Monday, November 9, 2009

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் சதுப்பு நிலங்களை பற்றி படித்த போது, அது சற்று வித்யாசமான பெயராகவும், கற்பனையில் ஒரு வித்யாசமான நிலமாகவும் தோற்றம் அளித்தது. ஏனெனில் தமிழ் நாட்டில் பெரிதாக சதுப்பு நிலப் பகுதிகள் கிடையாது. அதனால் அதனைப் பார்த்தது கிடையாது. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளின் சில பகுதிகள் சதுப்பு நிலத்தால் ஆனவை.

பிற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது மேலும் அதிக ஆர்வம் ஏற்ப்பட்டபோது, சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் தெரிந்தது. சதுப்பு நிலமானது எப்பொழுதும் அல்லது பெரும்பாலான நாட்களில் குறைந்த அளவு நீர் மட்டம் இருக்கும் பகுதிகளாகும். இச்சதுப்பு நிலங்களில் நீர்ப்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் இந்நிலங்களில் எப்பொழுதும் நீர் தேங்கி இருப்பதால், சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நான் சென்னைக்கு வந்த புதிதில் தாம்பரத்திலிருந்து வேளச்சேரிக்கு பேருந்தில் வரும் பொழுது ஜெருசலேம் கல்லூரி அடுத்த பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அது சாதாரணமாக நீர் தேங்கி இருக்கும் பகுதி என்று தோன்றும். பின்னாட்களில்தான் அது சென்னையில் கடைசியாக எஞ்சி இருக்கும் வனப்பகுதிகளில் ஒன்று என்று தெரிந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பள்ளிகரணை சதுப்பு நிலங்களில் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறியலாம்.


பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது 61 வகைத் தாவர இனங்களுக்கும், 46 வகை மீன் இனங்களுக்கும்,106 வகை பறவை இனங்களுக்கும், 7 வகை வண்ணத்து பூச்சி இனங்களுக்கும், 21 வகை ஊர்வனங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது என்பதிலிருந்து உயிரியலில் இப்பகுதி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு பறவைகள் அதிக அளவில் இருந்து இருக்கின்றன, ஆனால் இப்பொழுது ரொம்ப பெரிய அளவில் பறவைகளைக் காண முடிவதில்லை. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மாநகராட்சிக் குப்பைகளை இங்கு கொட்டுவதாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படாததால், இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிப்பதில் தடங்கல்கள் உள்ளன.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பது அதன் மக்கள் மற்றும் கலாச்சாரத்தைப் மட்டுமே குறிப்பது அல்ல, அதன் நிலப் பரப்பையும் குறிக்கும். உலகிலேயே மிக உயர்ந்த மலைத்தொடரையும், பாலைவனத்தையும், பீடபூமிகளையும்,சதுப்பு நிலங்களையும், மிகப் பெரிய வளமை வாய்ந்த சமவெளிகளையும், மிக வயது முதிர்ந்த மலைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக அரிது. அதே போன்று மாறுபட்ட விலங்குகளையும், பறவைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக மிக அரிது. இவ்வாறாக மாறுபட்ட விலங்குகளும் பறவைகளும் இருப்பதற்குக் காரணம் இத்தகைய மாறுபட்ட நிலப்பரப்புகளே. இந்தியாவின் இத்தகையப் பெருமையை நாம் அனைவரும் பாதுகாக்கவேண்டும். அதனால் அரசு மிக விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகளை வரையறுத்து, இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

பின் குறிப்பு :
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுவதுமாக தொலைந்து போவதற்கு முன்பாக என்னுடைய புகைப் படக் கருவியில் பதிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதுவே நீங்கள் மேலே பார்த்த புகைப் படங்கள்.

5 comments:

Shankar.Nash said...

The pallikaranai marsh is a forest dept controlled area!!!! tats a news to me. yeah da.. before even i used to enjoy the ride while going thru this stretch of land with big expanse of water on one side. But, it has given way to dumping and silting. Hope the authorities maintain this place and deepen it to protect the surrounding areas from flooding and save water for future.

PS : with this area under forest control, wil the govt be allowed to deepen and clean this??

Haripandi Rengasamy said...

Yes ji, Pallikaranai marsh is a protected area ... but i i think is not come still under Forest Dept .. Exact area of the marsh has not yet finalized ..only part of the marsh only has been declared as protected area ... that is the problem ...

Even after it is declared as protected area,the municipality is dumping waste means we never know the value of our precious things ...

That is India ..

JDK said...

A country which does not take adequate measures to protect and safeguard its own resources cannot survive in this planet for a long time and some are thinking how to make India a super power within 20 years.Its survival itself is in question till that time !!!

S.Rengasamy said...

கடலோர மாவட்டங்களில் சதுப்பு நிலத்தை தருவை என்கிறார்கள். தருவை என்ற பெயர் எதனால் வந்தது போன்ற விவரங்கள் சொன்னால் நன்றியுள்ளவனாயிருப்பேன்

Haripandi said...

ஐயா ரெங்கசாமி அவர்களுக்கு, என்னுடைய வலைப் பதிவிற்கு வந்ததருக்காக முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் . தருவை பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. தருவை பற்றி என்னுடைய அறிவிற்கு எட்டினால், அதனை நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். என் வலைப் பதிவிற்கு உங்களுடைய வருகையை எதிபார்க்கிறேன். மேலும் நீங்கள் எதன்மூலமாக அறிந்து என் வலைக்கு வந்தீர்கள் என்று அறியவும் விரும்புகிறேன்.