நான், மது மற்றும் கார்த்தி மூன்று பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தமிழ்ப்படம் பார்க்கப் போனோம். அது தமிழ்ப் படம் !.
தமிழ்ப் படம் - பல படங்களை கலாய்ப்பதற்க்கென்றே எடுக்கப்பட்ட படம். படத்தில் ஆரம்பமே கருத்தம்மா படத்தில் பெண் குழந்தைகளை கொல்வதற்காக கள்ளிப் பால் கொடுப்பதுபோல் கதாநாயகனுக்கும் P.R.S கள்ளிப் பால் கொடுக்கும்போதே தெரிந்துவிடும் இது கலாய்ப்பதற்க்கென்றே எடுக்கப்பட்ட படம் என்று. படத்தில் கதை என்பதே கிடையாது. பிறகு எப்படி கதாநாயகனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கதை சொல்லி இருப்பார்கள். எல்லாம் நம்ம சத்யராஜ் படத்துல வர்ற மாதிரி "சார், நீங்க கீழ விழுந்த துப்பட்டாவ எடுத்து மேலே வீசுறீங்க, அது துபாயில போய் விழுகுது. அங்க ஒரு பாட்டு, துப்பட்டா துப்பட்டா" ங்குற ரேஞ்சுல தான் சொல்லி இருப்பாங்க்ய .. நிஜாமாவே படத்துல கதையே கிடையாது. படத்தின் ஒரே குறிக்கோள், இதற்க்கு முன் வந்த பிரபல படங்களைக் கலாய்ப்பதுதான். குறைஞ்சது 20,30 படங்களைக் கலாய்த்திருப்பார்கள். இப்படத்தில் வரும் இரண்டு பாடல்கள் fm சேனல்களில் இடம்பிடித்துவிட்டன. அதில் ஒரு பாட்டான "பச்ச மஞ்ச கறுப்புத் தமிழனும் நான்தான்" என்ற பாடல் கேட்க நன்றாக உள்ளது. இன்னொரு பாடல் இது வரை வந்த தமிழ்ப் படங்களில் அமைந்த புரியாத சொற்களைக் (டாலாக்கு டோல் டப்பிமா, டயலாமோ டயலாமோ) கோர்த்து எழுதியிருக்கிறார்கள்.
முதல் பாதிவரை இந்த கலாய்ப்புகள் ரசிக்கத் தோன்றும் ஆனால் முழுப் படமுமே அப்படி அமையும்போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. படத்தின் இடைவேளையின் போது "இனி சரவெடி" என்று கார்டு போட்ட போது நானும்ஏதோ இனி கதை சீரியஸ் ஆகப் போகப்போதுன்னு நினச்சேன். ஆனா படம் அதுக்கடுத்தும் கலாயப்பதாகவே போனது. கதாநாயகி இருந்தா பெரிசா கலாய்க்க முடியாதுன்னு நினச்சாய்ங்களோ என்னமோ தெரியல, எப்போதும் போல் இப்படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனா மொக்கையா கலாய்ப்பவர்களுக்கும் அந்த கலாய்ப்ப ரசிப்பவர்களுக்கும் இந்த தமிழ்ப் படம் புடிக்கும்.
Tuesday, February 2, 2010
தமிழ்ப் படம் - விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தமிழ் சினிமால கதை, screenplay, cinematography இதையெல்லாம் பார்த்துதான் படம் பார்பீங்கிலோ "ங்கொய்யால" எத்தன நாள் இந்த பழக்கம் !!!
Also "தமிழ் ப் படம்" Title'ல "ப்" கிடையாது பா !!!
நா கூட தமிழ் படம் பாத்தன் ஆனா எனக்கு ஒன்னும் புரியல.. நிறய படங்களை கலாய்ச்சி இருகரங்கனு தெரியுது..லொள்ளு சபா இன் சில்வர் ஸ்க்ரீன்..
Post a Comment