Tuesday, September 22, 2009

தாய் மொழி

நான் வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணிய போது, அதைத் தமிழில் எழுதுவதா அல்லது ஆங்கிலத்தில் எழுதுவதா என்ற குழப்பத்திலேயே பல மாதங்களை கழித்து விட்டேன், இல்லை இல்லை சில வருடங்களையே கழித்துவிட்டேன். என்னுடைய சகோதரனும்,என் நண்பர்களும்(முக்கியமாக ஜோதி மற்றும் சங்கர்), நான் ஏதோ மிக அறிவாளி என்றும், எனக்கு தெரிந்த விசயங்களை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்றும் மிகவும் வற்புறுத்தினார்கள். சரி இத்தனை பேருக்கு மதிப்பு கொடுத்தாவது ஒரு வலைப் பதிவை ஆரம்பிப்போமே என்று ஒருவாறு தீர்மானத்துக்கு வந்து,என்னுடைய முதல் பதிவை நான் மிகவும் கஷ்டபட்டு படித்த ஆங்கிலத்தில் பதிவு செய்தேன்.(என்னுடைய வலைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும என்ற யோசனையில் மேலும் பல மாதங்கள் கழிந்தது வேறு விஷயம். அதுவும் கடைசிவரை நடைபெறவில்லை !!!). தெரிந்தவற்றை எல்லாம் பதிவு செய்வேனா என்று தெரியாது , ஆனால் தோன்றியவற்றை எல்லாம் பதிவு செய்வேன் !!! ;).

சரி இப்பொழுது மட்டும் ஏன் தமிழில் என்று கேக்குறீர்களா?. சில நாட்களுக்கு முன் நான் ஒரு மனிதரை சந்தித்தேன் . அவர் மிகவும் படித்தவர், ஒரு நல்ல தொழிலில் இருப்பவர். அவருடன் சில நிமிடங்கள்தான் பேசினேன். அந்த மிகச்சில நிமிடங்களே என்னை மிகவும் மயக்கி விட்டது. என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு !!. சொல்வதற்கு வெட்கம்தான், இத்தகைய மிகச் சிறந்த தமிழ் உச்சரிப்புகளை கேட்பது மிகவும் அரிதாகி விட்டது. மதுவிடம் இதைப் பற்றி பேசிய போது அவனுக்கும் அவரின் தமிழ் உச்சரிப்புகள் மிகவும் பிடித்துவிட்டது என்று தெரிந்தது. அன்று முடிவு செய்தேன், ஒரு நல்ல தமிழ் ஆசிரியரிடம் சென்று தமிழ் கற்பது, அவ்வப்போழுது தமிழில் வலைப் பதிவு எழுதுவது. அதன் ஆரம்பம்தான் இந்த முதல் முயற்சி. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்திலும் என்னுடைய பதிவுகள் இருக்கும்.

பொதுவாக எனக்கு, ஒவ்வொருவரும் அவருடைய தாய் மொழியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத கருத்து உண்டு. புலமை என்பது பெரிய வார்த்தை, குறைந்த பட்சம் பிழை இல்லாமல் பேசவும்,எழுதவும்்ழுதவும் தெரிந்திருந்தாலே நல்லது. நாம் நம் தாய் மொழியை வாழ வைக்காவிட்டால் பின் யார்தான் அதை வாழ வைப்பார்கள். ஒருவர் எத்துனை மொழிகளை கற்கிறார்களோ அத்துனை நல்லது. ஆனால் அவர்கள், தங்களுடைய தாய் மொழியில் புலமை பெற்றிருப்பதும் அவசியம். ஒவ்வொரு மொழி இறக்கும்போதும், மொழி மட்டும் இறக்கவில்லை, அதனுடன் சேர்ந்து அம்மொழி பேசிய மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை அனைத்தும் அழிகிறது. எனக்கு அழிவில் நம்பிக்கை இல்லை.

அதே போல் தமிழில் வட மொழி எழுத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று கூறுவோரிடமும் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. வட மொழி எழுத்துக்களான ஜ,ஷ,ஸ,ஹ மற்றும் ஸ்ரீ போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதன் மூலம் சில வார்த்தைகளின் மிகச்சரியான உச்சரிப்புகளை நாம் தமிழில் கொண்டு வர முடியும். காலத்திற்கேற்ப மொழியானது , பிற மொழிச் சொற்களை ஏற்கவோ அல்லது அதற்குச் சரியான மாற்றுச் சொற்களை கண்டு பிடிக்கவோ வேண்டும் . அது தமிழ் மொழிக்கும் பொருந்தும். அதனால் என்னுடைய பதிவுகள் வட மொழி எழுத்துகளையும் கொண்டிருக்கும். முடிந்தவரை தமிழில் பதியும் போது பிற மொழிச் சொற்கள் கலவாமல் கவனம் கொள்கிறேன். சில பதிவுகள் பேச்சு வழக்கு மொழியிலும் இருக்கும்.

"தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்."

பின் குறிப்புகள் :

1. மேலே் உள்ள பதிவின் மூலம் நான் தமிழ் மொழியில் அக்கறை கொண்டவன் என்று கூறுவதை விட தாய் மொழியில் அக்கறை கொண்டவன் என்று கூறுவது சரியாக இருக்கும் . அத்தாய் மொழி, மூவாயிரம் ஆண்டுகள் பழம் பெருமை கொண்ட என் தமிழ் மொழியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

2. நானும் என் தாய் மொழியில் புலமை கொண்டவன் கிடையாது . என் பதிவில் ஏதேனும் சொற் பிழையோ அல்லது வாக்கிய பிழையோ இருந்தால் என்னை மன்னிக்கவும். பிழையை சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

3. நண்பா JDK, என் தமிழ் வலை பதிவிற்கு நீயும் ஒரு காரணம் ;) .

6 comments:

Devaraj Rajagopalan said...

Good. I could have written the comments in tamizh but I have to search for tamizh fonts. Okay then you could have used the word 'vishayam' in the place of 'visayam'

Haripandi Rengasamy said...

பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா. நான் Google Tranasliterator - ஐப் பயன்படுத்துவதன் மூலம் தமிழில் type செய்கிறேன். அதைப் பயன்படுத்துவதில் சிறிது பயன்பாட்டுக் குறைபாடுகள் உள்ளன. அதைப் பயன்படுத்துவதில் நான் இன்னும் சிறிது தேர்ச்சிப் பெறவேண்டும் :). மேலும் என்னுடைய கவனக் குறைபாடுகளும் பிழைகளுக்குக் காரணம். இருந்தபோதிலும் பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு மீண்டும் நன்றி :) .

http://www.google.com/transliterate/indic/TAMIL# ஐ பயன்படுத்துவதன் மூலம் நீயும் தமிழிலேயே பதிலுரைக்கலாம்.

Devaraj Rajagopalan said...

ஒ அப்டியா, நன்றி.

Unknown said...

Hey

Language doesn't matter at all. Even though I am in US I would like to adjsut to the environment. There are so many cab drivers who are non americans who can't even understand english.

Conclusion is ur thoughts shd reach the intended people.

Haripandi Rengasamy said...

@Malini

You are speaking about communication but i am speaking about the culture, the language carry. As for as me whenever a language dies, everything with its also die like the culture of the people who speak that language,the living pattern of the people. so language is not intent just for communication. If the languages is only for communication then what is the need for poems,epics,drama etc ...

JDK said...

தமிழ் - இந்த மூன்று எழுத்தில் நம் மூச்சிருக்கும்.
தமிழ் போல் வாழ்க நீயும் பல்லாண்டு!