Monday, December 31, 2012

சச்சின் - ஒரு சகாப்தம்



சச்சின் - ஒரு சகாப்தம் . உலக அரங்கில் கிரிக்கெட் மிகப் பெரிய அளவில் பிரபலமாகத் தொடங்கியது இந்தியா உலகக் கோப்பை ஜெயித்த பிறகுதான். சச்சின் கிரிக்கெட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களில் அது மிகப் பெரிய பணம் காச்சி மரமானது . அதற்கு ICC யும் BCCI யும் சச்சினுக்கு மிகப் பெரிய கடமைபட்டிருக்கின்றன. இது சச்சினாக நினைத்து நடத்தியது அல்ல. அது தானாக நடந்தது. இதற்கு சச்சின் கிரிக்கெட்டை முற்றிலும் முழுதாக நேசித்ததே காரணம்.

23 ஆண்டுகள். ஒரு தலைமுறையே சச்சினை , சச்சினை மட்டுமே பார்த்து வளர்ந்தார்கள் . அந்த தலைமுறையில் நானும் ஒருத்தன் என்பது நான் செய்த பாக்கியம். சச்சின் என்ற பெயருக்கே ஒரு சிலிர்ப்பு வரும் . சச்சின் ஒரு  cricket legend + entertainer என்பது மிகப் பெரிய விஷயம். சச்சினுக்கு இணையாக எங்கள்  தலைமுறையில் இருந்தது  லாரா ஒருத்தர்தான். சச்சினின் பொற்காலம் இந்திய கேபிள் TV உலகின் பொற்காலமுமாக இருந்தது நாங்கள் செய்த பாக்கியம். 1996 மற்றும் 2003 கிரிக்கெட் World Cup அவ்வளவு சுவாரசியமாக இருந்ததே சச்சினால்தான்.

சச்சினுக்காக மட்டுமே கிரிக்கெட் பார்த்து சச்சினுக்கு வீசப்படும் ஒவ்வொரு பாலின்போதும்  ஐயோ எங்கே இந்த பாலில் சச்சின் out ஆகிவிடுவானோ என்று  பதறி அதே பந்து பவுண்டரி லயனை தாண்டும் போது தோன்றும் உணர்வு இருக்குதே அப்படி இருக்கும். சச்சின் out ஆகிட்டா TV ஐ  அணைத்து விட்டு போன காலங்கள் அதிகம். தொன்னூறுகளில் இந்தியா one man  army போலதான் இருந்தது.

சச்சின் வைத்திருக்கும் உலக சாதனைகள் கிட்டத்தட்ட 70 வதுக்கும் மேல் . கிட்டத்தட்ட batting இல் இருக்கும் சாதனைகளில் முக்கால்வாசி  சச்சினுடயதுதான். அது ரசிகர்களுக்கு பிடித்த record ஆக இருக்கட்டும் பிடிக்காத record ஆக இருக்கட்டும். ODI இல் மட்டும் சச்சின் miss பண்ண சதங்களின் எண்ணிக்கை  18. சச்சின் 99 லிருந்து 100 , 100 கள்  அடிப்பதற்குள் சச்சின் ஒரே வருடத்தில் மிஸ் பண்ண சதங்களின் எண்ணிக்கை மட்டும் 8 . இதற்கு டோனி சொன்னதுதான் மிகப் பொருத்தம் . உலகில் ஒரு சதம் கூட போடாமல் retired ஆனவங்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும் இந்த உலகில் சச்சின் ஒரு வருடத்தில் இழந்த எண்ணிக்கை 8 என்கிறபோது அவருடைய திறமை புரியும் என்றார். இதற்கு மேல் வேறு என்ன சொல்ல முடியும் .

 எந்த ஒரு காலகட்டத்திலும் தான் form இல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னிலை மறக்காதவர்.  on field லும் off field லும் சச்சினுடைய நடத்தைதான் சச்சினின் இந்த உயரத்திகுக் காரணம். சச்சினுக்கு தன்னுடைய பலம் பலவீனம் மிக நன்றாகத் தெரியும்.சச்சின் கெயில், கில்க்ரிஸ்ட் மாதிரி எல்லாம் ரொம்ப அதிக இமாலய சிக்சர் எல்லாம் அடிப்பவர் இல்லை . அதனால்தான் அவர் பவுண்டரிகள் அதிகம் அடித்தார். லாரா போன்று கிரவுண்டில் இரண்டு மூன்று நாட்கள் இருந்து டெஸ்டில் 300,400 ரன்கள் எடுப்பவர் அல்ல. ஆனால் சச்சின் தான் டெஸ்டில் அதிக ரன்கள் அடித்ததும் அதிக சதங்கள் அடித்ததும். ஆனால் அப்படியும் ODI ஐயில் இரட்டைச் சதத்தை சேவாக்கால் மட்டுமே அடிக்க முடியும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த பொழுது முதல் ஆளாக இரட்டைச் சதத்தை அடித்து என்றும் நான்தான் king என்று நிரூபித்தார்.

சச்சினின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பு வேறு எந்த வீரரின் மீதும் இல்லை. சச்சின் 99 சதங்கள் அடித்திருந்த பொழுதுகளில் அன்று TV இல் சச்சின் 37 ரன்கள் அடித்து out ஆகியபோது சச்சின் இன்றும் சதம் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார் என்று கூறினர் . இப்படி ஒவ்வொரு போட்டியிலும் 100 ரன்களுக்கு குறைவான எந்த போட்டியையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மாதிரி ஒரு pressure cooker situation இல் எந்த ஒரு விளையாட்டு வீரரும் இருந்ததில்லை.  அந்த pressure இல் விளையாடுவது என்பது மிகக் கஷ்டம்.
சச்சின் அதையும் தாண்டி விளையாடினார். சச்சின் tennis elbow பிரச்சனையில் தவித்த போது இனி சச்சின் அவ்வளவுதான் என்றவர்களுக்கு தன்னுடைய batting style ஐயே மாற்றிக் கொண்டு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். இப்படி தன்னுடைய batting style ஐயே மாற்றிக்கொண்டு விளையாடுவதென்பது மிகக் கஷ்டம். ஆனால் சச்சின் அதைச் செய்தார்.

உலகில் இருக்கும் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்படுவதற்குத்தான். ஆனால் இனி வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டும் ODI கிரிக்கெட்டும் போய் T20 யும் அதற்கு அப்புறம் 5 ஓவர் மாட்ச்சிற்கும்தான் வாழ்வு எனும் நிலையில் சச்சினின் ODI மற்றும் டெஸ்டில் மிக அதிக சதம் , மிக அதிக மேட்ச் , மிக அதிக ரன்கள் போன்ற சாதனைகள்  முறியடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோசம். சச்சினின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

உலகில் இருக்கும் அனைத்து batting சாதனைகளும் சச்சின் மட்டும்தான் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசை பிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன். மிகக் குறைந்தபட்சம் சச்சினுக்கு மிக அருகில் இருக்கும் 500 ODI போட்டிகள் விளையாண்ட ஓரே  வீரர், 200 டெஸ்ட் போட்டிகள் விளையாண்ட ஓரே வீரர் , டெஸ்ட் மற்றும் ODI இரண்டிலும் சதங்களில் அரைச்சதம் அடித்த ஓரே வீரர் போன்ற பெருமைகள் சச்சின் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இப்படி திடுதிடுப்பென்று ODI ஐயிலிருந்து ஓய்வு அறிவித்தது நிச்சயம் மிகப் பெரிய அதிர்ச்சி. அதுவும் ground இல் இருந்து ஓய்வு பெறாமல் ஒரு அறிக்கையின் மூலம் ஓய்வை அறிவித்தது மிகப் பெரிய அதிர்ச்சி. சச்சின் அவருக்காக இல்லாவிட்டாலும் அவருடைய கோடானு கோடி ரசிகர்களுக்காக ground இல் retired ஆகி இருக்கணும் . At least சச்சின் தன்னுடைய வாழ்நாள் கனவான உலகக் கோப்பையை கைபற்றிவிட்டதே என் போன்ற ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல்.

If cricket is a religion then sachin is a god.

Yes Sachin is a god !


Photo Courtesy : http://www.indya101.com/c/wallpapers/view/8131/Sachin_Tendulkar/Sachin_Tendulkar

No comments: