"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் "
என்று தான் சென்ற வாரம் மனம் கொதித்தது. சென்ற வாரம் 75 CRPF காவலர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. இந்தியா எப்பொழுதும் தீவிரவாதிகள் விசயத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் போன்று தீவிரமாக நடந்து கொள்வதில்லை. அதுவும் உள்நாட்டு பாதுகாப்பில் காட்டும் மெத்தனம் சொல்லி மாளாது. அந்த மெத்தனம் தான் CRPF காவலர்களின் மீது நடந்த தாக்குதல். மாவோயிஸ்ட்டுகள் எந்த அளவு துணிவு பெற்றிருந்தால் CRPF காவலர்களை தாக்கும் அளவிற்கு அவர்கள் மனம் சென்றிருக்கும். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை நாம் ரொம்ப தூரம் வளர விட்டு விட்டோம். இந்த அளவிற்கு அவர்களை துணிய விட்டிருக்ககூடாது. இதுவே அமெரிக்க காவலர்களின் மீது தாக்குதல் நடந்திருந்தால் அதன் பிறகு நடக்கும் கதையே வேற. அப்பொழுது அவர்கள் மனிதநேயம் , மண்ணாங்கட்டி நேயம் எல்லாம் பார்த்திருக்க மாட்டார்கள். தீவிரவாதிகளை அழித்து ஒழித்துருப்பார்கள்.
இந்தியா இன்னமும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தானையே மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கக் கூடாது. சொல்லப் போனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கும் விசயத்தில் நமக்கும் மேலே. அவர்கள் நிசமாகவே தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒழிக்கிறார்களா இல்லை அமெரிக்க நிர்பந்த்தத்தின் காரணமாக ஒழிக்கிறார்களா என்பது வேறு விஷயம். அவர்கள் தீவிரவாதிகளை ஒழிக்கிறார்கள். தினமும் DAWN செய்தித்தாளில் வடக்கு வஜிரிஸ்தானில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், தெற்கு வஜிரிஸ்தானில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், ஓரகசையில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், NWFP தீவிரவாதிகளுக்கும் , ராணுவத்திற்கும் சண்டை என்று ஏதேனும் சேதி வந்து கொண்டிருக்கும். உண்மையில் சொல்லப் போனால் தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்பதில் பாகிஸ்தானிற்கு இருக்கும் உறுதி கூட நமக்கு கிடையாது.இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் "
என்று தான் சென்ற வாரம் மனம் கொதித்தது. சென்ற வாரம் 75 CRPF காவலர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. இந்தியா எப்பொழுதும் தீவிரவாதிகள் விசயத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் போன்று தீவிரமாக நடந்து கொள்வதில்லை. அதுவும் உள்நாட்டு பாதுகாப்பில் காட்டும் மெத்தனம் சொல்லி மாளாது. அந்த மெத்தனம் தான் CRPF காவலர்களின் மீது நடந்த தாக்குதல். மாவோயிஸ்ட்டுகள் எந்த அளவு துணிவு பெற்றிருந்தால் CRPF காவலர்களை தாக்கும் அளவிற்கு அவர்கள் மனம் சென்றிருக்கும். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை நாம் ரொம்ப தூரம் வளர விட்டு விட்டோம். இந்த அளவிற்கு அவர்களை துணிய விட்டிருக்ககூடாது. இதுவே அமெரிக்க காவலர்களின் மீது தாக்குதல் நடந்திருந்தால் அதன் பிறகு நடக்கும் கதையே வேற. அப்பொழுது அவர்கள் மனிதநேயம் , மண்ணாங்கட்டி நேயம் எல்லாம் பார்த்திருக்க மாட்டார்கள். தீவிரவாதிகளை அழித்து ஒழித்துருப்பார்கள்.
சொல்லப்போனால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துவிட்டது. பீகார், சட்டிஷ்கர், மேற்கு வங்காளம், போன்ற வடக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்தான் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. முதலில் நாம் நம் காலுக்கு கீழே விஷச்செடி முளைத்து விட்டது என்பதை உணர வேண்டும். அப்பொழுதான் அதனை களைய முடியும். உலகில் மூன்றாவது மிகப் பெரிய ராணுவம் வைத்துக் கொண்டு என்ன பிரயோசனம், நம்மால் உள்நாட்டு தீவிரவாதிகளை ஒழிக்க முடியவில்லையே.
5 comments:
True!
வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது.
__________________________________________
எனினும் வினை விதைதவன் வினை அறுப்பான். இந்திய ராணுவத்திற்கு ஒரு அழகிய புறா மூகமும் உண்டு, கோர நரிமுகமும் உண்டு என்ற கூற்றை மறுபதற்கில்லை.
வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு சுபாஷ். ஆனால் நம்முடைய ஆயுதங்களை நம் எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். துப்பாக்கித் தூக்கிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை ஆலிவ் இலை கொண்டு வரவேற்க முடியாது. முதலில் வன்முறையை ஒடுக்க துப்பாக்கியை விட உறுதி கொண்ட நெஞ்சுதான் வேண்டும். இப்பொழுது நம்முடைய தேவையும் அதுதான்.
Boss, "Gandhi's" family don't have any personal enmity with Naxals/Maoists so they won't take any strict action on them otherwise they will hunt them down even if they are in another country and supply arms and ammunitions to that country and completely destroy them.But these poor Naxals didn't touch any particular Gandhi family member, so until then they won't be taken seriously otherwise they will be recommended by Indian gov to US to declare them as Terrorists.I can't stop thinking about an old Tamil film dialogue "Intha Naadum Naattu makkalum Naasamaai Pogattum" .
The CRPF and Army does not have a Armour ed Vehicle as its a long pending demand. But the govt sanctioned two VIP helicopter deals as fast as possible. No bargain and no silly things. Thats how they value the soldiers lives
Post a Comment