இப்பலாம் blogspot ல பொண்ணுங்க எழுதுற blog ஆ பாத்து பாத்து அதிகமா படிக்கிறேன். எனக்கு தமிழ் பதிவுகளை அறிமுகப்படுத்தினதே என் நண்பன் jdk தான். அவன் வழியாதான் நிறைய ப்ளாக் லிங்க்க பெற்றேன். அதுல ஆரம்பிச்சதுதான் இந்த பொண்ணுங்க ப்ளாக் படிக்கிறது. பொதுவா பொண்ணுங்க இந்த மாதிரி ப்ளாக் எழுதுறதோ, ஏன் ப்ளாக் படிக்கிறது கூட அதிகமா செய்றதில்ல என்பது என் குறுகிய எண்ணம். இந்த எண்ணத்த சம்மட்டியால அடிக்கிற மாதிரி இந்த பதிவுகள் இருக்கிறதாலதான் அதிகமா பொண்ணுங்க பதிவுகள் எடுத்து படிக்கிறேன்.
***************
கடந்த இரண்டு வாரமாக காது வலி. சென்ற வாரம் மருத்துவரிடம் சென்றேன். அவர் காதுக்குள்ள எதையோ வைத்து நோண்டி பாத்துட்டு மருந்து எழுதி தந்தார். மறக்காமல் மூன்று நாள் கழித்து வரவும் சொன்னார். நானும் காது வலி தீந்துச்சுனா நம்ம எங்க வரப் போறம்னு நினச்சுகிட்டு, வரேன்னு தலை ஆட்டிட்டு வந்தேன். மருந்து விலை முன்னூத்திச் சொச்சம், மருத்துவர் செலவு நூத்தைம்பது என மொத்தம் ஐநூறைத் தொட்டது. கடைசில அந்த மருத்துவர் தான் ஜெயிச்சாரு. மூணு நாள் ஆகியும் காது வலி தீரல. தண்ட கருமாந்தரமேன்னு திரும்பவும் மருத்துவர்ட போனேன். திரும்பவும் மருந்து , மாத்திரை, டாக்டர் தண்ட செலவு நூத்தம்பது. ஆனாலும் காது வலி தீரல. வர வர டாக்டர்கள் மேல எனக்கு நம்பிக்கையே இல்ல. மருத்துவர்கள் எல்லாம் கடவுள் மாதிரிங்கறது பழைய காலம் . இப்ப எல்லாரும் காசு பார்க்குரதிலையே குறியா இருக்காங்க. இவங்களுக்கு பீஸ் மட்டும் கிடையாது. மருந்து வாங்குரதிலயும் கமிசன் வேற. இன்னம் சில டாக்டர்கள் அவங்களோட கிளினிக்லையே மருந்து கடை வச்சுருக்காங்க.
***************
T20 உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் 8 இல் எந்த ஒரு போட்டியையும் ஜெயிக்காததர்க்கு தோனி , IPL இரவு கடந்த பார்ட்டிகளை குற்றம் சாட்டி உள்ளார். அதை ரவி சாஸ்திரியும், கவாஸ்கரும் குற்றம் சாட்டி உள்ளனர்.இதில் நான் தோனி பக்கம். எல்லாம் காசு படுத்தும் பாடு. IPL இந்திய கிரிக்கெட்டையே நாசம் படித்திருச்சு.
***************
சனிக்கிழமை அலுவலகத்துல New Horizon Media புத்தக ஸ்டால் போட்டுருந்தாங்க. அதுல போய் புத்தகம் வாங்கணும்னுதான் தோணுச்சு, இருந்தாலும் போன தடவையும், ஏன் இந்த வருஷ சென்னை book fair ல வாங்குன புத்தகங்களையே இன்னும் படிச்சு முடிக்காததால இந்த தடவ புத்தகம் எதுவும் வாங்கல.
***************
நான் பொதுவா ஒரு நாட்ட பத்திய செய்திகள படிக்கிறதுனா, அந்த நாட்டுல இருக்க பிரசித்தி பெற்ற செய்திதாள்களா இணையத்தில எடுத்து படிக்கிற பழக்கம் உண்டு . அப்படி எனக்கு அறிமுகமானதுதான் பாகிஸ்தானின் டான்(dawn) செய்தித்தாள். இந்த செய்தித்தாள் பாகிஸ்தானின் தந்தையான (Quaid-e-Azam) முகமது அலி ஜின்னாவால் 1941 ஆம் ஆண்டு டில்லியில் ஆரம்பிக்கப்பட்டது . கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒரு மொக்க வலைத்தளம் வச்சுருந்தாங்க . இப்ப ரொம்ப நல்ல வலைத்தளமா இருக்கு. அந்த வலைத்தளம் The Hindu செய்திதாளோட beta version மாதிரி இருக்கும். செய்திகளைப் பொருத்தவர எனக்கு ரொம்ப பிடிச்ச வலைத்தளம். பாகிஸ்தான் பத்திரிக்கைங்கிரதால சும்மா இந்தியாவைப் பத்தி திட்டிக்கிட்டு இருக்கமாட்டாங்க . பத்திரிக்கை நடு நிலையாகவே இருக்கும்.
சரி சொல்ல வந்த விசயத்த சொல்றேன். அதுல ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. நம்மளுக்கு எதுக்கு ஐந்தாண்டு திட்டம். நாம ஓராண்டு திட்டத்தையே ஒழுங்கா நிறைவேத்துரதில்ல பிறகு எதுக்கு ஐந்தாண்டு திட்டம் அப்படின்னு ஒரு கட்டுரை வந்த்திருந்துச்சு. அதே தான் எனக்கும் தோணுச்சு. இந்தியாவிற்கும் இதே கேசு தான . நாம எப்ப ஓராண்டு திட்டதேயே ஒழுங்கா நிறைவேத்துனோம். பிறகு என்னத்த ஐந்தாண்டு திட்டம்னு தோணுச்சு. என்ன இருந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்காளிகதான, ஒன்னாத்தான இருப்பாங்க.
****************
Tuesday, May 18, 2010
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//பதிவுகளை அறிமுகப்படுத்தினதே என் நண்பன் jdk தான். அவன் வழியாதான் நிறைய ப்ளாக் லிங்க்க பெற்றேன். அதுல ஆரம்பிச்சதுதான் இந்த பொண்ணுங்க ப்ளாக் படிக்கிறது// Idhula yethavathu ulkuthu irukkaa?
Anyhow, roundkatti adichirukkey!
ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவில் ப்ளாக்குவது என் வேலை ஆகிடுச்சு இப்பொழுதெல்லாம்..நல்லாயிருக்கு இந்த பதிவு...
@ jdk
இதுல எந்த உள்குத்தும் இல்லை நண்பா ...
@ amutha
thanks for your comment
மருத்துவ செலவை ஹெல்த் இன்சூரன்ஸ் கவர் செய்து விடும் இல்லையா ?
dei... ponnunga blog padikka edhukku da.. barathiyar range'kku unnai pathi hype kuduthirukke???
Post a Comment