எனக்கு சின்ன வயசுல இருந்து பறவைகள், விலங்குகள்னா ரொம்ப ஆர்வம். அவைகளை பத்திய விசயங்கள நியூஸ் பேப்பர்ல தேடித் தேடிப் படிப்பேன். அது புலி மனுசங்கள அடிச்சாலும் சரி , மனுசங்க புலிய அடிச்சாலும் சரி ரொம்ப ஆர்வமா படிப்பேன். அது தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்ப நான் ரெண்டாவது இல்ல மூணாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன். அப்பத்தான் நியூஸ் பேப்பர்லாம் ஓரளவுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிச்ச தருணம். அப்பத்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பாட்டிருந்தார் . பேப்பர்லாம், போலீசார் இந்த இடத்தில் 2 புலிகளைப் பிடித்தனர், அந்த ஊரில் 3 புலிகளை தேடி வருகின்றனர் அப்படி இப்படின்னு நியூஸ் வரும். நம்மளுக்குத்தான் சிங்கம், புலிலாம் ரொம்பப் பிடிக்குமே, நானும் ரொம்ப ஆர்வமா படிப்பேன். பாதி படிக்கும் போதே கொஞ்சம் குழப்பமா இருக்கும். என்னடா இது புலிக்கு பேரெல்லாம் வச்சுருக்காங்க, அதோட ஒவ்வொரு புலிக்கும் 20 வயசு , 30 வயசுனு வயசு வேற போடுறாங்கன்னு குழப்பமா இருக்கும். சரி நாம படிக்குறது நிஜ புலிய பத்தி இல்லையோனு நினைக்கும்போது அடுத்த வரில போலீசார் புலிகளை வலை வீசி தேடி வருகின்றனர்னு இருக்கும்.புலியதான வலை போட்டு பிடிக்க முடியும். ஆனா இவங்க எழுதுறத பாத்தா நிஜ புலி மாதிரி தெரியலையேனு ஒரே குழப்பமா இருக்கும். என்னடா இது , இது புலி மாதிரியும் இருக்கு , இல்லாத மாதிரியும் இருக்குனு தோணும். அதுக்கப்புறமாதான் தெரிஞ்சது அவங்க சொன்னது நிஜ புலிய இல்ல , அவங்க சொல்றது விடுதலைப் புலியனு ;).
இது நான் நாலாவது இல்ல அஞ்சாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்ப தமிழ் பாட புத்தக்கத்துலலாம் காந்தி அடிகள் அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார், நேரு நவம்பர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார்னு போட்டுருக்கும். நான் , என்னடா இது எல்லா தலைவர்களும் திங்கள் கிழமையே பிறக்குறாங்க. இல்ல திங்கட்கிழமை பிறந்தாதான் தலைவரா ஏத்துப்பாங்களா? . இல்ல தலைவர்கள் பிறந்தவுடனே அந்த கிழமைய திங்கட்கிழமையா மாத்திருவாங்களானு ஒரே confusion ஆ இருக்கும். அதுவும் எல்லா புத்தகத்துலயும் அக்டோபர் மாதம் திங்கட்கிழமைன்னு போடாம அக்டோபர் திங்கள்னு spelling mistake ஆ எழுதுறாங்கன்னு தோணும். confusion தாங்க முடியாம அப்பாட்ட போய் இதை கேட்டேன். அப்பா சிரிச்சுகிட்டே சிவா , அக்டோபர் திங்கள்னா அக்டோபர் மாதம்னு அர்த்தம்னு சொன்னாங்க. அதாவது தமிழ்ல திங்கள்னா , மாதம் , நிலான்னு அர்த்தம் இருக்காம்.
what a funny language is tamil ;)
சின்ன வயசுல ஒரு நாள் பஸ்ல போகும்போது ரோட்டுல செம்மறி ஆடு போய்கிட்டு இருந்துச்சு. அப்ப அப்பாவ கூப்பிட்டு, அப்பா இங்க பாருங்க வெள்ளாடு போகுதுன்னு சொன்னேன். அதுக்கு அப்பா இது வெள்ளாடு இல்ல. இது செம்மறி ஆடு. அதோ அதுதான் வெள்ளாடுனாங்க. அதுக்கு நான் அப்பா, அது கருப்பா இருக்கு அத வெள்ளாடுங்குறீங்க. இதுதான் வெள்ளையா இருக்கு அதுனால இதுதான் வெள்ளாடுனேன். இன்ன வரைக்கும் எனக்குப் புரியல, கருப்பா இருக்க ஆட்டுக்கு ஏன் வெள்ளாடுன்னு பேரு வந்துச்சுன்னு :(.
இதுவும் கூட ரெண்டாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். பக்கத்துவீட்டுப் பய்யன் அவங்க கொய்யா மரத்துல காய்ச்ச கொய்யாவ சாப்ட்டுச் சொன்னான். 'டாய் , அந்த கொய்யா அரப் பழமா இருந்துச்சு அதான் தூக்கி எறிஞ்சுட்டேன்' னுனான். எனக்கு ஒரே கோபம், ஏன் முழுசா தூக்கிப் போட்டான். பழுத்துருக்க பாதி பக்கம் மட்டும் சாப்டுட்டு காயா இருக்க மீதி பக்கத்த தூக்கிப் போடவேண்டியதுதானனு நினச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அரப் பழம்னா பாதி பக்கம் பழுத்து பாதி பக்கம் காயா இருக்காது. மொத்தமுமே காயும் , பழமுமாதான் இருக்கும்னு :(.
ஏழாவது படிக்கும்போது ஒருநாள் class test ல தமிழ் பாடத்துல ராமாயணத்துல இருந்து கேள்வி கேட்டுருந்தாங்க. அது சீதேவிய பத்திய கேள்வி. நான் , நம்ம பசங்க எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திறாங்கனு நினச்சுகிட்டு , சீதேவின்னு வர்ற இடத்துலலாம் ஸ்ரீதேவினு எழுதி வச்சேன். அந்த பேப்பர திருத்திட்டு வந்த எங்க தமிழாசிரியர் சிரிச்சுகிட்டே, டேய் உனக்கு நடிகை ஸ்ரீதேவினா ரொம்ப பிடிக்குமோ, அது ஸ்ரீதேவி இல்லடா , சீதேவின்னு சொன்னாரு :).
டைடல் பார்க்குல இருந்து மத்திய கைலாஷ் போற வழில பாத்தீங்கனா, "ரோஜா முத்தையா தெரு" னு ஒரு போர்ட் இருக்கும். கொஞ்ச நாள் முன்ன வர, பலதடவ அத கிராஸ் பண்ணும்போது நினைச்சுப்பேன் , ராஜா முத்தையாங்கிறததான் spelling mistake ஆ ரோஜா முத்தையானு எழுதிட்டாங்கனு . ஆனா அதுக்கு கீழ english லையும் 'Roja Muthiah' னு தான் எழுதி இருப்பாங்க. எப்படி ரெண்டு தடவையும் spelling mistake பண்ணாங்கனு தோணும்.அப்புறம்தான் தெரிஞ்சது நிஜமாவே 'ரோஜா முத்தையா' னு ஒருத்தர் இருந்தாருன்னு :)
இவ்ளோ வளந்தப்புறமும் இன்னமும் குழந்தைப் பிள்ளையாவே இருக்கேன் . என்ன பண்றது :)
பின் குறிப்பு:
ரோஜா முத்தையா என்கிறவர் ஒரு signboard artist ஆ இருந்து ஒரு தனி மனிதனா பழைய புத்தகங்களும், பத்திரிக்கைகளும் சேகரிக்க ஆரம்பிச்சார். 1950 ல இருந்து 1992 இல் அவர் இறக்கும் வரை அவர் சேகரித்த புத்தகங்கள் , பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சம். இந்த சேகரிப்பில் மிகப் பழமை வாய்ந்த 1804 இல் வெளி வந்த புத்தகம் எல்லாம் உள்ளது. இந்த சேகரிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சிகாகோ பல்கலைகழகம் இந்த மொத்த சேகரிப்பையும் வாங்கி கொண்டது . இப்பொழுது Roja Muthiah Research Library (RMRL) என்கிற பெயரில் மொத்தம் 15 லட்சம் புத்தகங்களுடன் இன்னும் இந்த நூலகம் சென்னையில் உள்ளது. ஊ.வே. சா, ரோஜா முத்தையா போன்ற தன்னலமற்ற மனிதர்களால்தான் தமிழின் பெருமை உயர்கிறது.
Photo Courtesy :
http://www.flickr.com/photos/27017291@N04/2737307968
4 comments:
Tamil la ungalukae ithanai pilaiah???? Vedikai.... Aanal indha pilai dan iniku ungala ivlo alaga blog edudha vaikudho???
//Aanal indha pilai dan iniku ungala ivlo alaga blog edudha vaikudho??? //
Suji :)))))))))))))))))))))
Ama sir romba pacha pullaiyaveh irukeenga ... ha ha ha
Maha
Post a Comment