- குதிரை வால் கொண்டை ஆட ipod இல் பாட்டு கேட்டுக் கொண்டு ஊதா நிறக் கண்கள் மினுக்க ஜாக்கிங் செல்லும் பெண்களைக் காண முடியாமல் போகலாம் ,
- நாம்
தூரத்தில் பஸ் பிடிக்க ஓடி வருவதைப் பார்த்து நமக்காக பஸ்ஸின் கதவு
மூடிவிடாமல் இருக்க நமக்காக காத்திருந்து பஸ் ஏறும் முகம் தெரியாத அந்த நபர்களைக் காண முடியாமல் போகலாம்
- ரோட்டில் நடக்கும் போது ஏதோ இடறி கால் மடங்கும்போது , Are you Ok ? என்று கேட்டுவிட்டு எதிரில் செல்லும் பையனைக் காண முடியாமல் போகலாம்
- மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தியேட்டரில் எத்தனைப் படங்களை வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்ற சுகம் கிடைக்காமல் போகலாம்
- Subtitle உடன் வரும் ஹிந்திப் படங்களைக் காண முடியாமல் போகலாம்
- வெள்ளிக் கிழமை மாலைகளில் கையில் பீருடன் பாரின் வாசலில் சிரித்துப் பேசும் இளைய , இளைஞியிகளைக் காண முடியாமல் போகலாம்
- எவ்வளவு குடித்திருந்தாலும் வம்பு செய்யாமல் போகும் குடிகாரர்களைக் காண முடியாமல் போகலாம்
- நாம் ரோட்டைக் கடக்கும்போது நமக்காக நின்று நிதானித்துச் செல்லும் வாகன ஓட்டிகளைக் காண முடியாமல் போகலாம்
- நாம் செய்யும் சிறு உதவிக்கும் அவ்வளவு உயிர்ப்புடன் நன்றி சொல்பவர்களைக் காண முடியாமல் போகலாம்
- வெயில் காலத்தில் இரவு பத்து மணி ஆனாலும் இருட்டாமலும் , அதுவே பனிக்காலத்தில் சாயங்காலம் மூன்றரை மணிக்கே சூரியன் காணாமல் போகும் அதிசயத்தைக் காண முடியாமல் போகலாம்
- பூமாரி பனி பொழியும் பொழுதுகள் காணாமல் போகலாம்
- பெரிதாக எந்த ஒரு பரபரப்பும் அற்ற இந்த அமைதியான வாழ்க்கையை காண முடியாமல் போகலாம்
- எந்த நேரத்திலும் நெறிசலற்ற பஸ்ஸில் செல்லும் சுகம் கிடைக்காமல் போகலாம்
- நிமிசத்திற்கு ஒரு முறை வந்து செல்லும் , எவ்வளவு தூரம் சென்றாலும் பயணக் களைப்பைத் தராத அந்த சிறிய, ஆச்சரியமான tube train இல் பயணிக்க முடியாமல் போகலாம்
- அந்தக் காலை அவசர பயண நேரத்திலும், அலுவலகத்திற்கு செல்ல கண்ணில் மைய்யிட்டும் , உதட்டிற்கு சாயமிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அந்த அழகிய பெண்களைக் காண முடியாமல் போகலாம்
- இரண்டு பேருந்து நிறுத்தத்திற்கே இடையே உள்ள தூரத்தில் ஐந்து பேருந்து நிறுத்தங்களைக் கொண்டிருப்பதால் எந்த ஒரு இடத்திற்கும் அதிகபட்சம் ஐந்து நிமிட நடை பயணத்தில் செல்ல முடியும் சுகம் கிடைக்காமல் போகலாம் .
- எதுவுமே எளிதாக இருக்கும் , எளிதாகக் கிடைக்கும் , எளிதாக சென்று வர ஏதுவாக இருக்கும் வாழ்க்கைச் சூழல் இல்லாமல் போகலாம்
- பனிக்காலத்தில்
குச்சி குச்சியாக மொட்டையாக நிற்கும் மரங்கள் வெயில் காலத்தில் மஞ்சளும் ,
சிவப்புமாக பசுமையாக தோற்றமளிக்கும் ஆச்சரியத்தைக் காண முடியாமல்
போகலாம்.
- ஊரின் எவ்வளவு மத்தியப் பகுதிகளிலும் பச்சைப் பசேலென்று இருக்கும் அவ்வளவு பெரிய பூங்காக்களைக் காணும் பாக்கியம் கிடைக்காமல் போகலாம் .
- ஆச்சரியப்பட வைக்கும் அழகிய தலை அலங்காரங்களைக் கொண்ட , இரவின் எந்த ஒரு பொழுதுகளிலும் கூட அலங்காரம் கலையாத அந்த அழகிய பச்சையும் , ஊதாவும் , கருப்புமானக் கண்களை உடைய அழகிய பெண்களைக் காண முடியாமல் போகலாம்
- திரும்பிய ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழி பேசும் மனிதர்களைக் காண முடியாமல் போகலாம்
- எந்த ஒரு அலுவலக நாளிலும் ரயில் நிலைய வாசலிலேயே காலையிலும் மாலையிலும் இலவசமாகக் கிடைக்கும் அந்த அருமையான metro , evening standard பத்திரிக்கைகளைப் படிக்க முடியாமல் போகலாம்
- அந்த அழகிய சிவப்பு நிற மாடி பஸ்ஸில் செல்லும் சுகம் கிடைக்காமல் போகலாம்
- வெள்ளிக் கிழமை இரவுகளில் ரயிலில் ரொமான்ஸ் செய்து கொண்டு செல்லும் இளம் ஜோடிகளைக் காண முடியாமல் போகலாம்
- அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்து தலையை உயர்த்தினாலேயே பார்க்க முடியும், அவ்வளவு வெள்ளப் பிராவகத்துடன் செல்லும் (தேம்ஸ்) நதியைக் காண முடியாமல் போகலாம்
Bye Bye London .
5 comments:
I really miss the peaceful life of London here. Miss you so much London :(
//அந்தக் காலை அவசர பயண நேரத்திலும், அலுவலகத்திற்கு செல்ல கண்ணில் மைய்யிட்டும் , உதட்டிற்கு சாயமிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அந்த அழகிய பெண்களைக் காண முடியாமல் போகலாம்// machi..sollavey illa :))))))))))
//அந்தக் காலை அவசர பயண நேரத்திலும், அலுவலகத்திற்கு செல்ல கண்ணில் மைய்யிட்டும் , உதட்டிற்கு சாயமிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அந்த அழகிய பெண்களைக் காண முடியாமல் போகலாம்// machi..sollavey illa :))))))))))
//அந்தக் காலை அவசர பயண நேரத்திலும், அலுவலகத்திற்கு செல்ல கண்ணில் மைய்யிட்டும் , உதட்டிற்கு சாயமிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அந்த அழகிய பெண்களைக் காண முடியாமல் போகலாம்// machi..sollavey illa :))))))))))
இன்றும் நினைத்து பார்த்தால் ஆச்சிரியமே !!! பரபரப்பான நாட்டில் எத்தனை அமைதியான வாழ்க்கை. மனிதர்கள் எவ்வளவு சுகமாய் வாழ முடியும் அந்த ரம்மியமான சூழ்நிலை கொண்ட ஊரில். உன் மீது நான் காணாத போது கொண்ட காதலை விட, கண்ட பின்பு ஏற்பட்ட காதலை விட உன் பிரிவில் வாடும் இன் நாட்களில் கொள்கின்ற காதலே அதிகம்.
Post a Comment