Thursday, August 26, 2010

இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் ...


எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கர். இருவருமே இந்தியாவை பல வகையிலும் பெருமைப்பட வைத்தவர்கள். இருவருடைய சாதனைகளுமே பிரமிக்கப்பட வைப்பவை. எனக்கு ஒருவரை பிடிக்க வேண்டும் என்றால் அவர் இந்தியராக இருக்க வேண்டும் . அவர்கள் இந்தியாவை முற்றிலும் முழுதாக நேசிக்க வேண்டும். ஆனந்த் மற்றும் டெண்டுல்கர் இருவருமே அப்படிப்பட்டவர்கள் தான் . இருவருமே தங்களை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுபவர்கள்.

இதில் விஸ்வநாதன் ஆனந்த் நான்கு முறை உலக சாம்பியன் ஆனவர். இந்திய அரசு அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்ம விருதும் அளித்து தன்னை பெருமைபடுத்திக் கொண்டது.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் பல்கலைகழகம் ஆனந்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க எண்ணியது. அதற்க்கு இந்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அதற்காக விண்ணப்பத்தை அனுப்பிய போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. இந்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இயக்குனரான சஹாய் , ஆனந்த் இந்திய குடிமகன் அல்ல என்று பிரச்சினையை ஆரம்பித்தார்.

ஆனந்த் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பெயினில் குடியிருந்து வருகிறார். அவர் அதிக அளவு ஐரோப்பியன் நாடுகளில் நடந்து வரும் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் ஸ்பெயினில் குடி இருப்பது அவருக்கு சவுகரியமாக உள்ளது. அதானலயே அவர் அங்கு குடி இருக்கிறார். இருந்தபோதிலும் அவர் இந்திய குடிமகனாகவே உள்ளார். இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார். எல்லாவற்றிர்க்கும் மேலாக அவர் பங்கு பெரும் எல்லா போட்டிகளில் இந்திய மூவர்ணக்கொடியைத் தாங்கி இந்தியாவின் சார்பாகவே விளையாடுகிறார்.

இந்த நிலையில் சஹாய்க்கு , ஆனந்த் இந்தியரா இல்லையா என்ற சந்தேகம் இப்பொழுது வந்திருக்கிறது. இது வெறும் சந்தேகமா இல்லை இதற்க்கு பின்னணியில் வேறு ஏதானும் உள் நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை . எனக்கு தமிழன், தெலுங்கன், வட இந்தியன் என்று பேதம் பிரித்துப் பார்ப்பது என்னை அதிகம் கோபமூட்டும் செயல் . நான் எப்பொழுதும் அனைவரையும் இந்தியன் என்றே எண்ணி வந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளை கண்டால் ஆனந்த் தமிழன் என்பதால் தான் இத்தனை வேறுபாடா, துவேசமா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனந்த் எப்பொழுதும் தன்னை இந்தியன் அல்லாதவனாக காட்டிக்கொண்டதே இல்லை. அவரை தாங்கி வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமையைத் தர எவ்வளவோ பணக்கார நாடுகள் தயாராய் உள்ளன . இருந்தாலும் ஆனந்த் இந்தியாவே கதி என்றிருக்கிறார். அவரின் தேசப் பற்று குறித்து எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனந்த் போன்றவர்களுக்கே இத்தகைய கதி என்றால் சாதாரணமானவர்களை என்ன சொல்லுவது.

இவ்வளவும் நடந்த பிறகு இந்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் இப்பொழுது வந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ஆனந்த் அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார். எனக்குத் தெரிந்து ஆனந்த் செய்தது மிகச் சரி. கபில் சிபல் இந்திய சிவப்பு நாடாத்தன்மையை இதற்க்கு குற்றம் சாட்டுகிறார்.

இந்தியாவில் பிறந்த போதும் அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கராகவே மாறி விட்ட கல்பனா சாவ்லா இறந்த போது இந்த நாடே துக்கம் கொண்டாடியது , அவர் பெயரில் விருது எல்லாம் அறிவித்தது. அதே போன்று அமெரிக்கராக மாறி விட்ட சுனித வில்லியம்ஸ் குறித்து இந்த நாடே பெருமைப்படுகிறது. இதே போன்று சிறிது காலத்திற்கு முன் நோபெல் பரிசு வென்ற வெங்கி ராமகிருஷ்ணன் குறித்து அதிகம் பேசினார்கள் . இத்தனைக்கும் வெங்கி, நம் மக்களெல்லாம் அவருக்கு பாராட்டு மெயில்களா அனுப்பியபோது , இவர்கள் என் இன்பாக்ஸ் ஐ தேவை இல்லாமல் ரொப்புகிறார்கள் என்று கவலைப்பட்டார். நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் இவர்கள் இந்தியா வேண்டாம் என்று சென்று வேறு நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, வரவேற்ப்பில் ஒரு சிறு பகுதியாவது இந்தியாவே கதி என்று இந்தியாவிற்காக பங்கேற்ப்பவர்களுக்கு நாம் கொடுக்கிறோமா என்று கேட்டால் அது இல்லை .

இதிலும் பெரும் கேடு என்னவென்றால் இதுவரை இந்த பிரச்சினையில் தமிழக தலைவர்கள் எவரும் வாய் திறக்காததுதான். நம் முதல்வர் இன்னும் வாய் திறக்கவில்லை . இது போன்ற பிரச்சினை இந்நேரம் ஏதேனும் மராட்டியருக்கு ஏற்ப்பட்டிருந்தால் இந்நேரம் பாராளுமன்றமே கதி கலங்கி இருக்கும். கருணாநிதிக்கு ஜாதி பாத்து ஆதரவு கொடுத்து ஒட்டு வாங்குவதுதான் குறி. அவர் சூத்திரர் , சூத்திரர் அல்லாதோர் என்று எப்போதும் பிரித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்பர் . என்ன பண்ணுவது ஆனந்த் மேட்டுக் குடி இளைஞராய் போய் விட்டாரே பின் எப்படி ஆதரவு கிடைக்கும் . இன்னமும் நாம் எத்தனை காலத்திற்குதான் இந்த ஜாதி, இன,வர்க்க வேறுபாடுகள் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை.


இந்தியாவைப் பற்றிப் பெருமிதமும் , இந்திய ஒற்றுமையில் அதிக ஈடுபாடும் கொண்ட என்னைப் போன்றவர்களையே இப்படி பாகுபாடு குறித்து சிந்திக்கவைத்தால் இந்த நாடு உருப்படாது. ஆனந்த் போன்ற உண்மையான இந்திய குடிமகனுக்கு இந்த கதி என்றால் , பின் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

photo courtesy : The Hindu
http://www.thehindu.com/news/national/article591737.ece
http://www.thehindu.com/news/article593969.ece
http://www.thehindu.com/news/national/article591764.ece

http://www.thehindu.com/news/national/article592239.ece

http://www.thehindu.com/news/national/article590162.ece

40 comments:

JDK said...

Well said and everything is TRUE!!!

Anonymous said...

நான் தமிழனா மாறி ரெம்ப நாளாச்சு நீங்களும் தமிழனா மாறிடுங்க பாஸ்

JDK said...

@ carthickeyan: நானும் தான் !!!

Haripandi Rengasamy said...

@ carthickeyan and jdk

இங்கு நடப்பதையெல்லாம் பார்க்கும்போது நானும் தமிழனாக மாறிவிடலாம என்றுதான் தோன்றுகிறது. என்னைப் போன்றவர்களையே இவ்வாறு எண்ண வைப்பது இந்த நாட்டின் சாபக்கேடுதான் ... என்ன பண்ண இன்னும் இந்தியன் என்பதிலிருந்து மாறி தமிழனாக மாற மனம் வர மாட்டேங்குது ....

Shameed said...

நியாயமான கோபம் பாஸ்

Haripandi Rengasamy said...

மிக்க நன்றி Shahulhameed , நீங்களும் கோபப்படுங்க அப்படியாவது இந்த நாடு திருந்துதானு பார்ப்போம் ...

அறிவில்லாதவன் said...

I've given the same curse one year before since India was doing Proxy War in Srilanka and Genocide Tamilians.

Devaraj Rajagopalan said...
This comment has been removed by the author.
Devaraj Rajagopalan said...

உண்மையில் என்ன நடக்கிறது என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் ஒருவர் இந்திய நாட்டில் எங்கு இருந்தாலும் அவரை இந்தியன் என்று அடயாளம் கொள்கிறோம். வேண்டாதவர் என்றல் முடிந்த வரை வட இந்தியன் என்றோ தென் இந்தியன் என்றோ பிரித்து பேசுகிறோம்.
உதரணமாக எந்த தென் இந்தியனாவது எனக்கு சச்சின் பிடிக்காது , கரணம் அவர் வட இந்தியர் என்று சொல்கிறார்களா ? எந்த வட இந்தியனாவது எனக்கு எ ர் ரஹாமன் பிடிக்காது அவர் தென் இந்தியன் என்று சொல்கிறாரா ? இல்லை, இவர்கள் மற்ற நாட்டினர் முன் இந்தயவின் பெருமையை பறைசாற்றியவர்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் "சஹாய்" தவறு செய்தல் "சஹாய்" மீது தான் நம்முடைய வெறுப்பு இருக்கலாம் அனால் ஏன் வட இந்தியர்கள் மீது அந்த வெறுப்பை காட்ட வேண்டும் ? மகாத்மா காந்தி தென் இந்தியர் இல்லை.. அவர் இந்திய தேசத்திற்காக தான் போராடினர் வட இந்தியர்களுக்காக மட்டும் இல்லை. ஒரு இனத்தில் ஒருவர் தவறு செய்கிறார் என்பதால் அந்த இனத்தின் மீதே வெறுப்பு காட்டுவது தவறு. இந்திய வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று தான் பெருமையாக சொல்லிகொள்கிறோம்.

JDK said...

Sir Deva sir, If you refer the History u will come to know who is showing hatred on whom....have u ever travelled to some northern parts of India,...I did,and I clearly saw the kind of look they deliver upon us. This is not one incident sir..there are many such...I'll tell u only one...when Sri Lankan military forces were carrying out a Genocide against Tamils...Mr. Manmohan Singh didn't raise any voice against that...but few years back when France were
planning to ban the "Turban" which was worn by Sikhs (NRIs) in France...he immediately spoke to the President of that nation and asked him not to carry out that ban..since it is their Religious custom. Now who is concerned about whom..? In the current case, we are least bothered about Anand's
citizenship...but when u go back u very well know that Kalpana Chawla who is an American (throughout her life) was given awards and also awards were given on her name from Indian Govt. and so does Sunita Williams..and a few days back, an American citizen named Arjun Ratwal won PGA (Golf) title and he was immediately declared as "First Indian to win the title" who was in no means holding an Indian passport.Now this is the reality..
and I don't have any personal issues with Indian govt apart from these..afterall I'm the son of an Ex-service man who served in the Indian Army..don't
give me those Patriotic shits...I was once but will never again.Its crystal clear and these are all my views no means of stressing them on others.

Devaraj Rajagopalan said...

@JDK
I can say many things based on your comments.. Have you ever gave a second thought about what if some guy from tamil nadu for that reason does some thing wrong and the other state people curse the entire tamil nadu and behave mean ( bad ) to you ?

I received help from a girl who is not of my state and another guy who is not of my religion and another guy from north helped my father. what I am supposed to do to these people.

consider this for instance a person who commits a murder.. The law punishes him by giving death sentence. He is been killed.. Now the person who is fulfilling the death sentence is also doing a sort of killing but he is not punished because he is been given orders to punish the wrong doer and no one else.. he is not showing grudge for any community based on any individuals behavior.. they are not tying his identity to his community..

Now don't try to find any identity for any community based on any individuals act and for sure punish 'சஹாய்' or any other for that reason..

You don't throw away all the apples just because one is rotten.. if you do that.. then you will be seen as a fool or you are lazy to find the one which is rotten. I agree there are many, like ten thousands in hundred thousand.. but still spare those innocent ninety thousand.
I had travelled to many places in north India during my childhood.. PI was studying 1st standard by then.. I clearly know how they behave.

Haripandi Rengasamy said...

நான் இங்கு விஸ்வநாதன் ஆனந்த தமிழன் என்பதால் தான் சஹாய் அவர் மேல் வெறுப்பு காட்டினார் என்று நிச்சயமாக சொல்லவில்லை . ஆனால் அப்படி நடந்திருக்குமோ என்றுதான் பயப்படுகிறேன். ஏனென்றால் நடந்த நிகழ்ச்சிகள் அவ்வாறு அமைந்தன. ஆனந்த இந்தியாவிற்காக விளையாடுகிறார் என்பது உலகம் அறிந்த விஷயம். பின் எப்படி சஹாய்க்கு இந்த சந்தேகம் வந்தது. அதனால்தான் இதன் பின்னணியில் வேறு பல துவேசங்கள் உள்ளனவோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.

பின் தேவராஜ் நீ கூறியபடி இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால் இதே பெருமையை மற்றவர்களும் கொள்கிறார்களா என்பதில் எனக்கு நிச்சயம் சந்தேகம் உள்ளது. நான் மட்டும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு சொல்லிக்கொண்டு ஊர் உலகம் சொல்லாவிட்டால் பின் நான் பைத்தியக்காரன் என்றுதான் பொருள்படும்.

Haripandi Rengasamy said...

@ JDK,

டர்பன் விசயத்தோட இன்னம் பல விசயங்கள் சொல்லலாம். ஆஸ்திரேலியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த நபர் (பெயர் தெரியவில்லை) கைது செய்யப்பட்டபோது நம் பாரதப் பிரதமருக்கு தூக்கமே வரவில்லையாம். ஆனால் இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் செத்தபோது இவர் எப்படி தூங்கினார் என்று தெரியவில்லை.

இதில் நாம் பிரதமரை குற்றம் சொல்லிப் பயனில்லை. இங்கு நம் தமிழகத் தலைவர்களே வாய் மூடி மௌன சாமியார்கலாகத்தானே இருந்தனர்.

Devaraj Rajagopalan said...
This comment has been removed by the author.
Haripandi Rengasamy said...

நீ என்ன நினைக்கிறாய் என்பது நன்கு புரிகிறது தேவராஜ். ஆனால் நீ நினைக்கிற படி அனைவரும் நினைக்கிறார்களா என்பதுதான் கேள்வி. நீ நினைக்கிறபடி அனைவரும் நினைத்தால் இந்தியா சுபிட்சமாகிவிடும். நான் அனைத்து வட இந்தியர்களையும் வெறுக்க வேண்டும் என்று கூறவில்லை . இந்தியாவை பிரித்து பார்ப்பவர்களையும் , பிரித்து பார்க்கும் அவர்கள் எண்ணத்தையும்தான் வெறுக்க வேண்டும் என்கிறேன்.

Devaraj Rajagopalan said...

@JDK

இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட கதி கண்டிப்பாக மனதை மிகவம் புண் படுத்துகிறது. இதற்காக தமிழக தலைவர்கள் குரல் கொடுக்காததும், நம் இனத்தவரை நாமே காப்பாற்ற முன்வராததும் வேதனை தான். இலங்கையில் தமிழர்கள் தமிழ் இழம் வேண்டும் என்று கேட்பது. பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சன்னை, இல்லங்கை தமிழர்கள் பிரச்சனை.. என்னக்கு இதை எப்படி ஒப்பிட்டு பார்ப்பது என்றே தெரியவில்லை...

Devaraj Rajagopalan said...

சஹாய் எதற்காக செய்து இருந்தாலும் அது தவறுதான் ஆனால் அதற்கு கோபத்தை முழு வட நாட்வர்கள் மீதே காட்டுவதா என்றுதான் புரியவில்லை. சச்சின் நன்றாக விளையாடினால் நாம் அவர் விள்ளயடை தான் பார்க்கிறோம் அபொழுது அவரை பற்றி பேசி இந்தியன் என்று பெருமை கொள்கிறோம் இபோழுது சஹாய் தவறு செய்தல் அவரை மட்டும் பழிக்காமல் வட இந்தியர்களை குறை சொல்வது ? இந்திய வேற்றுமாயில் ஒற்றுமை காணும் நாடு எனபதை காப்பாற்ற வேண்டும் என்று தான் சொன்னேன். ஒரு தனி நபர் மீது உள்ள வெறுப்பை ஒரு சமுகதினிடம் காண்பிப்பதால் அது மீண்டும் தொடர் பிரச்சனையாக தான் ஆகிறது. அதற்காக நாம் ஏமாளிகளாக இருக்க வேண்டும் என்று தேவையில்லை, நாம் இதற்கு கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும், அனால் அது எப்படி பட்ட கேள்வியாக இருக்க வேண்டும் என்று தான் யோசிக்கிறேன், தேவை இல்லாமல் இதை ஒரு சமுக பிரச்சன்யாக பெரிது படுத்த வேண்டாமே என்று தான்.

Haripandi Rengasamy said...

இல்லை தேவராஜ், ஒரு நாட்டுக்காக பங்கேற்பவர்களுக்கும், நாட்டிற்காக போராடுபவர்களுக்கும், ஒரு நாட்டிற்காக சேவை புரிபவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். அப்படி உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்றால் அவர்களின் போராட்டத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் . இங்கு நான் கல்பனா சாவ்லாவையும் , சுனிதா வில்லியம்சையும் நினைவு படுத்துகிறேன். இவர்களை ஆனந்துடன் ஒப்பிடவே முடியாது. ஆனந்த இந்தியனாக , இந்தியக் கொடியைத் தாங்கி இந்தியாவிற்காக பங்கேற்கிறார். மேலே சொன்ன இருவர் அவ்வாறு இல்லை . அவர்கள் இந்தியா வேண்டாம் என்று இந்தியாவை விட்டுச் சென்றவர்கள். அவர்களுக்கு அளவுக்கு மீறிய அங்கீகாரம் அளிப்பதும் , ஆனந்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்காததும் மன்னிக்க முடியாத செயல்.

JDK said...

யப்பா தேவா ...நான் கூட உன்ன மாதிரி straightaa போய் அமெரிக்காவுல குந்திகினு அல்லாரும் நல்லவங்க,Life is boootiful'நு சொல்லனும்னுதான் ஆசை படறேன் ஆனா என் கெரெகம் இந்த நாட்டுல இந்த பிக்காளி பயலுங்க வேலைய பாத்து இப்படியெல்லாம் பொலம்ப வேண்டியதா போச்சு...நீ அங்கேயே இரு அங்கவாச்சும் ஒத்துமையா இருங்க :(

Devaraj Rajagopalan said...

"உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான்"
என்பது ஞாயமான கூற்று.இதை மன்னிக்கவே முடியாது. இதற்கு எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை நான் இதை முழுவதுமாக ஒப்பு கொள்கிறேன்.

JDK said...

தேவா ஒன்னாங்க்லாஸ்ல வட நாட்டுக்கு போயிட்டு வந்து இந்த பேச்சா.. .நான் பத்தாங்க்லாஸ்ல போயிட்டு வந்தேன் பா அதுவும் இல்லாம வெவ்வேறு மாநிலத்துல வேல பாத்திருக்கேன்.... எனக்கு என்ன பங்காளி சண்டையா அவங்கள பத்தி கொர சொல்ல...சரி சரி ப்ரீயா விடு !!!

Haripandi Rengasamy said...

தேவராஜ் நம்ம jdk க்கு வெளிநாட்டுல போய் குந்திக்கனும்னு ரொம்ப நாள் ஆசை ...அந்த வயித்தெரிச்சலுலதான் இப்படி பேசுறான் ... மற்றபடி நீ என்னுடைய கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு ரொம்ப நன்றி ...

Haripandi Rengasamy said...

நான் ஆறாங் கிளாசுல, 11 ஆம் கிளாசுல, மற்றும் M.S project குனு பல சமயங்களுல வட இந்தியா போயிட்டு வந்தேன் ... அத்தகைய சமயங்களுல கலவையான அனுபவங்கள்தான் கிடைத்தன ... சில சமயங்களில் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையான தேசம் என்று தோன்றியது ... மிகப் பெருமையாக இருந்தது ... அதே சமயம் டில்லியில் பர்ஸ் களவாடப்பட்டு ஏமாந்த போது வெறுப்பாக இருந்தது ... இருந்தாலும் எந்த ஒரு பொதுப் படையான எண்ணத்திற்கும் வர நான் இப்போது பிரியப் படவில்லை ...

Devaraj Rajagopalan said...

@JDK

எல்லாரும் நல்லவங்கனு நான் சொல்லவே இல்லை. நீயும் நிச்சயம் அமெரிக்கா வருவாய். நீயும் இந்தியாவில் தமிழ் நாட்டில் இல்லை. உண் வேலை காரணமாக பெங்களூரில் இருக்கிறாய். கர்நாடக காவிரி தண்ணீர் பிரச்சனை இருந்த போதும் உனக்கு பிடித்து இருக்கிறது என்ற காரணத்தால் பெங்களூரில் வேலை செய்கிறாய், நான் அதை தவறு என்று சொல்ல வில்லை. இதியவிற்காக நான் எதுவும் செய்தது இல்லை. நான் என்னுடைய இந்திய நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுவதோடு சரி. பிறப்பில் இந்தியனாக இருந்து வேறு நாடு குடி உரிமை பெறுபவர்களை என்ன என்று சொலுவது என்று புரியவில்லை. நம் மனதிற்கு எங்கு பிடிக்கிறதோ அங்கு வாழ்கிறோம். பிரச்சனைகளை அருகிலிருந்து அனுபவித்தால் தான் அதன் வலி தெரியும். இந்தியாவில் இருந்தால் தான் அங்கு உள்ள பிரச்சனைகள் தெரியவரும். நான் என்னுடைய கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.. உண்மையில் இந்திய அரசியல் தலைவர்கள் இதை சரி செய்ய முன் வரவேண்டும்..

Devaraj Rajagopalan said...

@JDK
என்ன்கிட ஒரு பொண்ணு இந்த கேள்விய கேட்டா. அவ ஒரு வட இந்திய பெண். அவள் முதல் முறையாக விசா வின்னபிபதற்காக சென்னைக்கு வந்திருந்தால்.. அபொழுது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல ஆட்டோவில் செல்ல நேர்ந்தது. சென்னை ஆட்டோ டிரைவர்கள் அவளிடம் அதிகம் பணம் கேட்டதாக என்னிடம் கூறினால்.. நான் அதற்கு என்ன பதில் சொல்லுவது ?

Haripandi Rengasamy said...

இந்தப் பிரச்சினை எல்லா இடத்திலும் உள்ளது தேவராஜ் .. மொழி தெரியாத ஊரில் எல்லாரும் ஏமாற்றத்தான் எண்ணுகிறார்கள் ... நானும் மதுவும் ஹிந்தி தெரியாமல் டில்லியில் எத்தனை ஆட்டோகாரகளிடம் ஏமார்ந்தோம் தெரியுமா ... டில்லியில் இடம் தெரியாமல் அலைந்த போது ஒரு சின்ன 'U' turn அடிச்சு திருப்புரத்துக்கே ஒரு ஆட்டோகாரன் எங்களிடம் Rs 50 வாங்கிட்டான் .. இத்தனைக்கும் ஆனந்த் பாபு எங்களுக்கு மொழி தெரியாத ஊரில் அவ்வளவு உதவி பண்ணினான் ... ஒரு பஸ் டிரைவர் மதுவின் பர்சை எடுத்துகொண்டு அதிலிருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வெறும் பர்சை மட்டும் கொடுத்தான் ... அவனை என்ன பண்ணுவது ... இது இந்தியாவின் சாபக்கேடு தேவராஜ் ..

JDK said...

யப்பா எங்க ஊர்ல என்கிட்டயே ஆடோகாரன் எக்கச்சக்கமா கேப்பான் இதுல வெளியூருகாரன்னா சும்மா விடுவான்னா... இந்த ஆடோகாரங்க எச்ட்ரா கேட்டாங்க பஸ் காரங்க முசுடா இருந்தாங்கா சொல்றதுல்லாம் வெத்து பேச்சு ...நான் டில்லிக்கு போயிரந்தப்போ கூட "சாலே மதராசி வாலே " 'நு தலையில அடிசிக்குடான் இதுக்கு என்ன அர்த்தம்'நு அந்த பொண்ணுகிட்டேயே கேட்டு கொஞ்சம் சொல்லுப்பா ? I'm putting it in a simple manner...when Gujarat based fishermen are arrested by Pakistani navy they are being mentioned as "Indian fishermen
" by the N.I media but when Tamilnadu based Fishermen were shot by SL Navy the same media calls it Tamil Fishermen were shot..now why is this discrimination? Any guesses.Now its all up to you to judge.I don't want any explanation for this.

Devaraj Rajagopalan said...

I think I should be careful with the tamizh editor.. atleast before posting it in the blog.
Periya 'ள்' chinna 'ல்' maathi yezhudhi, innum neraya ipdi thappa ezhudhi tamizha naanae kolla pandran..

@JDK

naan andha ponnu kitta adhaan sonnan.. indha prachana ella edathulayum iruku yaen tamizh naatta mattum kai kaatranu..

Haripandi Rengasamy said...

I am totally agree with you JDK ... குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானியர்களால் கைது செய்யப்படும்போது அவர்கள் இந்திய மீனவர்கள் என்றும் இதே தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கனால் கொலை செய்யப்படும்போது அவர்கள் தமிழர்கள் என்றும் முத்திரை குத்தபடுகிறார்கள். ஏன் இந்த வேற்றுமை ...

Haripandi Rengasamy said...

@ தேவராஜ், எனக்கும் இந்த google transliterate பயன்படுத்தும்போது இதே பிரச்சினை ஏற்படுகிறது .. இதனாலையே நானே தமிழை கொலைபண்ணுவதாக ஆகி விடுகிறது ... google transliterate பயன்படுத்த கொஞ்சம் பொறுமையும் வேணும் .. அதை பயன்படுத்தும்போது ஒன்னுக்கு இரண்டு தடவை திருப்பி படிச்சு பார்க்கணும் ...

Devaraj Rajagopalan said...

@ஹரிபாண்டி

ஆமாம் டா ஒரு முறைக்கு இரண்டு முறை படிச்சி பாக்கணும். ஆனா சும்மா சொல்ல கூடாது டா இந்த Google translator ரொம்ப உதவியா இருக்குது

Haripandi Rengasamy said...

@ தேவராஜ், நிச்சயமா ரொம்ப உதவியாத்தான் இருக்கு ... இது இல்லனா நான் தமிழ் blog ஆரம்பிச்சுருக்க முடியாது ... தமிழுல எழுதுறது ரொம்ப மன மகிழ்வைத் தருகிறது ...

Haripandi Rengasamy said...

@ தேவராஜ், நாம topic க விட்டு தடம் (about google transliterate) மாற்றி comment போடுறோம்னு நினைக்கிறேன் ;-) ...

Devaraj Rajagopalan said...
This comment has been removed by the author.
Devaraj Rajagopalan said...

ஆமாம் டா நான் தான் வேணும்னே அப்டி செஞ்சன்.. ஒரு அளவுக்கு மேல பேசறதுல எந்த அர்த்தமும் இல்லை... அதனால தான் இந்த தலைப்ப விட்டு விலகிப்போய் பேசினேன்.. ஆனா இது வரைக்கும் பேசனது, நாம எண்ணங்களை பரிமாறி கொண்டது, உன்னுடய பகிர்வு, இது எல்லாம் பிற்காலத்துல நாம எப்படி மத்தவங்க கிட்ட நடந்துக்கணும், அது மத்தவங்கள எப்படி பாதிக்கும்னு தெரியவந்தது.

Haripandi Rengasamy said...

ஆளக் காணோம்னவுடனே நீ தூங்கப் போயிட்டியோன்னு நினச்சேன் ... yes , இங்க பேசுனதெல்லாம் நாம பிற்காலத்துல எப்படி நடக்கனும்னு சொல்லும் ....

எட்வின் said...

எல்லாம் அரசியல்னு ஆகிப் போச்சு இந்தியால. சினிமா தொடங்கி விளையாட்டு வரை அரசியல் பண்றானுக இந்த வீணா போனவனுக.

நம்ம ஊர்ல அரசியல்காரனுக்கு தான் அதிகம் கொடி பிடிக்கிறானுக. விஸ்வநாதன் பிரச்சினை மாதிரியான பிரச்சினைகளுக்கு யார் கொடி பிடிக்கிறா சொல்லுங்க பார்ப்போம்!

எதோ நம்மளால முடிஞ்ச வரைக்கும் எழுதி வைக்கிறோம், நீங்க சொன்ன மாதிரி இந்த உணர்ச்சி கூட தமிழக அரசிடம் இல்லாதது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

என்னமோ போங்க :(

Haripandi Rengasamy said...

நீங்க சொல்றது கரெக்ட் தான் எட்வின் ... இங்கு எல்லாமே அரசியல் ஆகிபோச்சு ... யாரும் யாருக்கு எப்படி சப்போர்ட் பண்ண ஓட்டு கிடைக்கும்னு அலையறானுங்க ... என்ன இந்தியா இப்படித்தான் ...

பொன் மாலை பொழுது said...

அது சஹாய் அல்லது கபில் சிபல் யாராக வேணாலும் இருக்கட்டும். நாலு முறை கிராண்ட் மாஸ்டர் பெற்று உலகில் சிறந்த செஸ் வீரராக, எப்போதும் இந்திய தேசிய கொடியினை பக்கத்தில் வைத்துக்கொண்டு போட்டியில் ஈடுபடும் ஆனந்த் நம் நாட்டிற்கு பெருமை செர்தவர்தானே.உலகத்துக்கே தெரியுமே அவர் ஒரு இந்தியர் என்று. அவர் ஒன்றும் நம்மை போல அனாமதேயம் இல்லையே. இந்திய அரசாலும் அவர் பெருமை படுத்தப்பட்டுள்ளார் அல்லவா? அவர் என்ன புது மனிதரா அவரிடம் "உன் தேசம் என்ன? " என்று கேட்க.உலகப்புகழ் பெற்ற ஒரு இந்தியரை எவ்வாறு இப்படி கேட்க போயிற்று இவர்களுக்கு? சாதாரண சுப்பனுக்கும், குப்பனுக்கும் உள்ள போது அறிவு கூடவா இந்திய அரசின் //மனித வள மேம்பாடு துறைக்கு // இல்லாமல் போனது? அதுவும் அந்நியர்களின் தலைமையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்களுக்கு எப்படி இது சாத்தியம்?

http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/08/blog-post_3705.html

அதிகார மேல் தட்டில் இருக்கும் இவர்கள் இவ்வளவு கேவலமாகவா தம் துறையை நடத்தி செல்வது?

Haripandi Rengasamy said...

உங்களுடைய கோபம் நியாயம்தான் கக்கு மாணிக்கம் அவர்களே ... நம் அரசுத்துறையை என்ன செய்வதென்றே தெரியவில்லை ... இவர்களுக்கு நம் ஊர் ஆட்களும் துணைதான் என்று நினைக்கும்போது கேவலமாக உள்ளது ..