ஒருத்தர்கிட்ட lift கேட்டு போற பழக்கம் எனக்கு எப்ப வந்துச்சுன்னு யோசிச்சுப் பார்த்தா , அது எனக்கு college படிக்கிறப்ப வந்துச்சு. அதுவும் தாம்பரம் ரயில்வே ஸ்டேசன்ல இருந்து camproad போயிருக்கேன். முக்கியமா அங்கலாம் அப்ப ஒரு பத்து மணிக்கு மேல எந்த பஸ்சும் இருக்காது. ஒன்னு பெரும்பாலும் நடந்து போகணும் , இல்ல ஆட்டோ இல்லனா யாருட்டயாவது lift தான். அப்ப ஈஸ்ட் தாம்பரம் ரயில்வே ஸ்டேசன் வாசல்ல நிறைய பேரு lift கேட்டு வெயிட் பண்ணுவாங்க. பெரும்பாலும் bike lift தான். யாரும் கார்ல்ல lift கொடுத்து நான் பாத்ததில்ல. ஆனா என் பிரண்ட்ஸ் சில பேரு கார்ல lift கேட்டு போனதா சொல்லி இருக்காங்க.
அதுக்கப்புறம் நான் காலேஜ் முடிச்சு office சேர்ந்து bike வாங்குனப்புறம் முடிஞ்ச அளவுக்கு lift கேட்குறவங்களுக்கு lift கொடுத்துருக்கேன். நானும் மதுவும் பெரும்பாலும் ஒரே பைக்ல ஒன்னாவே எல்லா எடத்துக்கும் போனதால lift கொடுக்க பெரும்பாலும் வாய்ப்பு அமஞ்சதில்ல. அதுக்கப்புறம் இப்ப office மாறுனப்புறம் அதிகமா lift கொடுக்குறேன். அதுவும் அந்த ரோட்டுல இருந்து office போற அந்த 3 k.m க்கு பெரும்பாலும் நிறைய பேருக்கு லிப்ட்தான். அதே மாதிரி உள்ள இருந்து , வெளிய வர. சில நேரங்கள்ல office ல இருந்து வெளிய வரும்போது சில பேருக்கு வீட்டுகிட்ட வரைக்கும் கூட lift கொடுத்துருக்கேன்.
இந்த மாதிரி lift பயணங்களில் போது பல சுவாரசியமான ஆட்கள்ல பாக்கலாம். பொதுவா நான் யார்ட்டயாவது lift கேட்டு வந்தா, பெரும்பாலும் அவங்களோட பேச மாட்டேன். ஆனா நான் மத்தவங்களுக்கு lift கொடுத்தா , அதுவும் ரொம்பவும் புதிய மனிதர்கள்னா , ஏதாவது பேசிகிட்டே வருவேன் குறைஞ்சபட்சம் நீங்க எந்த ஊருனாவதுன்னு?. எனக்கு அறிமுகமில்லாத புதிய மனுஷங்களோட புதுசா பேசுறது ரொம்ப பிடிக்கும். அதுவும் தமிழ்நாட்டுக்குப் புதுசுனா, என் முத கேள்வி 'What do you feel about Chennai ?' . பெரும்பாலும் ஒரே மாதிரி பதில்தான் வரும் . Chennai ரொம்ப Hot. Humidity ஜாஸ்தி. ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகம் அப்படின்னு. இப்ப புதுசா எல்லாரோட complaint , bus ரேட் ரொம்ப ஜாஸ்தி ஆக்கிட்டாங்கங்குறதுதான். அன்னைக்கு ஒரு North Indian பையன் அப்படிதான் வந்தான். அவன்ட்ட பேசுனப்ப இதேதான் சொன்னான் . அதுவும் ஆட்டோவாலாக்கள் மேல அவனுக்கு ரொம்ப கோபம். நாம shoe போட்டு, Id card மாட்டிருக்குறத பாத்ததாலே எல்லா ஆட்டோக்காரங்களும் அநியாய ரேட் சொல்றாங்க. இவ்ளோ பெரிய building எ பாத்தாலே என்னமோ நாமலாம் லட்ச லட்சமா சம்பாதிக்குற மாதிரி நினைக்குறாங்க. இப்படி பல.
வெறும் உள்நாட்டுக்காரங்கனு மட்டும் இல்ல. அன்னைக்கு ஒரு நாள் ஒரு பையன் lift கேட்டான். பாக்க north indian மாதிரி இருந்தான். நானும் அவனுக்கு lift கொடுத்துட்டு எப்பயும் போல பேசிகிட்டே வந்தேன். அவன் பாட்டுக்கு IPL சூப்பர் மச்சி. I Love CSK , அப்படி இப்படின்னு பேசிகிட்டே வந்தான். அப்புறம்தான் தெரிஞ்சது அவன் கொலம்பியா நாட்டுக்காரனாம். இப்பயும் அதே கேள்வி ஆனா வேற மாதிரி , How do you feel about India? . பையன் பொருமி தள்ளிட்டான். Very Spicy, Dirty, No Social Life. முக்கியமா பாரலாம் 10 மணிக்கே மூடிறாங்க. இப்படி பல. எல்லாத்துக்கும் மேல பையன், இந்திய பொண்ணுங்கள பத்தி புலம்பி தள்ளிட்டான். உங்க பொண்ணுங்களுக்கு maturity யே இல்ல, சின்னபிள்ளத்தனமா நடந்துக்குறாங்க. போயி பேசுனாகூட யாரும் பேச மாட்டுறாங்க. எங்க ஊருல வந்து பாரு, பொண்ணுங்கலாம் அவ்ளோ நல்லா பேசுவாங்க அதோட உங்க பொண்ணுங்களுக்கு beauty consciousness ஏ இல்ல. இப்படி ஒரே புலம்பல். நான் நினைச்சுகிட்டேன், பையன் யாரோ நம்ம ஊரு பொண்ணுகிட்ட செமையா வாங்கி கட்டி இருக்கானு. அவன் என்கிட்ட கொலம்பியாவ பத்தி அறிமுகப்படுத்துனதே, மச்சி அங்க பொண்ணுங்க சூப்பர் மச்சினுதான் ஆரம்பிச்சான். ஆனா பையனுக்கு பல தமிழ் வார்த்தைகள் தெரிஞ்சுருந்தது. புது ஊர் புது மொழி கத்துக்கணும்னு ஆர்வம் இருந்தது. என்னோட பேசுனவரைக்கும் முடிஞ்ச அளவு தமிழ்லயேதான் பேசுனான்.
வண்டில போகும்போது இப்படினா, இறங்கும்போது ஒவ்வொருத்தவங்க behavior ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில பேருலாம் , நாம ஏதோ அவங்க வீட்டு driver மாதிரியும் அவங்க வண்டி ஓனர் மாதிரியும் இறங்கும்போது, ஒரு thanks கூட இருக்காது , இறங்கி விறுவிறுன்னு நம்ம முகம் கூட பாக்காம போயிருவாங்க. சில பேரு சொல்ற thanks ல ஏதோ ஒரு வார்த்தைய சொல்ற அளவுக்குத்தான் அதுல உயிர் இருக்கும். ஆனா எல்லாரும் இப்படி இல்ல. சில பசங்கலாம் , lift கேட்டுட்டு இறங்கும்போது , please wait பண்ணுங்கனு சொல்லி, ரெண்டு பக்கமும் வந்து foot rest லாம் மடக்கிவிட்டுட்டு அவ்ளோ உயிர்ப்பா thanks சொல்லுவாங்க. நம்ம கொலம்பியா பையன் இதுல best. இறங்கும்போது கைலாம் கொடுத்து உன்னுடைய இந்த நாள் நல்லா இருக்கட்டும் , கடவுள் உன் பக்கம் துணை இருப்பாருன்னு அவ்ளோ சொல்லிட்டுப் போனான்.
நான் lift கொடுத்தது மாதிரி எனக்கு lift கொடுத்ததுலையும் நிறைய நல்ல பசங்க இருந்தாங்க. அப்படிதான் ஒரு பையன் அவன் போக வேண்டிய இடம் தாண்டியும் என்னைய கொண்டு வந்து நான் சேர வேண்டிய இடத்துலவிட்டான். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்யுறாங்க.
இப்படி லிப்ட் கேட்டு போகும்போது பெரும்பாலும் லிப்ட் கேட்குறவர் , லிப்ட் கொடுக்குறவர் போக்குலதான் போகவேண்டி இருக்கும். அன்னைக்கு ஒருநாள் அப்படிதான் , ஒரு பையன்ட்ட லிப்ட் கேட்டு வந்தேன். வர்ற வழில சோன்னு ஒரே மழை. நானும் பையன் , மழைக்கு இங்க நிப்பாட்டுவான் அங்க நிப்பாட்டுவான்னு நினச்சுகிட்டு பின்னாடி நனஞ்சுகிட்டே வர்ரேன், பையன் நிப்பாட்டுற வழிய காணோம். நானும் ஒரு கட்டத்துக்கு மேல முழுசா நனச்சதுக்கப்புரம் இனிமே நிப்பாட்டுனாலும் வேஸ்ட்டுன்னு விட்டுட்டேன். அந்த பையனும் ஹெல்மெட் தவிர வேற rain coat எதுவும் போடாததால அவனும் முழுசாதான் நனஞ்சுட்டான். இப்படி நாங்க ரெண்டு பேரும் நனைஞ்சுகிட்டு வந்த தூரம் 15 km.
ஜெரிமி மரி(Jeremy Marie) - உலகம் முழுசும் சுத்திகிட்டு இருக்க மனுஷன் . அவரோட Mode of Transport - Hitchhiking . அதாங்க நம்ம பாசைல சொல்லப் போனா Lift கேட்டுப் போறது. மனுஷன் உலகம் முழுசும் சுத்துறான் ,lift கேட்டு மட்டும்தான் :). படகு, பைக்கு, காரு, பஸ்சு, கழுதைன்னு , இப்படி உலகம் முழுக்க lift கேட்டே போறான். அவரோட intention ஒண்ணுதான், இந்த உலகம் இன்னமும் நல்லவர்களால நிரஞ்சுருக்குனு காட்டுறதுதான்.
இப்படி முகம் தெரியாத யாருக்கோ , தன் முகத்தகூட காட்டாம லிப்ட் கொடுக்குறவங்களும் இருக்கும்போதுதான் இந்த உலகில் எப்பொழுதும் ஏதோ ஒரு மூலையில் ஆதாயம் எதிர்பார்க்காமல் உதவுவதற்கு ஜீவன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அழியாமல் இருக்கிறது. வாழ்க்கையும் பல விதங்கள்ல சுவாரசியமா இருக்கு :)
Lift கொடுங்க boss வாழ்க்கை நல்லா இருக்கும் :)
photo courtesy : http://flickrhivemind.net
5 comments:
Good one - made a super reading.
கல்லூரி காலத்தில், நானும் லிஃப்ட் எடுத்து வந்தேன்
Nice article! I enjoyed reading it!
Nathan , thanks :)
Bass, வசிஷ்டர் வாயால பிரம்ம ரிஷி பட்டம் கிடச்ச மாதிரி இருக்கு :) Thanks Man
இந்த உலகில் இன்னும் உதவும் குணம் மரித்து போகவில்லை என்பதற்கு சாலையில் பிறர்க்கு லிஃப்ட் கொடுக்கும் அன்பர்கள் மூலம் நிரூபணம் ஆகிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சிவா!
செய்தித்தாளில் படித்தது - மதுரையின் விளாங்குடி பகுதியை சேர்ந்த ஒருவர், இரவு பதினோரு மணியளவில் வீட்டிற்கு செல்லும் வழியில் ஒருவனுக்கு லிஃப்ட் கொடுத்திருக்கிறார். அவனோ இருளான பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது அவர் கழுத்தில் கத்தியை வைத்து உடைமைகளை லவட்டிக்கொண்டு மறைந்து விட்டான். ஆதலால் உதவும் குணத்தையும் பயன்படுத்தி இந்த உலகத்தில் சிலர் வாழ்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பைக் ஓட்டுனர்கள் வீலிங் செய்ய தெரிந்து கொள்வது கூடுதல் பலம். சிவாவுக்கு நன்றி!
Post a Comment