அன்னைக்கு espncricinfo பார்த்துகிட்டு இருந்தேன். அதோட home page ல
ஒரு Test match, ஒரு ODI மற்றும் ஒரு T20 live scoring ஓடிக்கிட்டு
இருந்துச்சு, அப்பதான், கிரிக்கெட் மாதிரி மூணு format கொண்ட விளையாட்டு
வேறு ஏதாவது இருக்கானு தோணுச்சு.
எனக்குத் தெரிந்து ஒரே காலகட்டத்தில் ஒரே விளையாட்டில் வெவ்வேறு வகை (format) கொண்ட விளையாட்டு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் உலகில் இல்லை. ஐந்து நாள் ஆட்டம் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அதற்கு முற்றிலும் மாறான 50 ஓவர் கொண்ட One Day Format அதற்கும் மாறான T20 . இதுல என்ன விசேசம்னா இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் விளையாடப்படுகின்றன.
ஒரு format இல் ஐந்து மணி நேரத்தில் யார் வெற்றியாளர் என்று தெரிந்து விடும்போது அதே விளையாட்டில் மற்றொரு format இல் ஐந்து நாள் ஆனாலும் விடை தெரியாது. சரி போகட்டும், ஒரே format டிலும் இந்த விளையாட்டு எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரி விளையாடப்பட்டு இருந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இன்று ஐந்து நாள் விளையாட்டாக விளையாடப்படும் டெஸ்ட் match ஒரு காலகட்டத்தில் வெற்றியாளர் யார் என்று தெரியும் வரை விளையாடப்பட்டது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே 1939 இல் நடைபெற்ற டெஸ்ட் match 9 நாள் நடந்தது. அப்படியும் யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் அன்று இங்கிலாந்து அணி செல்வதற்கான கப்பலிற்கு நேரமாகியதால் அந்த போட்டி முடிவு காணாமலையே கைவிடப்பட்டது.
இதற்கு அடுத்து ஆடப்பட்ட ஒரு நாள் விளையாட்டுப் போட்டியிலும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை பல மாற்றங்கள். முதலில் 60 ஓவர் கொண்ட விளையாட்டாக விளையாடப்பட்டது பிறகு 50 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. இது போதாது என்று இதில் விறுவிறுப்பைக் கூட்ட முதல் பதினைந்து ஓவருக்கு fielding restriction கொண்டு வரப்பட்டது. பின்னர் அது இருபது ஓவராக கூட்டப்பட்டது . முதலில் முதல் இருபது ஓவருக்கு என்று இருந்தது பின்னர் அது 10, 5, 5 ஓவராக மாற்றப்பட்டது.
ஒரு நாள் போட்டியில் ஒருவர் அதிகபட்சம் 10 ஓவர் தான் போட முடியும் என்கிற போது டெஸ்ட் மாட்சில் ஒருவர் எத்தனை ஓவர் வேண்டுமானாலும் போடலாம்.
விளையாடுற பால்லே சிவப்பு பந்து , வெள்ளைப் பந்துனு ரெண்டு வகை. ஒவ்வொரு பாலும் ஒவ்வொரு மாதிரி behave பண்ணும். முதலில் ஒரு இன்னிங்சுக்கு ஒரு பந்துன்னு இருந்தது போய் இப்ப ஒரு இன்னிங்சுல ரெண்டு பந்து வச்சு விளையாடுறாங்க.
இதுக்கப்புறம் T20 வேற .
வேறு எந்த ஒரு
விளையாட்டிலும் இத்தனை மாற்றங்கள் இருக்கிறதா அல்லது ஏற்பட்டிருக்கிறதா
என்று எனக்குத் தெரியவில்லை. சரி மேற்சொன்ன மாற்றங்கள் , பல்வேறு விதமான
format , வெவ்வேறு விதிமுறைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்று
வேண்டுமானாலும் கொள்ளலாம் ஆனால் ஒரே format இல் அதுவும் ஒரே காலகட்டத்தில்
வெவ்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை என்னவென்று சொல்ல. கிரிக்கெட்டில்
பின்பற்றப்படும் DRS விதிமுறை அனைத்து நாடுகள் பங்கேற்கும் போட்டிகளிலும்
பின்பற்றப்படும் ஆனால் இந்தியா விளையாடும் போட்டியில் மட்டும்
பின்பற்றப்படாது. என்ன ஒரு விசித்திரம்!.
கிரிக்கெட்டே ஒரு சமநிலைத் தன்மையுடன் விளையாடப்படுகிறதா என்பதே ஒரு
கேள்விக்குறிதான். பல நேரங்களில் ஐந்து நாட்கள் விளையாடப்படும்
விளையாட்டின் முடிவை 5 நொடிகளில் போடப்படும் toss யே
தீர்மானித்துவிடுகிறது. அன்று Cricinfo வில் கிரிக்கெட் ரசிகரான டென்னிஸ்
வீரர் ஒருவர் கூறியது ' I always like to loose toss in tennis. I don't
like to waste my energy in taking useless decision. But in cricket many
times the toss itself decides who is the winner even before match
starts' . இந்த ஒரு கூற்றே கிரிக்கெட், விளையாட்டுகளின் மிக அடிப்படை
விதியான ' போட்டியானது அதில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சம
வாய்ப்பையும் , சம சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தரவேண்டும் ' என்பதையே
மீறுவதை கூறும். காத்து அடிச்சா குத்தம் , மழை தூறுனா குத்தம் ,
வெயிலடிச்சா குத்தம் , இப்படி சூழ்நிலையில் ஏற்படும் சிறு மாற்றமே
கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றி தோல்வியையே தீர்மானித்துவிடும். Outdoor
இல் விளையாடப்படும் வேறு எந்த ஒரு விளையாட்டுமே சுற்றுப்புறத்தில்
ஏற்படும் சிறு மாற்றத்தாலும் இந்த அளவிற்கு பாதிக்கப்படுமா என்று
தெரியவில்லை .
இப்படி ஒரே விளையாட்டில் இத்துனை முரண்பாடுகள் அல்லது வேறுபாடுகள் இருப்பதால் இந்த விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரரை மற்றொரு வீரருடனோ அல்லது ஒருவர் நிகழ்த்தும் சாதனையை மற்றொருவரின் சாதனையுடனோ ஒப்பிடுவது கடினம். ஒப்பிட்டாலும் அது பெரும்பாலும் அபத்தமாகவே முடியும் .
இப்படி ஒரே விளையாட்டில் இத்துனை முரண்பாடுகள் அல்லது வேறுபாடுகள் இருப்பதால் இந்த விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரரை மற்றொரு வீரருடனோ அல்லது ஒருவர் நிகழ்த்தும் சாதனையை மற்றொருவரின் சாதனையுடனோ ஒப்பிடுவது கடினம். ஒப்பிட்டாலும் அது பெரும்பாலும் அபத்தமாகவே முடியும் .
மைக்கேல் பெவன் , டான் பிராட்மான் இருவரில் எவர் சிறந்த batsman
யார் என்று கேட்டால், Don't compare apple and orange என்றுதான் சொல்ல
முடியும். கிரிக்கெட் தெரியாத ஒருவர், ஏன் இருவரும் வெவ்வேறு விளையாட்டைச்
சேர்ந்தவர்களா? என்று கேட்டால் நிச்சயம் ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு தர்ம
சங்கடமான நிலைதான் தோன்றும். சிறிது நினைத்துப் பார்த்தால் கிரிக்கெட்டில்
நடந்த சாதனைகள் அனைத்தும் காலத்தால் அழியாதவையே. ஏனெனில் ஒரு சாதனையை
மற்றொரு சாதனையுடன் ஒப்பிடவே முடியாது அப்புறம் எப்படி அதை முறியடிப்பது.
சச்சின் சதத்தை கேரி சோபர்ஸின் சதங்களுடன் ஒப்பிடவே முடியாது. ஏனெனில்
இரண்டும் வெவ்வேறு விதிமுறைகள் இருந்த காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டவை.
2 comments:
Beautiful topic Siva. Relativity in writing. Great. :)
Beautiful topic Siva. Relativity in writing. Great. :)
Post a Comment