Thursday, September 30, 2010

களப்பிரர்கள்


தமிழக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எப்பொழுதும் சேர, சோழ மற்றும் பாண்டிய மூவேந்தர்களைப் பற்றிதான் இருக்கும். இத்தனைக்கும் தமிழகத்தின் வடபகுதியை சிறப்பாக ஆண்ட, சிற்பக் கலையில் புரட்சி செய்த , மேலும் தங்களைப் பற்றி நிறைய குறிப்புகளை விட்டுச் சென்ற பல்லவர்களையே மூவேந்தர்களுடன் குறிப்பிடாமல் தனியாகத்தான் குறிப்பிடுவார்கள். இந்த நாலவரைத் தவிர இன்னொரு அரசும் உள்ளது. அதுதான் அதிகம் மறக்கப்பட்ட களப்பிரர்கள். களப்பிரர்கள் தமிழகத்தை கிபி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள். தமிழகம் என்றால் சேர, சோழ மற்றும் பாண்டிய மூவேந்தர்களையும் வென்று தமிழகம் மற்றும் இன்றைய கேரள பகுதிகளை ஆண்டனர் ( முற்காலத்தில் தமிழகம் என்றால் அது கேரளாவையும் சேர்த்துதான். மலையாளம் என்ற மொழி உருவானதே கிபி 12 ஆம் நூற்றாண்டில்தான். அதுவரை கேரளாவிலும் பேசப்பட்ட மொழி தமிழ்தான்.).

களப்பிரர்கள் புத்த மற்றும் ஜைன மதத்தை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் காலத்தில் செழித்து வளர்ந்த மதங்கள் புத்தமும் , ஜைனமும் ஆகும். அவர்கள் ஹிந்து மதத்தையும் ஆதரித்தனர் என்றும் கூறப்படுகிறது ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதி காலத்தில்தான். ஆனால் அவர்கள் சமஸ்கிரதத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நில தானங்களை தடுத்து நிறுத்தினர். இதனாலையே அவர்கள் ஹிந்து மதத்தை ஆதரிக்கவில்லை என்றும் ஒரு கருத்து உண்டு. அவர்கள் கன்னட பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று எண்ணப்படுகிறது . ஆனால் அவர்கள் மொழி தமிழ் என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது. அவர்கள் காவேரிப்பட்டணத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

களப்பிரர்களைப் பற்றி பெரிய குறிப்புகள் எதுவும் வரலாற்றில் கிடையாது. அவர்கள் தங்களைப் பற்றி எந்த ஒரு பட்டயங்களையோ, கல்வெட்டுகளையோ விட்டுச் செல்லவில்லை. கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் கிடையாது. 300 ஆண்டுகள் ஆண்ட அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் கிடையாது. அவர்களைப் பற்றி அறிய உதவும் குறிப்புகள் புத்த மற்றும் ஜைன சமய இலக்கியங்களே. அவையும் பெரிதாக இல்லை. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சீவகசிந்தாமணி, குண்டலகேசி இவர்கள் காலத்திலேயே இயற்றப்பட்டன. இதே போல் பதினென்கீழ்கணக்கு (Eighteen minor works) இவர்கள் காலத்திலேயே இயற்றப்பட்டன.

களப்பிரர்களின் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அதற்க்கு கீழ்வரும் காரணங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
1. களப்பிரர்கள் தங்களைப் பற்றி எந்த ஒரு குறிப்புகளும் விட்டுச் செல்லவில்லை. அவர்கள் காலத்திய செப்பேடுகள், கல்வெட்டுகள் இல்லை. இவர்களின் காலத்தில் தமிழகத்தைப் பற்றியே குறிப்புகள் இல்லை எனலாம். இப்படி தங்களைப் பற்றி எந்த ஒரு குறிப்புகளையும் விட்டுச் செல்லாதாலையே அதனை இருண்டகாலம் என்கின்றனர் .

2. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் (சேர, சோழ , பாண்டிய மற்றும் பல்லவர்கள்) சைவர்களாகவோ, வைணவர்களாகவோ இருந்தனர். அவர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டன. ஆனால் களப்பிரர்கள் பெரும்பாலும் புத்த , ஜைன மதத்தை ஆதரித்தனர் என்று நம்பப்படுகிறது. அவர்கள் சமஸ்கிரதத்தை ஆதரிக்கவில்லை. மேலும் பிராமணர்களுக்கு வழங்கிய நிலதானத்தை தடுத்து நிறுத்தினர். இப்படி ஹிந்து மதத்தினருக்கு எதிராக, இதற்க்கு முந்திய அரசர்களின் இயல்புக்கு மாறாக செயல்பட்டதால் அவர்களின் காலம் பிற்காலத்தில் வந்தோர்களால் இருண்ட காலம் எனப்பட்டது.

3. களப்பிரர்கள் ஒரு சாராரால் வடமேற்கே கர்நாடகத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி தமிழகம் வடமேற்கிலிருந்து வந்தவர்களால் ஆளப்பட்டதால் அதனை இருண்ட காலம் என்றும் கூறலாம். ஆனால் இந்த கூற்றை அதிகம் ஏற்கமுடியாது. ஏனென்றால் களப்பிரர்கள் மொழி தமிழ் மொழியே ஆகும் . இப்படி தமிழகம் தமிழர்களாலே ஆளப்பட்டது ஒன்றும் தவறல்ல. கன்னடம் என்ற மொழி உருவானதே கிபி 10 ஆம் நூற்றாண்டில்தான்.

4. ஒரு குறிப்பிட்ட காலம் பொற்காலம் என்பதற்கு அந்த காலத்தில் போர் ஏதுமின்றி, அரசியல் குழப்பம் இன்றி நாட்டில் அமைதி நிலவவேண்டும். அக்காலகட்டத்தில் கலை, சிற்பம், ஓவியம், மொழி போன்றவை நன்கு வளரவேண்டும். மக்கள் அமைதியாக வாழவேண்டும். இவையே பொற்காலம் என்று குறிப்பிட காரணிகள் ஆகும். களப்பிரர்கள் காலத்தில் நாட்டில் போர் நடைபெற்றதா, அரசியல் குழப்பம் எதுவும் இருந்ததா, மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இரண்டு, அவர்கள் பல்லவர்களைப் போன்று சிற்பக்கலையையோ, சோழர்களைப் போன்று கட்டடக் கலையையோ வளர்த்ததற்கு எந்த ஒரு சின்னங்களும் இல்லை. அவர்கள் காலத்தில் சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் பதினென்கீழ்கணக்கு இயற்றப்பட்டன என்றாலும் அதனை மன்னர்கள் ஆதரித்தனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை . இத்தகைய காரணங்களாலே களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் எனப்பட்டது எனலாம்.

களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். களப்பிரர்கள் பாண்டியன் கொடுங்கன் பாண்டியனாலும் , சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் மற்றும் சாளுக்கியர்களாலும் கிபி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்டனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை கிபி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட முத்தரையர்கள் களப்பிரர்களின் சந்ததியினர் என்று நம்பப்படுகிறது.

11 comments:

Suppa S said...

நான் படித்தா சில புத்தகங்களில் வலைபதிவுகளில் மற்றுன் அருவுசெல்வன் வழியாக சேகரித்த தகவல்கள் இதோ.

300 ஆண்டுகள் ஆண்ட களப்பிரர்கள் நீ குறிபிட்டது போல பிராமணர்களுக்கு வழங்கிய நிலதானத்தை தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் காலகட்டதில் மக்கள் ஆச்சி நடைபெற்றது(எல்லோருக்கும் எல்லாம் ). சிற்பம் மற்றும் கட்டிட கலை ஏழை மக்களின் உழைப்பை வினாடிக்கும் ஒன்றாக அவர்கள் கருதினர்.
அவர்கள் காலத்தில் மொழி நன்கு வளர்க்கப்பட்டது.

அவர்களது இந்த மாறுபட்ட ஆச்சி வழக்கத்தை ஏற்க முடியாத வழிதோன்டர்கள் அவர்களது காலத்தை 'இருண்ட காலம்' என்று குறிப்பிட்டனர் என்பது எனது கருத்து. நீ கூறியது போல சிற்பம், கட்டிடம் இல்லாமையால் அவர்களது குறிப்புகள் நம்மை வந்துஅடையவில்லை.

Suppa S said...

பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன.

“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.

களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)

ref :http://inioru.com

Haripandi Rengasamy said...

சுபாஷ் நீங்கள் கூறியது சரிதான். களப்பிரர்களின் காலத்தில் தமிழ் நன்கு வளர்ச்சியுற்றது. தமிழில் வட்டெழுத்து தோன்றியது அவர்கள் காலத்தில்தான் . மேலும் பல இலக்கியங்களும் இயற்றப்பட்டது அவர்கள் காலத்தில்தான். அவர்கள் காலத்தில் சிற்பம், கட்டடக்கலை வளர்ச்சியுராததற்க்கு நீங்கள் கூறும் காரணிகளை ஏற்றுக்கொள்ளமுடிகிறது.

Haripandi Rengasamy said...

A nice article about Kalabhras

http://suraavali.blogspot.com/2010/08/iii-3-6.html

Arivuchelvan Kasi said...

Arivuchelvan காசி
பாகம் 1:
சுபாஷ், அந்தக் கட்டுரையில் இருக்கும் சில அடிப்படைத் தகவல்கள்/கருத்துக்கள் சரியானவைதான். சில புரிதல் பிழைகள் இருக்கின்றன என்ற போதும். கட்டுரை குறித்து suppa s என்பவர் சரியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

களப்பிரர்கள் கன்னட நாட்டுப...் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் நான் படித்த புத்தகங்கள் வாயிலாக எனக்குத் தெரியவருகிறது. அவர்கள் தமிழா, கன்னடமா என்பது என்னளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஏனேனில், அவர்கள் ஒப்பீட்டளவில் நல்லதொரு அரசை நிர்வாகித்தனர் என்பதுதான் இங்கு போற்றுதலுக்குரியது. குறிப்பாக, அவர்கள் காலத்தில்தான் திருக்குறள் (இதை மறுப்போரும் உண்டு) முதலான பல்வேறு தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. புதிய பா வகைகள் உருவாக்கப்பட்டன (நான்கு வகை தமிழ் பா வகைகளில் உட்பிரிவுகள் உருவாகி விரிவடைந்தது இவர்கள் காலகட்டத்தில்தான்). ஆட்சி மொழியாக மக்களின் மொழியாம் தமிழ் இருந்தது. களப்பிரர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழகத்தின் இனக்குழு மரபு சார்ந்த அரசுகளின் ஒழிப்பையும், நிலவுடமை சார்ந்த மையப்படுத்தப்பட்ட அரசுகளின் வருகையையும் பிரிக்கும் வரலாற்றுக் காலகட்டம் ஆகும். களப்பிரர் இனக் குழு அரசுகளின் பிரதிநிதிகள் ஆவர்.

இந்த வரலாற்றுக் கட்டம் என்பது, அதியமான் அஞ்சி முதலான கடையேழு வள்ளல்கள் என வரலாற்றில் குறிப்பிடப்படும் இனக்குழு தலைவர்களின் பொதுவுடமை சமுதாய அமைப்பு ஒழிக்கப்பட்டு, சமூகம் அடுத்தக் கட்டத்திற்கு மாறிச் சென்றதை குறிக்கும் காலகட்டம் ஆகும். இது போன்ற இனக்குழுக்கள் எல்லாம் பேரரசுகளால் விழுங்கப்பட்டு, பிடுங்கப்பட்டதான காலகட்டம் ஆகும். களப்பிரர் ஆட்சியென்பதே இவ்வாறு சமூகத்தின் சொத்துக்களை அரசின் சொத்துக்களாக மாற்றி அதனை சிறப்புரிமை பெற்றோருக்கானதாக மாற்றியதற்கு எதிராக கிளர்ந்தவர்களின் ஆட்சி எனப்படுகிறது. இதே காலகட்டம்தான் பார்ப்பன மதம் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலகட்டம் ஆகும்.

பாகம்2:
இருண்டகாலம் பற்றி கட்டுரை குறிப்பிடும் ஒவ்வொரு பாயிண்டுக்கும் எனது கருத்து:
1.
தமிழக மன்னர்களின் வரலாறு எல்லாமே குறிப்பாக பல்லவருக்கு முன்பிருந்தவர்களின் வரலாறு என்பது பெரும்பாலும் இவ்வகைப்பட்டதே(போதிய ஆதாரங்கள் இல்லை). ஆனால் அதற்காக அ...வற்றை இருண்ட காலம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. களப்பிரர் மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படுவதில் மேற்குறிப்பிட்ட காரணத்தையும் தாண்டி வேறு சில வெறுப்புகள் உள்ளன.

2.
இது உண்மைதான். ஆனால் களப்பிரர் ஆட்சியில் வேத மதம் எனப்படும் பார்ப்பன மதத்திற்கு ஆதரவு பெரிதாக இல்லை. பிற்கால அரசுகளில் அது சட்டப் பூர்வமாக அனுபவித்த அயோக்கியத்தனமான உரிமைகள் களப்பிரர் காலத்தில் வழங்கப்பட்டிருக்கவில்லை (சதுர்வேதி மங்களங்கள், கோயிகள் அரசு நிர்வாகமையம, பொருளாதார மையம், அதிகார மையமாக உருவாதல், எனவே கோயில்கள் மீதான தமது சிறப்புரிமை மூலம் சமூக உழைப்பை சுரண்டிக் கொழுத்தல்). மேலும், இனக் குழு மரபுகளை உயர்த்திப் பிடித்த களப்பிரர் ஆட்சி தன்னியல்பில் பார்ப்பன மதத்திற்கு வெறுப்பூட்டவே செய்திருக்கும். இந்தக் காரணம் சரியே.

வரலாற்றில் களப்பிரர் மட்டுமல்ல, பார்ப்பன மதம்/ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய பல்வேறு தத்துவங்கள் இந்தியா முழுவதிலும் அழிக்கப்பட்டுள்ளன (சாருவாகம் என்ற இந்திய பொருள்முதல்வாதம், அசீவகம், பௌத்த ஹீனயானம் - சிறுவழி போன்றவை)

அல்லது விழுங்கப்பட்டு உருமாற்றப்பட்டுள்ளன (சாங்கிய நூலாகிய பகவத் கீதை, பௌத்த மஹாயானம் - பெருவழி, முருகன், விநாயகன் முதலான கடவுளர்கள் போன்றவை சில உதாரணங்கள்).

சாருவாகர்கள் என்ற தத்துவப் பிரிவினர் இருந்தனர், சாருவாகம் என்கிற பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு/சாதி எதிர்ப்பு தத்துவ மரபு இந்தியாவில் தழைத்தது என்பதற்கான ஆதரங்களே சமண, பௌத்த, பார்ப்பன மத புத்தங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள இயலுகிறது. அவர்களின் அனைத்து வரலாற்றுச் சுவடுகளும் அழிக்கப்பட்டுவிட்டன.

எனவே, களப்பிரர் ஆட்சியும் இது போல தனது வரலாற்று ஆதாரங்களை பறி கொடுத்திருக்கும். ஏனேனில், அனல் வாதம, புனல்(நீர்)வாதம் என்ற பெயர்களில் தமிழ் இலக்கியங்களும், வரலாறுகளும் வேத மதங்கள் செல்வாக்குச் செலுத்திய பிற்காலங்களில் அழிக்கப்பட்டன என்பது வரலாறாக உள்ளது.

Arivuchelvan Kasi said...

பாகம் 3:
3.
களப்பிரர் மொழி தமிழா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. பெரும்பாலான வரலாற்றிசிரியர்கள் அவர்கள் கன்னட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றே கருதுகிறார்கள். தமிழ் தேசியவாதிகள்தான் தமது அரசியல் தேவைக்காக களப்பிரரை தமிழர்கள் என்று முன்னிறுத்த...ுகிறார்கள் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

4.
சோழர்கள் காலத்தில்தான் கட்டக் கலை வளர்ந்தது என்பது சரியான கூற்று அல்ல. சோழர்கள் காலத்து கோயில்கள்தான் நமக்குக் கிடைக்கின்றனவே அன்றி, அவர்களின் பெரும் கோட்டைக் கொத்தளங்களும், அரன்மணைகளும் கிடைக்கப்பெறவில்லையே ஏன்? கட்டடக் கலை சோழர்கள் காலத்தில் எக்ஸிபிட் செய்யப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சோழர், பல்லவர் போல களப்பிரர்கள் கோயில்கள் முதலானவற்றை கட்டவில்லை என்பதற்கு சுப்பா என்பவர் அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டத்தில் கூறியிருந்த காரணம் சரியானது. சோழர் காலத்தில் விவசாயக் குடிகள் அடிமைகளாகப்பட்டும், போர்க்களத்தில் பிடிக்கப்பட்ட அடிமைகளும், செல்வங்களும் சேர்ந்து கிடைத்த அடிமை உழைப்பே தஞ்சை கோயில் போன்றவற்றை கட்டுவதை சாத்தியமாக்கியது.

விண்ணை முட்டும் தஞ்சை கோபுரத்தை பார்க்கும் பொழுது கட்டிடக் கலையை விட அடிமை உழைப்பின், சுரண்டலின் கொடுமைதான் கண்ணுக்குத் தெரிகிறது, அப்படி ஒரு பிரமிப்பு கலந்த பயம் வர வேண்டும் என்பதுதான் அத்தகைய பிரமாண்ட கட்டடிடங்களை அன்றைய அரசர்கள் கட்டியதற்குக் காரணம். களப்பிரர் காலத்தில் நாளந்த பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு தமிழர் இருந்தார் என்பதுதான் என்னை பெருமிதப்படுத்துகிறது.

பிற்காலச் சோழர்களுக்கு முன்பே கரிகாலன் கல்லணை கட்டினான் அது சிறப்பானது ஆகும். அதற்குப் பிறகுதான் களப்பிரர் ஆட்சி வருகிறது. அவர்களும் வேளாண்மையை விரிவுபடுத்தினர்.

ளப்பிரர் குறித்து ஜெ.மோவின் சில கருத்துக்கள்:

##

ஆனால் சமீப காலமாக பழைய சைவ ஆய்வாளர்களில் இருந்து முரண்படும் புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகிவந்தபோது களப்பிரர் குறித்த புதிய நோக்கு உருவாகி வந்தது. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங...்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று

களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்
##

##
சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.

சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.
//

//
களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக் கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்
//

பொன் மாலை பொழுது said...

அய்யா சாமிகளா ...........யாராவது கலப்படம் இல்லாத, உண்மையான வரலாற்றை தொகுத்து தாருங்களேன்.
"எழுதியவன் ஏட்டை கெடுத்தான், படித்தவன் பாட்டை கெடுத்தான் " என்ற வகையில்தான் நம் வரலாறு உள்ளது.

ஜோதிஜி said...

எனக்கு உதவும்.

adiyeansenthil said...

களபிறர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் இல்லை அவர்கள் பேசிய மொழி பாலி. . .பள்ளவ மன்னான சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திர வர்மன்(குனபரன்) களப்பிரர்கள் ஆளுமை நிறைந்த சமண மடத்தில் தரும நெறி பயின்று அவர்களால் சமண மதத்தின் அடுத்த ஜீனராக பட்டம் சூட்ட படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களின் எதார்த்த நிலை அவர்களின் நெறிக்கு முற்றிலும் எதிராக இருந்தமை கண்டு அங்கு இருந்து வெளியேறினார் இதை அறிந்த அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் செய்த பொழுது பாண்டிய மன்னன் கடுங்கோன் மகன் மாறன் உதவி கொண்டு அவர்களை வென்றான். மேலும் அவன் சிராப்பள்ளி குகையில் "லிங்கத்தினால் வழிபடும் அரசரான குனபரன் மாறுபட்ட நெறியிலிருந்து விலகி அந்த லிங்கத்தினால் திருத்தப்பட்ட அறிவை பெற்று, அது இந்த உலகில் நீண்டகாலம் பருவும் வகை செய்தார்" என்று பொரிக்க செய்தான்
Reference: south Indian inscription part 1, page no: 33&34.

Karkotagan said...

really nice article. The fact about Tiruvalluvar is a point to debate as the 1st kural says "aadhi bhagavan"() which must represent the teertharankara. Also I accept that kalabharas are not Tamils even if they have contributed to Tamil much since there are few inscriptions of Jains which is not tamil, which may say that they are fond of other language or must have used tamil to spread their religion, as we see now in modern days too.
Not surprised if come to know either the inscriptions and the buildings were destroyed by nature or man who do not want to spread the glory of the kalabaras as it happens in any kingdom. Infact I believe that kalabharas must have had a good set of historical evidences as the Nalanda and few inscriptions we have now states that they are well civilised and knew about the history.

Un known said...

களப்பிறர்கள் தமிழர்களே...
சமன மதம் முழுக்க வணிகர் ஆ தரவு என்பது சரியே...
வணிகர்களுக்கு எல்லா மொழி மக்கள் ஆதரவு வேண்டும் என்று நினைப்பவர்கள்.... இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட நாடார் இன மக்களும் ஏற்கனவே இங்கே இருந்த சானார் குல மக்களும்... சாத வாகன்னர் என்ற வணிகர் குழுவும் படையும் சேர்ந்த குழுவே களப்பிறர்கள்...