Wednesday, December 26, 2012

லண்டனும் யவனமும்

நம் இளஞ்செழியன்  காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து யவனத்திற்கு மரக்கலம் ஏறினான். அந்த துறைமுகத்தில் எங்கும் பல நாடுகளுக்குச் செல்லும் மரக்கலங்கள் பரவி இருந்தன. யவனர்கள், தூர கிழக்கு நாட்டவர் என்று  அந்த காவிரிப் பூம்பட்டினத்தின் துறைமுகம் எங்கும் பல நாட்டவர் நிறைந்திருந்தனர் . கடல் அன்னை மரக்கலங்களை  நீல நிற அலைகளால் தாலாட்டிக்கொண்டிருந்தாள். எங்கும் நீல நிறம் பரவி இருந்தது . நம் இளஞ்செழியனின் மனதில் பலவித எண்ண ஓட்டங்கள் கடல் அலைகளைப் போல வந்து வந்து மோதிக் கொண்டிருந்தன. இளஞ்செழியன் வடக்கே மகத சாம்ராஜ்ஜியம், சாளுக்கியர்கள்,பல்லவர்கள் ஆண்ட தேசங்கள் என்று பல  தேசங்களுக்குச் சென்று வந்திருந்த அனுபவம் இருந்தாலும் மரக்கலம் ஏறி தூர தேசத்திற்குச் செல்வது என்பது புது அனுபவம். அதுவும் பாரதம் போல மேற்கே புகழ் பெற்றிருந்த யவன நாட்டிற்கு செல்ல தலைப்பட்டிருந்தான். அரேபிய நாட்டைச் சேர்ந்த அந்த மரக்கலத்தில்  மெல்ல மெல்ல பல நாட்டவர் ஏறத் தொடங்கினர் . அந்த மரக்கலத்தில் இருந்த மரக்கலம் செலுத்துவதில் கை தேர்ந்த அரேபிய மாலுமிகள் நங்கூரத்தை எடுத்தவுடன் மரக்கலம் நகரத் தொடங்கியது. வெகு தூரத்தில் மின்மினியாக காவிரிப்பூம்பட்டனத்தின் கலங்கரை விளக்கம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

நான் என்னுடைய பழைய company ல இருந்து இந்த கம்பெனிக்கு வந்ததுக்கு முக்கிய காரணமே onsite . என்னுடைய friends ல பெரும்பாலோர் onsite ல தான் இருக்காங்க . சில பேர் college முடிச்ச நாள்ல இருந்தே onsite ல இருக்காங்க. எனக்கும் அப்படி என்னதான் அந்த onsite ல இருக்குனு தெரிஞ்சுக்க ஆசை. அப்படி இப்படின்னு இப்பதான் எனக்கு onsite வர முடிஞ்சது .எல்லாரும் onsite க்கு US போகும்போது நான் UK க்கு வந்தேன். அதுவும் இந்த கிறிஸ்துமஸ் season ல UK . ஹ்ம் . நான் இதுக்கு முன்னாடியே இந்தியா முழுசும் சுத்தி இருந்தாலும் இந்தியாவைத் தாண்டி, ஒரு தேசம் ரொம்ப புதுசு . சென்னை airport ஏற்கனவே பார்த்திருந்தாலும் International Terminal ல நிக்கிறது நிச்சயமா வித்தியாசமான உணர்வா  இருந்துச்சு. முதல checkin னுக்கு போய் நின்னா அங்க இருந்த பொண்ணு, சார் நீங்க உங்களுக்கு allow பண்ணத விட அதிகமா luggage கொண்டு வந்துருகீங்கனு சொல்லுச்சு . என்ன சொல்லியும் கேட்க மாட்டேனுருச்சு . சரினு luggage தள்ளிட்டு வந்து அதுல இருந்த சில பொருள எடுத்து  கொடுத்தாலும் weight கொறயல. சரின்னு லண்டன்ல போட எடுத்து வச்சுருந்த ஜெர்க்கின் , ஸ்வட்டர் எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கிட்டு வேற கலர்ல போய்  நின்னா அந்த பொண்ணு ஒரு மாதிரி பாத்துச்சு . நாங்கலாம் எப்படிபட்ட ஆளுங்கன்னு நினச்சுகிட்டு flight ஏறுனேன். கிட்டத்தட்ட Air India ல எப்படி air hostess இருப்பாங்களோ அப்படி air hostess :(.  flight கிளம்பினா எப்பயும் பாத்த  சென்னை இப்ப வேற மாதிரி தெரிந்ச்சுச்சு. நான் எப்பயும் என்னை  மதுரக்காரந்தான் சொல்லிக்குவேன் . ஆனா முத தடவையா  ரொம்ப தூரத்துல தெரிஞ்ச சென்னை அன்னைக்கு ரொம்ப நெருக்கமா தெரிஞ்சது  .


மரக்கலம் எங்கும் யவனர் , அரேபியர், தூர கிழக்கு நாட்டவர் என்று  இருந்தனர் . இளஞ்செழியன் மரக்கலத்தில் அந்த அரேபியர் கொடுத்த பேரிச்சம் பழங்களையும், வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த திணை மாவையும் சாப்பிட்டு விட்டு மரக்கலத்தை சுற்றி வந்தான் . அவன் கடலோடியவன் என்பதால் அந்த மரக்கலத்தின் குலுங்களிலும் லாவகமாக நடந்து கொண்டிருந்தான் . மரக்கலம் பல நாட்கள் கழிந்து அரேபியாவை அடைந்தது . அரேபியர்களைப் பற்றி அவன் காவிரிப் பூம்பட்டினத்திலேயே அறிந்தவன். மரக்கலம் சில நாட்கள் அந்த அரேபியாவில் நிற்கும் என்றும் அதற்குள் அனைவரும் ஊருக்குள் சென்று வரலாமென்றும் ஏற்கனவே மரக்கலத்தலைவன் அறிவித்திருந்தான் . சரி என்று நம் தலைவனும்  துறைமுகத்திலிருந்து ஊருக்குள்  செல்லத் தொடங்கினான் . அந்த அரேபிய தீபகற்பம்தான் யவனம் உள்ளிட்டமேற்கு நாடுகளுக்கும் இந்தியா மற்றும் கடாரம் உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளுக்கும் இணைப்பாக இருந்தது. அதனால் அங்கு அவன் காவிரிப் பூம்பட்டினத்தில் பார்த்ததை விட அதிக யவனர்களையும்,சீனர்களையும், தூர கிழக்கு நாட்டவரையும் பார்த்தான் . அந்த துறைமுகத்தில் மரக்கலங்களில் ஏற்றுவதற்காக பாண்டிய முத்துக்களும் , சேர நாட்டின் கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்களும் , சீன நாட்டின் பீங்கான் பொருட்களும் , பட்டு துணிகளும் குவியல் குவியலாக கிடந்தன. ஒரு பக்கம் மரக்கலத்தில் ஏற்றுவதற்காக அரேபியக் குதிரைகளும் இருந்தன . நம் தலைவன் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு ஊருக்குள் சென்றான் .  பின்பு மரக்கலம் திரும்பிய போது கொற்கை வழியாக காவிரிப் பூம்பட்டினம் செல்லும் ஒரு மரக்கலம் புறப்பட தயாராக இருந்தது . அதிலிருந்த தனக்குத் தெரிந்த ஒரு வணிகனிடம் தான் அரேபியாவிற்கு பத்திரமாக வந்துவிட்டதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்து விடுமாறு கூறிவிட்டு யவனம் செல்லத் தயாராக இருந்த மரக்கலத்தில் ஏறிக்கொண்டான் .


நான் கிளம்பின Gulf Air 4 மணி நேரம் கழிச்சு பஹ்ரைன் வந்துச்சு . அங்கிருந்து அடுத்த இரண்டு மணி நேரத்துல லண்டனுக்கு flight. எனக்குத் தெரிஞ்சு எங்க team ல எல்லாரும் துபாய் வழியாதான் போனாங்க . சென்னைல இருந்து லண்டனுக்கு straight ஆ flight இருக்கானு தெரியல . Transit க்கு ஒரு முனைல இருந்து இன்னொரு முனைக்குப் போனேன். Airport full ஆ duty free shop ஆ இருந்துச்சு . சென்னை  duty free shop ல எல்லாம்  சிகரட்டும் முந்திரியும் சரக்கும் இருந்துச்சு . ஆனா இங்க இவங்க நிப்பாட்டி வச்சுருந்ததோ BMW கார் !. Airport நல்லா இருந்துச்சு, நம்ம சென்னை airport உம் எப்ப இப்படி மாறும்னு தெரியல :( . அங்க இருந்த சேர் எல்லாம் பல Europeans உம் , middle east மக்களும் இருந்தாங்க . Europeans நிறைய பேர் சேர்ல நல்லா கால நீட்டி தூங்கிகிட்டு இருந்தாங்க . சரின்னு நான் அங்க இருந்த ஒரு சேர்ல உட்காந்து mobile எடுத்துப் பாத்தா mobile ல சார்ஜ் இல்ல . சரின்னு மொபைல சார்ஜ் போட்டுட்டு laptop  எடுத்து free wifi ல வீட்ட கூப்பிடலாம்னு  பாத்தா net connect ஆகல . சரின்னு அங்க இருந்த free computer ல gmail connect பண்ணா யாரும் login ஆகல. அப்புறம் வித்யாவுக்கும் மதுவுக்கும் mail தட்டிவிட்டுட்டு உட்காந்தேன் . அடுத்து லண்டன் flight 2 மணிக்கு. கைல இருந்த luggage எல்லாம்  தூக்கிட்டு airport சுத்த தோணல . கொஞ்ச நேரம் பராக் பாத்துகிட்டு இருந்தேன் . அடுத்த கொஞ்ச நேரத்திலயே எல்லாரும் flight க்கு Q ல நிக்க ஆரம்பிச்சாங்க . நானும் நிக்க தொடங்கினேன் .காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து அரேபியாவிற்கு வந்ததைவிட அரேபியாவிலிருந்து யவனத்திற்கு செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். பயணக் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக மரக்கலத்தில் இருந்த யவனர்களும் , அரேபியர் உள்ளிட்ட வேறு நாட்டவரும் தங்கள் கலைத் திறனைக் காட்டினர் . ஆண்களும் பெண்களும் ஆடலும் பாடலுமாக இருந்தனர் . அங்கு இருந்த மாலுமிகளும் அதில் சேர்ந்து கொண்டனர் . மரக்கலத் தலைவனும் அதை பொருட்படுத்தவில்லை. அவனுக்குத் தெரியும் கடினமான பயணத்திற்கிடையே  இத்தகைய பொழுதுபோக்குகள் அவசியம் என்று . நம் தலைவனும் இவற்றை எல்லாம் ரசித்துக்கொண்டு மரக்கலம் சுற்றினான். அங்கு இருந்த யவன அழகிகளும் , அரேபிய பெண்களும் தலைவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் மனம் எல்லாம் காவிரிப் பூம்பட்டினத்திலும் தனக்கு யவனத்தில் காத்திருக்கும் பணியிலும் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது . மெல்ல மெல்ல அவன் நினைவுகளில் மூழ்கத் தொடங்கினான். பல நாட்கள் கழித்து அவன் யவனத்தை அடைந்தான். இளஞ்செழியன் ஏற்கனவே பல நாட்களாக மரக்கலத்தில் அந்த சீதோஷ நிலைக்குப் பழக்கப் பட்டிருந்தாலும் நிலத்தில் கால் வைத்ததும் அந்த குளிர் ஊசி போல குத்தத் தொடங்கியது. துறைமுகத்திலிருந்த அரசு அதிகாரிகள் எல்லாம் அங்கு வந்து இறங்கிய பல நாட்டுப் பொருட்களை அளவிடுவதிலும் அதற்கு சுங்கம் விதிப்பதிலும் கவனமாக இருந்தனர். யவனத்தில் இருந்த பெண்கள் எல்லாம் பொன்னிறமாக இருந்தனர். அனைவரும் மரக்கலத்தில் இருந்து இறங்கிய நம் சோழத் தலைவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் . நம் தலைவனோ அவர்களை எல்லாம் கடந்து தனக்காக துறைமுகத்தில் காத்திருந்த தன் உயிர்த் தோழன்  வல்லவத்தேவனை அடைந்து அவனை ஆரத் தழுவிக்கொண்டான்.


சென்னைல இருந்து பஹ்ரைனுக்கு 4 மணி நேரம் flight journey . பஹ்ரைனுல இருந்து லண்டனுக்கோ 7 1/2 மணி நேரம் . என்ன பண்றதுனே தெரியல. சரின்னு சொல்லிட்டு முன்னாடி இருந்த TV ல படம் பாக்காலாம்னு திருகினேன் . ஏற்கனவே சென்னைல இருந்து பஹ்ரைன் வரும்போது 'Vickey Donor' பாத்தேன். அது ஹிந்தி படம்னாலும் subtitle இருந்ததால கஷ்டம் இல்லாம பாத்தேன் . அதோட அந்த ஹீரோயினும் நல்லா இருந்தா ;) . இந்த flight ம்  Gulf Air ங்கிறதால அதே படங்கள்தான் இருந்துச்சு . சரின்னுட்டு அதுல இருந்த 'எங்கேயும் எப்போதும்' பார்த்தேன் . அத பாத்துட்டு தூங்கினா லண்டனுக்கு போறதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி Air Hostess breakfast கொடுக்க தொடங்கிட்டாங்க .  சரின்னு அத சாப்பிட்டுட்டு உட்காந்தா flight இன்னும் கொஞ்ச நேரத்துல லண்டன்ல land ஆகிரும்னு captain announce பண்றாரு . வெளிய பாத்தா இன்னும் கரும்கும்னுதான் இருக்கு . நாங்க இறங்குன 7 மணிக்கு கூட விடியல. அடுத்து imigration formalities எல்லாம் முடிச்சுட்டு வந்தா குளிர் உரைக்க ஆரம்பிச்சது . நான் ஏற்கனவே இங்க வர்றதா என்னோட close friend என் team mate அருண்ட்ட சொல்லி இருந்ததால அவர் வந்து வெளிய wait பண்ணிக்கிட்டு இருந்தாரு. என்னோட flight ல என்னோட friend என் team & லண்டன் ரூம் மேட் வெங்கட்டும் வந்துருந்தாறு . அவருக்கும் லண்டன் புதுசுதான் . அதனால அருண் வந்தது எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது . அருண கட்டி பிடிச்சுட்டு அடுத்து  மூணு பேரும் airport க்கு உள்ளயே இருக்குற station ல இருந்து  tube train மூலமா நாங்க தங்கப்போற area வுக்கு போனோம். அங்க ஏற்கனவே வெங்கட்டுக்கும் எனக்கும் common friend ஆன ஜெயஸ்ரீ வீடு பாத்துருந்தாங்க. அருணும் ஜெயஸ்ரீயும் இல்லாமா இருந்துருந்தா நிஜமா ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் . tube train லயே போனதால அதுவரைக்கும் லண்டன் ஒன்னும் தெரியல . tube train அ விட்டு வெளிய வந்தா உண்மையான குளிரு உரைக்கத் தொடங்கியது. நான் தேடி வந்த லண்டன இப்பதான் உண்மையா உணரத்தொடங்கினேன்.


Yes now I am in onsite. A different country ,different climate and  different culture :) .

5 comments:

JDK said...

Congrats buddy ! Have a blast and take care of your health. Enjoyyyy!

-JDK

Shankar said...

Congrats da.. have a nice time there..

Haripandi Rengasamy said...

thank you dinesh and shankar ji :)

Vidhya said...

Enaku theriyum, Inda anubavathirkaga nenga elandha anaithum Londonil kidaikum. All the best. :)

Bharathi said...

Super Siva... Eppadi oru arpudhamana feeling, mmmmmmmm no words to congrats you... Keep doing... Expect you to publish more blogs in London...