Tuesday, September 28, 2010

101*

ஓடிவிட்டது நூறு பதிவுகள், அதில் கால் பங்கு பின் தொடர்வோர், ஒரு வருடம் । நினைத்துப் பார்க்கவே மிக சந்தோசமாக இருக்கிறது. இந்த பதிவுலகம் மிக புதுமையானது எனக்கு. இது தந்த அங்கீகாரம் நான் என்றும் பெற விரும்புவது. ஒரு வலைப்பூ தொடங்கவேண்டும் என்ற நினைப்பு எனக்கு ரொம்ப காலமாகவே உண்டு. ஆனாலும் பதிவை எப்படி ஆரம்பிப்பது, எந்த மொழியில் ஆரம்பிப்பது, அதன் நோக்கம் என்ன என்பதிலேயே பல காலங்களை கழித்துவிட்டேன். முதலில் என் பதிவிற்கு ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டும் என்பதிலேயே பல மாதங்கள் கழிந்தது. பிறகு போன வருடம் எனக்கு ஒரு மாறுதல் தேவைப்பட்டது.


ஆகவே போன வருடம் ஆகஸ்டு மாதம் ஒரு நல்ல நாளில் பதிவை ஆரம்பித்தேன். அது எனக்குப் பிடித்த உயிரியலில் இருந்தது. அது cheetah வை பற்றிய ஒரு பதிவு. அது ஆங்கிலத்தில் இருந்தது. பதிவு தொடங்கிய பொழுது, என் பதிவின் நோக்கம் என் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும் அதில் ஒன்று . ஆகவே என் முதல் பதிவை ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். என் ஆங்கில பதிவுகளுக்கு proof reader ஆக இருந்தவர் என் அலுவலகத்தில் பணி புரியும் ஜோதி. அப்பொழுதுதான் jdk எனக்கு போன் பண்ணி இருந்தான் . அவனிடம் நான் பதிவு ஒன்று ஆரம்பித்திருப்பதாகவும் அதனை பார்க்குமாறும் கூறினேன் . அவனிடமிருந்து பாராட்டு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பதிவை படித்தவன் போன் பண்ணி திட்டினான் . என்னடா தமிழ்ல எழுதாம ஆங்கிலத்துல எழுதிருக்கனு. நான் எதிர்பார்த்தபடி என் முதல் பதிவிற்கு எந்த ஒரு பின்னூட்டமும் வரவில்லை. என்னுடைய இரண்டாவது பதிவிற்கே பின்னூட்டம் வந்தது . அந்தபின்னோட்டத்தை அளித்தவர் என் ஆருயிர் நண்பன் அதே jdk.

பின்னர் சென்ற ஆகஸ்டு மாதம் ஒரு டாக்டரை சந்தித்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தமிழ் பேச்சாளார். பேச்சாளர் என்பது நான் ஒன்றும் மேடைப் பேச்சை எண்ணிக் கூறவில்லை. அவருடைய தமிழ் மொழி உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது இவ்வளவு அருமையான மொழியான தாய் மொழியாம் தமிழ் மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் எழுதுகிறோமே என்று. பின்னர் செப்டெம்பர் மாதம் கிட்டத்தட்ட இதே கருத்தில் நான் ஏன் தமிழ் மொழியில் பதிவை எழுதப் போகிறேன் என்று ஒரு பதிவை எழுதினேன் . அதில் நான் இனி தமிழில் பதிவுகளை எழுதப் போகிறேன் என்றும் மேலும் ஆங்கிலத்திலும் எழுதுவேன் என்றும் கூறி இருந்தேன். ஆனால் பின்னர் என்னால் ஆங்கிலத்தில் என் பதிவுகளை எழுத முடியாமல் போய்விட்டது. பின்னர் ஆங்கிலத்தில் பதிவு எழுதாததிற்கு வேண்டுமென்றால் ஆங்கிலத்திற்கு என்று தனி வலைப்பூ தொடங்கிக் கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் அது இன்று வரை நிறைவேறவில்லை :-( . என்னுடைய பதிவுகளை தமிழில் எழுத ஆரம்பித்ததில் ஜோதிக்கு ரொம்ப வருத்தம்தான். ஏனென்றால் அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது :-(

பின்னர் தமிழிலேயே பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். அதற்க்கு முக்கிய காரணம் jdk யும் கூட. முதலில் என்னுடைய பதிவில் வரலாறு மற்றும் தினசரி செய்திகள் பற்றிய பதிவுகளே அதிகம் இருக்கப் போகிறது என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால் அவையே நான் அதிகம் வாசிப்பவை. ஆனால் என்னுடைய பதிவுகளில் அதிகம் என்னுடைய அன்றாட அனுபவங்களும் படைப்புகளும் அதிகம் இடம் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான் ;-). மேலும் சில சிறுகதைகள் எழுதவும் முயற்சி செய்தேன். ஒன்றிரண்டு எழுதவும் செய்தேன். ஆனால் என்ன அவை எல்லாம் மௌன ராகம் based ஆன மாதிரி இருந்தது. அதான் அதற்கடுத்து வேறு சிறுகதைகள் எழுதவில்லை. ஒரு பதிவாளனின் எழுத்து எதையுமே நேர்த்தியாக சொல்லுவதில்தான் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் அது வெறும் செய்தி ஆகிவிடும். செய்திகளை தினசரி பத்திரிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

என்னுடைய வலைப்பூவை முதலில் என் நண்பர்களுக்கே அறிமுகப்படுத்தி இருந்தேன். என்னுடைய முதல் followers உம் அவர்கள்தான். முதல் பின்னூட்டம் இட்டவர்களும் அவர்கள்தான் . ஒவ்வொரு தடவையும் பதிவை எழுதிவிட்டு அதை யாராவது வந்து பார்க்க மாட்டார்களா, பின்னூட்டம் இடமாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன் . நானாக என் நண்பர்களிடம் கூறவும்மாட்டேன், அவர்களே அறிந்து பின்னூட்டம் இட வேண்டும் என்று எண்ணுவேன். அப்பொழுது என்னுடைய பதிவுகளை திரட்டிகளில் இணைக்க அதிகம் தயங்கினேன். பின்னர் jdk இன் பேச்சைக் கேட்டே தமிழிஷில் இணைத்தேன்

என்னுடைய பதிவுகளை பிரபலப்படுத்துவதில் என்னை விட என் நண்பன் jdk யே அதிகம் ஆர்வம் கொண்டான் . அவனுடைய யோசனைப்படியே என் பதிவை தமிழிஷில் இணைத்தேன் . JDK, அவனுடைய twitter account இல் எல்லாம் என்னுடைய வலைப்பூ முகவரியையே அவனுடைய முகவரியாக கொடுத்திருப்பான். பெரும்பாலும் என்னுடைய பதிவின் முதல் பின்னூட்டம் அவனுடையதாகவே இருக்கும். எனக்கு பிற வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதே jdk தான். நான் பிற பிரபல பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை என்று என்னை அதிகம் கடிந்து கொள்வான். அப்படி பின்னூட்டம் இட்டால்தான் அதிக வாசகர்களை சென்றடைய முடியும் என்பது அவன் எண்ணம். இப்படி என்னுடைய பதிவைப் பற்றி என்னைவிட அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வது அவன்தான். மிக்க நன்றி நண்பா.

ஒவ்வொரு தடவையும் பதிவை இட்ட பிறகு அதை யாராவது வந்து பார்த்திருக்கிறார்களா, counter கூடி இருக்கிறதா, பின்னூட்டங்கள் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்ப்பதில் என் ஆர்வம் அதிகமாகியது. இப்பொழுது யாராவது உன்னுடைய மிகப்பெரிய சந்தோசம் எது என்று கேட்டால், பின்னூட்டத்தின் வரவால் என் mail box இல் "blogspot" எனும் folder, bold ஆவதே என்னுடைய மிகப் பெரிய சந்தோசம் என்பேன். பொண்ணுங்களை sight அடிப்பதைவிடவும் அதிக சந்தோசம் தருவது இதுவே ;-). எப்பொழுதுமே நம்முடைய படைப்புகள் அங்கீகாரம் பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. நான் அதிகம் நினைப்பது உண்டு இப்பொழுது கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்பது என்று . இப்பொழுது நான் கூறுவேன், உயிர் வாழத் தேவையான இருப்புகளையும் மீறி நான் அந்தக் கடவுளிடம் இந்த அகண்ட பெரிய வலைவெளியில் ஒரு சிலருக்கேனும் என்னை ஆதர்ச எழுத்தாளனாக ஆக்கு என்று கேட்டுவிடுவேனோ என்று பயமாக இருக்கு .

இப்பொழுதெல்லாம் ஏனோ தெரியவில்லை அதிக கனவுகள் வருகிறது. அவை மிக சுவாரசியமாகவும் இருக்கின்றன. அப்படிக் கனவுகள் வரும்போது அந்தக் கனவின் ஊடே நான் நினைத்துக் கொள்வேன் ஆகா இன்று பதிவு போட மிக சுவாரசியமான விஷயம் கிடைத்து விட்டது என்று. ஆனால் விடிந்தெழுந்து பார்த்தால் அந்தக் கனவின் எச்சங்கள் கூட மீதி இருப்பத்தில்லை. இப்படி எதையும் பதிவு போடவேண்டும் என்ற நோக்கில் பார்க்க ஆரம்பித்தேன்.

கடந்த ஒரு வருடங்களாக என்னுடைய எழுத்தை படிப்பவர்களுக்கும் , என்னை இந்தப் பெரிய வலைவெளியில் பின் தொடர்பவர்களுக்கும் , என்னுடைய வலைப்பூவைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனம் தரும் நண்பர்களுக்கும், என்னைத் தெரிந்தோ தெரியாமலோ இவ்வலைவெளியை அடைந்து வாசிப்பவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

7 comments:

Devaraj Rajagopalan said...

நீ பதிவுகள் எழுத ஆரம்பித்து ஒரு வரடம் ஆகிவிட்டது, எழுதுவதை நிறுத்தாமல் தொடர்ந்ததற்கு மகிழ்ச்சி !!

Shankar said...

A nice post as usual.. a gud credit to ur friend JDK as well. hope u continue posting ur blogs in varied topics. Keep us the gud work and congrats for this milestone.

BTW.. when is the treat??

JDK said...

பாண்டி, உன் தமிழறிவு எனக்கு நன்றாக தெரியும் எனவே தான் உன்னை தமிழில் எழுத கூறினேன்.மிக்க மகிழ்ச்சி நண்பா (பெருமையாக உள்ளது). நீ இதில் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் . வாழ்த்துக்கள். என்றும் உனக்கு என் ஆதரவு இருக்கும்.

Haripandi Rengasamy said...

@ Devaraj மிக்க நன்றி நண்பா ... என்னுடைய வளர்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் உன்னைப் போல் நண்பன் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நண்பா ...

@ Shankar Thank you ji ... Thank you very much ... treat இல்லாமையா ji ... நிச்சயம் உண்டு ..

@ JDK நண்பா jdk , i know your intention ... I know that you know me well ... என்னுடைய வளர்ச்சியில் பெருமை கொள்ளும் உன்னைப் போல் நண்பன் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நண்பா ...


@ Devaraj, Shankar, JDK , உங்களைப் போன்றோர் தரும் ஆதரவினால்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் ... Thank you all

ப.கந்தசாமி said...

பதிவுலகில் பலர் காணாமல் போகிறார்கள். அப்படி இல்லாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

பாலோயர்ஸ், பின்னூட்டங்கள், ஹிட்ஸ், விசிட்டர்ஸ், இவைகளைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு இசைவானதை பதிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு திருப்தி தரும்.

Suppa S said...

பாலோயர்ஸ், பின்னூட்டங்கள், ஹிட்ஸ், விசிட்டர்ஸ், இவைகளைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு இசைவானதை பதிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு திருப்தி தரும்.

+1 for above comment...
Dont go behind external drive, pat-ஒன-the-back should be self-driven, 'coz that is d only thing which cud last for ever. I do remember our conversation at IIT park abt your blogging interest. I hv insisted to continue your writing, 'coz u r too good in that. To be frank if i started studying ur post, i never left it half-way[but i have left a few as a whole :( ], ur narration is awesome.

Couple of days back i was discussing with madu abt requesting you to write a blog on a history topic based on ur followers request..
Lemme start with mine...

Most of the peoples says Kalebarrakal tamilagathil anda kaalam oru இருண்ட காலம என்றும் , ராஜராஜ சோழன் ஆண்ட காலங்கள் பொற்காலம் என்றும்.

அனால் சில வலைபதிவுகளில் , Kalebarrarkal anda kalam thaan makkal achi nadandathu yendru kuripukindranar. இதை பற்றி ஒரு உண்மை ரிப்போர்ட் தேவை ....

Quote
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை நினைவுகூரும் வண்ணம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்...கிறது. அன்றைய நிலைமையில் இருந்த நிலவுடைமை சமூகத்தின் மிகவும் குறைவான உபரி உற்பத்தி இந்தக் கோவிலுக்காக பயன்பட்டிருக்கிறது. அதன் பொருள் மிகவும் வறிய நிலையில் பசியும் பட்டினியுமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பாறையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கற்கோவில்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்ததால் நமது கட்டிடக் கலையின் மகத்துவத்தை விட மக்கள் பட்ட துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

Haripandi Rengasamy said...

@ Dr.P.Kandaswamy Phd . உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறுவது மிக்க உண்மை. I will continue my writings with out worrying about followers, comments etc.

@ Suppa , Ji நீங்கள் கூறுவது மிக்க சரி. நம் உள்ளிருந்து வரும் ஆற்றல் தான் நம்மை வாழ வைக்கும். அவைதான் நம்மை தொடர்ந்து எழுத வைக்கும் . நிச்சயம் என் உள்ளிருக்கும் ஆற்றலைத்தான் நான் நம்புவேன் .

நாம் அந்த IIT park இல் பேசியதை எந்நாளும் மறக்கமாட்டேன். என் குடும்பத்தையும் தாண்டி எனக்கு ஒரு well wisher இருப்பதை காட்டிய தினம் அது. மிக்க நன்றி Subash. நான் எதை நினைத்து இதை கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

என்னுடைய எழுத்தின் மேல் இத்தகைய நம்பிக்கை வைத்திருப்பதற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நிச்சயமாக ராஜராஜ சோழனைப் பற்றியும் , களப்பிரர்களைப் பற்றியும் நிச்சயம் எழுதுவேன். என்னுடைய வருங்கால பதிவுகளில் நிச்சயம் எனக்கும் உங்களுக்கும் பிடித்த வரலாற்றைப் பற்றி அதிகம் எழுதுவேன் .

மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கிறேன் சுபாஷ்.