நான் சோழர்கள் புத்தகம் வாங்கிய பிறகு சோழர்களைப் பற்றி இரண்டு பதிவுகளே போட்டேன். அந்த புத்தகத்தை பாதியில் முடித்த பிறகு அதை தொடவில்லை. எனக்கு இருக்கும் மிகப் பெரிய கெட்ட பழக்கம் நான் ஏதேனும் புத்தகங்களை பாதியில் விட்டு விட்டால் அதனை பின் தொடவேமாட்டேன். அப்படியேதான் இதிலும் ஆகியது. நான் பாதியில் விட்டு தொடர வேண்டும் என்று மிக ஆவல் கொண்ட புத்தகங்கள் "நள்ளிரவில் சுதந்திரம்" மற்றும் " சோழர்கள் " . இரண்டும் அவ்வளவு விஷயம் கொண்ட புத்தகங்கள். அதிலும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் மிகக் குறுகிய காலத்தை பற்றி மிக அதிகமாக பேசும் புத்தகம்.
பராந்தகச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு
சரி இப்பொழுது சோழர்கள் பற்றிப் பார்ப்போம். சங்க காலச் சோழர்களுக்கும் இடைக்காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட சோழர்களைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. இவர்களின் காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை. கிபி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 6 ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். இக்காலகட்டத்தில் தமிழகத்தை பற்றியே எந்த குறிப்புகளும் இல்லை எனலாம். அதனாலையே இதனை தமிழகத்தின் இருண்ட காலம் என்கின்றனர். பின்னர் 6 ஆம் நூற்றாண்டில் வடக்கே பல்லவர்களும் , தெற்க்கே பாண்டியர்களும் எழுச்சி பெற்று களப்பிரர்களை தோற்கடித்தனர். இக்காலகட்டத்தில் சோழர்கள் பாண்டிய, பல்லவர்களுக்கு உடன்பட்டவர்களாகவே இருந்தனர். அக்காலங்களில் இவர்களுக்கும் பாண்டிய, பல்லவர்களுக்கும் திருமண உறவுகள் இருந்தது. இக்காலங்களில் சோழர்கள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டனர். இப்பகுதி பாண்டிய பல்லவர்களுக்கு இடையே இருந்தது. அதனால் இப்பகுதி பாண்டிய பல்லவ போர்களில் முக்கிய பங்காற்றியது. சோழர்களும் அந்தந்த காலகட்டதிற்க்கேற்ப பல்லவர்களையோ அல்லது பாண்டியர்களையோ ஆதரித்தனர்.
இதன் பிறகு விஜயால சோழன் கிபி 848 இல் தஞ்சாவூரைத் தாக்கிக் கைப்பற்றியதிலிருந்து இடைக்காலச் சோழர்களின் காலம், ஏன் சோழர்களின் பொற்காலம் ஆரம்பிக்கிறது என்றே சொல்லலாம். தஞ்சாவூரைக் கைப்பற்றிய விஜயாலன் அதனை தன தலைநகராகக் கொண்டான். விஜயாலச் சோழனுக்குப் பின் வந்த ஆதித்ய சோழன் மற்றும் பராந்தகச் சோழன் இருவரும் பாண்டிய பல்லவர்களுடன் போரிட்டு சோழர்கள் ஆண்ட பகுதியை விஸ்தீகரித்தனர்.
விஜயாலன் பல்லவர்கள் பக்கம் இருந்தான். தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் பக்கம் இருந்தனர். அதனால் விஜயால சோழன் முத்தரையர்கள் மீது படை எடுத்து தஞ்சையை கைபற்றினான். இது இந்தியாவில் மிகப் பெரிய ஹிந்து சாம்ராஜ்யத்தை அமைக்கப் போகிறது என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில் விஜயாலனின் மகனான ஆதித்ய சோழன் பல்லவ மன்னன் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான். பின்னர் இதே அபராஜித மன்னனை ஆதித்யன் தோற்கடித்து வடக்கே தன் எல்லையை விஸ்தீகரித்தான். ஆதித்யனுக்கும் சேரர்களுக்கும் நல்ல உறவு இருந்தது. ஆதித்யனின் மகன் பராந்தகச் சோழன் சேர இளவரசியை மணந்தான்.
சோழர்கள் இப்படி பெரும் வெற்றி பெற சோழர்களில் பெரும் வீரனும், சிறந்த ராஜதந்திரியுமான ஆதித்ய சோழனே காரணம்.
முதலாம் பராந்தகச் சோழன் பாண்டியர்களை முறியடித்து தன் ஆட்சியை கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தினான்.
மேலும் எஞ்சி இருந்த பல்லவர்களையும் முறியடித்து தன் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினான். இவனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் வட மேற்க்கிலிருந்து மூன்றாம் கிருஷ்ணன் மிக மூர்க்கமாகத் தாக்கினான். இப்போரில் பராந்தகச் சோழன் தன் மகன் ராஜதித்தனை இழந்தான். இதற்கடுத்து ராஜராஜ சோழன் அரியணை ஏறும் 30 ஆண்டுகளும் சோழர்களின் ஆட்சி இருளில் மூழ்கியது. பராந்தகன் பாண்டியர்களுடன் மோதிய போரில் பாண்டியன் ஈழ மன்னனின் உதவியைப் பெற்றான். இருந்த போதிலும் அவனால் பராந்தகனை வெற்றி கொள்ள முடியவில்லை. பராந்தகன் பாண்டிய மன்னன் ராஜசிம்மனை வெற்றி கொண்டான். தோல்வியடைந்த ராஜசிம்மன் முதலில் இலங்கையின் உதவியை நாடினான். பின் தன் தாய் பிறந்த தேசமான கேரளத்தை அடைந்து அதன் உதவியை நாடினான். ஆனால் அன்றைய சேர மன்னர்கள் சோழர்களுடன் நட்புடன் இருந்தனர்.
பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் பாண்டிய மணிமகுடத்தையும் பிற உயரிய பொருட்களையும் ஈழத்திலிருந்து மீட்க முயன்றான் என்று வரும். அந்த மணிமகுடமும் பிற உயரிய பொருட்களும் இந்த ராஜசிம்மனாலேயே இலங்கை மன்னனிடம் கொடுக்கப்பட்டது. இவற்றை கைப்பற்ற முயன்று முதலாம் பராந்தகச் சோழன் தோல்வியடைவான். இந்த மணிமகுடமும் பிற உயரிய பொருட்களும் பின்னர் பேரரசன் ராஜேந்திர சோழனாலயே மீட்கப்படும்.
இப்புத்தகத்தில் உத்தமச் சோழனே இரண்டாம் ஆதித்யன் இறக்கக் காரணமானவன் என்று ஆசிரியர் முற்றிலும் முழுதாக நம்புகிறார். பொன்னியின் செல்வனிலும் கல்கி உத்தமச் சோழன் மீது இதே போன்று குற்றச்சாட்டைக் கூறுவார். மேலும் அவன் நல்ல தாய் தந்தையருக்குப் பிறந்த துர்குணம் கொண்டவன் என்கிறார் ஆசிரியர். இதே போல்தான் கல்கியும் கூறுவார். இதிலிருந்து கல்கி தான் பொன்னியின் செல்வன் எழுத நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூலை ஆதாரமாக கொண்டிருப்பார் என்று அறியலாம்.
Vijayalaya Chola | ||||||||
| | ||||||||
Aditya Chola I | ||||||||
| | ||||||||
Parantaka Chola I 907 - 950 | ||||||||
| | ||||||||
-- | -- | Arinjaya 956 - 957 | ||||||
| | | | |||||||
Uththama Chola 970 - 985 | Sundara Chola 957 - 970 | |||||||
| | ||||||||
Aditya Karikala | -- | Rajaraja Chola I 985 - 1014 | -- | Kundavai | ||||
| | ||||||||
Rajendra Chola I 1012 - 1044 | ||||||||
| | ||||||||
Rajadhiraja Chola I 1018 - 1054 | -- | Rajendra Chola II 1051 - 1063 | -- | Virarajendra Chola 1063 - 1070 | -- | Kundavai | ||
| | ||||||||
சோழர்களைப்பற்றி அறிய பொன்னியின் செல்வன் மிகச் சிறந்த நாவல். அதில் இடம் பெற்ற முக்காலே மூணு வீசம் கதாப்பாத்திரங்கள் உண்மையானவை மற்றும் சம்பவங்களும் உண்மை. பராந்தகச் சோழனுக்கு மூன்று மகன்கள் ராஜாதித்ய, கண்டராதித்ய மற்றும் அரிஞ்சய சோழன். இதில் ராஜாதித்ய சோழன் இடையிலேயே இறந்துவிடுகிறான். அதற்கடுத்து கண்டராதித்ய சோழன் அரியணை ஏறினான் . அவனுக்கு அரசியலை விட சைவ சமய ஈடுபாடே அதிகம் . அதனால் அவனுக்கு அடுத்து அவன் தம்பியான அரிஞ்சய சோழன் பதவி ஏறினான். அவனுக்கு அடுத்து அவனுடைய மகனான சுந்தரச் சோழன் பதவி ஏறினான். அக்காலகட்டத்தில் கண்டராதித்ய சோழனின் மகனான உத்தமச் சோழன் மிக இளையவன். சுந்தரச் சோழனுக்கு ஆதித்ய கரிகார்ச் சோழன் , ராஜராஜ சோழன் என்னும் இரு மகன்கள் , குந்தவை என்னும் ஒரு மகள். இதில் ஆதித்ய கரிகார்ச் சோழன் மர்மமான முறையில் இறந்து விடுகிறான். இக்கொலையில் உத்தமச் சோழனுக்கு பங்கிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பின்னர் உத்தமச் சோழனுக்கும் , சுந்தரச் சோழனுக்கும் ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் படி சுந்தரச் சோழனுக்குப் பிறகு உத்தமச் சோழன் அரியணை ஏறுவதாகவும், உத்தமச் சோழனுக்குப் பிறகு ராஜராஜ சோழன் அரியணை ஏறுவதாகவும் ஒப்பந்தம் ஏற்ப்பட்டது. பொன்னியின் செல்வனில் இது வரை சரியாகவே இருக்கும், இதற்கடுத்து உண்மையான உத்தமச் சோழன் இறந்து விடுவதாகவும் அதற்கடுத்து வேறொருவன் உத்தமச் சோழனாக அரியணை ஏறுவதாகவும் கூறப்பட்டிருக்கும் . அதுதான் தவறு.
ராஜராஜன் அரியணை ஏறுவதிலிருந்து சோழர்களின் பொற்காலம் ஆரம்பிக்கிறது. நாம் ராஜராஜ பெருவேந்தனைப் பற்றி விரிவாக மற்றொரு பதிவில் காண்போம் .
7 comments:
அருமை நண்பா ...மிகவும் தாமதமான இடுகை ஆனாலும் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!!!
Good post. Your blog looks like professional writer. Try to add Google anlytics to your blog.
@ jdk மிக்க நன்றி நண்பா ...கொஞ்சம் தாமதமான இடுகை தான் ... இருந்தாலும் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருந்தது ...
@ gokul இது தான் என் blog குக்கு உன்னோட முதல் பின்னூட்டம் ... எப்படி டா இருக்க ... என்னையும் professional writer னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா ...
//இப்புத்தகத்தில் உத்தமச் சோழனே இரண்டாம் ஆதித்யன் இறக்கக் காரணமானவன் என்று ஆசிரியர் முற்றிலும் முழுதாக நம்புகிறார். பொன்னியின் செல்வனிலும் கல்கி உத்தமச் சோழன் மீது இதே போன்று குற்றச்சாட்டைக் கூறுவார். மேலும் அவன் நல்ல தாய் தந்தையருக்குப் பிறந்த துர்குணம் கொண்டவன் என்கிறார் ஆசிரியர். இதே போல்தான் கல்கியும் கூறுவார். இதிலிருந்து கல்கி தான் பொன்னியின் செல்வன் எழுத நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூலை ஆதாரமாக கொண்டிருப்பார் என்று அறியலாம்.//
Ponniyin Selvan is a work of fiction in the backdrop of Chozha dynasty. Period! It is dangerous to believe a fiction. Better support your article by sourcing authentic history books.
@ Anony
நான் இந்த பதிப்பையே நீலகண்ட சாஸ்திரியின் "சோழர்கள்" புத்தகத்தை பார்த்துதான் எழுதினேன். ஆனால் அது மிகவும் வரலாற்றைப் பற்றியே கூறும் . அது படிக்க பொறுமையில்லாதவருக்கே நான் பொன்னியின் செல்வனைப் படிக்கக் கூறினேன். பொன்னியின் செல்வன் சோழர்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட fiction நாவல் தான். இருந்தாலும் சோழர்களைப் பற்றி அறிய அது உதவும்.
நீலகண்ட சாஸ்திரியாரின் புத்தகம் pdf ஆகக் கிடைக்கிறதா?
@ ஸ்ரீராம் நான் இதுவரை முயற்ச்சித்து பார்க்கவில்லை ... நீங்கள் வேண்டுமென்றால் முயற்சித்துப் பாருங்களேன்
Post a Comment