SMS, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜேஷ் படம் என்பதால் நல்ல தைரியத்துடன் சென்ற படம் . படத்தோட review உம் நல்லாதான் இருந்தது . அதனால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சென்றேன். மற்ற இரண்டு படங்களைப் போல் இதுவும் கலகலப்புக்கென்றே அமைந்த படம் .
உதயநிதிக்கு முதல் படம், இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.
சரண்யா எப்பயும் போல் முழுதாக score பண்ணுகிறார்.
ஹன்சிகா மோத்வானி - பாப்பா குண்டா இல்ல ரொம்பவே குண்டாவே இருக்கு. பாட்டுலலாம் தத்தக்கா பித்தக்கானு ஓடும்போது நல்லா தெரியுது, பாப்பா இந்த உடம்ப வச்சுகிட்டு ரொம்பவே கஷ்டப்படுதுன்னு . குஷ்பு மாதிரி இருக்கீங்கன்னு சொல்றது நல்லாத்தான் இருக்கு ஆனா வந்த புதுசுல குஷ்பு கூட இந்த அளவு குண்டா இல்ல. கொஞ்சம் உடம்ப குறைம்மா.
சந்தானத்த சந்தன பொட்டோட பார்த்தசாரதியா பாக்குறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பாஸ் உங்களுக்கு கீழ இறங்கி பேசுற SMS மாதிரி ரோலுதான் ரொம்ப செட் ஆகுது பாஸ்.
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்ட தவிர வேற எந்த பாட்டும் ஞாபகம் வர அளவுக்கு பெரிசா இல்ல.
மனம் , SMS ஜீவா இந்த படத்துல நடிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்னு நினைக்குறத தவிர்க்க முடியல. இந்த மாதிரி ரோலுக்கு ஜீவா SMS ல ஒரு இலக்கணமே படைச்சுட்டார். படம் நிச்சயம் பாக்கலாம் , ஆனா SMSஅ மனசுல வச்சுருந்தா கொஞ்சம் ஏமாற்றம்தான்.
1 comment:
Factu factu factu.. adha ennaku padathula pudichi irukku.. apram 'vena machaan vennam' song.
Post a Comment