Monday, September 28, 2009

இலியட்டும் மகாபாரதமும் - 2

இரண்டுப் போர்களிலும் மிகப் புகழ் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். ட்ராய் நகரப் போரில் அக்கிலிஸ், ஹெக்டர், பாரதப் போரில் பீஸ்மர்,அர்ஜுனன்,பீமன்,கர்ணன், துருயோதனன் மற்றும் பலர். இப்படி பலப் பிரபலமான வீரர்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் அக்கிலிஸ்,ஹெக்டர்,கர்ணன் மற்றும் துருயோதனன.



அக்கிலிஸ் மிகச்சிறந்த வீரன்.் அனஅதனாலயே அகமம்னனுக்கு அக்கிலிசுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவனைத் தன்னுடன் வைத்திருந்தான். அக்கிலிசுக்கு இறவாப் புகழ் பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது அதனாலயே அவன் இப்போரில் ஈடுபட்டான். சொல்லபோனால் அக்கிலிசை, கர்ணனுடன் தான் ஒப்பிட வேண்டும். இருவரும் தங்கள் துறையில் மிகச்சிறந்த வீரர்கள் .(அர்ஜுனனை,கர்ணனை விடச் சிறந்த வீரன் என்று கூறுவோர் இருந்தாலும், அர்ஜுனனுக்கு துரோனாச்சாரியார் என்னும் மிகச் சிறந்த ஆசிரியர் இருந்தார். கர்ணன் எந்த ஒரு சிறந்த ஆசிரியர் இல்லாமல் போர் கலையில் தேர்ச்சி பெற்றவன்.) கர்ணனுக்கு, தன் நண்பன், செய்வது தவறு என்று தெரிந்த போதிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க ,துருயோதனனுக்கு ஆதரவாக இருந்தான்.



அகில்லிஸ், அப்போல்லோ கோயில் பூசாரி மகளைக் காப்பதற்காக , அகமெம்னனுடன் சண்டையிட்டான். இருவரும் போர் தர்மத்தைப் பின்பற்றினார்கள். அக்கிலிஸ் தன் நண்பனின் இறப்பிர்க்காக ஹெக்டரை தனியாக போருக்கு அழைத்தான். போரில் ஹெக்டரைக் கொன்று அவன் உடலை தன்னுடன் போர்ப் பாசறைக்குக் கொண்டு வந்துவிடுவான். ஹெக்டரின் தந்தை பிரியம், ஹெக்டரின் உடலைக் கேட்டுத் தனியாக வந்த போது, ஹெக்டரின் உடலைத் தானேக் கட்டி, அக்கிலிஸ் பிரியமுடன் பாதுகாப்பாக அனுப்பி வைப்பான். (இங்கு ஒரு சிறு தகவல்: ட்ராய் திரைப்படத்தில், ஹெக்டரின் தந்தை பிரியம், அக்கிலிஸிடம், தான் தன் மகனுக்கு ஈமச் சடங்கு செய்ய வேண்டும் என்றும், படகோட்டிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதனால் தன் மகன் உடலைத் தனக்குத் தருமாறு கூறுவார். அக்காலத்தில் கிரேக்கர்கள், இறந்தவர்களின் உடல்களைப் படகோட்டிகள் மறு உலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று நம்பினார்கள்், அதற்கு அவர்களுக்கு பணம் கொடுப்பதற்க்காக இறந்தவர்களின் கண்களில் இரண்டு நாணயங்களை வைப்பார்கள். "Pirates of the Caribbean " படத்தில் கூட நீங்கள் , படகோட்டிகள் ஆவிகளை மறு உலகத்திற்கு அழைத்துச் செல்வதைக் காணலாம். இத்தகையப் பழக்கங்கள் பல நாடுகளிலும் இருந்தது. எடுத்துக்காட்டாக பண்டைய எகிப்தியர்கள் தம் மன்னர்கள் மறு உலகத்தில் உபயோகப் படுத்துவதற்க்காக, தங்கம், உணவு, உடைகள், ஏன் மறு உலகத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்க்காக பணியாட்களையும் பிரமிடில் வைத்து அடைத்தார்கள்.்ளுக்கு ).



கர்ணனும், பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனின் மார்புக்குக் குறி வைக்குமாறு கூறிய போதிலும் அது அவனுக்கு இழுக்கு என்று கூறி அர்ஜுனனின் தலைக்குக் குறி வைப்பான் (கண்ணின் சமயோசிதத்தால், அர்ஜுனன் அதிலிருத்து தப்பித்தது வேறு கதை ). இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு . இருந்தபோதிலும் நான் அக்கிலிசை துர்யோதனுடந்தான் ஒப்பிடுவேன் . அதற்க்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு ,அது இருவரின் உயிர்த்தலம் பற்றிய ரகசியம். முக்கியமாக அவர்களை சாகா வரம் பெறச்செய்வதில் நேர்ந்த பிழையும் கூட இருவரையும் ஒப்பிடக் காரணம். ஒரு பிழை தாயின் கவனக்குறைவாலும், மற்றொரு பிழை மகனாலும் நேர்ந்தது.


அக்கிலிஸின் தாய் தீட்டிசிற்கு தன் மகன் சாக வரம் பெறவேண்டும் என்று பெரிய ஆசை.
அதற்க்காக அவள் , அக்கிலிசை அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது ஷ்டிக்கிஸ் என்னும் புனித ஆற்றில் , அவன் குதிங்கால்களைப் பிடித்துக்கொண்டு தலை கீழாக முக்கி எடுப்பாள். அப்படிச் செய்ததால் அவன் உடலின் அனைத்து பாகங்களிலும் தண்ணீர் பட்டு சாகா வரம் பெற்றன , அவன் குதிங்கால்களைத் தவிர . ஆக அவன் குதிங்கால் மட்டும் சாகா வரம் பெறவில்லை. இதிலிருந்துதான் ஒரு மனிதனின் பலவீனத்தைக் குறிக்க "Achilles's heel" என்ற சொற்றொடர் வந்தது. ட்ராய் நகரைக் கைப்பற்றும் இறுதிப் போரில், பாரிஸ் செலுத்திய அம்பு, அக்கிலிஸின் குதிங்காலைத் தாக்கியதாலே அக்கிலிஸ் இறக்க நேரிட்டது.




அதேபோல் காந்தாரிக்கு தன் மகன் துருயோதனனை சாகா வரம் பெறவைக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் அவள் தன் மகனிடம் தான், தன் கண் கட்டை அவிழ்க்கும் போது அவன் அம்மணமாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுக் கண் கட்டை அவிழ்ப்பாள்். ஏனென்றால் அவள் பார்வைப் படும் இடம் சாக வரம் பெரும். ஆனால் துருயோதனன் தன் தாய் முன் நிர்வாணமாக நிற்க்க வெட்க்கப் பட்டு தன் இடுப்பில் ஒரு சிறு கட்ச்சையைக் கட்டிக் கொள்வான். ஆக அவ்விடத்தில் மட்டும் காந்தாரி பார்வை படாது. ஆக தொடைப் பகுதி மட்டும் சாகா வரம் பெறாது. அதனால் தான் கண்ணன், பீமனைப் போர்க்களத்தில் துருயோதனனின் தொடைப் பகுதியில் தாக்கு மாறுக கூறுவான்.

Photo Courtesy : http://twi-ny.com/troy.jpg
http://archives.chennaionline.com/columns/variety/2005/images/Duryodhana-in-the-underwate.jpg
http://students.ou.edu/H/Rafael.H.Hedrick-1/mahabharata_war.jpg
http://www.etab.ac-caen.fr/collegedeverson/film%20divers/hector.jpg
http://www.indianetzone.com/photos_gallery/8/gandhari_18838.jpg

6 comments:

Suppa S said...

அருமையான பதுவு, சிகரங்கள் தொட வாழ்த்துக்கள் :)


"ஆனால் துருயோதனன் தன் தாய் முன் நிர்வாணமாக நிற்க்க வெட்க்கப் பட்டு தன் இடுப்பில் ஒரு சிறு கட்ச்சையைக் கட்டிக் கொள்வான்"

வெட்க பட்டு அல்ல, கண்ணனின் சுது தான் அதற்கும் கரணம். யார் உன்னை முர்ம உறுப்பில் தக்க போகிறார்கள், என்று ஒரு கை துணியை தந்தது கண்ணன் தான்.

அது போகா, நீ துருயோதனனையும் மற்றும் அக்கிலிஸ்சையும் ஒப்பிட்டது மிகச் சரி.

Haripandi Rengasamy said...

மிக்க நன்றி சுபாஷ் .

vin1s4u said...

Apart from the one reason that hari mentioned I didn't find any other reason to compare b/w Achelies n Dhriyothanan. But you have lots of reasons to compare Achelies n Karnan, I think. Well, frankly I don't have that much knowledge in this topic. But still I feel like, he could have made the comparison b/w Achelies Vs Karnan... I'm saying this may be coz I like Karnan more than Dhriyothanan ;)

By the way nicely written, keep it up, Hari!

Haripandi Rengasamy said...

துருயோதனன், கெட்டவனாக இருந்தபோதிலும் அவனளவிற்கு அவன் நல்லவனாகவே இருந்தான். மகாபாரதத்தில் எனக்கு மிகப் பிடித்தமான சம்பவம் ஒன்று உண்டு.

துருயோதனனின் மனைவியுடன், கர்ணன் சதுரங்கம் (எந்த விளையாட்டு என்று நிச்சயமாகத் தெரியவில்லை) விளையாடிக்கொண்டிருப்பான். அப்பொழுது துருயோதனன் அவ்விடத்திற்கு வருவான். துருயோதனன் வருவதை, துருயோதனின் மனைவி மட்டுமே பார்த்திருப்பாள். கர்ணன் பார்த்திருக்கமாட்டான். துருயோதணன் வருவதைப் பார்த்து , அவள் மரியாதையை நிமித்தமாக எழுந்திருப்பாள். இதை அறியாத கர்ணன், அவள் விளையாட்டில் தோற்க்கப் பயந்தே எழுந்துருக்கிறாள் என்று எண்ணி, அவள் கையைப் பிடிப்பான். அப்பொழுது தவறுதலாக அவள் இடுப்பில் உள்ள முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிதறி ஓடும். அப்பொழுதுதான் கர்ணன் விபரீதத்தை உணர்வான். துருயோதனனின் மனைவியும், கர்ணனும் துருயோதனன் என்ன நினைப்பானோ என்று எண்ணி அஞ்சுவார்கள்.

அப்பொழுது துருயோதனன் எதுவுமே நடவாதது போல் குனிந்து,

"எடுக்கவோ? கோர்க்கவோ? ' என்று கூறுவான். அதாவது முத்துக்களை எடுக்கவா அல்லது கோர்த்துத் தரவும் செய்யவா என்ற பொருளில் கேட்பான்.

இப்படி துருயோதனனுக்கு தன் மனைவி மீதும் தன் நண்பன் மீதும் அவ்வளுவு நம்பிக்கை இருந்தது.

- Haripandi

Haripandi Rengasamy said...

What you said is correct prakash. There are lot of similarities b/w Karna and Achilles than Dhuruyodhana and Achilles . I admired both the characters (Karna nad Achilles) more than any others(except Hector) in those epics. But the one similarity that i mentioned in the post b/w Achilles and Dhuruyodhana seems very important to me and induced me to write this blog. That might be the reason for i to ignore all other (may be genuine ;) ) similarities b/w Achilles and Karna.

Haripandi Rengasamy said...

Many of my friends have different views with my comparison, esp the comparison between Achilles with Dhuruyodhana. Many of them find more similarity between Achilles and Karna than Achilles and Dhuruyodhana.

In our internal blogs, one of my colleagues said that Dhuruyodhana should have been compared with Agamemnon. He said that Agamemnon had all bad characters, what Dhuroyodhana had.

I can understand that their views also correct. They compared based person's character and the background of each of person. That is, they compared based on internal factors. That may be ( is ;) ) a correct comparison.

But i compared based on what is visible at first sight. That is based on external factors. Like the similarity in life spot of Dhuruyodhana and Achilles, the flaws happened while make them immortal, Arjunan and Hectors importance to their army and many more factors.

One more point i keep on insist that, at first i haven't started comparing Iliad with Mahabharata. The secret in life spot of Achilles's and Dhuruyodhnas's drive me to compare them. That was the first step. From that point the comparison grows to compare Iliad and Mahabharata. So that only i said that, i could have ignored all other similarities (may be genuine) between the characters ;) .

Once again i insist that comparison may differ person to person ;).