நான்
இங்க லண்டனுக்கு வந்த புதுசுல என்னைய ஆச்சரியப்படுத்துன விசயங்கள்ல ஒன்னு
ரோடு . ரோடுனா வெறுமனே காரு போகுறதுக்கு வச்சது இல்ல. கார் போகுற எல்லா
ரோட்டுலையும் ஓரத்துல சைக்கிள் போகுறதுக்குனு தனி lane வச்சுருப்பாங்க .
எல்லா சிக்னல்லையும் மனுசங்க ரோடு கிராஸ் பண்ணுறதுக்கு சிக்னல் போடும்போது
கூடவே சைக்கிளுக்கும் சிக்னல் போடுவாங்க. எல்லா பிளாட்பாரம், தெருவில
இருந்து வீடு , கடை இப்படி எல்லா இடத்துக்கும் சரிவான பாதை
அமைச்சிருப்பாங்க. ஏன் ட்ரைன் , பஸ்ல கூட சைக்கிள் கொண்டு போறதுக்கு ஏதுவாக
இடம் விட்டுருப்பாங்க. அதானல நீங்க வீட்டுல இருந்து சைக்கிள்ள ரயில்வே
ஸ்டேசனுக்குப் போய் நம்மூரு மாதிரி சைக்கிள ரயில்வே ஸ்டேசனுக்கு பக்கத்துல
இருக்க ஸ்டாண்டுல போடாம சைக்கிளையும் நீங்க போற train லயே உருட்டிப்டுப்
போய் , நீங்க இறங்குற இடத்துல இருந்து திரும்பையும் ஓட்டிட்டுப்
போகலாம். இந்த மாதிரி வசதிகள் சைக்கிள் ஓட்டுனர்களுக்குனு
மட்டுமில்லாம வயதானவங்க வீல் சேர்ல வர்றதுக்கும், கைக் குழந்தைகளை தள்ளு
வண்டில கூட்டிட்டு வர்றதுக்கும் சேத்துதான் அமைச்சிருக்காங்க .
அதே மாதிரி எல்லா இடத்துலையும் சைக்கிள வச்சு
பூட்டிட்டு போறதுக்காக அங்கங்க கம்பி ஊண்டி வச்சிருப்பாங்க . அங்க நாம
சைக்கிள நிப்பாட்டி பூட்டிட்டு போகலாம். அதே மாதிரி எல்லா முக்கியமான
இடங்களையும் வாடக சைக்கிளும் இருக்கும். நம்மூரு மாதிரி தனித்தனி சைக்கிள்
கடை மாதிரி இல்லாம ஒரு பெரிய நெட்வொர்க்கா இருக்கும். சைக்கிள் ஓட்டும்போது
எல்லாரும் மறக்காம கெல்மெட்டும் , நியான் ஜாக்கெட்டும் போட்டுருப்பாங்க.
அதே மாதிரி பின்னாடி டேஞ்சர் லைட் மினுக்கு மினுக்குன்னு எரிஞ்சிகிட்டு
இருக்கும். நம்மூரு ஹீரோக்கலாம் இங்க வந்தா தன் காதலிய சைக்கிள் பார்ல
வச்சுகிட்டு போவோமா ஊர்கோலம்னு சுத்த முடியாது. ஏன்னா இங்க இருக்க
சைக்கிளுக்கு எல்லாம் முன்னாடி பாரும் கிடையாது பின்னாடி கேரியரும்
கிடையாது . நம்மூருலதான் இரு சக்கர வாகனம்னா அது சைக்கிளாகவே இருந்தாலும்
வீலுக்கு ஒருத்தருன்னு குறைஞ்சது ரெண்டு பேராவது போகணும் :).
சைக்கிளுக்குனு இவ்ளோ வசதிகள் இருந்தும் நான் பாக்குற
சைக்கிள போறவங்க எண்ணிக்கை ரொம்ப ரொம்ப குறைச்சு. நான் இங்க வந்ததுல
இருந்து மொத்தமா ஒரு 50 , 60 பேர்தான் சைக்கிள்ள போய் பாத்துருக்கேன்.
சைக்கிளுக்கு இருக்க வசதிகள ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை ரொம்ப ரொம்ப
குறைச்சு. அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இந்த வின்டர் சீசனா இருக்கலாம்.
இந்த குளுருல எப்படி சைக்கிள ஓட்டிட்டுப் போறதுன்னு மக்கள்
நினச்சுருக்கலாம். அதத் தவித்து எனக்கு முக்கியமான காரணங்களாப்படுறது
ரெண்டு. ஒன்னு சைக்கிளோட விலை . ஒரு சைக்கிளு குறைஞ்சது 350 பவுண்டுனாவது
ஆகுது. அதாவது நம்மூரு பணத்துல 32 ஆயிரம் ரூபா. அதாவது ஒரு iphone விலை.
இந்த ஊரு பணத்துக்குமே 350 பவுண்டுங்குறது ரொம்ப ஜாஸ்திதான். ரெண்டு வீலும்
நடுவுல ஒரு கம்பியும் இருக்க சைக்கிளுக்கு எதுக்கு 350 பவுண்டுனு தெரியல.
எனக்கு லண்டன்ல போக்குவரத்துக்கான செலவே ரொம்ப அதிகமாத்தான் தெரியுது. அது
சைக்கிளா இருக்கட்டும், train , bus உள்ளிட்ட public transport ஆ
இருக்கட்டும், பைக்கா இருக்கட்டும் , காரா இருக்கட்டும் காருக்குப் போடுற
பெட்ரோலா இருக்கட்டும் எல்லாமே ரொம்பவே ஜாஸ்திதான்.
சைக்கிளுக்கான
விலை இந்த ஊரோட விலைவாசியப் பொருத்தவர சரிதான்னு ஒரு வாதத்துக்கு
சொன்னாக்கூட ., சைக்கிள் போக்குவரத்துக்குனு இவ்ளோ வசதிகள்
செஞ்சுருக்கும்போது சைக்கிளோட வரியையோ இல்ல வேற எதையோ குறைக்குறது மூலமா
சைக்கிள் விலையைக் குறைச்சு இன்னும் சைக்கிள் உபயோகிப்பாளர்களோட
எண்ணிக்கைய கூட்டலாம். அது காற்று மாசைக் குறைக்குறதோட மக்களோட
ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் .
சைக்கிள
நான் அதிகமா பாக்க முடியாததுக்கு இன்னொரு காரணமா நான் நினைக்குறது
திருட்டு. நான் மேல சொன்ன , சைக்கிள நிப்பாட்டி வச்சு பூட்டிட்டுப் போக
அங்காங்க கம்பி ஊண்டி வச்சுருப்பாங்கன்னு சொன்னது சைக்கிள் திருட்ட
தடுக்கத்தான். நம்மூரு மாதிரி இங்க சைக்கிள ஒரு ஓரத்துல நிப்பாட்டி
ஸ்டாண்டு போட்டுப் பூட்டிப் போகலாம் முடியாது. அப்படி போனீங்கனா அடுத்த
நிமிசமே சைக்கிள் காணாம போயிரும். பல தடவ சைக்கிளோட ரெண்டு சைக்கரத்தையும்
ரோட்டுல இருக்க அந்த கம்பியோட போட்டு ஒரு கனமான இரும்புச் சங்கிலி போட்டு
அத விட கனமான பூட்டு போட்டு பூட்டி இருக்குறத பாத்துருக்கேன். ஏன்னா ஒரு
சக்கரத்த மட்டும் பூட்டுன இன்னொரு சக்கரத்த தூக்கிட்டுப் போயிருவாய்ங்கனு
பயம்தான் ;).
இவ்ளோ இருந்தாலும் சமீபத்துல நான் படிச்ச statistic
வேற மாதிரி இருக்கு. லண்டன்ல 40% மக்கள் சைக்கிள் வச்சுருக்காங்க அல்லது
சைக்கிள அணுக முடியுற இடத்துல இருக்காங்க. ப்ரிட்டனல்ல சைக்கிள்
ஓட்டுபவர்களின் எண்ணிக்கை 13 மில்லியன். வருசத்துக்கு சைக்கிள் மூலமா
கடக்குற தூரம் 200 கூடி கிலோமீட்டர் அப்படின்னு இருக்கு. இது பாக்க பெரிய
விசயமாத் தோணுனாலும் இது பிரிட்டன் மக்களோட மொத்தப் பயணத்துல வெறும் 2
சதவீதம் தான். சைக்கிளுக்குனு இவங்க பண்ணி இருக்க infrastructure வசதிக்கு
இது ரொம்ப குறச்சுதான். இதுவே பக்கத்து ஐரோப்பிய நாடான ஹாலந்துல ,
நாட்டின் 27% பயணம் சைக்கிள்ள மேற்க்கொள்ளப்படுது. சிட்டின்னு மட்டும்
பாத்தீங்கனா அது இத விட ரொம்ப அதிகம் அதாவது 59% . சான்சே இல்ல. நம்ம ஊர்ல
சைக்கிளுக்குனு ரோட்டுல தனி lane, சைக்கிள் பயணத்துக்குனு பெரிசா எந்த ஒரி
வசதியும் கிடையாது . ஆனா இங்க இவ்ளோ வசதி இருக்கும்போது சைக்கிளுல
மேற்கொள்ளப்படுற ரொம்பவும் குறச்சுதாங்குறது ரொம்பவும் கஷ்டமா இருக்கு.
ராமநாதபுரத்துல அரண்மனைக்கிட்ட ஒரு சைக்கிள் கடை இருக்கும். அதே ஓனருக்கு அங்க இருந்து ஒரு 3 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற கேணிக்கரைலையும் ஒரு சைக்கிள் கடை இருந்துச்சு. நம்ம ஊருல யாராவது ஒரு கடைல சைக்கிள் எடுத்தா திருப்பி அதே சைக்கிள் கடைலதான் கொண்டு வந்துவிடணும். ஆனா இந்த சைக்கிள் கடைல நீங்க அரண்மனைல சைக்கிள் எடுத்துட்டு கேணிக்கர கடைல கொண்டு போய் விட்டுட்டுப் போகலாம். அரண்மனைல இருந்து கேணிக்கரை போயிட்டு திரும்ப அரண்மனை வரத் தேவை இல்லாதவங்களுக்கு இது ரொம்ப வசதி . ரெண்டு கடைல எங்க வேணா சைக்கிள் எடுத்துட்டு ரெண்டு கடைல எங்க வேணா விடலாம். ரெண்டு கடைல ஏதாவது ஒரு கடைல சைக்கிள் தீந்து போச்சுனா கடைப் பசங்க இன்னொரு கடைக்கு போய் சைக்கிள கொண்டு வருவாங்க.
அதே ப்ளானதான் 2010 ல இருந்து இங்க 'Boris bikes' னு வாடகை சைக்கிள் கொண்டு வந்துருக்காங்க. 8000 சைக்கிள் லண்டனோட முக்கியமான பகுதிகள்ல 570 இடத்துல நிறுத்தி வச்சுருபாங்க . நீங்க இந்த இடத்துல எங்க வேண்டினாலும் சைக்கிள் எடுத்துட்டு வேற எங்க இருக்குற ஸ்டான்டுலயும் விடலாம். எல்லாமே இன்டர்நெட் மூலமாதான் . நீங்க ஜஸ்ட் உங்க membership card, இல்ல debit/credit card தேச்சுட்டு வண்டி எடுத்துட்டுப் போகலாம். அவ்ளோதான். இது நல்லா சக்சஸ் ஆகிருக்கு. சில ஸ்டாண்டுல சைக்கிள் எல்லாம் காலி ஆயிட்டாளோ இல்ல சைக்கிள், parking lot ல சைக்கிள் full ஆயிட்டாளோ அந்த கம்பனி நெட்வொர்க்ல இருந்து வந்து சைக்கிள வச்சுட்டோ இல்ல சில சைக்கிள எடுத்துட்டோ போவாங்க. இதுலயும் சின்ன சின்ன பிரச்சன இல்லாம இல்லை. இந்த monitoring கொஞ்சம் ஒழுங்கா பண்ணல போல, சில நேரம் நீங்க சைக்கிள் எடுக்க ஸ்டாண்டுக்குப் போனா அங்க ஒரு சைக்கிள் கூட இருக்காது . சில நேரம் எடுத்த சைக்கிள ஸ்டாண்டுல விட வந்தா ஸ்டாண்டுல புல்லா சைக்கிள் இருக்கும் . எடுத்த சைக்கிள விட முடியாது .அப்ப நீங்க வேற ஒரு ஸ்டான்ட நோக்கித்தான் போகணும்.இப்படி சில பிரச்சனைகள் இருந்தாலும் இந்த திட்டம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு .
இருந்தாலும் நான் உண்மையான சைக்கிள் ஓட்டிகளோட எண்ணிக்கைய சம்மர்லதான் பாக்கப் போறேன்னு நினைக்குறேன். அப்ப இதே blog அ நான் மாத்தி எழுதுனாலும் எழுதுவேன் :).

Photo Courtesy :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWviWsnwf2RbzSgM11V88muQbyKuYDlOr019kCEnvG5BadFlwr18nXLJbmH1Ib84zn1Y8dGKTD36L4fKoB2xX7hHsp3sVmUO7Be7vQLC3D7MGVBF4rrmGbtwbqHCSnXjbFxC-R2LoanOU/s1600/may+21+2010+004.JPG
http://www.bikedocksolutions.ie/local-authority.aspx
https://www.eta.co.uk/2012/01/06/traffic-lights-that-turn-green-for-bicycles/
http://lovingapartments.files.wordpress.com/2012/10/capo21.png