Thursday, March 11, 2010

சீனா - விலகும் திரை - விமர்சனம்


நான் சமீபத்தில் படித்த புத்தகம் சீனா - விலகும் திரை. அதில் சீனாவின் இன்றைய நிலையைப் பற்றிக் கூறப்பட்டிருந்த்தது . அதை எழுதியவர் பல்லவி ஐயர் . இவர் ஹிந்து போன்ற தேசிய நாளிதழ்களில் பல கட்டுரைகளை எழுதியவர். குறிப்பாக சீனாவைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்லவி தன் ஸ்பானிய காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவில் வேலை பெற்றுச் சென்றார். அங்கு இருந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களே இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

பல்லவி பிஜிங்கில் ஒரு பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக வேலை செய்தார். சீனாவில் இருந்த காலங்களில் சீன மொழி தெரியாததால் அவருக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களை சுவைபடக் கூறியிருப்பார். பல்லவி சீனாவில் இருந்தபோது அதை நன்றாகப் புரிந்துகொள்ள, மக்களோடு மக்களாக இருக்க எண்ணி பெயஜின்கின் பழமையான வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியிருப்பார். பிறகு சீன மொழியையும் கற்றுக் கொண்டார்.

அவருடைய சீன மாணவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறுவதற்காக தங்களுடைய பெயர்களையும் ஆங்கிலப் பெயர்களாக மாற்றிக்கொண்டார்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களுடைய பெயர்கள் மேற்க்கத்திய பெயர்களாக இல்லாமல் ஆங்கில வார்த்தைகளாக இருந்தன. அவருடைய மாணவர்களில் ஒருவனுடைய பெயர் "சும்மா", இன்னொருவன் பெண் பெயரை அது பெண் பெயர் என்று கூட தெரியாமல் வைத்துக்கொண்டிருந்தான்.

சீனாவின் பொருளாதாரம் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம். அதேநேரத்தில் சீனா ஒரு கம்யூனிச நாடு. ஆனால் பல்லவியைப் பொறுத்தவரையில் வெளிப்புரத்தில்தான் அது ஒரு கம்யூனிச நாடு , உண்மையில் அது ஒரு காபிடலிஸ்ட் நாடுதான்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மிக முக்கிய வேறுபாடாக அவர் கருதுவது எந்த ஒரு தொழிலைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள். சீனாவில் தொழில் பாகுபாடு கிடையாது என்பதுதான். ஒரு கழிப்பறை துப்புரவாளர் கூட அங்கு மதிக்கப்படுவதுதான். சீன மக்களைப் பொறுத்தவரை எந்த ஒரு தொழிலும் இழிவானது கிடையாது. சீனாவில் மிக பாராட்டப்பவேண்டிய விஷயம் இது .

சீனாவில் ஒலிம்பிக் நடந்த காலங்களில் பல்லவி அங்கு இருந்திருக்கிறார். அதனால் ஒலிம்பிக்கிற்காக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்கின் போது சீனா வெளிப்புறமாக பகட்டாக இருந்தாலும், உள்ளூர , உள்ளூர் மக்கள் பல வேதனைகளை அனுபவித்திருப்பதாக பல்லவி எழுதுகிறார். மக்களின் பல வீடுகள் ஒலிம்பிக்கிற்காக இடிக்கப்பட்டன. இதற்காக மக்களுக்கு இழப்பீடுகள் கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை என்று பல்லவி கூறுகிறார்.

வெளிப்புறமாக சீனா பகட்டாக, ஆடம்பரமாக, பொருளாதாரத்தில் மிக பலம் வாய்ந்த நாடாக தெரிந்தாலும் , உள்ளூர லஞ்சமும் ஊழலும் இந்தியாவைப் போலவே மிக அதிகம் என்கிறார். இதையும் தாண்டி அது பொருளாதாரத்தில் பீடு நடை போடுவதுதான் அதனுடைய பலம் , கவர்ச்சி எல்லாம்.

சீனப் பொருளாதாரம் அதன் மக்களுக்கு மிக நல்ல வாழ்க்கை முறையைக் கொடுத்துள்ளது. இருந்தாலும் அதற்க்கு அவர்கள் கொடுத்த விலை, சுதந்திரம் . சீன மக்கள் சீன அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு விமர்சனத்தையும் எழுப்ப முடியாது. மக்களுக்கு எதிராக எது நடந்தாலும், உள்ளூர புழுங்கிக் கொண்டு அதனை பொறுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் அப்படி கிடையாது. இந்தியப் பொருளாதாரம் அப்படி ஒன்றும் நல்ல வாழ்க்கையை அடித்தட்டு மக்களுக்கு வழங்கவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது, அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து குரல் எழுப்ப முடியும், ஏன் தங்கள் ஓட்டால் அரசாங்கத்தையே மாற்ற முடியும். இதுதான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மிக முக்கிய மற்றொரு வித்தியாசம் என்கிறார்.

சீனா, திபெத்திற்கு ஒரு ரயில் பாதை போட்டது. அது ஆரம்பிக்கும் போது, அனைவரும் அது முடியாது என்றே நினைத்தனர். திபெத் உலகின் கூரை எனப்படும் பகுதி. மிக அதிகமான உயரத்தில் அமைந்திருப்பதால் அது அவ்வாறு அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்திற்கே சீனா ரயில் பாதை அமைத்தது. இந்த ரயில் பதை திட்டத்தில் பல தொழில்நுட்ப சவால்கள் நிறைந்திருந்தன. முக்கியமாக உயரத்தில் ஆக்ஜிசன் குறைபாட்டால் தொழிலாளர்களும், பயணிகளும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இதனால் அவர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஜிசன் அளிக்கப்பட்டன. பனியின் மீது தண்டவாளங்கள் அமைப்பதில் அதிக அபாயம் உள்ளது. ஏனெனில் பனிப்பாறை உருகிவிட்டால் அவ்வளவுதான். இதற்க்கு சீன பொறியாளர்கள் அப்பனி உருகிவிடாமல் இருக்க பெரிய குளுர்விப்பான்கள் மூலம் குளிர்வித்தனர். இப்படியாக பல சவால்கள் சமாளிக்கப்பட்டன. இந்த ரயில் பாதை தொழிநுட்ப அளவில் பேசப்பட்டதை விட அரசியல் அளவில் பேசப்பட்டதே அதிகம் என்கிறார் பல்லவி. ஏனெனில் இந்த ரயில் பாதை திபெத்தின் மீதான சீனாவின் இரும்புப் பிடியை அதிகரிக்கும் . சீனா ஒரு நாளுக்குள்ளாகவே தன்னுடைய படைகளை திபெத்தில் இந்த இருப்புப் பாதை மூலம் குவித்துவிட முடியும். மேலும் இந்த புதிய இருப்புப்பாதை திபெத்தின் தனி கலாச்சாரத்தையும் அதன் சுற்றுச் சூழலையும் கெடுத்துவிடும் என்பதும், மேலும் சீன ஹன் இன மக்களின் குடியேற்றங்களை திபெத்தில் அதிகரித்துவிடும் என்பதும் தலாய்லாமாவின் எண்ணம் என்கிறார் பல்லவி.

திபெத்தில் தலாய்லாமாவின் புகைப் படத்தை வைத்திருப்பதே குற்றம். இருந்தபோதிலும் அங்கிருக்கும் நிறைய மக்கள் தலாய்லாமாவின் புகைப் படத்தை வைத்திருப்பதும் ,அவரைக் காண எல்லை தாண்டி இந்தியா வருவதும், இன்றும் திபெத் மக்களுக்கு தலாய்லாமாவின்மீது இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காட்டுகிறது என்கிறார் பல்லவி .

ஒரு சில சீனர்களிடம் பல்லவி, நீங்கள் ஏன் தலாய்லாமாவை வெறுக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் ஏனென்றால் அவர் ஒரு வன்முறையாளர், ஒரு பிரிவினைவாதி என்று கூறியுள்ளனர். அதற்க்கு பல்லவி , "அவர் ஒரு வன்முறைவாதி என்றால் பிறகு எப்படி அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது " என்றிருக்கிறார். அதற்க்கு சீனர்கள் "என்னது அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறதா " என்று கேட்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு சீனா, தலாய்லாமாவை இருட்டடிப்பு செய்திருப்பதாக பல்லவி கூறுகிறார்.

சீனா, பெரிய அணைக்கட்டு ஒன்றை கட்டி வருகிறது. அதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்த அணைத்திட்டம் சீனாவின் வளர்ந்து வரும் மின்சாரத் தேவையை ஈடுக்கட்டுவதற்க்காக கட்டப்பட்டு வருகிறது . இந்த அணைத்திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்பை இழப்பதோடு மட்டுமல்லாமல் , சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் ஏற்ப்படுத்தும் என்ற குற்றச்சாட்டையும் கிளப்பி வருகிறது. இவற்றை எல்லாம் மீறி சீனா அந்த அணையைக் கட்டி வருவதை , பல்லவி இந்தியாவில் நர்மதைஆற்றிற்கு குறுக்கே அணைகட்டுவதற்கு எழும்பிவரும் எதிர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார். இதுதான் ஜனநாயகம். எப்படி ஒரு கட்சி ஆட்சி முறையில் நல்லதும் கேட்டதும் உள்ளது போல ஜனநாயகத்திலும் குறைபாடுகள் உள்ளன. இன்னவொன்று சீனா ஒவ்வொரு செயல் செய்யும்போதும் , அது இந்தியாவை ஒப்பிட்டே மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது . அதாவது ஒரு பெரிய அணை கட்டும்போதோ அல்லது மிகப் பெரிய சாலைகள் கட்டும்போது மக்கள் வெளியேற்றப்ப்படும்போது , சீனா மக்களிடம் "உங்களுக்கு மிகப் பெரிய அணை , சாலைகள் வேண்டுமா அல்லது இந்தியா போன்று இண்டு இடுக்கில் நீங்கள் மின்சாரம் இன்றி தவிக்க வேண்டுமா " என்றே எப்பொழுதும் இந்தியாவுடன் ஒப்பிட்டே பிரச்சாரம் செய்து வருவதாக பல்லவி கூறுகிறார்.

சீனாவில் பல்லவி செய்தி சேகரிப்பதற்காக எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் போது அவருடன் கூடவே அந்த ஊரைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூடவே வருவாராம். அவருடைய பணி உளவு பார்ப்பது. செய்தி சேகரிக்கும்போது மக்கள் சீனாவைப் பற்றி நல்லபடியாக கூறுவதை உறுதி செய்வதற்காக அவர் உடன் வருவாராம். இப்படி எந்த ஒரு செய்தியும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் சார்ஸ் நோய் பரவியபோதுதான் அதன் உண்மையான சொரூபம் தெரியவந்தது என்கிறார். ஆரம்பக்கட்டத்தில் சீனா சார்ஸ் நோய் பரவவில்லை என்றே செய்திகளை சென்சார் செய்து கூறிவந்துள்ளது. மக்களும் அதை நம்பியுள்ளனர். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் உண்மையை மறைக்க முடியாமல் , உண்மையான எண்ணிக்கையை ஒப்புக்கொண்டுள்ளது . இப்படி திடீரென்று அரசாங்கம் பெரிய எண்ணிகையை ஒப்புக்கொண்டவுடன் மக்கள் பயந்துவிட்டனர் . பல்லவி வேலை பார்த்த பல்கலைக்கழகத்திலிருந்து மாணர்வர்கள் அனைவரும் விடுமுறை எடுத்துக்கொண்டு பயந்துகொண்டு சொந்த ஊர் சென்றுவிட்டனராம். இந்தியாவில் இந்த மாதிரி நிகழ்ச்சியை காண முடியாது என்கிறார் பல்லவி. ஏனென்றால் மக்களுக்கு நோய் பரவும் நாளிலிருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் தெரியும். அதனால் பெரிதாக பயப்படமாட்டார்கள்.

ஒரு இடத்தில் பல்லவி சொல்வார், நான் ஏழையாக இருந்தால் சீனாவிலும் பணக்காரராக இருந்தால் இந்தியாவிலும் பிறக்க ஆசைப்படுவேன் . இந்த ஒரு சொற்றொடரே இந்தியா, சீனாவைப் பற்றி அறிய உதவும்.

சீனாவின் இன்றையக் காலநிலையை அறிய இந்த புத்தகம் நன்கு உதவும்.

photo courtesy : http://cache.boston.com/universal/site_graphics/blogs/bigpicture/chinamil_07_09/chinamil12.jpg

7 comments:

ராஜ நடராஜன் said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

Suppa S said...

சீனா பெரும்சுவருக்கு அப்பால் நடக்கும் உண்மை பதிவு. ஒலிம்பிக்ஸ் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது, ஒலிம்பிக்ஸ் நடக்கும் நாள்களில் முதல் நாள் ஒற்றை இழக்க என் கொண்ட வாகனங்கள் மட்டும் வீதியில் செல்லலாம், மறுநாள் இரட்டை இழக்க வாகனங்கள் மட்டும் செல்லும். இவை அனைத்தும் வாகன புகை மாசு கட்டுபாடிற்காக. இந்தியாவில் இது நடைமுறை சாத்தியம் இல்லை. என்ன தான் சொன்னாலும் ஒலிம்பிக்ஸில் சீனா உலகை வியக்க வைத்தது என்று சொன்னால் மிகையில்லை.

JDK said...

Very Good Pandi! That was very Informative. Pls do more like this.

Haripandi Rengasamy said...

@ ராஜா நடராஜன்,

உங்களின் நன்றிக்கு என்னுடைய நன்றிகள்.

@ suppa

yes suppa, implementing this kind of rules are not possible in "Democratic" India ... china amazed everyone in the way it conducted 2008 Olympics ...

@ my dear friend jdk , i try to do my level best ...thanks for your complements ..

கானகம் said...

நல்ல விமர்சனம்.

Haripandi Rengasamy said...

@ ஜெயக்குமார் , மிக்க நன்றி

Anand said...

மிக நல்ல பதிவு.... சீனா எப்பொழுதும் இந்தியா-வை சுட்டுகிறது ஒருபுறம், மறுபுறம் இல்ங்கையுடன் கூட்டு சேர்ந்து இராமேஸ்வரம் தீவை அபகரிக்க திட்டம் தீட்டுகிறது.