Thursday, March 25, 2010

நான் பிரதமரானால் - சாலை மற்றும் போக்குவரத்து துறை

நான் நெடுந்தொலைவு பயணப்படும் போது இருக்கும் பயண நேரங்களில் எல்லாம் எனக்கு பல எண்ணங்கள் தோன்றும். அவற்றில் முக்கியமானது ஏன் இந்தியா மட்டும் இப்படி முன்னேறாமல் இருக்கின்றது என்ற எண்ணம். மற்ற நாடுகள் எல்லாம் எவ்வளவு முன்னேறி இருக்கின்றன. இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று தோன்றும்.

நான் அதிகமாக இந்தியாவை ஒப்பீடு செய்யும் நாடு, சீனா . சீனா எவ்வளவு தூரம் பயணப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் எந்த ஒரு முன்னேற்ற செயல்களைப் பற்றிய எண்ணங்கள் சீனாவிற்கு தோன்றுவதற்கு முன்னமே இந்தியாவிற்கு தோன்றிவிடும். எடுத்துக்காட்டாக துரித நெடுஞ்சாலைகள்(Express way) ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு 1970 களிலேயே வாய்த்துவிட்டது. ஆனால் அது பல தடைகளைத் தாண்டி செயல்பாட்டிற்கு வந்தது 2000 களில்தான். சீனாவில் 1980 கள் வரை துரித நெடுஞ்சாலைகளே இல்லை. 1990 களில்தான் சில நெடுஞ்சாலைகள் துரித நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. இப்பொழுது சீனாவில் இருக்கும் துரித நெடுஞ்சாலைகளின் நீளம் 60,300 km. இது கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளமான 65,569 km சமம். இந்தியாவிலோ துரித நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 200 km களே. இதிலிருந்து நாம் சீனாவைவிட செயல்பாட்டில் எவ்வளவு தூரம் பின் தங்கி இருக்கோம் என்று தெரியும்.

இப்படிப்பட்ட நேரங்களில் எனக்கு இந்தியாவின் மீது அதீத கோபம் வரும். நாம் எப்படியாவது இந்தியாவை முன்னேற்றிவிட வேண்டும் என்று தோன்றும். அத்தகைய நிமிடங்களில்தான் நாமே பிரதமரானால் என்னவெல்லாம் செய்வோம் என்று எண்ணுவேன். இது பள்ளிப் பருவத்தில் நாம் எழுதிய "நான் பிரதமரானால் .." , " நான் முதலமைச்சரானால் ..." என்ற எண்ணங்களின் வெளிப்பாடே.... அத்தகைய எண்ணங்களே கீழே. முதலில் சாலை மற்றும் போக்குவரத்து துறையிலிருந்து ஆரம்பிக்கிறேன் ...

சாலை போக்குவரத்து ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதரத்தில் இந்த சாலைகள் முதுகுத்தண்டாக உள்ளன. அதனால் நான் பிரதமரானால் இந்தியாவின் அனைத்து மாவட்ட தலைநகரங்களும், முக்கிய துறைமுகங்களும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களின் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். இதே போல் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தேசிய நெடுஞ்சாலையால் இணைக்கப்படும்.

உலகிலேயே அதிக மக்கள் சாலைப் போக்குவரத்தில் இறப்பது இந்தியாவில் தான் அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 13 பேர் இறக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1.14 லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவைக் காட்டிலும் அதிகம் . இதைக் குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன (PAGE 9). அந்த சேவை இன்னும் விரிவுபடுத்தப்பட்டு , இன்னும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும். இதன் மூலம் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், ஆம்புலன்ஸ்கள் விரைவாக விபத்து நடந்த இடத்தை அடைய முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் "median" களின் உயரம் அதிகரிக்கப்படும் . சாலைப் போக்குவரத்து இதன் மூலம் விரைவானதாகவும், ஆபத்து குறைந்ததாகவும் மாற்றப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும், "median" களிலும் மரங்கள் வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதன் மூலம் நாட்டில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் சாலைப் போக்குவரத்து இனிமையானதாகவும் குளுமையானதாகவும் மாற்றப்படும். மரங்கள் வளர்க்கப்படுவதை உறுதிபடுத்தும்விதமாக அந்த சாலை அமைத்த "contractor" மரங்கள் நடுவதுடன் அதனை ஒரு வருடம் பராமரிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் நகர ஒரு சிக்னலில் 10 நிமிடத்திற்கும் மேல் நிற்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டால் அந்த சிக்னலில் ஒரு மேம்பாலம்(fly over) அமைக்கப்படும்.

தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த சாலைகளின் நீளம் 3.34 million k.m. அதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 65,569 km , மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1,30,000 km. மற்ற சாலைகளின் நீளம் 3,14 million k.m. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் நாட்டின் மொத்த சாலைகளின் நீளத்தில் வெறும் "2%" மட்டுமே. ஆனால் அவை 40% போக்குவரத்தை சுமந்து செல்கின்றன. அதனால் இவற்றின் நீளத்தை அதிகரிக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது ஒவ்வொரு 5 வருடமும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 40,000 km அதிகரிக்கப்படும் . மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 60,000 km அதிகரிக்கப்படும். இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் 65,569 km நீளத்தில், 10,00 km சாலைகள் நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக உள்ளன. எனவே ஏற்கனவே 2 வழிச் சாலைகள் 4 வழிச் சாலைகளாகவும், 4 வழிச் சாலைகள் 6 வழிச் சாலைகளாகவும், 6 வழிச் சாலைகள் 8 வழிச் சாலைகளாகவும் மாற்றப்படும்.

தற்போது இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. ஒன்று North-South Corridor and East - West Corridor. இதில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 4000 km நீளமானது. இது வடக்கே ஸ்ரீநகரையும் தெற்க்கே கன்னியாகுமரியையும் இணைக்கிறது. கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலை 3,300 km நீளமானது. . இது மேற்க்கே போர்பந்தரையும் கிழக்கே சில்ச்சரையும் இணைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளைக் கொண்டவை. இதில் கிட்டத்தட்ட 60% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. இதற்க்கான திட்டச் செலவு 1999 ஆண்டு கணக்குப்படி 60,000 கோடி ரூபாய். இதன் மூலம் என்னுடைய திட்டமான வருடத்திற்கு 8,000 km நீள தேசிய நெடுஞ்சாலை, 12,000 km மாநில நெடுச்சாலை என்பது எவ்வளவு கடினமானது என்பது புரியும். ஆனால் இது சாத்தியமானதே. ஏனெனில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதற்கும் அதிகம். மேலும் மேற்க்கூறிய நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

இதே போன்று மற்றொரு முக்கியமானத் திட்டம் தங்க நாற்கரச் சாலை (Golden Quadrilateral). இதனுடைய மொத்த நீளம் 5,486 km . 1999 ஆண்டு கணக்குப்படி இதன் மொத்த செலவு 60,000 கோடி ரூபாய்.

தங்க நாற்கரச் சாலை , North-South Corridor and East - West Corridor போல மேலும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும். ஒன்று 'X' வடிவில் வட மேற்க்கே பஞ்சாபையும்,வட கிழக்கே பிஹாரையும், தென் மேற்க்கே கேரளாவையும் , தென் கிழக்கே தமிழ்நாட்டையும் இணைக்கும்.

வட கிழக்கு மாநிலங்களில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக உள்ளது. அதற்க்கு ஒரு முக்கிய காரணம் போதுமான சாலை வசதிகள் இல்லாததும் ஆகும். அதனைப் போக்கும் வகையில் வட கிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று இணைப்பது மட்டுமல்லாமல் அவற்றை பாட்னாவுடனும், கோல்கட்டாவுடனும் இணைக்கும் வகையில் ஒரு திட்டம் மேற்கொள்ளப்படும். அதற்க்கு North Eastern corridor என்று பெயரிடப்படும்.

துரித நெடுஞ்சாலைகள் (Expressways)


துரித நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்டவை. National Expressway -1 எனும் அகமதாபாத்தையும், பரோடாவையும் இணைக்கும் துரித நெடுஞ்சாலை பயண நேரத்தை இரண்டரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக குறைக்கிறது என்பதிலிருந்து அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இந்தியாவில் இருக்கும் மொத்த துரித நெடுஞ்சாலைகளின் நீளம் மிகக் குறைவே. இந்தியாவின் மொத்த துரித நெடுஞ்சாலைகளின் நீளம் 200 km மட்டுமே. இந்தியாவோ 2022 க்குள் 15,600 km துரித நெடுஞ்சாலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதுவுமே மிகக் குறைந்த தூரம்தான் . எனவே நான் பிரதமரானால் வருடத்திற்கு 3000 km நீள துரித நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 2022 க்குள் 33,000 km சாலைகள் துரித நெடுஞ்சாளைகலாக் மாறி இருக்கும்.

உலகிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில் இந்தியா 42 ஆவது இடத்தை வகிக்கிறது. இது எனக்குத் தெரிந்து இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகக் குறைவுதான். இதற்க்கு உள்நாட்டு பாதுகாப்பு , சுற்றுலாத்துறை வளர்ச்சி , உள்நாட்டு கட்டமைப்புகள் என பல காரணிகள் உள்ளன . அவற்றில் போக்குவரத்தும் அதன் பாதுகாப்பு வசதிகளும் மிக முக்கியம் . சாலைப் போக்குவரத்து மற்றும் அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் நாம் வெளி நட்டு பயணிகளின் வரத்தை மட்டும் அல்ல உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சியையும் மேம்படுத்தலாம் . இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலவாணிகள் கிடைக்கும். (page no 19) . இவ்வாறாக சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை நாம் சாலை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் .

கடந்த 2006 ஆம் ஆண்டு 4million வெளிநாட்டவர்கள் வந்தனர். அவர்கள் செலவழித்த மொத்த தொகை US$ 8.9 billion . இது தவிர உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் தனி . எனவே சுற்றுலாத் துறையில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் சாலைப் போக்குவாரத்துக்கு தேவையான நிதியின் ஒரு பகுதியைப் பெறலாம்.


4 lane துரித நெடுஞ்சாலை அமைக்க 1 km க்கு Rs 14 கோடி ஆகிறது. இதுவே 6 lane Rs 20 கோடி ஆகிறது. இது 2009-10 ஆண்டுக்கான கணக்கு . இது 100 km ஐ அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஆக 100 km நீள 4 lane சாலை அமைக்க மற்ற எல்லா செலவுகளையும் சேர்த்து Rs 1627.51 கோடி ஆகிறது. இதுவே 6 lane க்கு Rs 2325.01 கோடி ஆகிறது. தற்போது இந்த 100 kmதுரித நெடுஞ்சாலை அமைக்க 3 ஆண்டுகள் வரை ஆகிறது . இந்த செலவானது 3 ஆண்டுகளுக்கு 20:40:40 என்ற ratio வில் செலவாகிறது . இதற்க்கான பணமானது loan மற்றும் equity மூலம் 70:30 என்ற ratio வில் பெறப்படுகிறது (page 99).

மேற்க்கூறிய கணக்கின் படி பார்த்தால் நான் கூறிய வருடத்திற்கு 3000 km நீள துரித நெடுஞ்சாலை அமைக்க வருடத்திற்கு கிட்டத்தட்ட Rs 50,000 ஊட்டி செலவாகும். மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் ஏறும் விலைவாசியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் . மேலும் தற்பொழுது 100 km சாலை அமைக்க 3 ஆண்டுகள் ஆகிறது . வருங்காலத்தில் வரும் தொழிநுட்ப முன்னேற்றங்களையும் மனதில்
கொள்வதன் மூலம் , இந்த 100 km க்கு 3 ஆண்டுகள் என்பதை படிப்படியாக குறைந்து விலைவாசி உயர்வால் ஏப்படும் செலவீனங்களை ஈடு கட்டிவிடும் . ஆக 2022 ஆண்டுக்குள் மொத்தம் 33,000 km என்பது சாத்தியமாகக் கூடியதே .

திட்டத்திற்கு தேவையான நிதி:


தங்க நாற்கரத் திட்டத்திற்கான நிதியானது பெட்ரோலின் மீது விதிக்கப்பட்ட வரியிலிருந்து பெறப்பட்டது. மேற்க்கூறிய திட்டங்களுக்கான நிதியும் பெட்ரோலின் மீது விதிக்கப்பட்ட வரிகளிலிருந்தே பெறப்படும். இதற்காக பெட்ரோலின் மீது புதிய வரிகள் விதிக்கப்படாது. ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளிலிருந்தே பெறப்படும். மேலும் வருமான வரியின் சில சதவீதங்களும் இத்திட்டதிற்க்காகப் பயன்படுத்தப்படும். வருமான வரி பற்றிய மேலும் தகவல்கள் என்னுடைய " நான் பிரதமரானால் - நிதி மேலாண்மை" என்ற பதிப்பில் இடம்பெறும்.

மேற்க்கூறிய கனவு இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே உண்டு. உங்கள் கனவை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


14 comments:

JDK said...

Superb machi...I too had this kind of plans/dreams..but now when i think abt them I laugh at myself.Your best Post till date.Bravo !!! Go On.
//தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த சாலைகளின் நீளம் 3.34 million k.m. அதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 65,569 km , மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1,30,000 km. மற்ற சாலைகளின் நீளம் 3,14 million k.m. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் நாட்டின் மொத்த சாலைகளின் நீளத்தில் வெறும் "2%" மட்டுமே. ஆனால் அவை 40% போக்குவரத்தை சுமந்து செல்கின்றன.//

Looks like a Vijaykanth film dialogue...watchout man this could be expected in his forthcoming movie :)

பனித்துளி சங்கர் said...

பதிவு நன்றாக இருக்கிறது,,அருமையான ,,தெளிவான யோசனை,,,,அதுசரி ,,பூனைக்கு யார் மணி கட்டுவது??

முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

ராஜ நடராஜன் said...

Positive thinking!

Please avoid word verification.

Balakumar said...

நெடுஞ்சாலைகளின் முக்கியதுவத்தை உணராமல் விட்டதால் தான் இன்று இப்படி ஒரு நிலைமையில் நமது போக்குவரத்து உள்ளது. மகா மட்டமான சாலைகளால் தினமும் கோடிகணக்கான லிட்டர் பெட்ரோல் டிசல் வீணாகிக்கொண்டிருக்கிறது.இப்பொழுதாவது விழித்துக்கொள்வோமாக!

சிவகுமார் said...

அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்...

Haripandi Rengasamy said...

@ jdk , நன்றி மச்சி.

பனித்துளி சங்கர்,மிக்க நன்றி.

முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. மக்கள் விழிப்புணர்வு அடைந்தாலே மற்றதெல்லாம் தானாகவே நடக்கும்.

@ ராஜ நடராஜன் நன்றி ,

@ பாலகுமார் நன்றி .. ஆம் நெடுஞ்சாலைகளின் முக்கியத்துவத்தை அறியாததே இத்தனை உயிரிழப்புக்கும் பொருள் இழப்புக்கும் காரணம்.

@ சிவகுமார் நன்றி

Suppa S said...

Where did u got these statistics... really amazing !!

ராஜீவ் காந்தி சாலை OMR proposed deadline was 2005 but till now the work in going on... Pallavaram bridge going to get completed by this Jun'03 was being in construction for 10 years.... For a PM its mandatory to check the schedules. I really wonder, while signing the construction agreement with the contractor, y dont they mention some thing like - 'If your project gets delay by this much weeks, 1. your toll period will get reduced or 2. a penalty amount needs to be imposed or 3. You have to lay this much amount of extra road. etc.,'

Haripandi Rengasamy said...

@ சுபாஷ், நீங்கள் கூறியது சரி தான். சாலைகள் போட contractor தாமதப்படுத்தினால் அவர்களுக்கு penalty விதிக்க வேண்டும். ஆனால் சாலைகள் போடுவதில் ஏற்படும் தாமதத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது, நிலங்களை கையகப்படுத்துதல். அதை அரசாங்க அதிகாரிகள் விரைவாக செய்து முடித்தாலே பெரும்பாலான பணிகள் விரைவாக நடைபெறும்.

Devaraj Rajagopalan said...
This comment has been removed by the author.
Devaraj Rajagopalan said...

உன்னுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீ கூறியது போல் ஓவ்வொருவருக்கும் விழிப்புணர்வும் தேவை. நம்முடைய நாட்டில் மட்டும் தான் தேச பற்றின்றி கடனே என்று வேலை செய்கிறார்கள்.
இங்கு இருக்கும் சாலைகள், இந்தியவில் இருக்கும் சாலைகள் போல் அமைக்க படவில்லை.
அவகைள் நன்கு திட்டமிட்டு ஒரு கட்டிடத்தை போல் கட்ட படுகிறது. அதனால் மீண்டும் அந்த சாலைகள் பழுதடைவதிலை நம் நாட்டிலோ கடனே என்று வேலை செய்வதால் பலமுறை அதே சாலைகளை பழுது பார்கவேண்டியதாக உள்ளது. விழிப்புணர்வு தனி மனிதரில் துவங்கி, ஒரு தேசம் முழுவதும் செல்ல வேண்டும். முதலில் நம்முடைய ஊர் கவுன்சிலர் பின்னர் நம்முடைய நாடு பின்னர் தேசம் என்று ஒழுங்கு படுத்த வேண்டும். ஒரு தேசத்தயே ஒரே மூச்சில் மாற்றுவது கடினம் தான். முதலில் தமிழ் நாட்டை எடுத்து கொள்வோம். தமிழ் நாட்டில் எல்ல சாலைகளும் நன்றாக இருந்தால் மற்ற நாடுகள் நம் நாட்டை பார்த்து அவர்களுக்கும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வரல்லம். இப்படியாக ஒரு தேசமே மாறுதல் அடைய வாய்ப்பு உள்ளது.

Shankar.Nash said...

Tats a wonderful post da... amazing stats u hav collected and put up your plan. Wish some body who thinks like u gets the highways ministry and implements these too.

madu said...

All are amazing facts... i dont know how u managed to collect all these.... In India the land acquisition is taking long time coz if it affects 10 people u will see a harthal for a week. Also the compensation should be increased

Dr. Srjith. said...

அருமை நண்பரே

Haripandi Rengasamy said...

தேவராஜ், நீ கூறுவது உண்மைதான் முதலில் ஒரு தனிமனிதரிலிருந்து விழிப்புணர்வு ஆரம்பிக்கவேண்டும். அப்படி ஆகிவிட்டாலே போதும் நம் நாடு முன்னேறிவிடும்.

சங்கர், மது மற்றும் Dr.Srijith க்கு என் நன்றிகள்