்த மாதிரி ஆப்கானிய location இந்தியாவில் எந்த படத்திலும் இதுவரை வந்த மாதிரி எனக்குத் தோணல. இந்த படத்த எங்க எடுத்துருப்பாங்க? . No Idea . அப்படியே பாகிஸ்தானின் NWFP(Northwest Frontier Province) ஐயும் ஆப்கானிஸ்தானையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது. superb . அதே போல அந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள். படம் பார்த்து முடிச்சதும்தான் , நாம பாத்தது ஒரு தமிழ்ப் படம்ல, அதிலயா இந்த அளவுக்கு தத்ரூபமான அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்களையும் , ஆப்கன் எல்லைப்புறப் பகுதிகளையும்ல நாம பாத்தோம்னு தோணுது . அந்த காட்சிளலாம் அது ஒரு தமிழ்ப் படம்னே தோணல. That is kamal :).
நாமளும் எத்தனையோ தமிழ், இந்தி சினிமால தீவிரவாதிகள ஒழிச்சு கட்டுறத பாத்துருப்போம் , ஆனா இந்த மாதிரி ஆப்கன் தீவிரவாதத்த மிக அருகில இருந்து தத்ரூபமா நான் வேற எந்த இந்திய படத்துலையும் பாக்கள . அந்த வகைல இது மிகப் பெரிய leap.
படத்துல டூயட் காட்சிகளோ பாடல்களோ இல்லை. ஏன் அந்த நடனமாட்டியக் கமல் ஆடும் அந்தப் பாட்டைத் தவிர வேற பாட்டு எதுவும் இருக்கிற மாதிரியே தெரியல. ஏன்னா மத்த பாட்டு எல்லாம் background லயே வருது. கமல் பட touch க்காக கடைசியா பூஜாவுடன் bed ல கட்டி பிடிச்சு படுத்துருப்பாறு ;) .
நான் முன்ன சொன்ன மாதிரி கமல் காதல், டூயட் எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி அதிக கதையம்சம் உள்ள படங்களா செய்ய ஆரம்பிச்சுட்டாரு (எ .கா : அன்பே சிவம் , UPO). அதற்கு இந்தப் படம் அழுத்தமான ஒரு எடுத்துக்காட்டு . ஆனா அந்த மனுஷனுக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்தா , அவருக்கு அத தொடரணும்குற எண்ணம் இருக்குமான்னு தெரியல :(.
பின்குறிப்பு :
1) இந்த படத்தோட கதையையும் முக்கியமான மத்த அம்சங்களையும் எல்லாரும் போதுமான அளவுக்கு அலசிட்டதால நான் அதுல ரொம்ப உள்ள போகல. சும்மா எனக்குப் பிடிச்ச சின்ன சின்ன விசயங்களா பத்தி மட்டும்தான் சொல்லி இருக்கேன். சரி கதைய பத்தி தெரிஞ்சுக்கணும்கிறவங்களுக்கு வேண்ணா சொல்றேன் ' படத்துல பரதநாட்டியக் கலைஞரா அறிமுகமாகுற கமலுக்கு , ரா அதிகாரியா ஆப்கானிஸ்தானுக்குப் போய் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் பழகி அவர்களுக்குத் தெரியாமலே அவர்களை வேட்டையாடுற பின்னணி இருக்கு. அடுத்து படத்தோட கடைசில ஆப்கானிஸ்தான்ல விட்ட மிச்சத்த அமெரிக்காவுல வந்து முடிக்கிறாரு. Thats all :) .
2) சீக்கிரமா 'Movie Pass' வாங்கணும் , ஒவ்வொரு படத்துக்கும் 10 பவுண்ட் கொடுத்து மாளல :)
Photo Courtesy : Cinepicks.com
1 comment:
இந்த படத்திற்கு ஆப்கானிஸ்தான் ல் அனுமதி கிடைக்கவில்லை பாஸ். . நம்ம ஊர்ல தான் எடுத்திருக்காங்க
Post a Comment