Saturday, April 17, 2010

இந்தியாவின் கிரயோஜெனிக் என்ஜின் தாகம்

நேற்று முன்தினம்(15.4.2010) இந்தியா முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்டு உருவாக்கப்பட்ட GSLV-D3 ராக்கெட்டை ஏவியது. ஆனால் அது துரதிஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. இந்தியா இதுவரை 5 தடவை GSLV ராக்கெட்டை ஏவியுள்ளது ஆனால் அவையெல்லாம் ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

கிரயோஜெனிக் எஞ்சின் மிகப் பெரிய செயற்கை கோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது. இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் திரவ நிலையில் எரிபொருளாகப் பயன்படுகின்றன .

கிரயோஜெனிக் எஞ்சின் முதல் முறையாக அமெரிக்காவால் 1961 ஆம் ஆண்டு சோதித்து பார்க்கப்பட்டது . அதன் பிறகு இந்த என்ஜினை சொந்தமாக தயாரித்த நாடுகள் ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே . அமெரிக்க கடந்த 25 ஆண்டுகளாக கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. அதனுடைய எண்ணம் நாம் கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்து விடுவோம் என்று . அமெரிக்காவின் அழுத்தத்தால் நம்முடைய நீண்ட கால நண்பனான ரஷ்யாவும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை தர மறுத்துவிட்டது.

இதற்கடுத்து தான் இந்தியா தானே கிரயோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இந்தியா 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இதனை வெற்றிகரமாக ஏவிவிட்டால் உலகில் இதனைச் சாதித்த 6 வது நாடாக நாம் இருப்போம். இப்பொழுது கிரயோஜெனிக் என்ஜினை சொந்தமாக வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உலக அளவில் இந்திய பெருமைப்படக்கூடிய பல துறைகளில் வானியல் ஆராய்ச்சித் துறையும் ஒன்று. ISRO இதில் மிகப் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலங்களில் நாம் செய்த உருப்படியான காரியங்களில் சில, அணு ஆராய்ச்சித் துறை, ISRO வை ஏற்ப்படுத்தியது போன்றவற்றைக் கூறலாம். உலகின் வானவியல் ஆராய்ச்சி, செயற்கை கோள்களைச் செலுத்துதல் மற்றும் அணு ஆராய்ச்சித் துறையை எடுத்துக் கொண்டால் இந்தியா நிச்சயம் உலக அளவில் 5 அல்லது 6 உள்ளான இடங்களை பெற்றுவிடும். அந்த அளவு நாம் இவற்றில் முன்னேறியுள்ளோம்.

இஸ்ரோவின் மூலம் நாம் பல ஆதாயங்களை அடைந்துள்ளோம். இப்பொழுது PSLV ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவது ஒரு சிறந்த வியாபாரமாக ஆகிவிட்டது. 16 முறை PSLV ஏவப்பட்டதில் 14 முறை வெற்றி அடைந்துள்ளது . இது ஒரு மிகச் சிறந்த சாதனை. இதே போன்று நாம் GSLV ராக்கெட் ஏவுவதில் வெற்றி பெறவேண்டும். இதன் மூலம் இச்சாதனையை செய்த ஆறாவது நாடாக நாம் இருப்பதோடல்லாமல் மிகக் குறைந்த செலவில் மிகப் பெரிய செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் வியாபாரத்தில் இந்தியா மிகப் பெரிய பங்கை பெற முடியும்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்ட ராக்கெட் மூலம்தான் நாம் சந்திராயன் -II விண்ணில் ஏவப் போகிறோம். ஆகவே GSLV ராக்கெட் ஏவுதலில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் GSLV ராக்கெட் இன்னும் ஒரு வருடத்தில் மீண்டும் ஏவப்படும் என்று கூறியுள்ளனர் . அதில் நாம் வெற்றி பெறவேண்டும். சந்திராயன் வெற்றி வெறுமனே அறிவியல் வெற்றியாக மட்டுமே இருக்கப் போவதில்லை. அதில் அரசியலும் இருக்கிறது .

சந்திரனில் ஹீலியம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஹீலியம் தான் வரும் காலத்தில் ஒரு சிறந்த எரிபொருளாக இருக்கப் போகிறது. நாம் சந்திராயனில் வெற்றி பெறுவதன் மூலம் சந்திரனில் இருக்கும் ஹீலியத்தில் நமக்கிருக்கும் பங்கை உறுதி செய்யலாம் .

மேலும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் தயாரிக்கலாம். இதன் மூலம் நாம் ஒரு "Super Power" என்று நிரூபித்து பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்து கோரலாம் .

இவ்வாறாக கிரயோஜெனிக் வெற்றியானது நமக்கு பல வகைகளிலும் வெற்றியைத் தரும் .

13 comments:

Suppa S said...

"மேலும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் தயாரிக்கலாம். இதன் மூலம் நாம் ஒரு "Super Power" என்று நிரூபித்து பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்து கோரலாம் ."
________________________________________________________________________________
நல்ல கற்பனை !!..

Haripandi Rengasamy said...

அது ஒன்றும் கற்பனை அல்ல சுபாஷ்ஜி . ஒரு நாடு தன்னை super power என்று சொல்லிக் கொள்ள அது ராணுவத்துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். அதற்க்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM ராக்கெட்டுகள் ரொம்ப முக்கியம் . ஒரு நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் பெற அது "Super power" ஆக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி.

Sathiyanarayanan said...

பின்பு தமிழர்களை எளிதாக அழிக்கலாம் ஒழிக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை தமிழர்கள் மீது பயன்படுத்தலாம், இலங்கைக்குக் கொடுக்கலாம் அவர்கள் தமிழர்கள் மீது பயன்படுத்தலாம் பின்பு தமிழர்களை எளிதாக அழிக்கலாம் ஒழிக்கலாம். வாழ்க நாசமாய் போகப் போகும் இந்தியா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு நல்ல அருமையான பகிர்வு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு சூப்பர் பவர் நாட்டின் மைந்தர்கள் என்று தலை நிமிர்ந்து செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இக்கட்டுரை உணர்த்துகிறது!!

Devaraj Rajagopalan said...

உன்னுடைய இந்த பதிவை பார்த்தவுடன் இதற்கு கமெண்ட்ஸ் எழுதுவதை விட்டு, உன்னை தொலைபேசியில் அழைத்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. முதல்வன் படத்தை மீண்டும் பார்த்ததுபோல் ஒரு மகிழ்ச்சி.

Devaraj Rajagopalan said...
This comment has been removed by the author.
Devaraj Rajagopalan said...

சத்தியநாராயணன் கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாம் ஆயுதங்களை தயாரிப்பது நம்முடைய தற்காப்புக்காக, நாம் பிற நாடுகளுக்கு முன் பலகினமாக இருப்பதை என்னால்.. ஏன் ஒரு இந்தியனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. பிறர் நம்மை தாக்க வந்தால் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். ஆயுதங்கள் தயாரிபதின் மூலம் உலக நாடுகள் முன் நம்முடைய மதிப்பு கூடும். அமெரிக்க நேஷனல் செக்யூரிட்டி என்று அதற்காக செலவு செய்யும் தொகையில் நாம் ஒரு ஐந்து சதவிகிதம் கூட செலவு செய்வது இல்லை, அப்படி இருந்தும் நம்மால் ஆறாவது இடத்தை பெற முடிந்தது மகிழ்ச்சி. இங்கு நாம் நாட்டில் மட்டும் தான் அரசியல் தலைவர்கள் தன்னுடைய வாரிசு அவருடைய வாரிசு என்று சொத்து சேர்பதில் குறியாக இருகிறார்கள்.. விஞ்ஞானிகளை ஊக்குவிக்க என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி படிக்கும் கலூரிகளில் தான் பாட திட்டங்கள் அறிவிபூர்வமாக உள்ளத என்ன்று பார்த்தல் அதுவும் இல்லை. சரி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தான் திறமைசாலிகளா என்று பார்த்தல் அதுவும் இல்லை. திருத்தும் அடிமட்டத்தில் இருந்து கொண்டுவரவேண்டும். சமுகத்தில் ஒரு அந்தஸ்து வேண்டும், என்னபதே பெரும்பாலனவர்களின் நோக்கம். பணம் படைத்தவர்கள் தான் பெரிதும் மதிக்க படுகிறார்கள், அல்லது சினிமா நடிகர்கள், கிரிக்கெட் ஆட்ட காரர்கள். நான் வேண்டுவது என்ன வென்றால் அவர்களை போல விஞ்ஞானிகளுக்கும் அதிக ஊக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கால்லூரி மாணவர்களுக்கு தெரிய வேண்டும். அவர்கள் செய்வது பாட திட்டத்தில் கொண்டுவரப்படவேண்டும்.

Haripandi Rengasamy said...

@ சத்யா நாராயணன் , உங்களுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நம் இன மக்கள் அழிக்கப்படும்போது அனைவருக்கும் கோவம் எழும்தான். அதில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்பதை எவரும் அறியோம். இந்தியா அந்த இன அழிப்பில் ஈடுபட்டிருந்தால் அது நிச்சயம் கண்டிக்கப்படக் கூடியதுதான்.

@ ஆரண்ய நிவாஸ் அவர்களுக்கு என் நன்றி. நாம் "Super Power" என்று சொல்லிகொள்ளக் கூடிய நாட்கள் தொலைவில் இல்லை. ஆனால் இதில் என்னை நெருடக் கூடிய சந்தேகங்கள் நிறைய உண்டு. நாம் வெறுமனே ராணுவம் மற்றும் வானவியலில் மட்டுமே " Super Power" ஆக இருக்கப் போகிறோமா அல்லது மற்ற super power நாடுகள் பெற்றிருக்கும் அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்போமா. ஒரு நாடு super power ஆக ராணுவத்துறையில் மட்டுமே இருக்கக் கூடாது.ஒரு super power நாடுக்கு உள்நாட்டு பாதுகாப்பு,உள்நாட்டு சுகாதாரம், அனைத்து மக்களுக்குமான நியாயமான சுத்தமான குடிநீர்,வேலை, இருக்க இடம், ஏழை பணக்காரர்களுக்கிடையேயான குறைவான வேறுபாடு, இப்படி எவ்வளவோ அடுக்கலாம். இப்படி அனைத்து துறைகளிலும் நாம் "super power" நாடாக இருக்க வேண்டும்.

@ தேவராஜ், நீ சொல்வது சரிதான். அமெரிக்கா, உலகின் பாதுகாப்பு செலவில் சுமார் 41% பங்கை வகிக்கிறது. நாம் 2% கூட கிடையாது.நம் நாட்டில் நிச்சயம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதை நாம் ஒரு கட்டிடத்திற்கு பெயரிடுவதில் கூட அறியலாம். வெளிநாடுகளிலெல்லாம் ஒரு மிகப் பெரிய கட்டிடம் கட்டப்பட்டால் அதற்க்கு அதை உருவாக்கப் பாடுபட்ட பொறியாளரின் பெயர் இடப்படும். எ.கா: ஈபில் டவர் . நம் நாடு என்றால் ஏதாவதொரு ஆட்ச்சியாலரின் பெயர் இடப்பட்டிருக்கும்.
நீ சொல்வது சரிதான் தேவராஜ், இங்கு கல்வியாளர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலே போதும். ஆனால் உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும் வெளியில் வேலை கிடைக்காதவர்கள்தான் பெரும்பாலும் இங்கு பேராசிரியர்களாக மாறுகிறார்கள். பின் எப்படி நாடு உருப்படும்.

Haripandi Rengasamy said...

@ தேவராஜ்

என்னை செல்பேசியில் அழைத்து பாராட்டியதற்கு நன்றி நண்பா.

Haripandi Rengasamy said...

@ ஜெயமார்தாண்டன் அவர்களுக்கு நன்றி.

JDK said...

//இந்தியா அந்த இன அழிப்பில் ஈடுபட்டிருந்தால் அது நிச்சயம் கண்டிக்கப்படக் கூடியதுதான்.//

Hey, come on kid, wake up,stop sleeping....u still think India doesn't play any role in the Tamils Genocide.Your political knowledge irks me :(((

JDK said...

FYI...!

The war starts with Mahinda at the helm and India provides help to Sri Lanka to revenge the Tigers. An interesting note here is that some Indians are finding the lost link with the Sinhalese. The Arian relationship theory is playing a role between North Indians and the Sinhalese. In addition to this, the present population of 17 million Sinhalese are not the descendants of only Vijaya and his 700 friends from Orissa who came to Sri Lanka 2000 years ago. There have been lots and lots of Malayalees coming to Sri Lanka in the past and settled down most of the costal areas of the south. Abandoning their Malayalee identity, they turn themselves into Sinhalese identity. Many in the Sri Lankan government are believed to be of Malayalee descendant. This truth is now unveiled to some Malayalee high ranking officials in the Indian government. Malayalees are revenging their old wounds with Tamil Nadu Tamils through this war by helping the Sinhalese to fight the Tamils in Sri Lanka. So Malayalees and other Indians are newly finding their lost link and are helping the Sinhalese in some ways. Now, India, cleverly turning the plate, fights the Tigers using Sri Lankan forces. The war is still going on with un-imaginable horror to the Tamil civilians.