முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல படம் அமைந்துள்ளது
சந்தோசமா இருக்கு . எனக்கு சிவகார்த்திகேயனையும் அவருடைய காமெடியையும்
ரொம்ப பிடிக்கும். சிவகார்த்திகேயனுடைய காமெடி யாரையும் புண்படுத்தாத
காமெடியா இருக்கும். எனக்குத் தெரிஞ்சு real time timing நல்லா வர்றது
சிவகார்த்திகேயனுக்குதான் . சந்தானத்துக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள
பெரிய வித்தியாசங்களில் ஒண்ணா இருக்கிறது அதுதான். நீங்க நல்லா யோசிச்சுப்
பார்த்தா தெரியும் விஜய் டிவில சந்தானம் பண்ணிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும்
pre planned comedy யை base பண்ணி இருக்கும் . ஆனா எனக்குத் தெரிஞ்சு
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பண்ண நிகழ்ச்சி எல்லாம் real time comedy
நிகழ்ச்சிகள்தான். இந்த பின்புலம்தான் இருவரின் வெற்றியின் அளவை சினிமாவில்
தீர்மானித்தது. சினிமாவில் எல்லாமே எழுதி வைத்து பேசும் காமெடியா
இருக்கிறதால சினிமாவில் சிவகார்த்திகேயனுடைய காமெடி எதுவுமே
இதுவரை எடுபடாமலே இருந்தது . ஆனால் அதை இந்தப் படம் உடைத்திருப்பதாகவே
தோணுது. சினிமாவில் முதல் முறையா சிவகார்த்திகேயனுடைய காமெடி timing இந்தப்
படத்தில்தான் மிகச் சிறப்பா அமைஞ்சுருக்கு.
காமெடி
நல்லா இருந்தாலும் இது முழுக்கவே காமெடி மட்டுமே நிரஞ்ச படம் இல்ல . நல்ல
கதை அம்சமும் உள்ள படம் . இந்த மாதிரி பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத
படங்களில் முக்கிய அம்சம் நல்ல கதை அம்சம்தான். அதிலும் இன்னொரு முக்கியம்
அம்சம் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் அவர்களின் திறமையை
காட்ட முழு வாய்ப்பு கிடைக்கும். இது ரெண்டும் இந்தப் படத்துல
அமைஞ்சுருக்கு. படத்துல நடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கதை இருக்கு.
சிவகார்த்திகேயனுக்கு குஞ்சு என்கிற குஞ்சிதபாதம் என்கிற பெயரால வர்ற
சங்கடங்களும் அதை மறைக்க அவர் படுகிறபாடுகளும் என்று ஒரு பின்புலம் ,
ப்ரியா ஆனந்துக்கு (கீதா) தன்னார்வ தொண்டர் , டீச்சர் , LIC agent ,
student இப்படின்னு ஒரு பின்புலம் , அந்த மாரத்தான் பயிற்றுனரான அந்த
வள்ளிக்கு ஒரு பின்புலம் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் . இத்தனை
துணைக் கதைகள் இருந்தாலும் அவை அனைத்தும் மிகச் சிறப்பாக பொருந்தி
வந்ததுதான் அருமை. சிவகார்த்திகேயன் , சிவகார்த்திகேயனின் வர்ற அந்த நண்பர்
, சிவகார்த்திகேயனின் மாரத்தான் பயிற்றுனராக வர்ற அந்த வள்ளி , அவரின்
அப்பா , எப்பயும் போல ஜெயக்குமார் இப்படி எல்லாருக்கும் நடிப்பதற்கு மிகச்
சிறப்பான வாய்ப்பும் அதை அவர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்தியும்
இருப்பதும் நல்லா தெரியுது. கதையும் பெயரை வைத்து பிறர் கேலி செய்வது ,
சென்னை மாரத்தான் , இந்தியாவில் விளையாட்டுத்துறை படும் பாடு இப்படி நம்மை
சுற்றி நடக்கும் விசயங்களைப் பற்றி இருப்பதால் படத்துடன் நம்மால் நன்கு
ஒன்ற முடிகிறது
ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சிரிச்சு
பார்த்த படம்னா அது இந்தப் படம்தான் . இந்தப் படத்துல எல்லாருக்குமே காமெடி
நல்லா வந்துருக்கு. சின்னச் சின்ன இடத்துலயும் காமெடி நல்லா வந்துருக்கு.
சிவகார்த்திகேயன் , அவரின் நண்பர் , சிறிது நேரமே வரும் மனோபாலா இப்படி
பலரின் காமெடியும் நல்லா இருக்கு. அதிலையும் எனக்கு ரொம்ப பிடிச்ச காமெடி ,
சிவகார்த்திகேயனுடைய நண்பர் சிவகார்த்திகேயனிடம் , ' வள்ளிக்கு , நீ
மாரத்தான்ல ஒடுவியானு டவுட்டு , கீதாக்கோ நீ வள்ளியோட ஓடிடுவியோனு
டவுட்டு'. சாஞ்சே இல்ல . சூப்பர் timing ஆ இருந்த காமெடி. யாருங்க
சிவகார்த்திகேயனோட நண்பரா வர்ற அந்த நபர் . ஏற்கனவே சில படங்களில்
பார்த்துக்குறேன் .ரொம்ப நல்லா நடிக்கிறாரு.
படத்துல எனக்கு பிடிக்காத ஒரே அம்சம் . இசை . மொக்க . அதுவும் அந்த பின்னணி இசை . அதுவும் அந்த மாரத்தானின் கடைசி நிமிடங்கள் எவ்வளவு பரபரப்பானவை . இசை , எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்க வேண்டும் . sorry . பாடல்களும் சுமார்தான்.
நிச்சயமா ரொம்ப நல்ல படம் . Feel good movie. நிச்சயம் பாக்கலாம் .