Monday, December 31, 2012

சச்சின் - ஒரு சகாப்தம்



சச்சின் - ஒரு சகாப்தம் . உலக அரங்கில் கிரிக்கெட் மிகப் பெரிய அளவில் பிரபலமாகத் தொடங்கியது இந்தியா உலகக் கோப்பை ஜெயித்த பிறகுதான். சச்சின் கிரிக்கெட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களில் அது மிகப் பெரிய பணம் காச்சி மரமானது . அதற்கு ICC யும் BCCI யும் சச்சினுக்கு மிகப் பெரிய கடமைபட்டிருக்கின்றன. இது சச்சினாக நினைத்து நடத்தியது அல்ல. அது தானாக நடந்தது. இதற்கு சச்சின் கிரிக்கெட்டை முற்றிலும் முழுதாக நேசித்ததே காரணம்.

23 ஆண்டுகள். ஒரு தலைமுறையே சச்சினை , சச்சினை மட்டுமே பார்த்து வளர்ந்தார்கள் . அந்த தலைமுறையில் நானும் ஒருத்தன் என்பது நான் செய்த பாக்கியம். சச்சின் என்ற பெயருக்கே ஒரு சிலிர்ப்பு வரும் . சச்சின் ஒரு  cricket legend + entertainer என்பது மிகப் பெரிய விஷயம். சச்சினுக்கு இணையாக எங்கள்  தலைமுறையில் இருந்தது  லாரா ஒருத்தர்தான். சச்சினின் பொற்காலம் இந்திய கேபிள் TV உலகின் பொற்காலமுமாக இருந்தது நாங்கள் செய்த பாக்கியம். 1996 மற்றும் 2003 கிரிக்கெட் World Cup அவ்வளவு சுவாரசியமாக இருந்ததே சச்சினால்தான்.

சச்சினுக்காக மட்டுமே கிரிக்கெட் பார்த்து சச்சினுக்கு வீசப்படும் ஒவ்வொரு பாலின்போதும்  ஐயோ எங்கே இந்த பாலில் சச்சின் out ஆகிவிடுவானோ என்று  பதறி அதே பந்து பவுண்டரி லயனை தாண்டும் போது தோன்றும் உணர்வு இருக்குதே அப்படி இருக்கும். சச்சின் out ஆகிட்டா TV ஐ  அணைத்து விட்டு போன காலங்கள் அதிகம். தொன்னூறுகளில் இந்தியா one man  army போலதான் இருந்தது.

சச்சின் வைத்திருக்கும் உலக சாதனைகள் கிட்டத்தட்ட 70 வதுக்கும் மேல் . கிட்டத்தட்ட batting இல் இருக்கும் சாதனைகளில் முக்கால்வாசி  சச்சினுடயதுதான். அது ரசிகர்களுக்கு பிடித்த record ஆக இருக்கட்டும் பிடிக்காத record ஆக இருக்கட்டும். ODI இல் மட்டும் சச்சின் miss பண்ண சதங்களின் எண்ணிக்கை  18. சச்சின் 99 லிருந்து 100 , 100 கள்  அடிப்பதற்குள் சச்சின் ஒரே வருடத்தில் மிஸ் பண்ண சதங்களின் எண்ணிக்கை மட்டும் 8 . இதற்கு டோனி சொன்னதுதான் மிகப் பொருத்தம் . உலகில் ஒரு சதம் கூட போடாமல் retired ஆனவங்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும் இந்த உலகில் சச்சின் ஒரு வருடத்தில் இழந்த எண்ணிக்கை 8 என்கிறபோது அவருடைய திறமை புரியும் என்றார். இதற்கு மேல் வேறு என்ன சொல்ல முடியும் .

 எந்த ஒரு காலகட்டத்திலும் தான் form இல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னிலை மறக்காதவர்.  on field லும் off field லும் சச்சினுடைய நடத்தைதான் சச்சினின் இந்த உயரத்திகுக் காரணம். சச்சினுக்கு தன்னுடைய பலம் பலவீனம் மிக நன்றாகத் தெரியும்.சச்சின் கெயில், கில்க்ரிஸ்ட் மாதிரி எல்லாம் ரொம்ப அதிக இமாலய சிக்சர் எல்லாம் அடிப்பவர் இல்லை . அதனால்தான் அவர் பவுண்டரிகள் அதிகம் அடித்தார். லாரா போன்று கிரவுண்டில் இரண்டு மூன்று நாட்கள் இருந்து டெஸ்டில் 300,400 ரன்கள் எடுப்பவர் அல்ல. ஆனால் சச்சின் தான் டெஸ்டில் அதிக ரன்கள் அடித்ததும் அதிக சதங்கள் அடித்ததும். ஆனால் அப்படியும் ODI ஐயில் இரட்டைச் சதத்தை சேவாக்கால் மட்டுமே அடிக்க முடியும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த பொழுது முதல் ஆளாக இரட்டைச் சதத்தை அடித்து என்றும் நான்தான் king என்று நிரூபித்தார்.

சச்சினின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பு வேறு எந்த வீரரின் மீதும் இல்லை. சச்சின் 99 சதங்கள் அடித்திருந்த பொழுதுகளில் அன்று TV இல் சச்சின் 37 ரன்கள் அடித்து out ஆகியபோது சச்சின் இன்றும் சதம் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார் என்று கூறினர் . இப்படி ஒவ்வொரு போட்டியிலும் 100 ரன்களுக்கு குறைவான எந்த போட்டியையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மாதிரி ஒரு pressure cooker situation இல் எந்த ஒரு விளையாட்டு வீரரும் இருந்ததில்லை.  அந்த pressure இல் விளையாடுவது என்பது மிகக் கஷ்டம்.
சச்சின் அதையும் தாண்டி விளையாடினார். சச்சின் tennis elbow பிரச்சனையில் தவித்த போது இனி சச்சின் அவ்வளவுதான் என்றவர்களுக்கு தன்னுடைய batting style ஐயே மாற்றிக் கொண்டு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். இப்படி தன்னுடைய batting style ஐயே மாற்றிக்கொண்டு விளையாடுவதென்பது மிகக் கஷ்டம். ஆனால் சச்சின் அதைச் செய்தார்.

உலகில் இருக்கும் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்படுவதற்குத்தான். ஆனால் இனி வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டும் ODI கிரிக்கெட்டும் போய் T20 யும் அதற்கு அப்புறம் 5 ஓவர் மாட்ச்சிற்கும்தான் வாழ்வு எனும் நிலையில் சச்சினின் ODI மற்றும் டெஸ்டில் மிக அதிக சதம் , மிக அதிக மேட்ச் , மிக அதிக ரன்கள் போன்ற சாதனைகள்  முறியடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோசம். சச்சினின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

உலகில் இருக்கும் அனைத்து batting சாதனைகளும் சச்சின் மட்டும்தான் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசை பிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன். மிகக் குறைந்தபட்சம் சச்சினுக்கு மிக அருகில் இருக்கும் 500 ODI போட்டிகள் விளையாண்ட ஓரே  வீரர், 200 டெஸ்ட் போட்டிகள் விளையாண்ட ஓரே வீரர் , டெஸ்ட் மற்றும் ODI இரண்டிலும் சதங்களில் அரைச்சதம் அடித்த ஓரே வீரர் போன்ற பெருமைகள் சச்சின் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இப்படி திடுதிடுப்பென்று ODI ஐயிலிருந்து ஓய்வு அறிவித்தது நிச்சயம் மிகப் பெரிய அதிர்ச்சி. அதுவும் ground இல் இருந்து ஓய்வு பெறாமல் ஒரு அறிக்கையின் மூலம் ஓய்வை அறிவித்தது மிகப் பெரிய அதிர்ச்சி. சச்சின் அவருக்காக இல்லாவிட்டாலும் அவருடைய கோடானு கோடி ரசிகர்களுக்காக ground இல் retired ஆகி இருக்கணும் . At least சச்சின் தன்னுடைய வாழ்நாள் கனவான உலகக் கோப்பையை கைபற்றிவிட்டதே என் போன்ற ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல்.

If cricket is a religion then sachin is a god.

Yes Sachin is a god !


Photo Courtesy : http://www.indya101.com/c/wallpapers/view/8131/Sachin_Tendulkar/Sachin_Tendulkar

Wednesday, December 26, 2012

லண்டனும் யவனமும்

நம் இளஞ்செழியன்  காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து யவனத்திற்கு மரக்கலம் ஏறினான். அந்த துறைமுகத்தில் எங்கும் பல நாடுகளுக்குச் செல்லும் மரக்கலங்கள் பரவி இருந்தன. யவனர்கள், தூர கிழக்கு நாட்டவர் என்று  அந்த காவிரிப் பூம்பட்டினத்தின் துறைமுகம் எங்கும் பல நாட்டவர் நிறைந்திருந்தனர் . கடல் அன்னை மரக்கலங்களை  நீல நிற அலைகளால் தாலாட்டிக்கொண்டிருந்தாள். எங்கும் நீல நிறம் பரவி இருந்தது . நம் இளஞ்செழியனின் மனதில் பலவித எண்ண ஓட்டங்கள் கடல் அலைகளைப் போல வந்து வந்து மோதிக் கொண்டிருந்தன. இளஞ்செழியன் வடக்கே மகத சாம்ராஜ்ஜியம், சாளுக்கியர்கள்,பல்லவர்கள் ஆண்ட தேசங்கள் என்று பல  தேசங்களுக்குச் சென்று வந்திருந்த அனுபவம் இருந்தாலும் மரக்கலம் ஏறி தூர தேசத்திற்குச் செல்வது என்பது புது அனுபவம். அதுவும் பாரதம் போல மேற்கே புகழ் பெற்றிருந்த யவன நாட்டிற்கு செல்ல தலைப்பட்டிருந்தான். அரேபிய நாட்டைச் சேர்ந்த அந்த மரக்கலத்தில்  மெல்ல மெல்ல பல நாட்டவர் ஏறத் தொடங்கினர் . அந்த மரக்கலத்தில் இருந்த மரக்கலம் செலுத்துவதில் கை தேர்ந்த அரேபிய மாலுமிகள் நங்கூரத்தை எடுத்தவுடன் மரக்கலம் நகரத் தொடங்கியது. வெகு தூரத்தில் மின்மினியாக காவிரிப்பூம்பட்டனத்தின் கலங்கரை விளக்கம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

நான் என்னுடைய பழைய company ல இருந்து இந்த கம்பெனிக்கு வந்ததுக்கு முக்கிய காரணமே onsite . என்னுடைய friends ல பெரும்பாலோர் onsite ல தான் இருக்காங்க . சில பேர் college முடிச்ச நாள்ல இருந்தே onsite ல இருக்காங்க. எனக்கும் அப்படி என்னதான் அந்த onsite ல இருக்குனு தெரிஞ்சுக்க ஆசை. அப்படி இப்படின்னு இப்பதான் எனக்கு onsite வர முடிஞ்சது .எல்லாரும் onsite க்கு US போகும்போது நான் UK க்கு வந்தேன். அதுவும் இந்த கிறிஸ்துமஸ் season ல UK . ஹ்ம் . நான் இதுக்கு முன்னாடியே இந்தியா முழுசும் சுத்தி இருந்தாலும் இந்தியாவைத் தாண்டி, ஒரு தேசம் ரொம்ப புதுசு . சென்னை airport ஏற்கனவே பார்த்திருந்தாலும் International Terminal ல நிக்கிறது நிச்சயமா வித்தியாசமான உணர்வா  இருந்துச்சு. முதல checkin னுக்கு போய் நின்னா அங்க இருந்த பொண்ணு, சார் நீங்க உங்களுக்கு allow பண்ணத விட அதிகமா luggage கொண்டு வந்துருகீங்கனு சொல்லுச்சு . என்ன சொல்லியும் கேட்க மாட்டேனுருச்சு . சரினு luggage தள்ளிட்டு வந்து அதுல இருந்த சில பொருள எடுத்து  கொடுத்தாலும் weight கொறயல. சரின்னு லண்டன்ல போட எடுத்து வச்சுருந்த ஜெர்க்கின் , ஸ்வட்டர் எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கிட்டு வேற கலர்ல போய்  நின்னா அந்த பொண்ணு ஒரு மாதிரி பாத்துச்சு . நாங்கலாம் எப்படிபட்ட ஆளுங்கன்னு நினச்சுகிட்டு flight ஏறுனேன். கிட்டத்தட்ட Air India ல எப்படி air hostess இருப்பாங்களோ அப்படி air hostess :(.  flight கிளம்பினா எப்பயும் பாத்த  சென்னை இப்ப வேற மாதிரி தெரிந்ச்சுச்சு. நான் எப்பயும் என்னை  மதுரக்காரந்தான் சொல்லிக்குவேன் . ஆனா முத தடவையா  ரொம்ப தூரத்துல தெரிஞ்ச சென்னை அன்னைக்கு ரொம்ப நெருக்கமா தெரிஞ்சது  .


மரக்கலம் எங்கும் யவனர் , அரேபியர், தூர கிழக்கு நாட்டவர் என்று  இருந்தனர் . இளஞ்செழியன் மரக்கலத்தில் அந்த அரேபியர் கொடுத்த பேரிச்சம் பழங்களையும், வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த திணை மாவையும் சாப்பிட்டு விட்டு மரக்கலத்தை சுற்றி வந்தான் . அவன் கடலோடியவன் என்பதால் அந்த மரக்கலத்தின் குலுங்களிலும் லாவகமாக நடந்து கொண்டிருந்தான் . மரக்கலம் பல நாட்கள் கழிந்து அரேபியாவை அடைந்தது . அரேபியர்களைப் பற்றி அவன் காவிரிப் பூம்பட்டினத்திலேயே அறிந்தவன். மரக்கலம் சில நாட்கள் அந்த அரேபியாவில் நிற்கும் என்றும் அதற்குள் அனைவரும் ஊருக்குள் சென்று வரலாமென்றும் ஏற்கனவே மரக்கலத்தலைவன் அறிவித்திருந்தான் . சரி என்று நம் தலைவனும்  துறைமுகத்திலிருந்து ஊருக்குள்  செல்லத் தொடங்கினான் . அந்த அரேபிய தீபகற்பம்தான் யவனம் உள்ளிட்டமேற்கு நாடுகளுக்கும் இந்தியா மற்றும் கடாரம் உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளுக்கும் இணைப்பாக இருந்தது. அதனால் அங்கு அவன் காவிரிப் பூம்பட்டினத்தில் பார்த்ததை விட அதிக யவனர்களையும்,சீனர்களையும், தூர கிழக்கு நாட்டவரையும் பார்த்தான் . அந்த துறைமுகத்தில் மரக்கலங்களில் ஏற்றுவதற்காக பாண்டிய முத்துக்களும் , சேர நாட்டின் கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்களும் , சீன நாட்டின் பீங்கான் பொருட்களும் , பட்டு துணிகளும் குவியல் குவியலாக கிடந்தன. ஒரு பக்கம் மரக்கலத்தில் ஏற்றுவதற்காக அரேபியக் குதிரைகளும் இருந்தன . நம் தலைவன் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு ஊருக்குள் சென்றான் .  பின்பு மரக்கலம் திரும்பிய போது கொற்கை வழியாக காவிரிப் பூம்பட்டினம் செல்லும் ஒரு மரக்கலம் புறப்பட தயாராக இருந்தது . அதிலிருந்த தனக்குத் தெரிந்த ஒரு வணிகனிடம் தான் அரேபியாவிற்கு பத்திரமாக வந்துவிட்டதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்து விடுமாறு கூறிவிட்டு யவனம் செல்லத் தயாராக இருந்த மரக்கலத்தில் ஏறிக்கொண்டான் .


நான் கிளம்பின Gulf Air 4 மணி நேரம் கழிச்சு பஹ்ரைன் வந்துச்சு . அங்கிருந்து அடுத்த இரண்டு மணி நேரத்துல லண்டனுக்கு flight. எனக்குத் தெரிஞ்சு எங்க team ல எல்லாரும் துபாய் வழியாதான் போனாங்க . சென்னைல இருந்து லண்டனுக்கு straight ஆ flight இருக்கானு தெரியல . Transit க்கு ஒரு முனைல இருந்து இன்னொரு முனைக்குப் போனேன். Airport full ஆ duty free shop ஆ இருந்துச்சு . சென்னை  duty free shop ல எல்லாம்  சிகரட்டும் முந்திரியும் சரக்கும் இருந்துச்சு . ஆனா இங்க இவங்க நிப்பாட்டி வச்சுருந்ததோ BMW கார் !. Airport நல்லா இருந்துச்சு, நம்ம சென்னை airport உம் எப்ப இப்படி மாறும்னு தெரியல :( . அங்க இருந்த சேர் எல்லாம் பல Europeans உம் , middle east மக்களும் இருந்தாங்க . Europeans நிறைய பேர் சேர்ல நல்லா கால நீட்டி தூங்கிகிட்டு இருந்தாங்க . சரின்னு நான் அங்க இருந்த ஒரு சேர்ல உட்காந்து mobile எடுத்துப் பாத்தா mobile ல சார்ஜ் இல்ல . சரின்னு மொபைல சார்ஜ் போட்டுட்டு laptop  எடுத்து free wifi ல வீட்ட கூப்பிடலாம்னு  பாத்தா net connect ஆகல . சரின்னு அங்க இருந்த free computer ல gmail connect பண்ணா யாரும் login ஆகல. அப்புறம் வித்யாவுக்கும் மதுவுக்கும் mail தட்டிவிட்டுட்டு உட்காந்தேன் . அடுத்து லண்டன் flight 2 மணிக்கு. கைல இருந்த luggage எல்லாம்  தூக்கிட்டு airport சுத்த தோணல . கொஞ்ச நேரம் பராக் பாத்துகிட்டு இருந்தேன் . அடுத்த கொஞ்ச நேரத்திலயே எல்லாரும் flight க்கு Q ல நிக்க ஆரம்பிச்சாங்க . நானும் நிக்க தொடங்கினேன் .



காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து அரேபியாவிற்கு வந்ததைவிட அரேபியாவிலிருந்து யவனத்திற்கு செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். பயணக் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக மரக்கலத்தில் இருந்த யவனர்களும் , அரேபியர் உள்ளிட்ட வேறு நாட்டவரும் தங்கள் கலைத் திறனைக் காட்டினர் . ஆண்களும் பெண்களும் ஆடலும் பாடலுமாக இருந்தனர் . அங்கு இருந்த மாலுமிகளும் அதில் சேர்ந்து கொண்டனர் . மரக்கலத் தலைவனும் அதை பொருட்படுத்தவில்லை. அவனுக்குத் தெரியும் கடினமான பயணத்திற்கிடையே  இத்தகைய பொழுதுபோக்குகள் அவசியம் என்று . நம் தலைவனும் இவற்றை எல்லாம் ரசித்துக்கொண்டு மரக்கலம் சுற்றினான். அங்கு இருந்த யவன அழகிகளும் , அரேபிய பெண்களும் தலைவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் மனம் எல்லாம் காவிரிப் பூம்பட்டினத்திலும் தனக்கு யவனத்தில் காத்திருக்கும் பணியிலும் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது . மெல்ல மெல்ல அவன் நினைவுகளில் மூழ்கத் தொடங்கினான். பல நாட்கள் கழித்து அவன் யவனத்தை அடைந்தான். இளஞ்செழியன் ஏற்கனவே பல நாட்களாக மரக்கலத்தில் அந்த சீதோஷ நிலைக்குப் பழக்கப் பட்டிருந்தாலும் நிலத்தில் கால் வைத்ததும் அந்த குளிர் ஊசி போல குத்தத் தொடங்கியது. துறைமுகத்திலிருந்த அரசு அதிகாரிகள் எல்லாம் அங்கு வந்து இறங்கிய பல நாட்டுப் பொருட்களை அளவிடுவதிலும் அதற்கு சுங்கம் விதிப்பதிலும் கவனமாக இருந்தனர். யவனத்தில் இருந்த பெண்கள் எல்லாம் பொன்னிறமாக இருந்தனர். அனைவரும் மரக்கலத்தில் இருந்து இறங்கிய நம் சோழத் தலைவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் . நம் தலைவனோ அவர்களை எல்லாம் கடந்து தனக்காக துறைமுகத்தில் காத்திருந்த தன் உயிர்த் தோழன்  வல்லவத்தேவனை அடைந்து அவனை ஆரத் தழுவிக்கொண்டான்.


சென்னைல இருந்து பஹ்ரைனுக்கு 4 மணி நேரம் flight journey . பஹ்ரைனுல இருந்து லண்டனுக்கோ 7 1/2 மணி நேரம் . என்ன பண்றதுனே தெரியல. சரின்னு சொல்லிட்டு முன்னாடி இருந்த TV ல படம் பாக்காலாம்னு திருகினேன் . ஏற்கனவே சென்னைல இருந்து பஹ்ரைன் வரும்போது 'Vickey Donor' பாத்தேன். அது ஹிந்தி படம்னாலும் subtitle இருந்ததால கஷ்டம் இல்லாம பாத்தேன் . அதோட அந்த ஹீரோயினும் நல்லா இருந்தா ;) . இந்த flight ம்  Gulf Air ங்கிறதால அதே படங்கள்தான் இருந்துச்சு . சரின்னுட்டு அதுல இருந்த 'எங்கேயும் எப்போதும்' பார்த்தேன் . அத பாத்துட்டு தூங்கினா லண்டனுக்கு போறதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி Air Hostess breakfast கொடுக்க தொடங்கிட்டாங்க .  சரின்னு அத சாப்பிட்டுட்டு உட்காந்தா flight இன்னும் கொஞ்ச நேரத்துல லண்டன்ல land ஆகிரும்னு captain announce பண்றாரு . வெளிய பாத்தா இன்னும் கரும்கும்னுதான் இருக்கு . நாங்க இறங்குன 7 மணிக்கு கூட விடியல. அடுத்து imigration formalities எல்லாம் முடிச்சுட்டு வந்தா குளிர் உரைக்க ஆரம்பிச்சது . நான் ஏற்கனவே இங்க வர்றதா என்னோட close friend என் team mate அருண்ட்ட சொல்லி இருந்ததால அவர் வந்து வெளிய wait பண்ணிக்கிட்டு இருந்தாரு. என்னோட flight ல என்னோட friend என் team & லண்டன் ரூம் மேட் வெங்கட்டும் வந்துருந்தாறு . அவருக்கும் லண்டன் புதுசுதான் . அதனால அருண் வந்தது எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது . அருண கட்டி பிடிச்சுட்டு அடுத்து  மூணு பேரும் airport க்கு உள்ளயே இருக்குற station ல இருந்து  tube train மூலமா நாங்க தங்கப்போற area வுக்கு போனோம். அங்க ஏற்கனவே வெங்கட்டுக்கும் எனக்கும் common friend ஆன ஜெயஸ்ரீ வீடு பாத்துருந்தாங்க. அருணும் ஜெயஸ்ரீயும் இல்லாமா இருந்துருந்தா நிஜமா ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் . tube train லயே போனதால அதுவரைக்கும் லண்டன் ஒன்னும் தெரியல . tube train அ விட்டு வெளிய வந்தா உண்மையான குளிரு உரைக்கத் தொடங்கியது. நான் தேடி வந்த லண்டன இப்பதான் உண்மையா உணரத்தொடங்கினேன்.


Yes now I am in onsite. A different country ,different climate and  different culture :) .

Tuesday, November 13, 2012

பயணம்

explore a man walking on a road in tan 235 1024x576 10 Kilimanjaro Trip Tips

இந்த உலகத்துல பயணம் செய்யாத மனிதர்களே இல்லை. ஆதி காலம் தொட்டு இன்று வரை மனிதர்கள் பயணம் பண்ணிகிட்டேதான் இருக்காங்க. பல பயணங்கள் இந்த உலகையே மாத்திருக்கு . சே குவேராவின் 9 மாத காலத்தில் அவர் பயணம் செய்த 8000 km மோட்டார் சைக்கிள் பயணம் இந்த உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாவோவின் நெடும் பயணம்தான் இன்றைய சீனாவின் வல்லரசிற்கு காரணம். இந்த உலகில் மனிதன் தோன்றியதிலிருந்து பயணப்பட்டுகிட்டேதான் இருக்கேன். இப்ப இருக்க எல்லாரும் கூட  எப்படியும் பயணம் பண்ணத்தான் செய்றாங்க, அந்த பயணங்களில் ஒவ்வொருத்தவங்களும் எந்த அளவிற்கு தாக்கத்தை உணருராங்கங்கறத  பொறுத்து அவர்களில் மாற்றம் நிகழும்.

பெரும்பாலும் பயணம்கிறத எல்லாரும் வெறும் இலக்கை அடையறுத்துக்கான வழியாதான் நினைக்கிறோம். ஆனா எல்லாப் பயணமும் இலக்கையும்  தாண்டி நமக்கு பலதையும்  சொல்லிக்கிட்டுதான் இருக்கு. ஆனா நாமதான் அத காது கொடுத்து கேக்குறதில்ல.

நான் அன்னைக்கு ஒருநாள் ஒரு சிறுகதை படிச்சேன். அதுல நம்ம கதாநாயகன் சென்னைல இருந்து மதுரைக்கு போகணும். திடீர்னு அவனுக்கு ஒரு நினைப்பு வரும். நாம ஏன் டவுன் பஸ்லயே மதுரைக்கு போகக்கூடாதுன்னு. உடனே தாம்பரத்துக்கு டவுன் பஸ் ஏறுவான். அங்க இருந்து கூடுவாஞ்சேரி . பின்ன அங்க இருந்து அடுத்த ஊருக்குன்னு இப்படியே போவான். வழில ஒரு 5 மணிநேரம் டவுன் பஸ்ஸே இருக்காது. அப்ப பஸ் ஸ்டாண்டுலையே  படுத்து தூங்கிருவான். மறுநாள் முத டவுன் பஸ்ஸ பிடிச்சு பயணம் தொடரும். இப்படியே அவன் ஊர் போய்ச் சேர 30 மணி நேரம் ஆகிரும். அப்ப அவன் நினைச்சுப்பாப்பான், எவ்ளோ ஊரு , என்னனென்ன பேரு, எத்தனை விதமான மனிதர்கள், அவர்களுக்குள்ளே  எவ்வளவு உணர்ச்சிகள், எவ்ளோ வட்டார மொழி இப்படி பல விசயங்கள் அவன் இதுவரைக்கும் வாழ்க்கைல கேட்டே இல்லாததெல்லாம் தெரிய வரும். அந்த பயண முடிவுல அவனுக்கு ஏற்பட்ட பயணக் களைப்பை  விட அவனுக்கு ஏற்பட்ட மன திருப்தி அதிகம் . அந்த ஒரு பயணத்துல அவன் வாழ்க்கை முழுவதற்குமான ஒரு பெரிய பாடத்தையும் கற்றிருப்பான்.

சென்னைல இருந்து இங்க இருக்க மதுரைக்கு உள்ளயே இவ்ளோ விஷயம் இருக்குதுனா , இந்த உலகம் முழுவதும் எவ்ளோ இருக்கும். இந்த ஆர்வம்தான் இன்னமும் இந்த உலக சுத்தி பலரை ஓடவிட்டுகிட்டு இருக்கு.

உலகம் முழுக்க தனியா படகுல, பைக்லனு சுத்தி வர்றவங்க நிறைய. அலஸ்டயர் (Alastair Humphreys) ங்குற பைய்யன்  உலகம் முழுக்க சைக்கிளலையே  சுத்தி வர்றான். இவங்கல்லாம் வருஷ கணக்கா பயணம் செய்றாங்க.  அன்று  மெகஸ்தனிசின் உலகப் பயணம் 30 ஆண்டுகள் நீடித்தது. அவரோட நூல்கள் ஒரே காலகட்டத்தைய  உலக நாடுகள் முழுவதையும் ஒப்பிட்டு பார்க்க உதவுது. அதுவரை அந்தந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அந்தந்த பகுதி மக்களாலையே ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தது போய் இவர்களால் மூன்றாவது கண்ணோட்டம் கிடைத்தது .இவங்க அளவிற்கு மக்களுடன் யாரும் நெருங்கி இருக்க முடியாது. இவங்கதான் உலகின் உண்மையான தூதுவர்கள்.

என் சிறுவயதில் எங்கள் குடும்பத்துடன் நாங்கள் சென்ற வட இந்தியப் பயணம் என்னுடைய என் தம்பியுடைய கண்ணோட்டத்தில் மிகப்  பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது . திருநெல்வேலி தொடங்கி சிம்லா சென்று திரும்பவும் பஸ்சிலேயே வந்த அந்த 23 நாள் பயணத்தில் நான் அதுவரை அறியாத இந்தியாவைப் பார்த்தேன். நினைத்த இடத்தில் தூங்கி, நினைத்த இடத்தில் சாப்பிட்டு, நினைத்த ஆற்றில் குளித்து, நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம். ஏன் இந்த இடத்தில் இந்த நேரத்தில் நிற்கிறீர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் சம்பல் கொள்ளைக்காரர்கள் வந்துவிடுவார்கள், கிளம்புங்கள் என்று எங்களைப் பற்றிக் கவலைப்பட்டு விரட்டியவரையும் , எதோ ஒரு ஊரைச் சார்ந்த 10 வயதுச் சிறுவனான என்னைக் கூப்பிட்டு தாங்கள் சாப்பிட்ட சப்பாத்தியை என்னுடன் பகிர்ந்துகொண்ட பஞ்சாப் லாரி டிரைவர்களையும் , போகிற வழியெல்லாம் தண்ணீர் கொடுத்து உதவிய மக்களையும், நாங்கள் அவரிடம் வாங்கிய தயிரையே அவர் வீட்டின் அருகிலிருந்து சாப்பிட அனுமதிக்காத அந்த பிராமணரையும், அந்த அலகாபாத்தில் எங்களுக்காக படகு ஒட்டிய அந்த கிழவனாருக்கு நாங்கள் மறைத்து கொடுத்த பணத்தை அந்த முதலாளி வந்து பறித்துக் கொண்டபோது அந்த கிழவனார் பார்த்த அந்த பரிதாப பார்வையையும் என்னால் எப்படி மறக்கமுடியும் . நிச்சயம் அந்தப் பயணம் எனக்கு இந்தியாவைப் பற்றி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .

என்னை பொறுத்தவரை பயணம்னா அது மனிதர்களுடன் கலந்ததா இருக்கணும்.  வெறுமனே விமானத்தில் பயணப்பட்டு இலக்கை அடைந்து திரும்பி விமானத்திலேயே திரும்புவதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. பயணம்குறது வெறும் இடங்களை சுத்தி பார்பதற்கு அல்ல . அது மனிதர்களைப்  பார்க்க . எனக்கும் உலகம் பூரா இப்படி பயணம் செய்யணும்னு  ஆசை. மக்களுடன் அவ்ளோ நெருங்கணும். நம்ம சிறுகதையின் ஹீரோ மாதிரி சென்னைல இருந்து மதுரை வரைக்கும் டவுன் பஸ்லயே பயணம் பண்ணனும் ஆசை.

உலகிலேயே மிகப் பெரிய படிப்பு மனிதர்களை படிக்குறதுதான். மனிதர்களைப் படித்தவர்கள்தான் உலகை வெற்றி கொண்டிருந்திருக்கிறார்கள். அதை இந்த பயணங்கள் தராமல் வேறு எதுவும் தராது.
பின் குறிப்பு : அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
Photo Courtesy :
http://www.travelinggreener.com/active/10-kilimanjaro-trip-tips/
http://explore.org

Sunday, November 4, 2012

30 நிமிடத்தில் பதிவர் ஆவது எப்படி ;)


http://images.kw.com/agent_photos/0/6/7/067477//library/Blog_Pen_1266364241013.jpg

எனக்கு வரலாருனா ரொம்ப பிடிக்கும் . என் friends கூட பேசும்போது கூட அங்கங்க கொஞ்சம் history எட்டிப்பாக்கும் . அதை பாத்த என் friends நீ ஏன் ஒரு blog ஆரம்பிச்சு இத பத்திலாம் எழுதக் கூடாதுன்னு சொன்னாங்க. அத பாத்துதான் எனக்கு blog ஆரம்பிக்கணும்னு தோணுச்சு .

ஒருத்தர் blog ஆரம்பிக்கும்போது சில விசயங்களை முன்னாடியே யோசிச்சு வச்சுக்குங்க. முதல்ல blog க்கான பேர் . அது உங்க blog ல நீங்க என்ன மாதிரி விசயங்களை எழுதப் போறீங்கங்கனு தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி வைங்க . உங்களோட பேரையே உங்க blog க்குக்கு வைக்கிறதுல சில நன்மைகள் இருக்கு. அந்த ப்ளாக் எந்த ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் அடங்காம உங்களோட எண்ணங்களையும் , உங்களோட mood ஐயும் பொறுத்து எந்த மாதிரி விசயங்களையும் கொண்டிருக்கலாம். முதலில் என் வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்குறதுன்னு தெரியாம பல நாள் யோசிச்சேன். அதனாலையே வலைப்பூ தொடங்குவதற்கான காலம் தள்ளிக்கொண்டே போனது. கடைசியில் இவ்ளோ யோசிக்கிறதுக்கு என் பேரையே வச்சுரலாம்னு என் பெயரையே என் வலைப்பூவிற்கு வைத்தேன். அது கிட்டத்தட்ட accident தான் . ஆனால் அது நலமாகவே அமைந்தது .

ரெண்டாவது நீங்க எந்த மொழில எழுதப் போறீங்கங்கிறதையும் முதலிலேயே முடிவு பண்ணுங்க. பொதுவா ஒரு blog ல ஒரே மொழிலயே எழுதுங்க . வேறு மொழில எழுதணும்னு தோணுச்சுனா அதுக்கு தனி blog வச்சுக்குங்க. பொதுவா மொழிக்கான வாசகர்கள் தான் அதிகம் . உங்க blog க்குக்கு வர்றவங்க பொதுவா ஒரே மொழில படிக்கதான் விரும்புவாங்க.

அடுத்து உங்க blog க்குக்கான  URL . பொதுவா உங்க URL உங்களையே உங்களை காட்டுறது மாதிரி தேர்ந்தெடுங்கள் . பிற பிரபல பதிவர்களின் URL லில் ஒன்று இரண்டு எழுத்துக்கள் மட்டும் மாற்றி நீங்கள் தேர்ந்தெடுக்கும் உங்கள் URL உங்களுக்கான எந்த ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தாது .

அடுத்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் blog provider . மிக பிரபலமாக இருக்கும்  blog provider இரண்டு. ஒன்று google இன் blogspot மற்றொன்று wordpress . நான் தமிழில் எழுத பயன்படுத்துவது google இன் transliterate. நான் blog எழுத ஆரம்பித்தபோது blogspot தான் transliterate இன் font ஐ support செய்தது . மேலும் google account மூலமாகவே நீங்கள் blogspot இல் blog தொடங்கலாம் . உங்கள் viewers பற்றிய statistics லாம் நீங்கள் google இன் மூலமே தெரிந்து கொள்ளலாம். இதனாலையே நான் blogspot ஐ தேர்ந்தெடுத்தேன் . wordpress உம்  பிரபலமான தளம்தான் .


அடுத்து பதிவுகள். நீங்கள் என்னவேண்டுமென்றாலும் எழுதுங்கள் அது உங்கள் எண்ணங்களையும் mood ஐயும் பொறுத்தது . நீங்கள் எழுத எழுத உங்களுக்கென்ற நடை அதுவே அமைந்துவிடும் . இப்படிதான் அப்படிதான்னு எழுதணும்னு இல்லை. நல்லா இருக்கணும். அவ்ளோதான் :). ஆனா சில விசயங்களை கடைபிடிங்க. பொதுவா ஒன்றிரண்டு பத்திகளிலேயே வாசகர்கள் அந்த பதிவை படிக்கணுமா வேணாமானு முடிவு  பண்ணிருவாங்க . அதனால் உங்கள் பதிவின் ஒன்றிரண்டு பத்திகளிலேயே உங்கள் பதிவைப்  பற்றியும் , நீங்கள் எதை முன்னிறுத்தப் போறீங்கணுங்கிறதையும் சொல்லிருங்க . அடுத்து பதிவின்  அடக்கம் . நீங்க என்ன சொல்றீங்கங்குறதை அடுத்தடுத்த பத்திகளில் விளக்குங்க. நீங்கள் சொல்கிற செய்திகளின்  மூலத்தை வேறு எங்கிருந்தாவது பெற்றிருந்தால் அந்த பக்கங்களுக்கு உரலி (லிங்க்) கொடுங்க. அதையும் அந்தந்த விஷயம் பற்றிய வார்த்தைகளின் மீது கொடுங்க. அது இரண்டு விதங்களில் நல்லது . ஒன்று அது உங்கள் மீதான நம்பிக்கையையும் , நீங்கள் சொல்லும் விவரத்தின் மீதான உண்மைத்தன்மையையும் அதிகரிக்கும் . இரண்டு நீங்கள் கூறும் விவரத்தை பற்றி வாசகர்கள் மேலும் அறிய அந்த உரலி உதவும் . இது முக்கியமாக உண்மைச் சம்பவங்களுக்கு குறிப்பாக வரலாறு , statistics க்கு  போன்ற பதிவுகளுக்கு கொடுப்பது நன்று .

சொன்ன விசயங்களையே அடுத்தடுத்த பத்திகளில் சொல்லாதீர்கள் அது வாசகர்களுக்கு எரிச்சலையே கொடுக்கும் . நான் பல நேரங்களில் என்னுடைய பதிவுகளில் இந்தத் தவறை செய்திருக்கிறேன் . மற்றொரு முக்கிய விஷயம் நீங்கள் சொல்ல வரும் அனைத்து விசயங்களையும் மொத்தமாக வாந்தி எடுப்பது போல் சொல்லாதீர்கள்  நீங்கள் கொட்டிய  விசயங்களிலிருந்து உங்களுடைய வாசகர்கள் தேவையானதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று எண்ணாதீர்கள் . Feed your viewers. நான் செய்யும் மிக முக்கியமான தவறு இது .

பதிவிற்கான தலைப்பு . உங்களுடைய பதிவிற்கான முதல் விளம்பரம் உங்கள் பதிவின் தலைப்புதான் . அந்த தலைப்பு உங்கள் 5 பக்க  பதிவைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் தெரிவிப்பதாக இருக்க வேண்டும் . பதிவிற்கான தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிக மோசம் . எழுதி முடித்து ஏதோ ஒரு தலைப்பைக் போட்டு போஸ்ட் பண்ணிவிட வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன் . பல பதிவுகளுக்கு நான் மிக மோசமான தலைப்பைக் கொடுத்துள்ளேன்.

எடுத்துக்காட்டு "சோமாலியப் பெண்களை துரத்தும் பசிகொடுமை,கற்பழிப்புகள் மற்றும் கழுதைப்புலிகள்" , "விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?". இந்த தலைப்புக்கள் ஒரு வேளை நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி இருக்கலாம் . ஆனால் அவை crisp ஆகவோ அல்லது கவரும் படியாகவோ இல்லை. சில நேரங்களில் இது தலைப்பாகவே தோன்றவில்லை . இருந்தாலும் நான் வைத்த தலைப்பிற்காக நான் அதிகம் பெருமைப்படும் பதிவுகளும் உண்டு . அதில் முக்கியமானது "Lift please " . அந்தப் பதிவைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் அது சொல்லியது . இத்தனைக்கும் அது நான் முதலில் வைத்த பெயர் அல்ல. எப்போதும் போல் அவசரத்தில் நான் வைத்த பெயர் "Lift" . கேவலமா இருக்குல்ல ;) . பிறகுதான் நான் மாற்றிய பெயர் "Lift please" .
Editing , ஒரு பதிவிற்கு editing ரொம்ப முக்கியம் . அடுத்தடுத்து எந்த எந்த விசயங்கள் வரவேண்டும் என்பதை அது தீர்மானிக்கும் . முக்கியமாக எந்த ஒரு பதிவும் crisp ஆக இருந்தால் மிக அருமையாக இருக்கும் . என்னுடைய "Lift please" பதிவிலேயே நான் கடைசி நிமிடத்தில் சேர்த்த ஜெரிமி மரி பற்றிய செய்தி அந்த பதிவிற்கே ஒரு தனி கோணத்தை கொடுத்தது . அந்த பத்தி நான் வேறு ஒரு பதிவிற்காக எழுதியது. கடைசி நிமிடத்தில்தான் அந்த பதிவில் சேர்த்தேன். நிச்சயம் இவை நான் திட்டமிட்டு செய்தது அல்ல. அது ஒரு விபத்து போன்று தான் அமைந்தது .
அடுத்து பதிவின் முடிவு . எவ்வளவு நன்றாக ஆரம்பிக்கிறோமோ அவ்வாறு அழகாக முடிக்க வேண்டும் . இதிலும் நான் பல பதிவுகளில் சொதப்பி உள்ளேன் . இதிலும் சிறப்பாக அமைந்தது "Lift please" பதிவுதான் .
உங்களுடைய வலைப்பூ வை நீங்கள் பிரபலப்படுத்த விரும்பினால்  அதற்கென்று பல தளங்கள் உள்ளன . அவற்றில் நீங்கள் சென்று பதியலாம். நானும் முதலில் என் நண்பன் சொன்னதற்காக அத்தகைய தளங்களில் சென்று பதிந்தேன். ஒவ்வொரு பதிவும் போடும்போது  அங்கு சென்று பதிவேன் . அது கொஞ்ச காலத்திற்குதான் . ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்வதில்லை . அதிகபட்சம் பதிவு போட்ட பிறகு என்னுடைய facebook கில் பதிவிற்கான உரலி கொடுப்பேன். அவ்வளவுதான் . இது எல்லாம் அவரவரின் விருப்பத்தைப் பொறுத்தது .

கடைசியாக முக்கியமான விஷயம் . பதிவு என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. எந்த கட்டுக்குள் அடங்காவிட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும் எதுவுமே நல்ல பதிவுதான் . முக்கியமாக ஒரு நல்ல பதிவு என்பது பதிவருக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். உங்களுக்காக எழுதுங்கள் . வேறு எதுவும் முக்கியமில்லை. ஆகையால் நல்ல பதிவிற்கு மேலே சொன்ன எதுவுமே முக்கியமில்லை :)

Disclaimer :
1)  சும்மா எழுதணும்னு தோணுச்சு அவ்ளோதான் :).
2) மேலே சொன்ன பல விசயங்களை நானே பல பதிவுகளில் கடைபிடித்ததில்லை . எல்லாமே நான் எழுதும்போது என்னுடைய mood ஐயும் சூழலையும் பொறுத்தது . அதனால் நான் என்னுடைய பதிவுகளில் நான் மேற்சொன்னவற்றைக் கடைபிடிக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்காதீர்கள் ;) . ஏன்னா பல நேரங்களில் என் பேச்சை நானே கேட்பதில்லை ;) .

Photo Courtesy : http://images.kw.com/agent_photos/0/6/7/067477//library/Blog_Pen_1266364241013.jpg

Saturday, October 27, 2012

உயிரினங்களுக்கான உலகம்


இன்று பல பேருக்கு இந்த பூமி  மனிதர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் உருவாகிவிட்டது. உருவாகிவிட்டது என்பதைவிட இயல்பாகவே தோன்றிவிட்டது அதுவும் சிறிது கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் . ஏனென்றால் பலருக்கு இந்த பூமியில் இருக்கும் பல உயிர்கள் பற்றியோ அவற்றிற்கிடையேயான பிணைப்பு பற்றியோ சிறிதும் தெரியவில்லை அல்லது அக்கறை இல்லை.

இந்த பூமியில் மனிதன் மட்டுமே தனித்து வாழ்ந்துவிட முடியாது. மனிதன் ஒரு Social Animal ஆனால் Social consciousness  இல்லாத ஒரு Social animal. இந்த Social animal என்கிற பதம் மனிதர்களுக்கிடையேயான Social Life ஐப் பற்றிக் கூறவில்லை . இது மனிதன் மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்கும் Social life ஐப் பற்றிக் கூறும் பதம்.

உலகில் உருவாகும் ஆக்சிசனில் 20% தென் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளால் உருவாகிறது. அதாவது நம் கும்மிடிப்பூண்டியில் இருக்கும் குருசாமி சுவாசிப்பது இங்கிருந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அமேசான் மரம் வெளியிடும் ஆக்சிசன். இப்படி மனிதன் தான் சுவாசிக்க அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனிலிருந்து , தன் உணவு உற்பத்தியாகத் தேவையான தேனீ போன்ற சிறு பூச்சிகளால் நடக்கும் மகரந்த சேர்கை முதல் , நம் டாய்லட்டுல இருந்து வெளியே போகும் மலத்தை நொதிக்கச் செய்யும் பாக்டீரியா வரை அவன் சார்ந்திருப்பது மற்ற உயிரிகளை. ஆனால் அவனுடைய நினைப்போ இந்த உலகம் நடப்பதே தன்னால்தான் என்ற எண்ணம். சொல்லப் போனால் இந்த பூமி  உருப்படியாக இருந்தது மனிதன் உருவாவதற்கு முன்புதான்.

இந்த பூமியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உயிரினம் தன் ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது  . அப்பொழுது அதனுடன் போட்டியிட முடியாத அல்லது அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள  முடியாத உயிரினம் இந்த பூமியில் இருந்து அழியும் என்பது டார்வின் தத்துவம். இங்கு கவனிக்கவும் ஆதிக்கம்  செலுத்தும் உயிரினத்தின் நேரடி போட்டியாளன்தான் இங்கு மறையும். அதுவும் அது நடக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஆனால் இங்கு மனிதன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தவுடன் நடப்பது முற்றிலும் வேறானது. இன்று மனிதனின் செயல்பாடால் அழிவது அவன் போட்டி ஆள் அல்ல. அவனுக்கு, அவன் வாழ்விற்கு துணை செய்யும் உயிரினங்கள்தான். ஏனென்றால் அவன் போட்டியாளான நியாண்டர்தால் மனிதனை அவன் என்றோ அழித்துவிட்டான். இன்று எஞ்சி இருப்பது அவன் நண்பர்களே.

மனிதனின் அழித்தொழிப்பு வேகம் எந்த ஒரு உயிரினத்துக்கும் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைப்பு செய்து கொள்ள சிறிது கூட அவகாசமளிக்காத வேகம் . உதாரணத்திற்கு சிட்டுக் குருவி. இங்கிங்கெனாது எங்கும் நிறைந்திருந்த சிட்டுக் குருவிகளை இன்று பார்பதே அபூர்வம். சிட்டுக் குருவிகள் தங்கள் குஞ்சுகளுக்கு ஊட்டுவது வயல் வெளிகளில் இருக்கும் பூச்சிகளையும் , முற்றத்தில் காய வைக்கும் சிறு தானியங்களையும். பூச்சிக் கொல்லிகள் வந்த பிறகு பூச்சிகளும் கிடைக்கவில்லை. கிடைக்கும் பூச்சிகளும் பூச்சிக் கொல்லி விஷம் தாக்கியவை.முற்றத்தில் தானியங்களை காயவைக்கும் பழக்கம் மறைந்த பிறகு தானியங்களும் கிடைக்கவில்லை . அவை கூடு கட்டுவது குடிசை, ஓட்டு வீடு போன்ற வீடுகளில் இருக்கும் சிறு இடை வெளிகளில் . கான்க்ரீட்டு காடுகள் வந்த பிறகு அதற்கும் வழி இல்லை . அப்படியும் தப்பிப் பிழைத்து வாழ்ந்த குருவிகளை அழிக்க வந்தது செல்போன் எமன். இந்த செல்போன் கதிர்களால் இந்த சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி சிட்டுக் குருவிகளின் வாழ்க்கையின் அடி மடியிலேயே கை வைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு மாற்றங்களும் நடந்தது கடந்த எழுபது ஆண்டுகளில். எழுபது ஆண்டுகள் என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த உயிரினத்தின் வாழ்வில் மிகச் சிறிய பகுதி. இச்சிறு இடைவெளியில் எந்த உயிரினத்தாலும் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாது.

இந்த பூமியில் எல்லா காலமும் உயிரினங்கள் தோன்றி பின்னர்  முற்றிலும் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இயற்கையாக நடந்தவை. ஆனால் இப்பொழுது உயிரினங்கள் மறைவது முற்றிலும் மனிதன், மனிதனுடைய செயலால் நடப்பது. மனிதனின் எண்ணமானது முற்றிலும் இயற்கைக்கு மாறானது. எடுத்துக்காட்டாக இதுவரை இருந்த அனைத்து உயிரினங்களும் மற்ற உயிரினங்களை தங்களின் உணவின் தேவைக்காக மட்டுமே கொன்றிருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் பொழுதுபோக்கிற்காக வேட்டை என்ற பெயரில் உயிரினங்களை கொன்றான். வேட்டையில் எந்த உயிரினமாவது அழிந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல் , இந்தியாவில் 1950 வரை இருந்த ஆசிய சிறுத்தை இன்று இல்லை . முற்றிலும் வேட்டையால் அழிந்துவிட்டது. தமிழில் Leopard மற்றும் Cheetah இரண்டிற்கும் சிறுத்தை என்றுதான் பெயர். இப்பொழுது நம்மூரில் சிறுத்தை அடித்துவிட்டது என்று கூறுவது Leopard ஐதான், நான் கூறுவது Cheetah. இன்று உலகில் ஆசிய Cheetah இருப்பது ஈரானில் மட்டும்தான் அதுவும் 100 தான். இப்படி மனிதனின் நேரடி நடவடிக்கையாலும், மறைமுக நடவடிக்கையாலும் பூமியில் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

பூமியிலிருந்து உயிரினங்கள் அழியும் வேகம் இன்று மிகவும் அபாயகரமான வேகத்தில் உள்ளது. இன்றைய வேகத்தில் இது தொடர்ந்தால் 2100 இல் உலகில் இருக்கும் உயிரினங்களில் 50% அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது.

இந்த உலகில் அமெரிக்கா , ஐரோப்பா அளவிற்கு பெரிய தொழிற் புரட்சி நடக்காத பகுதிகள் தென் அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா ஆகும். இவைதான் பல்வேறு  உயிரினங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளும் ஆகும். இவற்றில் பெரும் தொழிற் மாற்றங்கள் ஏற்படும்போதுதான் அதுவும் எந்த ஒரு உயிரினங்களைப் பற்றிய அக்கறையும் இல்லாத தொழிற் புரட்சி ஏற்படும்போது அது பெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

இப்படி உயிரினங்கள் அழிந்தால் , பின்னர் மனிதன் சுவாசிக்க ஆக்சிசனுக்கே அவன் Chemistry Lab லிலிருந்து கிடைக்கும் ஆக்சிசனையே நம்பி முகத்தில் மாஸ்க்குடந்தான் அலைய வேண்டி இருக்கும்.  இயற்கையை இயற்கையாக இருக்க விடுங்கள் அது உங்களை இயல்பாக வாழ வைக்கும் .

Photo Courtesy : http://www.tourismtheworld.com/wp-content/uploads/2011/05/forest.jpg

Sunday, October 21, 2012

அபத்தங்கள்




எனக்கு சின்ன வயசுல இருந்து பறவைகள், விலங்குகள்னா ரொம்ப ஆர்வம். அவைகளை பத்திய விசயங்கள  நியூஸ் பேப்பர்ல  தேடித் தேடிப் படிப்பேன். அது புலி மனுசங்கள அடிச்சாலும் சரி , மனுசங்க புலிய அடிச்சாலும் சரி ரொம்ப ஆர்வமா படிப்பேன். அது தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்ப நான் ரெண்டாவது இல்ல மூணாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன். அப்பத்தான் நியூஸ் பேப்பர்லாம் ஓரளவுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிச்ச தருணம். அப்பத்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பாட்டிருந்தார் . பேப்பர்லாம், போலீசார் இந்த இடத்தில் 2 புலிகளைப் பிடித்தனர், அந்த ஊரில் 3 புலிகளை தேடி வருகின்றனர் அப்படி இப்படின்னு நியூஸ் வரும். நம்மளுக்குத்தான் சிங்கம், புலிலாம் ரொம்பப் பிடிக்குமே, நானும் ரொம்ப ஆர்வமா படிப்பேன். பாதி படிக்கும் போதே கொஞ்சம் குழப்பமா இருக்கும். என்னடா இது புலிக்கு பேரெல்லாம் வச்சுருக்காங்க, அதோட ஒவ்வொரு புலிக்கும் 20 வயசு , 30 வயசுனு வயசு வேற போடுறாங்கன்னு குழப்பமா இருக்கும். சரி நாம படிக்குறது நிஜ புலிய பத்தி இல்லையோனு நினைக்கும்போது அடுத்த வரில போலீசார் புலிகளை வலை வீசி தேடி வருகின்றனர்னு இருக்கும்.புலியதான வலை போட்டு பிடிக்க முடியும். ஆனா இவங்க எழுதுறத பாத்தா நிஜ புலி மாதிரி தெரியலையேனு ஒரே குழப்பமா இருக்கும். என்னடா இது , இது புலி மாதிரியும் இருக்கு , இல்லாத மாதிரியும் இருக்குனு தோணும்.  அதுக்கப்புறமாதான் தெரிஞ்சது அவங்க சொன்னது நிஜ புலிய இல்ல , அவங்க சொல்றது விடுதலைப் புலியனு ;).

இது நான் நாலாவது இல்ல அஞ்சாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்ப தமிழ் பாட புத்தக்கத்துலலாம் காந்தி அடிகள் அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார், நேரு நவம்பர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார்னு போட்டுருக்கும். நான் , என்னடா இது எல்லா தலைவர்களும் திங்கள் கிழமையே பிறக்குறாங்க. இல்ல திங்கட்கிழமை பிறந்தாதான் தலைவரா ஏத்துப்பாங்களா? . இல்ல தலைவர்கள் பிறந்தவுடனே அந்த கிழமைய திங்கட்கிழமையா மாத்திருவாங்களானு ஒரே confusion ஆ இருக்கும். அதுவும் எல்லா புத்தகத்துலயும் அக்டோபர் மாதம் திங்கட்கிழமைன்னு போடாம அக்டோபர் திங்கள்னு spelling mistake ஆ எழுதுறாங்கன்னு தோணும். confusion தாங்க முடியாம அப்பாட்ட போய் இதை கேட்டேன். அப்பா சிரிச்சுகிட்டே சிவா , அக்டோபர் திங்கள்னா அக்டோபர் மாதம்னு அர்த்தம்னு சொன்னாங்க. அதாவது தமிழ்ல  திங்கள்னா , மாதம் , நிலான்னு அர்த்தம் இருக்காம்.
what a funny language is tamil ;) 

சின்ன வயசுல ஒரு நாள் பஸ்ல போகும்போது ரோட்டுல செம்மறி ஆடு போய்கிட்டு இருந்துச்சு. அப்ப அப்பாவ  கூப்பிட்டு, அப்பா இங்க பாருங்க வெள்ளாடு போகுதுன்னு  சொன்னேன். அதுக்கு அப்பா இது வெள்ளாடு இல்ல. இது செம்மறி ஆடு. அதோ அதுதான் வெள்ளாடுனாங்க. அதுக்கு நான் அப்பா, அது கருப்பா இருக்கு அத வெள்ளாடுங்குறீங்க. இதுதான் வெள்ளையா இருக்கு அதுனால இதுதான் வெள்ளாடுனேன். இன்ன வரைக்கும் எனக்குப் புரியல, கருப்பா இருக்க ஆட்டுக்கு ஏன் வெள்ளாடுன்னு பேரு வந்துச்சுன்னு :(.

இதுவும் கூட ரெண்டாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். பக்கத்துவீட்டுப் பய்யன் அவங்க கொய்யா மரத்துல காய்ச்ச கொய்யாவ சாப்ட்டுச் சொன்னான். 'டாய் , அந்த கொய்யா அரப் பழமா இருந்துச்சு அதான் தூக்கி எறிஞ்சுட்டேன்' னுனான். எனக்கு ஒரே கோபம், ஏன் முழுசா தூக்கிப் போட்டான். பழுத்துருக்க பாதி பக்கம் மட்டும் சாப்டுட்டு காயா இருக்க மீதி பக்கத்த தூக்கிப் போடவேண்டியதுதானனு நினச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அரப் பழம்னா பாதி பக்கம் பழுத்து பாதி பக்கம் காயா இருக்காது. மொத்தமுமே காயும் , பழமுமாதான் இருக்கும்னு :(.

ஏழாவது படிக்கும்போது ஒருநாள் class test ல தமிழ் பாடத்துல ராமாயணத்துல இருந்து கேள்வி கேட்டுருந்தாங்க. அது சீதேவிய பத்திய கேள்வி. நான் , நம்ம பசங்க எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திறாங்கனு நினச்சுகிட்டு , சீதேவின்னு வர்ற இடத்துலலாம் ஸ்ரீதேவினு எழுதி வச்சேன். அந்த பேப்பர திருத்திட்டு வந்த எங்க தமிழாசிரியர் சிரிச்சுகிட்டே, டேய் உனக்கு நடிகை ஸ்ரீதேவினா ரொம்ப பிடிக்குமோ, அது ஸ்ரீதேவி இல்லடா , சீதேவின்னு சொன்னாரு :).

டைடல் பார்க்குல இருந்து மத்திய கைலாஷ் போற வழில பாத்தீங்கனா, "ரோஜா முத்தையா தெரு" னு  ஒரு போர்ட் இருக்கும். கொஞ்ச நாள் முன்ன வர, பலதடவ அத கிராஸ் பண்ணும்போது நினைச்சுப்பேன் , ராஜா முத்தையாங்கிறததான் spelling mistake ஆ ரோஜா முத்தையானு எழுதிட்டாங்கனு . ஆனா அதுக்கு கீழ english லையும் 'Roja Muthiah' னு தான் எழுதி இருப்பாங்க. எப்படி ரெண்டு தடவையும் spelling mistake பண்ணாங்கனு தோணும்.அப்புறம்தான் தெரிஞ்சது நிஜமாவே 'ரோஜா முத்தையா' னு ஒருத்தர் இருந்தாருன்னு :)

இவ்ளோ வளந்தப்புறமும் இன்னமும் குழந்தைப் பிள்ளையாவே இருக்கேன் . என்ன பண்றது :)

பின் குறிப்பு:

ரோஜா முத்தையா என்கிறவர் ஒரு signboard artist ஆ இருந்து ஒரு தனி மனிதனா பழைய புத்தகங்களும், பத்திரிக்கைகளும் சேகரிக்க ஆரம்பிச்சார். 1950 ல இருந்து 1992 இல் அவர் இறக்கும் வரை அவர் சேகரித்த புத்தகங்கள் , பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சம். இந்த சேகரிப்பில் மிகப் பழமை வாய்ந்த 1804 இல் வெளி வந்த புத்தகம் எல்லாம் உள்ளது. இந்த சேகரிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சிகாகோ பல்கலைகழகம் இந்த மொத்த சேகரிப்பையும் வாங்கி கொண்டது . இப்பொழுது Roja Muthiah Research Library (RMRL) என்கிற பெயரில் மொத்தம் 15 லட்சம் புத்தகங்களுடன் இன்னும் இந்த நூலகம் சென்னையில் உள்ளது. ஊ.வே. சா, ரோஜா முத்தையா போன்ற தன்னலமற்ற மனிதர்களால்தான் தமிழின் பெருமை உயர்கிறது.


Photo Courtesy :


http://www.flickr.com/photos/27017291@N04/2737307968