Wednesday, March 3, 2010

கல்யாணமும் ஜோசியமும்

நம் ஊரில் பெரும்பாலும் ஜாதகம் பார்க்காமல் அநேக திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதில்லை. இதற்க்கு விதி விலக்கு காதல் திருமணங்களே. பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மணப்பெண் , மணமகன் -ஐ பார்பதைக் காட்டிலும் 14 ஜோசியக் கட்டங்களைப் பார்த்தே நிச்சயிக்கப்படுகின்றன. ஜோசியம் பார்ப்பவர் சொல்லுவதே வேத வாக்கு. இதுலயும் எல்லா ஜோசியக்காரர்களும் ஒரே மாதிரி சொல்லுவார்களா என்றால், மாட்டார்கள். ஒருவர் கணப் பொருத்தம் முக்கியமில்லை என்பார் மற்றொருவர் கணப் பொருத்தம் இல்லையென்றால் திருமணமே செய்யாதீர்கள் என்பார். ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளது என்பார் இன்னொருவர் இல்லையென்பார். இப்படி முரண்பட்டவர்களின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு முரணான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பெண் வீட்டில் பையனையும், பையன் வீட்டில் பெண்ணையும் ரொம்ப பிடித்திருக்கும். குணம், வேலை, நல்ல குடும்பம், அழகு என அனைத்துமே இரு வீட்டிலும் பொருந்தி வரும். கட்டக் கடைசியாக ஜாதகம் என்ற ஒன்றைப் பார்ப்பார்கள். அங்கு ஜோசியர் பொருத்தம் 5/10 என்று பாஸ் மார்க் தான் வாங்கியிருக்கு, distinction லாம் இல்ல என்று கூறி அந்த சம்பந்தத்தையே நிறுத்தி விடுவார்கள். (ஜாதகத்தில் 10 பொருத்தம் சரியாக பொருந்துகின்றனவா என்று பார்ப்பார்கள், அது பொருந்துவதைப் பொறுத்து 5/10, 8/10 என்று மார்க் போடுவார்கள்.) ஆக made for each other ஆகிய ஒரு பொருத்தம் ஜாதகம் சரியில்லை என்று நிறுத்தப்பட்டுவிடும்.

சரி ஜாதகம் சரியாக அமைந்து, செய்துவைத்த திருமணங்கள் அனைத்தும் வெற்றிக்கொடி நாட்டுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது. ஜாதகம் பார்த்து 9/10 என distinction வாங்கிய பல திருமணங்கள் ஆரம்பத்திலயே முறிவு பெறுகின்றன. சரி இப்பொழுது இதற்க்கு என்ன சொல்லப் போறீர்கள் என்று கேட்டால் அங்கு விதி என்ற ஒன்றைச் சொல்லுவார்கள். ஆக இங்கு ஜாதகம் செல்லாது.

அமைந்தால் ஜாதகம், முறிந்தால் விதி இப்படி எதற்கும் ஒரு காரணம் வைக்கிறார்கள்.

சரி ஜாதகத்தை நம்பலாமா கூடாதா ? என்று கேள்வி எழுப்பினால், விடை கிடைப்பதற்குப் பதிலாக அது அதற்க்கு ஆதி கேள்வியான, விதி இருக்கா இல்லையா ? என்ற கேள்வியையும், அது அதற்க்கு ஆதி கேள்வியான, கடவுள் இருப்பது உண்மையா இல்லையா ? என்பதையும் எழுப்புகிறது. இப்படி முரண்பட்ட கேள்விகளைக் கொண்டு முச்சந்தியில் நிற்கின்றன திருமணங்கள்.

ஜாதகம் இருப்பது உண்மையென்றால் எப்படி 9/10 வாங்கிய திருமணங்கள் முறிகின்றன, 4/10 வாங்கிய வரன்கள் (இவை பெரும்பாலும் காதல் திருமணங்கள்) made for each other ஆக உள்ளன. இதற்காக நான் காதல் திருமணங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன என்று கூறவில்லை. அவைகள் முறிந்தால் ஜாதகம் காரணமாக இருக்காது, கல்யாணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கொண்டிருந்த மாய பிம்பங்களே காரணமாக இருக்கும்.

திருமணங்களை மனதைப் பார்த்து நிச்சயுங்கள் கட்டத்தைப் பார்த்து நிச்சயிக்காதீர்கள்.

10 comments:

Nathan SP (நாதன்) said...

Hari - Very well written post. :)

And, Astrology is also a science - science of observation of pattern (pattern of behavior, life, success and so forth) of people born under certain of classification (which is time line - like, pisces, leo etc).

It can at best be a predictive science only and not an authoritative one. But, given people mentality to choose anything that is safe and acceptable to others (society), they tend to follow this so as to be on the safer side.

What most people forget is that, still a single human life soul can determine and change and alter his life (and if possible by circumstances) the lives of others in positive or negative manner - irrespective of astrology or anything.

Nathan
http://nathansp.blogspot.com

JDK said...

Hmm Good One...I've one thing to say.. Poosariyum, Pugayum Illaamal Thirumanam nadakkuma intha Thamizh samoogathil ??

JDK said...

Machan, Even divorcees/widowers are mentioning "Horoscope match-must" in their profiles..EKSI :(

Haripandi Rengasamy said...

@ nathan,

வானவியல் வேற, வானவியல் சாஸ்திரம் வேற ... இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்ளகூடாது .. முதலில் ஜோசியம் predictive science கிடையாது ... அப்படியே இருந்தாலும் மக்கள் அதை ஒரு prediction ஆக எடுத்துக்கொள்ளாமல், அதை முழுவதுமாக நம்புகிறார்கள் ... you are correct nathan .. i believe in positive and negative manner and using that we can change ourself and society ..

P.S : Nathan its nice to see you here. Thanks for your comments.

@ JDK

you are correct... Even divorcees/widowers also mentioning "Horoscope match must" .. அதுதான் இருக்கதுலயே கொடுமை ...

JDK said...

Recently I saw a marriage album of a Malayali friend it was so simple yet so beautiful and elegant.There is no Priest involved in the marriage podium no fire and smoke...that was cool.I asked him why are the above things missing, he said that their marriages used to be like that.I really loved that kind of marriage.

Shankar.Nash said...

nice thoughts..as you said, for most of the questions they just blame it on the destiny. Still, these kinda customs are deep rooted in our society. Slowly, there seems to be a shift in this. Lets see how far it goes

Chittoor Murugesan said...

//ஜாதகம் இருப்பது உண்மையென்றால் எப்படி 9/10 வாங்கிய திருமணங்கள் முறிகின்றன//

மறைந்த் எழுத்தாளர் சுஜாதா ரேஞ்சுக்கு தவளைப்பாய்ச்சல் நடைல எழுதியிருக்கிங்க. நல்லாவே இருக்கு. இருந்தாலும் விசயம் தெரிஞ்சவன் என்ற முறையில் ஒரு பதிவே போடலாமானு யோசிக்க வச்சிட்டிங்க.

நீங்க சொல்ற பத்துக்கு ஆறு எல்லாம் சப்ஜெக்ட் வைஸ் பார்த்தா ஜுஜுபி. முக்கியமா ஜாதகங்கள்ள இருக்கிற தோஷங்கள் பொருந்தனும். நீங்க சொல்ற பத்து பொருத்தத்துல ரஜ்ஜு ஒன்னுதான் ஆள அடிக்க கூடியது. மத்ததெல்லாம் சப்பை

பாராட்டுக்கள்

Haripandi said...

நீங்க சொல்ற மாதிரி தோஷங்கள் அளவில் யாரும் முதலிலேயே பொருத்தம் பார்ப்பதில்லை . முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பார்கள். அங்கதான் இந்த 8/10 , 6/10 எல்லாம். அதுவே சரியா இல்லைனா அந்த இடத்திலேயே கத முடிஞ்சது.நட்சத்திரப் பொருத்தம்லாம் சரியா அமைஞ்சதான் அடுத்தகட்டமான நீங்கள் சொன்ன தோஷங்கள் அளவில் பார்ப்பது.இந்த மாதிரி தான் நட்சத்திரப் பொருத்தத்திலேயே சரியில்லை என பல நல்ல பொருத்தங்கள்(நான் கூறுவது ஜாதகங்களைத் தவிர மற்ற பொருத்தங்கள்) நிராகரிக்கப்படுகின்றன .

பின் குறிப்பு:

உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி திரு.சித்தூர் முருகேசன் அவர்களே.

KULIR NILA said...

337 idhu than anaivarkkum undaana

Kadavul - Vidhi

Undu na Undu
Illai na Illai

Avlothan

Anonymous said...

Neega sollratha keaka konjam aruthala iruku ana enga vitula jadagam porutham seri illanu enga mrgayae stop panna pakuraga ivalo naal love panni kasta pattu vitula samantho vagunathu ellamae ipa intha jadagam set agathathunalla kalyanathayae nirutha pakuraga