Sunday, November 4, 2012

30 நிமிடத்தில் பதிவர் ஆவது எப்படி ;)


http://images.kw.com/agent_photos/0/6/7/067477//library/Blog_Pen_1266364241013.jpg

எனக்கு வரலாருனா ரொம்ப பிடிக்கும் . என் friends கூட பேசும்போது கூட அங்கங்க கொஞ்சம் history எட்டிப்பாக்கும் . அதை பாத்த என் friends நீ ஏன் ஒரு blog ஆரம்பிச்சு இத பத்திலாம் எழுதக் கூடாதுன்னு சொன்னாங்க. அத பாத்துதான் எனக்கு blog ஆரம்பிக்கணும்னு தோணுச்சு .

ஒருத்தர் blog ஆரம்பிக்கும்போது சில விசயங்களை முன்னாடியே யோசிச்சு வச்சுக்குங்க. முதல்ல blog க்கான பேர் . அது உங்க blog ல நீங்க என்ன மாதிரி விசயங்களை எழுதப் போறீங்கங்கனு தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி வைங்க . உங்களோட பேரையே உங்க blog க்குக்கு வைக்கிறதுல சில நன்மைகள் இருக்கு. அந்த ப்ளாக் எந்த ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் அடங்காம உங்களோட எண்ணங்களையும் , உங்களோட mood ஐயும் பொறுத்து எந்த மாதிரி விசயங்களையும் கொண்டிருக்கலாம். முதலில் என் வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்குறதுன்னு தெரியாம பல நாள் யோசிச்சேன். அதனாலையே வலைப்பூ தொடங்குவதற்கான காலம் தள்ளிக்கொண்டே போனது. கடைசியில் இவ்ளோ யோசிக்கிறதுக்கு என் பேரையே வச்சுரலாம்னு என் பெயரையே என் வலைப்பூவிற்கு வைத்தேன். அது கிட்டத்தட்ட accident தான் . ஆனால் அது நலமாகவே அமைந்தது .

ரெண்டாவது நீங்க எந்த மொழில எழுதப் போறீங்கங்கிறதையும் முதலிலேயே முடிவு பண்ணுங்க. பொதுவா ஒரு blog ல ஒரே மொழிலயே எழுதுங்க . வேறு மொழில எழுதணும்னு தோணுச்சுனா அதுக்கு தனி blog வச்சுக்குங்க. பொதுவா மொழிக்கான வாசகர்கள் தான் அதிகம் . உங்க blog க்குக்கு வர்றவங்க பொதுவா ஒரே மொழில படிக்கதான் விரும்புவாங்க.

அடுத்து உங்க blog க்குக்கான  URL . பொதுவா உங்க URL உங்களையே உங்களை காட்டுறது மாதிரி தேர்ந்தெடுங்கள் . பிற பிரபல பதிவர்களின் URL லில் ஒன்று இரண்டு எழுத்துக்கள் மட்டும் மாற்றி நீங்கள் தேர்ந்தெடுக்கும் உங்கள் URL உங்களுக்கான எந்த ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தாது .

அடுத்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் blog provider . மிக பிரபலமாக இருக்கும்  blog provider இரண்டு. ஒன்று google இன் blogspot மற்றொன்று wordpress . நான் தமிழில் எழுத பயன்படுத்துவது google இன் transliterate. நான் blog எழுத ஆரம்பித்தபோது blogspot தான் transliterate இன் font ஐ support செய்தது . மேலும் google account மூலமாகவே நீங்கள் blogspot இல் blog தொடங்கலாம் . உங்கள் viewers பற்றிய statistics லாம் நீங்கள் google இன் மூலமே தெரிந்து கொள்ளலாம். இதனாலையே நான் blogspot ஐ தேர்ந்தெடுத்தேன் . wordpress உம்  பிரபலமான தளம்தான் .


அடுத்து பதிவுகள். நீங்கள் என்னவேண்டுமென்றாலும் எழுதுங்கள் அது உங்கள் எண்ணங்களையும் mood ஐயும் பொறுத்தது . நீங்கள் எழுத எழுத உங்களுக்கென்ற நடை அதுவே அமைந்துவிடும் . இப்படிதான் அப்படிதான்னு எழுதணும்னு இல்லை. நல்லா இருக்கணும். அவ்ளோதான் :). ஆனா சில விசயங்களை கடைபிடிங்க. பொதுவா ஒன்றிரண்டு பத்திகளிலேயே வாசகர்கள் அந்த பதிவை படிக்கணுமா வேணாமானு முடிவு  பண்ணிருவாங்க . அதனால் உங்கள் பதிவின் ஒன்றிரண்டு பத்திகளிலேயே உங்கள் பதிவைப்  பற்றியும் , நீங்கள் எதை முன்னிறுத்தப் போறீங்கணுங்கிறதையும் சொல்லிருங்க . அடுத்து பதிவின்  அடக்கம் . நீங்க என்ன சொல்றீங்கங்குறதை அடுத்தடுத்த பத்திகளில் விளக்குங்க. நீங்கள் சொல்கிற செய்திகளின்  மூலத்தை வேறு எங்கிருந்தாவது பெற்றிருந்தால் அந்த பக்கங்களுக்கு உரலி (லிங்க்) கொடுங்க. அதையும் அந்தந்த விஷயம் பற்றிய வார்த்தைகளின் மீது கொடுங்க. அது இரண்டு விதங்களில் நல்லது . ஒன்று அது உங்கள் மீதான நம்பிக்கையையும் , நீங்கள் சொல்லும் விவரத்தின் மீதான உண்மைத்தன்மையையும் அதிகரிக்கும் . இரண்டு நீங்கள் கூறும் விவரத்தை பற்றி வாசகர்கள் மேலும் அறிய அந்த உரலி உதவும் . இது முக்கியமாக உண்மைச் சம்பவங்களுக்கு குறிப்பாக வரலாறு , statistics க்கு  போன்ற பதிவுகளுக்கு கொடுப்பது நன்று .

சொன்ன விசயங்களையே அடுத்தடுத்த பத்திகளில் சொல்லாதீர்கள் அது வாசகர்களுக்கு எரிச்சலையே கொடுக்கும் . நான் பல நேரங்களில் என்னுடைய பதிவுகளில் இந்தத் தவறை செய்திருக்கிறேன் . மற்றொரு முக்கிய விஷயம் நீங்கள் சொல்ல வரும் அனைத்து விசயங்களையும் மொத்தமாக வாந்தி எடுப்பது போல் சொல்லாதீர்கள்  நீங்கள் கொட்டிய  விசயங்களிலிருந்து உங்களுடைய வாசகர்கள் தேவையானதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று எண்ணாதீர்கள் . Feed your viewers. நான் செய்யும் மிக முக்கியமான தவறு இது .

பதிவிற்கான தலைப்பு . உங்களுடைய பதிவிற்கான முதல் விளம்பரம் உங்கள் பதிவின் தலைப்புதான் . அந்த தலைப்பு உங்கள் 5 பக்க  பதிவைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் தெரிவிப்பதாக இருக்க வேண்டும் . பதிவிற்கான தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிக மோசம் . எழுதி முடித்து ஏதோ ஒரு தலைப்பைக் போட்டு போஸ்ட் பண்ணிவிட வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன் . பல பதிவுகளுக்கு நான் மிக மோசமான தலைப்பைக் கொடுத்துள்ளேன்.

எடுத்துக்காட்டு "சோமாலியப் பெண்களை துரத்தும் பசிகொடுமை,கற்பழிப்புகள் மற்றும் கழுதைப்புலிகள்" , "விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?". இந்த தலைப்புக்கள் ஒரு வேளை நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி இருக்கலாம் . ஆனால் அவை crisp ஆகவோ அல்லது கவரும் படியாகவோ இல்லை. சில நேரங்களில் இது தலைப்பாகவே தோன்றவில்லை . இருந்தாலும் நான் வைத்த தலைப்பிற்காக நான் அதிகம் பெருமைப்படும் பதிவுகளும் உண்டு . அதில் முக்கியமானது "Lift please " . அந்தப் பதிவைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் அது சொல்லியது . இத்தனைக்கும் அது நான் முதலில் வைத்த பெயர் அல்ல. எப்போதும் போல் அவசரத்தில் நான் வைத்த பெயர் "Lift" . கேவலமா இருக்குல்ல ;) . பிறகுதான் நான் மாற்றிய பெயர் "Lift please" .
Editing , ஒரு பதிவிற்கு editing ரொம்ப முக்கியம் . அடுத்தடுத்து எந்த எந்த விசயங்கள் வரவேண்டும் என்பதை அது தீர்மானிக்கும் . முக்கியமாக எந்த ஒரு பதிவும் crisp ஆக இருந்தால் மிக அருமையாக இருக்கும் . என்னுடைய "Lift please" பதிவிலேயே நான் கடைசி நிமிடத்தில் சேர்த்த ஜெரிமி மரி பற்றிய செய்தி அந்த பதிவிற்கே ஒரு தனி கோணத்தை கொடுத்தது . அந்த பத்தி நான் வேறு ஒரு பதிவிற்காக எழுதியது. கடைசி நிமிடத்தில்தான் அந்த பதிவில் சேர்த்தேன். நிச்சயம் இவை நான் திட்டமிட்டு செய்தது அல்ல. அது ஒரு விபத்து போன்று தான் அமைந்தது .
அடுத்து பதிவின் முடிவு . எவ்வளவு நன்றாக ஆரம்பிக்கிறோமோ அவ்வாறு அழகாக முடிக்க வேண்டும் . இதிலும் நான் பல பதிவுகளில் சொதப்பி உள்ளேன் . இதிலும் சிறப்பாக அமைந்தது "Lift please" பதிவுதான் .
உங்களுடைய வலைப்பூ வை நீங்கள் பிரபலப்படுத்த விரும்பினால்  அதற்கென்று பல தளங்கள் உள்ளன . அவற்றில் நீங்கள் சென்று பதியலாம். நானும் முதலில் என் நண்பன் சொன்னதற்காக அத்தகைய தளங்களில் சென்று பதிந்தேன். ஒவ்வொரு பதிவும் போடும்போது  அங்கு சென்று பதிவேன் . அது கொஞ்ச காலத்திற்குதான் . ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்வதில்லை . அதிகபட்சம் பதிவு போட்ட பிறகு என்னுடைய facebook கில் பதிவிற்கான உரலி கொடுப்பேன். அவ்வளவுதான் . இது எல்லாம் அவரவரின் விருப்பத்தைப் பொறுத்தது .

கடைசியாக முக்கியமான விஷயம் . பதிவு என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. எந்த கட்டுக்குள் அடங்காவிட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும் எதுவுமே நல்ல பதிவுதான் . முக்கியமாக ஒரு நல்ல பதிவு என்பது பதிவருக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். உங்களுக்காக எழுதுங்கள் . வேறு எதுவும் முக்கியமில்லை. ஆகையால் நல்ல பதிவிற்கு மேலே சொன்ன எதுவுமே முக்கியமில்லை :)

Disclaimer :
1)  சும்மா எழுதணும்னு தோணுச்சு அவ்ளோதான் :).
2) மேலே சொன்ன பல விசயங்களை நானே பல பதிவுகளில் கடைபிடித்ததில்லை . எல்லாமே நான் எழுதும்போது என்னுடைய mood ஐயும் சூழலையும் பொறுத்தது . அதனால் நான் என்னுடைய பதிவுகளில் நான் மேற்சொன்னவற்றைக் கடைபிடிக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்காதீர்கள் ;) . ஏன்னா பல நேரங்களில் என் பேச்சை நானே கேட்பதில்லை ;) .

Photo Courtesy : http://images.kw.com/agent_photos/0/6/7/067477//library/Blog_Pen_1266364241013.jpg

3 comments:

Vidhya said...
This comment has been removed by a blog administrator.
Vidhya said...

Blog எழுதுவதிலேந்து மாறி , பெரிய எழுத்தாளர் ஆகரீங்க :) Good புக் publish பண்ணுங்க :)

Haripandi Rengasamy said...

thank you vidhya :)