Tuesday, June 28, 2011

இந்தியாவும் ஊழலும்


இன்று இந்தியாவில் T.V இல் அதிகமாக காட்டப்படுவோர் அன்னா கசாரேயும் பாபா ராம்தேவும்தான். இவர்கள் இவ்வளவு popular பெறக்காரணம் ஊழலுக்கு எதிரான எதிர்ப்புதான் . இவர்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கிறதென்றால் மக்கள் எந்த அளவிற்கு இந்த ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மக்கள் எந்த அளவு ஊழலை வெறுத்திருப்பார்கள். ஆனால் இந்த காங்கிரஸ் அரசோ அதை பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த ஊழலை எதிர்பவர்களை மோசமான வார்த்தைகளால் அர்சிக்கிறது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை மக்கள் ஊழலை பெரிதாக எண்ணமாட்டார்கள் என்ற எண்ணம்.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன் திமுகவிற்கு 2G பற்றி பாமர மக்களுக்கு என்ன தெரியும்? , எப்படியும் 400, 500 ரூபாய் கொடுத்துவிட்டால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. மேலும் பல இலவசங்களையும், வீட்டையும் கொடுத்துவிட்டால் யார் ஊழலை பற்றி கவலைப்படப்போகிறார்கள் என்று எண்ணியது. அதன் தலைவர்களும் 2G ஊழல் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மிக நம்பினர். தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு சாதகமாக வந்த தேர்தல் கணிப்புகளும் மக்கள் ஊழலை பெரிதாக எண்ண மாட்டார்கள் என்றே கூறின. ஆனால் எவருமே எதிர்பார்க்காத அளவிற்கு 70% வாக்குப் பதிவும் அதன் பின் திமுகவின் படு தோல்வியும் மக்கள் எந்த அளவிற்கு ஊழல் எதிர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை கூறியது. இத்தனைக்கும் இரண்டு அணிகளிலும் இருந்து கட்சிகளின் வாக்குகளின் அடிப்படையில் இரண்டு அணிகளுக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்தன. ஆனால் தேர்தல் முடிவில் கிடைத்த படுதோல்வி மக்கள் எந்த அளவிற்கு ஊழலை வெறுக்கிறார்கள் என்பதை காட்டியது. அதனால்தான் திமுகவிற்கு துணையாக இருந்த அனைத்து கட்சிகளுக்கும் அடி விழுந்தது. தப்பு செய்தவன் கூட இருப்பதும் தப்புதான் என்பதை மக்கள் புரிய வைத்தார்கள். இது சென்ற பொதுத் தேர்தலில் நல்ல வாக்கு வாங்கிய கொமுகவும் சேர்த்து அடிவாங்கியது. இது மக்களுக்கு சாதி அரசியல், இலவசங்கள் அனைத்தையும் தாண்டி ஊழல் எதிர்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியது. இதை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் புரிந்து கொள்ளவில்லை.

தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஊழலை எதிர்த்த, ஊழல் பற்றி எழுதியவர்களுக்கு எல்லாம் ஆரிய சாயம் பூசினார். தன் கருத்திற்கு திராவிட இன, மொழி, தலித் ஆதரவை கோரினார். அன்று திமுக செய்த அதே தவறை இன்று காங்கிரஸ் செய்கிறது. ஊழலை எதிர்க்கும் ராம்தேவிற்கு இந்து, RSS சாயம் பூசுகிறது. அன்னா கசாரே காங்கிரஸ்காரராக இருந்ததால் அவருக்கு RSS சாயம் பூசமுடியாமல் அவரை சர்வாதிகாரி என்றது. எனக்கு ஒன்று புரியவில்லை. ஊழலை இந்துக்களும் , RSS காரர்களும் எதிர்க்க கூடாதா?. பிரச்சினையை பற்றி பேசாமல் பிரச்சினையை பற்றி பேசுபவர்களை எதிர்கிறது.

வாய் கூசாமல் ஊழலை எதிர்பவர்களை எதிர்க்க தனி மனித துவேசம் செய்கிறது. இவர்கள் செய்வதைப் பார்த்தால் ஊழலை எதிர்ப்பதையே மிகப் பெரிய குற்றம் என்பதை போல் உருவகம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஊழல் செய்வதும், லஞ்சம் வாங்குவதும் மிக கேவலமாக எண்ணப்பட்டது. அப்படி லஞ்சம் கேட்பவர்களும், ஊழல் செய்பவர்களும் கூனி குறுகி செய்தார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஊழல் செய்பவர்களும், லஞ்சம் வாங்குபவர்களும் தான் செய்வதை குற்றம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் மிக இயல்பாக நடமாடுகிறார்கள்.

தேர்தலுக்கு முன் அன்றைய ஆளுங்கட்சியின் ஆதரவு T.V யில் அதன் தலைவரின் அறிக்கை " என்னவோ எல்லாரும் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாயை ஒருவரே சட்டைப் பையில் கொண்டு போய் விட்டது போல் பேசுகிறார்கள். அதுவும் அந்த பொது கணக்கு குழுவின் ஒரு அறிக்கைதான் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறுகிறது மற்றொரு அறிக்கை வெறும் முப்பதாயிரம் கோடி ரூபாய் இழப்புதான் என்று கூறுகிறது" என்றார். அதாவது ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்கன் டாலர் (அதாவது 45 ரூபாய். ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்கன் டாலர் கூட சம்பாதிக்க முடியாதவர்கள் ஏழைகள் என்பது உலக அளவுகோல்) கூட சம்பாதிக்க முடியாமல் கிட்டத்தட்ட 40 கோடி பேர் இருக்கும் இந்த நாட்டில் முப்பாயிரம் கோடி ரூபாய் என்பது வெறும் முப்பதாயிரம் கோடி என்றாகிவிட்டது . என்ன கொடுமை இது . மக்களை இவ்வளவு கேவலமாக நினைத்தது தான் இந்த தேர்தல் இழப்பிற்கு காரணம்.

ஒவ்வொரு அரசாங்க ஊழியருடைய பணியை பற்றி குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இடைவிலும், அவர் ஓய்வு பெறுவதற்கு முன் அவருடைய பணி காலம் முழுவதுக்குமான ஆய்வு நடக்கும் . அந்த ஆய்வில் அவரால் ஏதாவது அரசாங்கத்துக்கு இழப்பு என்றால் அந்த பணம் அவருடைய வருமானத்திலிருந்தும், அவருடைய பென்சனிலிருந்தும் பிடித்தம் செய்யப்படும். ஒரு சாதாரண அரசாங்க ஊழியருக்கே இப்படி என்றால் ஒரு அமைச்சராக இருப்பவருக்கு எப்படி இருக்க வேண்டும். ஆனால் ராசாவிற்கு பிறகு அமைச்சரான கபில் சிபல் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசாங்கத்துக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்றார். அதாவது அவர்களுடைய அரசாங்கத்தின் ஒரு அங்கமான பொது கணக்கு குழுவின் ஆய்வறிக்கையை அவரே நிராகரிக்கிறார். என்ன செயல் இது? .

காங்கிரஸ் , தமிழகத்தில் திமுக செய்த அதே தவறை இந்திய அளவில் செய்கிறது. தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அடக்கி ஒடுக்குகிறது. இதே பாசிச எண்ணம்தான் ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் நள்ளிரவில் தடி அடி நடத்தி கலைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. (This article does not discuss about whether Ramdev is good or not) . அந்த நள்ளிரவில் செய்த நடவடிக்கை சரிதான் என்று பாரத பிரதமரே சொல்கிறார். இதற்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கும் என்ன வித்தியாசம். அன்று ஜனநாயகமும், தேர்தலும் இல்லாததால் துப்பாக்கிகள் முழங்கின. இன்று பேருக்கு என்றாவது ஜனநாயகமும் ஐந்து வருடங்களுக்கு தேர்தலும் இருப்பதால் சற்று அடைக்கி வாசித்து தடி அடியும் , கண்ணீர் புகை குண்டும் வீசுகின்றனர். அதுதான் வித்தியாசம்.

இதைவிட கொடுமை நேற்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார், "உண்ணாவிரதத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது". நவீன உலக அரசியலில் உண்ணா விரதத்தை கற்றுத்தந்ததே காந்திதானே (நான் கூறுவது மகாத்மா காந்தி பற்றி . என்ன கொடுமை இங்கு காந்தியவே , மகாத்மா காந்தி என்று சொன்னால்தான் அனைவருக்கும் புரிகிறது. இல்லை என்றால் வேறு காந்தியைப் பற்றி எண்ணிக் கொள்கின்றனர் :( ). அந்த மகாத்மா காந்தி காங்கிரஸ்காரர்தானே. அந்த காந்தி இதே அகிம்சா கொள்கையை வைத்து தானே சுதந்திரம் வாங்கி கொடுத்தார். என்ன பண்ண இன்றைய காங்கிரஸ் மகாத்மா காந்திக்கு ரூபாய் நோட்டில் மட்டும்தான் இடம் கொடுக்கிறது. அதனுடைய கொள்கையிலிருந்து காந்தியை என்றோ தூக்கி எறிந்துவிட்டது.

இன்னொரு கொடுமை, 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடப்பதால் இதில் காங்கிரஸ் ஒன்றும் செய்ய முடியாது, இதை கருணாநிதியும் புரிந்து கொண்டுள்ளார் என்று காங்கிரசார் பேசி வருகின்றனர். அப்படி என்றால் என்ன அர்த்தம் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இல்லை என்றால் இவ்விசயத்தில் காங்கிரஸ் தலையிடும் என்றுதானே அர்த்தம். என்ன ஒரு அப்பட்டமான பேச்சு. இதை கூசாமல் வேறு பேசுகின்றனர். இந்த நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

இப்பொழுது 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாநிதியின் பெயரும் அடிபடுகிறது. இதை பற்றி கேட்டால் பிரதமர், தான் இந்த விசயத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறுகிறார். என்னவோ தயாநிதி யாரோ எவரோ என்பது போலவும் , தனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும் , ஏன் இந்தியாவிற்கும் தனக்குமே சம்பந்தம் இல்லை என்பது போலவும் பிரதமர் பேசுகிறார். இதேதான் முன்னாள் அமைச்சர் ராசா விசயத்திலும் நடந்ததது. 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி ராசா உங்களுக்கு கடிதம் எழுதினாரா. ஆமாம். அதன் மீது நடவடிக்கை என்ன. மௌனம். நமக்கு இப்படி ஒரு பிரதமர் :(

முன்னாள் இந்திய பிரதமரான தேவ கௌடாவின் மகனும் , முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி ஊழல் இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்று கூறும் அளவிற்கு ஊழலுக்கு இன்று ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஊழலுக்கு மக்கள் எவ்வளவு அடி கொடுத்தாலும் ஊழல்வாதிகள் திருந்துவதில்லை.

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக மக்கள் இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதற்கு வீதியில் இறங்கி போராடவேண்டும் என்ற தேவை எல்லாம் இல்லை. ஊழல்வாதிகளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் சீண்டாமல், மதிக்காமல், அவர்களுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளாமல், அவர்களுக்கு கீழ் படியாமல் அவர்களை வாழ்நாள் முழுவதும் சமுதாய அனாதைகள் ஆக்கிவிடவேண்டும். இதற்கு நாம் எந்த அரசியல்வாதியையும் எதிர்பார்க்க வேண்டாம். இதற்கு நாம் எந்த அரசின் நடவடிக்கையையும் எதிர்பார்க்க வேண்டாம்.

Photo Courtesy :

http://thrusha.com/modules/upload/attachments/alarming-level-of-corruption-in-india2.jpg

1 comment:

Anonymous said...

Loved this Cartoon
thank you for sharing
- Manoj