சென்ற வாரம் நம்மளுக்கு மிக அருகில் இருக்கும் மாலத்தீவில் பல போராட்டங்களுக்குப் பிறகு அதிபர் பதவி விலகினார் . அதுக்கப்புறம் அவர், என்னைய துப்பாக்கி முனையில்தான் பதவி விலக வைத்தார்கள் என்று சொல்ல, பெரிய பிரச்சினை. இவ்வளவு போராட்டங்களையும் எப்பயும் போல இந்தியா ரொம்ப மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்கு அப்புறம் அமேரிக்கா இந்த விசயத்துல தலையிட ஆரம்பிச்சதும்தான் இந்தியா கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரை அங்கு அனுப்பி வைத்தது.
பொதுவாக இந்தியா தன்னுடைய ராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை. அதற்கு என்று பெரிதாக சிறந்த நட்பு நாடுகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடனேயே பெரிதாக அதற்கு நல்ல உறவு இல்லை. இதைதான் சீனா " இந்தியா தூரம் இருப்பவர்களுடன் நட்பாகவும் அருகில் இருப்பவர்களுடன் விரோதத்துடனும் உள்ளது " என்று கூறுகிறது. இப்படி பக்கத்தில் உள்ளவர்களுடன் விரோதத்தையும் தூரத்தில் உள்ளவர்களுடன் நட்பையும் கொண்டிருப்பது , இந்தியாவே தேடிக்கொண்டதா இல்லை அதற்கு அப்படி இயல்பாக அமைந்ததா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இப்படி ஆனது அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வியே ஆகும். சில நேரங்களில் எனக்கு இது நம் மக்கள் எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விரோதத்துடன் இருக்கும் மனோநிலையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது ;). ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா தூரத்தில் உள்ளவர்களுடனும் பெரிதாக நட்பு கொண்டிருக்கவில்லை.
இப்படி அமைவதற்கு முக்கிய காரணம் இந்தியா எந்த ஒரு விசயங்களிலும் பெரிதாக ஆக்டிவாக இருந்ததில்லை. எப்படி அடுத்த நாடுகளின் விசயங்களில் அதிகமாக மூக்கை நுழைப்பது தவறோ அதே போல் பக்கத்து நாடு பிரச்சினையில் இருக்கும் போது அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறு. சில விசயங்களில் இந்தியா ஆக்டிவாக இருந்திருக்கிறது, இல்லை என்று சொல்ல வில்லை . எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் பிரிவினையை சொல்லலாம். அந்த பிரிவினையின் போது இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது ஆனால் அதற்கடுத்து அது பங்களாதேஷுடன் மிகச் சிறப்பான நல்லுறவை மேற்கொள்ளவில்லை. இன்று பங்களாதேஷில் பல பேர் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் அது முன்னெடுத்த பல செயல்கள் அதற்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு இலங்கைக்கு இந்தியா அனுப்பிய அமைதிப் படை நடவடிக்கை. இந்தியா எந்த நோக்கத்திற்காக அங்கு அமைதிப் படையை அனுப்பியதோ அது நிறைவேறவில்லை. அந்த அமைதிப் படை இந்தியா திரும்பிய போது அது இலங்கை , இலங்கைத் தமிழர்கள் என்ற இரு தரப்பாலும் வெறுக்கப்பட்டே அனுப்பப்பட்டது.
தெற்காசிய நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த இந்தியா முன்னின்று அமைத்த SAARC கூட்டமைப்பு பெரிதாக எதையுமே சாதிக்கவில்லை. அது யூரோப்பியன் யூனியன் (EU) போலவோ, இல்ல தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியான ASEAN போலவோ , இல்லை வர்த்தகத்துக்காக அமைந்த OPEC போலவோ, இல்லை ராணுவ கூட்டணியாக அமைந்த NATO போலவோ வெற்றி பெறவில்லை. இப்படி SAARC பெரிதாக சாதிக்காமல் இருப்பதற்கு அதில் இருக்கும் பெரிய, வலுவான நாடு என்ற முறையில் இந்தியாவிற்குதான் பொறுப்பு அதிகம். இந்திய - பாகிஸ்தான் போர்களின் போதோ, இல்லை இந்திய சீன போரின்போதோ, இல்லை பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த படுகொலைகளின் போதோ , இல்லை இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப் படுகொலைகளை தடுப்பதற்கோ SAARC பெரிதாக எதையும் சாதிக்கவில்லை . சரி நம்மளுக்குள் சண்டை போடும்போதுதான் SAARC எதையும் செய்யவில்லை , குறைந்தபட்சம் சம்பந்தம் இல்லாத வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சினைகளிலாவது அது ஏதாவது சாதித்தா என்றால், இல்லை.பொதுவாக இந்தியா தன்னுடைய ராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை. அதற்கு என்று பெரிதாக சிறந்த நட்பு நாடுகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடனேயே பெரிதாக அதற்கு நல்ல உறவு இல்லை. இதைதான் சீனா " இந்தியா தூரம் இருப்பவர்களுடன் நட்பாகவும் அருகில் இருப்பவர்களுடன் விரோதத்துடனும் உள்ளது " என்று கூறுகிறது. இப்படி பக்கத்தில் உள்ளவர்களுடன் விரோதத்தையும் தூரத்தில் உள்ளவர்களுடன் நட்பையும் கொண்டிருப்பது , இந்தியாவே தேடிக்கொண்டதா இல்லை அதற்கு அப்படி இயல்பாக அமைந்ததா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இப்படி ஆனது அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வியே ஆகும். சில நேரங்களில் எனக்கு இது நம் மக்கள் எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விரோதத்துடன் இருக்கும் மனோநிலையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது ;). ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா தூரத்தில் உள்ளவர்களுடனும் பெரிதாக நட்பு கொண்டிருக்கவில்லை.
இப்படி அமைவதற்கு முக்கிய காரணம் இந்தியா எந்த ஒரு விசயங்களிலும் பெரிதாக ஆக்டிவாக இருந்ததில்லை. எப்படி அடுத்த நாடுகளின் விசயங்களில் அதிகமாக மூக்கை நுழைப்பது தவறோ அதே போல் பக்கத்து நாடு பிரச்சினையில் இருக்கும் போது அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறு. சில விசயங்களில் இந்தியா ஆக்டிவாக இருந்திருக்கிறது, இல்லை என்று சொல்ல வில்லை . எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் பிரிவினையை சொல்லலாம். அந்த பிரிவினையின் போது இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது ஆனால் அதற்கடுத்து அது பங்களாதேஷுடன் மிகச் சிறப்பான நல்லுறவை மேற்கொள்ளவில்லை. இன்று பங்களாதேஷில் பல பேர் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் அது முன்னெடுத்த பல செயல்கள் அதற்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு இலங்கைக்கு இந்தியா அனுப்பிய அமைதிப் படை நடவடிக்கை. இந்தியா எந்த நோக்கத்திற்காக அங்கு அமைதிப் படையை அனுப்பியதோ அது நிறைவேறவில்லை. அந்த அமைதிப் படை இந்தியா திரும்பிய போது அது இலங்கை , இலங்கைத் தமிழர்கள் என்ற இரு தரப்பாலும் வெறுக்கப்பட்டே அனுப்பப்பட்டது.
எப்பொழுதும் நம் பக்கத்து நாட்டிற்குள் அடுத்த நாடு நுழைஞ்சா நம்மளுக்குத்தான் பிரச்சினை. இந்த விசயத்தில் அமெரிக்காவும் சீனாவும் அதற்கு இடம் கொடுத்ததில்லை. சமீபத்தில் இந்தியா , வியட்நாமுடன் எண்ணெய் எடுக்க ஒப்பந்தம் செய்த போதே சீனா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் நம் நாட்டிற்குள் நாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவையும், சீனாவையும் விடுகிறோம்.
இந்த விசயங்களில் எனக்கு அமெரிக்காவையும் , சீனாவையும் ரொம்ப பிடிக்கும். அவை தங்களுக்கு வேண்டிய நாடுகளை அணி சேர்த்துக் கொண்டும் , வேண்டாத நாடுகளை அண்ட விடாமலும் இருக்கும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது அமேரிக்கா, ரஷ்யா என்ற எந்த ஒரு அணியுடன் சேராமல் இருக்க அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை அமைத்தது. அது அமெரிக்க, ரஷ்ய அணிகளுக்கு சிறந்த மாற்றாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் அது நம்ம ஊர் அ.தி.மு.க, தி.மு.க அணிகளுக்கு எதிரான மூன்றாவது அணி போலவே இருந்தது. பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த அணியில் முக்கிய உறுப்பு நாடாக இருந்த இந்தியாவே கிட்டத்தட்ட ரஷ்ய அணியில்தான் இருந்தது.
இப்படி நம் வெளியுறவுக் கொள்கை நமக்கு பெரிய பலன்களை எதுவும் கொடுக்கவில்லை . சொல்லப் போனால் இந்தியா , தனக்கு உலக அரங்கில் கிடைத்த பல வாய்ப்புகளை வீணடித்துள்ளது. இன்னும் சில நேரங்களில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை இந்தியாவிற்கே வினையாகவும் அமைந்துள்ளது.
பிரச்சினை என்னவென்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் இன்னும் நேரு காலத்திலேயே இருக்கிறது. அது எதனால் என்றுதான் தெரியவில்லை. நேருவின் கொள்கைகள் சாகா வரம் பெற்றவை, அவை என்றும் வெற்றி பெற்றவை என்று காட்டுவதற்கான அடமா என்று தெரியவில்லை . அதனால் தான் அணியே இல்லாத உலகில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு இன்றும் உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி. யாருமே இல்லாத கடைல யாருக்குத்தான் டீ ஆத்துராங்களோ தெரியல :(
இப்படி வெற்றியடையாத வெளியுறவுக் கொள்கையுடன் நாம் Global Power என்ற அடைமொழிக்கும், ஐநாவில் Veto அதிகாரத்துடன் கூடிய நிரந்தர அந்தஸ்துக்கும் ஆசைப்படுகிறோம்.
சாணக்கியர் வாழ்ந்த நாடு ஆனால் சுதந்திர இந்தியாவிற்குத்தான் வெளியுறவுக் கொள்கைகளில் ராஜதந்திரி என்னும் நபர் இன்னும் கிடைக்கவில்லை :( .
No comments:
Post a Comment