சில நாட்கள் முன்பு வடபழனிக்கு செல்ல விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். சோதனையாக, அனைத்து D70 பேருந்துகளும் கூட்டமாக இருந்தன. எப்படியடா இதில் அவ்வளவு தூரம் செல்வது என்று எண்ணியபோதே அயர்ச்சியாக இருந்தது. அப்பொழுது நல்லவேளையாக குளிர்சாதனப் பேருந்து (AC bus பா) வந்தது. இப்பேருந்துக்கு கூட்டம் எப்படியும் குறைவாக இருக்கும் என்று நான் எண்ணியதில் இடி விழுந்தது. அந்த பேருந்துக்கும் ஒரு சனம் கூட்டம் நின்றது. நல்லவேளையாக அடித்து பிடித்து ஏறியதில் சன்னலோர இருக்கை கிடைத்தது. ஒரு வழியாக பேருந்து கிளம்பியபோது இருக்கை முழுக்க ஆட்கள் இருந்தார்கள் இன்னும் சில பேர் நின்று கொண்டுருந்தனர். நடத்துனர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். குளிர்சாதனப் பேருந்தின் டிக்கெட் கட்டணம் சாதாப் பேருந்தைப் போல 5 மடங்கு. எனக்கு இதில் மிக ஆச்சரியமாக இருந்தது நடத்துனர். "சார் உள்ளே வங்க சார்" , "சார் எங்க போகணும் வடபழனியா சார், இந்த வந்துட்டேன் சார் ", "சார் சில்லறை இல்லையா சார் , பரவாயில்லை சார் நான் பாத்துக்கிறேன்." என்று ஒரு சென்னை MTC நடத்துனர் பேசுவது போலவே இல்லை. அத்தனை சார் போட்டார். கொஞ்சம் கூட சிணுங்கவே இல்லை,எரிச்சல் இல்லை ,மரியாதைக் குறைவான பேச்சு இல்லை இப்படி எதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் அவர் MTC நடத்துனராகவே இல்லை.
அவரை அவ்வாறாக நடக்க வைத்தது எது? கூட்டம் குறைவா, பேருந்தின் குழுமையா, இல்லை பேருந்தில் இருக்கும் அனைவரும் சற்று வசதி படைத்தவர்கள், சற்று படித்தவர்கள் என்ற எண்ணமா?. எதுவோ ஒரு நடத்துனர் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்துகொண்டார். இதற்காகவே அனைத்துப் பேருந்துகளையும் குழுமை பேருந்துகளாக மாற்றிவிடலாம்.
*********************************
நீங்கள் எங்கேனும் தொலை தூரம் செல்லும் பேருந்துகளைப் பார்த்திருக்குரீர்களா?. அத்தகைய பேருந்துகளின் முதல் இருக்கைகளை பெண்களே ஆக்கிரமித்திருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராய் பேருந்துகள் மோதிக் கொள்ளும் விபத்துகளுக்கும், பெண்கள் இப்படி முதல் வரிசையில் அமர்வதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று? தெரிந்தவர்கள் சொல்லவும்.
*****************************
சிறு வயதில் இலையில் மீதம் வைக்காமல் தின்றபோது எங்கள் அப்பா சொன்னார், நீ இலையைத் தூக்கி எரியும் போது அதில் மீதமிருக்கும் உணவைச் சாப்பிட பிச்சைக்காரர்கள், காகம், நாய் அழகில் ஜீவராசிகள் காத்திருக்கும். அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது. அதனால் எப்பொழுது சாப்பிட்டாலும சிறிது மீதம் வை என்றார். அன்றிலிருந்து இன்று வரை மீதம் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
வேலை தேடிய நாட்களில் ஒருநாள் நானும், என் நண்பன் ஆனந்தபாபுவும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்தோம், எப்பயும் போல இலையில் சிறிது மீதம் வைத்தேன். அதற்க்கு பாபு சொன்னான் "இவ்வளவு நல்லவனா இருக்க, உனக்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குதேடா! " என்றான். அன்றைக்கு ஆரம்பித்த குழப்பம் "இந்த உலகம் நல்லவர்களுக்கானதா இல்லை வல்லவர்களுக்கானதா ?" இன்றும் தீரவில்லை.
அப்பாவிற்கு கொள்ளி வைத்துவிட்டு வந்து சாப்பிட நானும் மதுவும் உட்கார்ந்தோம். இலை போட்டு பரிமாறிய சித்தி சொன்னார், இனிமே எப்ப சாப்பிட்டாலும், சாப்பிடுவதற்கு முன்னாடி அப்பாவிற்கு கொஞ்சம் சாதம் எடுத்து வைக்கணும் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை இலையில் சாதம் வைக்கிறேன் அப்பாவிற்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து!.
*******************************
அனைத்து வேலைகளையும் மதுவின் தலையில் ஒப்படைத்ததால் சனி, ஞாயிறு எல்லாம் இப்பொழுது உண்டு,உறங்கி,தூங்கி எழுந்திருப்பதக்கென்று ஆகிவிட்டது. இங்கு செல்வேந்திரனின் வரியைக் கூறுகிறேன் "செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்கள் அலாதி! அலாதி!" . ஆனால் எனக்கு சும்மா இருப்பது அவ்வளவு சௌந்தரியமாய் இல்லை. எப்பொழுதும் செய்யக் கூடிய அல்லது செய்ய வேண்டிய வேலைகள் கழுத்தைப் பிடிக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் இன்று அந்த சிவனே வந்து எந்த வேலை செய்யச் சொன்னாலும் சிவனே என்றுதான் கிடப்பேன் என்று உறுதி ஏற்றுக் கொள்வேன் . ஆம் செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்களின் அலாதியை அனுபவிக்க உறுதி ஏற்றுக்கொள்வேன்.
*******************************
*****************************
8 தடவை மூத்திரம் போயாச்சு, 12 தடவை தண்ணீர் குடித்தாயாச்சு, 4 தடவை காபி குடிக்க எந்திருச்சாயாச்சு, 7 தடவை படித்த blog களையே படித்தாயாச்சு, பிறகு எப்படித்தான் வெள்ளிக் கிழமை மாலையை ஆபீஸில் ஓட்டுவது?
*****************************
******************************
வார்த்தைகளின் அழகில் உண்மையை மறந்து விடாதே என்கிறது ஒரு ஜென் தத்துவம்.
*******************************
இன்று சோதனையாக D70 ரொம்ப கூட்டமாக வந்தது. அதிலும் நான் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த இருக்கைகள் எதுவும் காலியாவதாக தெரியவில்லை. அப்பாடா என்கிறமாதிரி ஒரு இருக்கை காலியானது. அதற்கும் போட்டியாக ஒருவன் வந்து ஒருக்களித்தவாறு இடத்தைப் பிடித்துவிட்டான். அப்பொழுது இந்தியன் படத்தில் கிரேசி மோகன், செந்தில் தலையில் ஓங்கி கொட்டுவது போல் அவன்தலையில் கொட்டவேண்டும் என்று ஏனோ தோன்றியது.
******************************
10 comments:
//எதுவோ ஒரு நடத்துனர் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்துகொண்டார்//
Here in Bangalore, one conductor scolded a girl for not giving the exact change for the Ticket, she was helpless.People give respect only based on appearances :(
******************************
பெண்கள் இப்படி முதல் வரிசையில் அமர்வதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று?
Didn't notice that...will try that.
******************************
//வளைவுகள் அதிகம் இல்லாத //
//அதிக வளைவுகள் கொண்ட இள மங்கையை //
paya pulla nee romba kettu poyittaey !
****************************
//இங்கு ஒவ்வொரு பிராந்தியமாகப் பிரிந்து இந்தியாவை கூறு போடுகிறார்கள்.//
In future, India "will" be cut into pieces.
*****************************
Ideally every commuter's first goal in a day is to board a less crowded bus and to get a window seat.
அந்த வடபழனி பேருந்து நிறுத்தத்தின் பெயர் செல்ல வின்னயாகரா இல்லை செல்வ விநாயகர ?
எனக்கு எபோழுதும் இதில் நம்பிக்கை உண்டு, நாம் கடினமான ஒரு செயலை செய்ய வேண்டும் என்றல், அதை விட கடினமான ஒரு செயலை மனதில் கற்பனை செய்து கொண்டால் நாம் தற்பொழுது செய்ய வேண்டிய செயல் எளிதானது போல் தோன்றும். அந்த MTC பேருந்து ஓட்டுனர் இவ்வளவு காலமாக கூட்டம் நிறைந்த பேருந்துகளில், சென்னை வெயிலில், நெரிசலில் இரண்டு ருபாய் ஐம்பது பைசா டிக்கெட்டுக்கு பத்து ருபாய் நீட்டினால் சில்லறையை தேடி தரவேண்டும். இதையே நீண்ட காலமாக செய்து வந்த அவருக்கு தற்பொழுது குளிர் வசதி கொண்ட பேருந்தில் பணியாற்றுவது ஒரு மாறுதல், அந்த மாறுதல் மகிழ்ச்சியாக தான் இருக்கும். இதையே விமான ஒட்டியாக இருந்த ஒருவரை இந்த குளிர் வசதி படைத்த பேருந்தில் வேலை பார்க்க சொன்னால் அவருக்கு கடினமாக இருக்கலாம்.
பேருந்தின் குழுமை இல்லை, பேருந்தின் குளுமை என்று இருக்க வேண்டும். இந்த பதிவில் இரண்டு இடங்களில் அவ்வாறே எழுதி இருந்தாய் அதனால் தான் சொன்னேன்.
நான் தொலை தூரம் செல்வதாக இருந்தால் அது பெரும்பாலும் ரயில் பயணமாகவே இருக்கும், ஓர் இரு முறை நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்துளேன், அதில் நீ கூறியது போல் பெண்கள் முன் இருக்கையில் இல்லை, நீ சொல்லுவது போல் கற்பனை செய்துகொண்டாலும் ஒரு பேருந்து நேருக்கு நேர் 'Head on collision' ஆவதற்கு பால காரங்கள் இருக்கும். ஓட்டுனரின் மனநிலை, கவன குறைவு, உடல்நிலை, சாலை அமைப்பு, கவன சிதறல், வண்டியின் பராமரிப்பு என்று பல காரணங்கள் இருக்கும். உன்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்ண்டும் என்றல் அனைத்து புள்ளி விவரங்களையும் சேகரித்து (Statistics ) 'Hidden Markov Model' மற்றும் 'Bayesean conditional probability' உபயோகித்து சொல்லலாம். இங்கு நான் கூறியது மிகவும் முக்கியமானது ஓவொரு நிகழ்வுக்கும், காரணிகளின் பங்கு (Contributing factors) எவாளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
(வலை பக்கத்தின் பின்னூட்டம் ( comments ) அதிக பட்சம் 4096 மேல் இல்லை என்பதால் பறித்து எழதி இருகிறேன் தொடர்ந்து படிக்கவும். ( Continue to read my comments below - I have a big comment broken down into parts )
வேலை கிடைப்பதற்கும், நல்லவர்களா இருபதற்கும் சமந்தம் அவ்வளவாக இல்லை. நல்லவர்களாக இருந்துகொண்டால் மட்டும் வேலை கிடைக்காது என்று தான் கூறினேன், காரணம் என்னவாக இருக்கும் ? வேலை கொடுப்பவர் நம்மிடம் ஒரு வேலையயை கொடுப்பதற்கு முன் என்ன எதிர் பார்கின்றார், இந்த வேலையே இவரிடம் ஒப்படைத்தல் இவரால் நன்றாக செய்து முடிக்க முடியும் என்று அவருக்கு தோன்ற வேண்டும். நாம் இந்த வேலைக்கு தகுதியானவர் என்பதை நம்முடைய அனுபவத்தை வைத்து நிருபிக்கலாம். புதிதாக கல்லுரியில் இருந்து பட்டம் பெற்று வரும் மாணவர்களுக்கு வேலை அனுபவம் இருக்க வாய்ப்பு இல்லை. அப்பொழுது அவர்கள் நமக்கு இந்த வேலையை கற்று கொள்ளும் திறமை இருகிறதா என்று பார்ப்பார்கள்.
இது தான் ஞயமான முறை. அனால் இப்டி தான் வேலைக்கு ஆட்களை தேர்ந்து எடுகிரார்களா என்றால் இல்லை. வேலை கிடைப்பதற்கும் பல காரணங்கள் இருக்கிறது ஆனால் அதில் ஒரு காரணம் கூட (ஒரு சில காரணங்களை தவிர ) நல்லவனா என்பதை வைத்து அமையவில்லை, என்பது ஒரு கசப்பான உண்மை.
இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன, நம்மால் அனைத்தையும் பார்த்துக்கொள்ள முடியாது. தட்பவெப்பம் மாறும் போதெல்லாம் வரும் முதல் மழையில் சாலைகளில் நிறைய மண்புழுக்கள் ( இங்கு ) வரும். வாகனங்களில் செல்பவர்கள் அதை சிறிதும் பொருட் படுத்தாமல் ஒட்டி செல்வார்கள், மண்புழுவும் ஒரு உயிரினம் தான் அதுவும் வாழ உணவு வேண்டும், அதற்கு நம்மால் உணவு படைக்க முடிய வில்லை என்றாலும் அதை கொல்லாமல் கூட இருக்க முடியவில்லை. நீ மீதம் வைக்கும் உணவு காக்கை, நாய், பிச்சைகாரர்கள் சாப்பிடுவதால் உனக்கு நல்லது செய்ததாக ஒரு மன திருப்தி உண்டாகலாம், அந்த நல்லதை செய்யும் பழக்கம் ஒரு நல்ல பழக்கம் ( It can cultivate a good habit in you indirectly )
நகை சுவையாக எழுதியுள்ளாய் வலைவுகள் அதிகம் உள்ள மலைவாசஸ்தலத்தில் இன்னமும் அதிக அலாதியாக இருக்கும்.
D70 பேருந்தில் ஒரு இருக்கை காலியான போது அது நமக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உன்னிடியம் இருந்தது, உன்னக்கு போட்டியாக ஒருவன் வந்து காலியான இடத்தைப் பிடித்த போது நீ அடைந்த ஏமாற்றத்தின் விளைவு அவன் தலையில் ஓங்கி கொட்ட வேண்டும் என்று தோன்றியது. அந்த இருக்கை காலியாகாமல் இருந்திருந்தால் நீ நின்று கொண்டு தான் வந்து இருப்பாய் ஆனால் அப்பொழுது உனக்கு ஓங்கி கொட்ட வேண்டும் என்று தோன்றி இருக்காது.
கண்கள் ஒரு மிகவும் அற்புதமான ஒன்று. ஒருவரின் கண்களை பார்த்து அவர் நம்மை பார்கிரர்கள என்று சொல்ல முடியும், குறைந்த பட்சம் நாம் இருக்கும் திசையை நோக்கி பார்கிரர்களா என்று சொல்ல முடியும். நம்மை ஒருவர் கவனித்தால் அது நமக்கு பிடிக்கும். கண்கள் மட்டும் தெரியும் படி மூடிக்கொண்டு செல்லும் பெண்கள் எல்லோரும் எப்பொழுதும் அழகாய்த் தெரிவது, மனிதருக்கு மனிதர், கண்களில் அவ்வளவாக வேறுபட்டு இருப்பதில்லை. ( கண்களின் நிறம் வேறு பட்டு இருந்தாலும் வடிவம் வேறு படுவது இல்லை ) முகம் தெரியாத பட்சத்தில், ஒரு அழகான முகத்தை நம்முடைய மனது தானாகவே கற்பனை செய்து கொள்ளும், அதனால் நன்றாகத்தான் தோன்றும்.
@ தேவராஜ்,
உன்னுடைய பின்னூட்டம் என்னுடைய பதிவின் நீளத்தை விட அதிகமாக இருக்கிறது. நீ இந்த அளவிற்கு என்னுடைய பதிவை அலசி ஆராய்வாய் என்று நினைக்கவில்லை. உன்னுடைய இந்த பின்னூட்டத்திற்கு நிச்சயம் என்னுடைய நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் உன்னுடைய சில எழுத்துக்கள் எனக்கு சில ஐயப்பாடுகளை ஏற்ப்படுத்துகின்றன. என்னுடைய பதிவின் சில பகுதிகள் நகைச்சுவைக்காகவும், ஜாலிக்காகவும் எழுதினேன். ஆனால் நீ அதற்க்கு சீரியஸ் ஆன பின்னூட்டம் எழுதும்போது, நிஜமாகவே நான் நான் எழுதிய கோணத்தை சரியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிரேனா என்ற ஐயப்பாடே எழுகிறது. இருந்தாலும் உன்னுடைய பின்னூட்டங்கள் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. அதற்க்கு என்னுடடைய நன்றியத் தெரிவித்துக்கொள்கிரேன் நண்பா.
மேலும் உன்னிடமிருந்து அதிக பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
நான் தான் நீ எழுதியதற்கு சீரியஸ் விளக்கம் எழுதினேன்.. உன்னுடைய கோணம் சரியாகத்தான் வாசகர்களிடம் சென்று அடைந்து உள்ளது.
Interesting read. Well written
நீ உன்னுடைய பதிவை வாசகர்களிடம் விளக்கம் கேட்க்கும் பாணியில் எழுதவில்லை, அனால் அதற்கு நான் பதில் அளித்த விதம், பதிவின் நீளம், உன் பதிவிற்கு விளக்கம் கூறுவது போல் அமைந்துவிட்டது என்பதை பின்பு தான் உணர்ந்தேன்.
nice thoughts.. particularly the ride on the hillside sighting a gal...
Post a Comment